செவ்வாய், 20 டிசம்பர், 2016

'உலகில் தமிழ் பழமையான கலாச்சாரம்' பகிரங்கமாக கூறிய பிரதமர்!

சிங்களம் மற்றும் தமிழ் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்களம் மற்றும் தமிழ் போன்று பழமையான கலாச்சாரங்கள் உலகில் எதுவும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,
சமாதானத்தோடு கூடிய நல்லிணக்கம் நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். கலாச்சாரங்கள் வளர்ச்சியடைய வேண்டும். அதே போன்று இனவாதம் காணப்படுமாயின் எமக்கு எப்போதும் முன்னேற முடியாது.
சிங்களம் மற்றும் தமிழ் கலாச்சாரங்களைப்போல் இந்த உலகில் பழமையான கலாச்சாரங்கள் எதுவும் இல்லை என்பதனை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளத்திலும் முறையற்ற கருத்துகள் கூறப்படுகின்றன. ஓர் இணையத்தளத்தில் ஏன் இந்த நாட்டிற்கு வேற்று மதங்கள் வந்தன என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
மேலும் அப்படி வருவதை விடவும் எமக்கு கற்களும், மரங்களுமே போதும் அந்நிய கலாச்சாரங்கள் எதற்கு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நல்ல வேளையாக அந்த காலத்தில் இனவாதம் காணப்பட வில்லை, அப்படி இருந்திருந்தால் அப்போதே நாடு அழிந்து போயிருக்கும்.
நல்லிணக்கம் மிக்க சகவாழ்வோடு இலங்கையும் முன்னேற வேண்டுமென்றால் கலாச்சாரங்களின் வளர்ச்சியும் அவசியம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள