நிம்மதியை சீர் குலைத்துள்ள புத்த குருவின் அடாவடித்தனம்.
இரண்டாவது தடவையாகவும் மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி சுமண ரத்ன தேரர் ஆரம்பித்துள்ள அடாவடித்தன நடவடிக்கை கடந்த கால யுத்தச் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில் பகுதிகளில் வாழ்ந்த மூவின மக்களின் மீள் குடியமர்வுப் பணிகளில் எதிர்கால – தற்கால நிம்மதியை குழப்பமடையச் செய்துள்ளது.
1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலையகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் குடியேறியபோது புனாணையிலிருந்தும் இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள்.
உடல்நிலை பூரண சுகம் இல்லாத நிலையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்காக தன்னையே அர்ப்பணித்து, அமரர் தொண்டமான், அமரர் தேவநாயகம் சகிதம் மட்டக்களப்பிற்கு நேரடியாகவே வருகை தந்தவர் அமரர் தந்தை செல்வநாயகம்.
நாட்டிலே இடம்பெற்ற யுத்தச் சூழ்நிலை காரணமாக வடக்கு, கிழக்கு பகுதியிலே ஒற்றுமையுடன் வாழ்ந்த மூவின மக்கள் மத்தியிலே ஏற்பட்ட விரிசல், இடப்பெயர்வுகள், மீள்குடியேற்றங்கள் விடயத்திலே இது வரையிலும் இடம்பெற்ற உயிரிழப்புக்கள் ஈடு செய்ய முடியாதவையாகும்.
நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் மூவின மக்களுடைய நிம்மதி நிலைபெறாததுடன், வருமானமும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையே விசேடமாக வடக்கு, கிழக்கு மூவின மக்களுடையதாக இருந்து வருகிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய நிலைமை இன்றுவரையில் முழுமையாகச் சீரடையாத நிலையிலே பலன் தந்த மா, தென்னை, பலா போன்ற மரங்களையும் மற்றும் பழைய வீடு, கிணறு, மலசலகூடம் என்பவைகளையும் காட்டு யானைகள் சேதப்படுத்துவதும் மீள்குடியமர்ந்த மக்களின் உயிர்களை காவுகொள்வதும் மற்றுமொரு துக்ககரமான சம்பவமாகும்.
யானையினால் ஏற்படுகின்ற உயிராபத்துக்கள் ஒருபுறமிருக்க மறுபுறத்தில் மட்டக்களப்பு பிரதேச ஆற்றிலே என்றுமில்லாதவாறு இராட்சத முதலலையினாலும் உயிர் ஆபத்துக்கள் அதிகரித்து வருகின்றன,
மட்டக்களப்பு ஆற்றிலே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு பிள்ளையின் தந்தையை இராட்சத முதலை இழுத்துச் சென்ற சம்பவம் கடந்த வரும் இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான இவர் இன்றுவரையிலும் வீடு திரும்பவில்லை,
இதன் காரணத்தினால் ஆற்றிலே மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் தனியாக ஆற்றுக்குச் செல்வதில்லை. தோணி மூலம் இருவராகவே தமது தொழிலுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது,
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டிலே இங்கு வாழ்கின்ற மக்களுடைய பிரதான தொழில் விவசாயம், மீன்பிடி. இவற்றிலே கடற்தொழில், ஆற்றுத்தொழில் என இருவகையாகவுள்ளது. ஏனையவர்களுடையது வியாபாரம், அரச தொழில், கைத்தொழில், கூலித் தொழில் என்பனவாகும்.
கடந்த கால யுத்தச் சூழ்நிலையினால் விவசாயம், வீடுகள், கிணறுகள், மலசலக்கூடம் என்பன பாதிக்கப்பட்ட நிலையில் மறுபுறத்தில் மட்டக்களப்பு அரச உத்தியோகத்தர்கள், இதுவரையிலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பல வருடகாலமாக நஷ்டஈடு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் மறுபுறம் கவலையுடன் வாழ்கின்றனர்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அரசியல் மூலம் புதிய முன்னேற்றம் மக்களுக்கு ஏற்பட்டு விடும் என்ற ஆவலும் தற்பொழுது மட்டக்களப்பில் திடீரென ஏற்பட்டிருக்கின்ற அடாவடித்தன நடவடிக்கையும், வித்தியாசமான அறிக்கைகளும் நிம்மதியாக வாழ்ந்த மக்களுடைய வாழ்வில் இருளை ஏற்படுத்துவதும் காலத்திற்குக் காலம் ஏற்படுகின்ற தொடர் கதையாகவுள்ளது.
மட்டக்களப்பிலே 1990 ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட வேளையிலே வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் அகதிமுகமாக்கியது. இந்த முகாமில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினால் இங்கு அகதியாக இருந்தவர்களில் 159 பேர் இன்று வரையில் எங்கே என்று கூடத் தெரியாத நிலை உள்ளது.
வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1990 ஆம் ஆண்டு இயங்கிய அகதிமுகாமில் தஞ்சமடைந்த மக்களில் நலனுக்காக இங்கே கடமையிலிருந்த சித்தாண்டி ஆறுமுகம் வைத்தியரின் மூத்த மகன் செல்வராசா (தளவாய் கிராம சேவையாளர்), வந்தாறுமூலை சி.தணிகாசலம் (கரடியனாறு கிராம சேவையாளர்) இவர்கள் இருவரும் கடத்தப்பட்டு இன்று வரையில் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாது.
கடந்த 1990 ஆம் ஆண்டு அசாதாரண சூழ்நிலையின் போது மட்டக்களப்பு மாவட்டத்திலே கடமையாற்றிய 27 கிராம சேவையாளர்கள் இறந்துபோனார்கள். இவைதவிர, முதுமை தளராமல் சேவையிலிருந்து எதுவிதமான பதவி உயர்வும் சம்பள உயர்வுகளுமின்ற சேவையிலிருந்து குறைந்த சம்பளத்துடன் ஓய்வுபெற்றுச் சென்றுவிட்டார்கள். உயிர் பாதுகாப்பிற்காக சேவையிலிருந்து எவருக்கும் சொல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்டார்கள்.
பொதுச்சேவைகள் ஆணைக்குழு
இவ்வாறு தொழிலை விட்ட கிராம சேவையாளர்கள் மீண்டும் தமது சேவையினைத் தொடர்ந்து ஓய்வுபெற விரும்பினால் அல்லது ஒப்பந்த அடிப்படையில் சேவை செய்ய விரும்பினால் உரிய ஆவணங்களுடன் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரின் சிபாரிசு ஊடாக அரசாங்க பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 14 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளன. இவைகளிலே 345 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள