அரசிலிருந்து விலகுவது ஆணையை மீறும் செயல்
மஹிந்தவின் பகல்கனவைக் கண்டு ஏமாறக்கூடாது என்கிறார் ராஜித
(ஆர்.யசி )
(ஆர்.யசி )
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன புரிந்துணர்வு அடிப்படையில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரை எவரும் அரசாங்கத்தை குழப்பக்கூடாது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது மக்கள் ஆணையை மீறும் செயற்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளரும் சுகா
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது மக்கள் ஆணையை மீறும் செயற்பாடாகும் என அமைச்சரவை பேச்சாளரும் சுகா
தார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவின் பகல்கனவை கண்டு ஏமாந்துவிட வேண்டாம் என வும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் வெளியேறுவார்கள் என பொது எதிரணி தெரிவித்துள்ள நிலையில் நல்லாட்சி அரசாங்கம் பாதிக்கப்படுமா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
தேசிய அரசாங்கம் மக்களின் ஆதரவில் பூரண ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து மக்களின் ஆணைக்கு முரணாக ஆட்சியை கைப்பற்றவும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிகின்றனர். இந்த ஆண்டுக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக கதைகளை பரப்புகின்றனர் .
அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக வெளியிடப்படும் கருத்துக்கள் வெறும் கனவு மாத்திரமேயாகும் . இவர்கள் அதிகார சுவை அறிந்தவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகாரம் இல்லாது ஒருநாளைக் கூட கடப்பது பாரிய சவாலாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் அரசாங்கத்தை பலப்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றை எட்டும் மிகவும் தூர நோக்கு பார்வையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
பிரதான இரண்டு கட்சிகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை தட்டிக்கழிக்காது செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளது.
பிரதான கட்சிகளின் புரிந்துணர்வின் அடிப்படியில் தான் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஆகவே மக்களின் ஆணைக்கும் மக்கள் தேசிய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் மதிப்பளித்து அனைவரும் செயற்பட வேண்டும் .
அரசாங்கத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் பழைய நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டாலும் சிரேஷ்ட அமைச்சர்கள் அரசாங்கத்தை பாதுகாக்க தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்பார்கள்.

ஆட்சியை கைப்பற்ற முடியும் எனவும் இந்த ஆண்டுக்குள் மீண்டும் ஆட்சியை தனதாக்குவதாகவும் மஹிந்த ராஜபக் தெரிவிக்கும் கருத்துக்கள் வெறும் பகல் கனவு என்பதை உணர்ந்தும் அவரின் கூட்டணியை பலப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் செல்வார்களாயின் இறுதியில் அவர்களுக்கும் அரசியல் அந்தஸ்து இல்லாது போய்விடும்.ஏமாறாது மக்களுக்காக செயற்பட அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள