போராட்டங்களை நடத்துவோர் இலங்கை வரவேண்டும் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு
(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)
(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)
எமது அரசாங்கம் இனவாதிகளுக்கு பயப்படவில்லை. இனவாதிகள் பயமுறுத்தினாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. அது மட்டுமன்றி கடந்த காலத்தில் நாங்கள் இனவாதிகளுக்கு அஞ்ச
வில்லை என்பதனை நிரூபித்துக்காட்டியுள்ளோம். இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக செயற்பட்டுவருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் இதனை எமது அரசாங்கம் நிரூபித்துக்காட்டியுள்ளது. இனவாதத்துக்கும் அடிப்படை வாதத்துக்கும் எவ்விதமான இட மும் எமது நாட்டில் இல்லை என்பதனை தெளிவாக கூறுகின்றேன் என்று வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் குழுக்களிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றேன். இனவாத குழுக்களின் கைப்பொம்மையாக மாறாமல் இலங்கைக்கு வந்து என்ன நடககின்றது என்று பாருங்கள். இன்னும் குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை எமக்கு சுட்டிக்காட்டுங்கள். வீதிகளுக்கு அருகில் இருந்து கூச்சலிடுவதன் மூலம் எதனையும் சாதிக்கவோ வெற்றிக்கொள்ளவோ முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இன்று தெற்கிலும் இனவாதத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய முயற்சிக்கும் சாத்தான்கள் உள்ளன. அதேபோன்று வடககிலும் இனவாதத்தை கையில் எடு:த்து அரசியல் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். முஸ்லிம் மக்களுக்குள்ளும் இன்று ஒரு சிலர் இனவாதத்தை கையில் எடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் உத்தியோகபூர்வ விஜயத்தையடுத்து மலேஷியாவுக்கு வந்துள்ள அமைச்சர் மங்களசமரவீர கேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிடுகையில்
மலேஷியாவில் எதிர்ப்பை வௌிக்காட்டுவதாக கூறுகின்றவர்கள் புலம்பெயர்ந்தோர் என்று கூற முடியாது. புலம்பெயர்ந்தோர் என்ற வார்த்தையை பயன்படுத்துவது அநீதியாகும். புலம்பெயர்ந்தோர் என்பது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஆவர். அது தமிழர்களாக இருக்கலாம். அல்லது சிங்களவர்களாக இருக்கலாம்.
ஆனால் இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்தோர் அனைவரும் இலங்கை முன்னெடுக்கும் நல்லிணக்க செயற்பாடுகளை வரவேற்கின்றனர். இன்று பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் இலங்கையுடன் இணைந்து நலலிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எம்முடன் இணைந்து செயற்படவும் முயற்சிக்கின்றனர்.
அது தெளிவாக இருக்கின்றது. ஆனால் தற்போது மலேஷியாவில் ஆர்ப்பாட்டம செய்பவர்கள் குறைந்த பட்சம் இலங்கை புலம்பெயர் மக்கள் அல்ல. அதிகமானோர் இந்திய தமிழ் பின்னணியைக் கொண்டவர்கள்.
இந்நிலையில் அவர்களிடம் ஒரு விடயத்தை கூறுவதற்கு விரும்புகின்றேன். இனவாத குழுக்களின் கைப்பொம்மையாக மாறாமல் இலங்கைக்கு வந்து என்ன நடககின்றது என்று பாருங்கள். இன்று இலங்கையானது அனைத்துககும் திறந்துவிடப்பட்டுள்ளது. தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை வரை மக்கள் அனைவரும் எங்கும் போகலாம். வரலாம். பேசலாம். கட்டுப்பாடுகள் இல்லை. பத்திரிகை தணிக்கை இல்லை. பத்திரிகையாளர்களின் பின்னால் யாரும் செல்வதில்லை. அச்சுறுத்த இல்லை. இதுதான் இலங்கையின் நிலைமை. எனவே பொய்யான ஆர்ப்பாட்டங்களை இங்கு செய்யாமல் இலங்கைக்கு வந்து உண்மை நிலைமையை பாருங்கள்.
இன்னும் குறைபாடுகள் இருக்கலாம். அவற்றை எமக்கு சுட்டிக்காட்டுங்கள். வீதிகளுக்கு அருகில் இருந்து கூச்சலிடுவதன் மூலம் எதனையும் சாதிக்கவோ வெற்றிக்கொள்ளவோ முடியாது.
கேள்வி நலலிணக்கத்துக்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் கஷ்டப்படுகின்றீர்கள். ஆனால் பாரிய தடைகள் இருப்பதாக தெரிகின்றதே?
பதில் நாட்டுக்குள் அவ்வாறு பாரிய தடைகள் இல்லை. இனவாதத்தை தூண்டுவோர் சிறிய குழுவினர். ஆனால் அவர்களின் குரல் உயர்த்த காட்டப்படுகின்றது. அவர்கள் சிறு குழுவினராக இருந்தாலும் அவர்களின் சத்தம் பெரிதாக இருககின்றது. அதனால் அந்த சிறியளவிலான இனவாதம் பெரிதாக இருக்குமோ என பலர் எண்ணுகின்றனர்.
ஆனால் இந்த சிறிய இனவாத குழுவினர் இலங்கையை மீண்டும் பின்னடைவை நோக்கி கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இன்று தெற்கிலும் இனவாதத்தை கையில் எடுத்து அரசியல் செய்ய முயற்சிக்கும் சாத்தான்கள் உள்ளன. அதேபோன்று வடககிலும் இனவாதத்தை கையில் எடு:த்து அரசியல் செய்ய சிலர் முயற்சிக்கின்றனர். முஸ்லிம் மக்களுக்குள்ளும் இன்று ஒருசிலர் இனவாதத்தை கையில் எடுத்துள்ளனர்.
ஆனால் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் மத்தியஸ்த நிலைப்பாட்டுடன் அரசாங்கத்துக்கு பாரிய ஆதரவை வழங்கிவருகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றில் முதற் தடவையாக அனைத்து மக்களும் ஆதரவு வழங்கிய தலைவர் ஒருவர் தெரிவானார்.
தமிழ், முஸ்லிம், சிங்கள பௌத்த மக்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதியை ஆதரித்தனர். எனவே பெரும்பாலான மக்கள் இனவாத போக்கின்றி மிகவும் அமைதியான முறையில் அரசாங்கத்துக்கு பாரிய ஆதரவை வழங்கிவருகின்றனர். எனவே இனவாதிகள் கத்தினாலும் நாங்கள் பயப்படமாட்டோம். இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நலலிணக்கமும் ஒற்றுமையும் இன்றி எதிர்காலம் இல்லை.
சிங்கப்பூர் போன்ற நாடுகள் எவ்வாறு முன்னேற்றமடைந்தன என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எம்மைவிட பின்னால் நின்ற நாடுகள் இன்று பாரிய முன்னேறறத்தை அடைந்துள்ளன. இதற்கு என்ன காரணம்?
நாட்டின் இனவாத பிரச்சினையை தீர்ப்பதற்கு முயற்சித்தபோதும் அனைத்து எமது தலைவர்களும் இனவாதிகளின் குரலுக்கு அடி பணிந்தார்கள். அது இறுதியில் யுத்தமாக மாறியது. எனவே இப்போதாவது வரலாற்றில் பாடங்களை கற்று இலங்கையர்கள் என்ற வகையில் தெற்காசியாவில் சிறந்த நாடாக முன்னேறவேண்டும். நிரந்தர சமாதானத்தை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் நலலிணக்கமும் அவசியமாகும். அதனால்தான் நான் கஷ்டப்படுகின்றேன். காரணம் நாம் என்ன செய்தாலும் மக்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாவிடின் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை.
கேள்வி: ஆனால் உங்கள் அரசாங்கமும் இனவாதிகளுக்கு அஞ்சுகன்றதே?
பதில்: இல்லை. நாங்கள் இனவாதிகளுக்கு பயப்படவி்லலை.
கேள்வி பயமுறுத்துகின்றனரே?
பதில் இனவாதிகள் பயமுறுத்தினாலும் நாங்கள் பயப்படமாட்டோம். பயப்பட தேவையுமில்லை. அதுமட்டுமன்றி கடந்த காலத்தில் நாங்கள் இனவாதிகளுக்கு பயப்படவில்லை என்பதனை நிரூபித்துக்காட்டியுள்ளோம். நாங்கள் இனவாதிகளுக்கு பயப்படவி்ல்லை. இனவாதிகளுக்கு பயப்படமாட்டோம் என்பதனை ஜனாதிபதியும் பிரதமரும் இன்று உறுதியாக காண்பித்துவருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் இதனை எமது அரசாங்கம் நிரூபித்துக்காட்டியுள்ளது. இனவாதத்துக்கும் அடிப்படை வாதத்துக்கும் எவ்விதமான இடமும் எமது நாட்டில் இல்லை என்பதனை தௌிவாக கூறுகின்றேன்.
கேள்வி நலலிணக்க செயற்பாட்டின் இறுதி அங்கமாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் காணப்படுகின்றது. அந்தத் தீர்வை காண்பதற்கு இனவாதிகள் குழப்புவார்கள் போன்று தெரிகின்றதே?
பதில் நிச்சயமாக செல்வோம். நான் முன்னர் கூறியதுபோன்று பழைய அரசியல் சாத்தான்கள் இன்னும் தனது வேலையை காட்டிக்கொண்டிருக்கின்றன. இறந்த பின்னரும் பேய்களாக வந்து தடைகளை ஏற்படுத்துகின்றனர். குழப்புகின்றனர். இனவாதத்தை வைத்து முன்னேற முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த இனவாதத்தை மக்கள் நிராகரிக்கின்றனர். அவ்வாறு நிராகரிக்கும் மக்கள் மிக அதிகமாகும்.
கேள்வி தவறான வெளிவிவகார கொள்கையை முன்னெடுப்பதாக உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளதே,
பதில் அந்தக் குற்றச்சாட்டு எந்த அடிப்படையில் வருகின்றது என்று தெரியவில்லை. இன்று இலங்கையானது உலகின் அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவை பேணுகின்றது. இலங்கையை இன்று உலகம் நாடுகின்றது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, ரஷ்யா என அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயற்படுகின்றோம். இந்த யுகத்தில் முதற்தடலையாக ஜனாதிபதி ரஷ்யாவுக்கு அரச விஜயத்தை மேற்கொள்கின்றார். எனவே இதனை ஒரு பக்கம் சார்ந்தது என்று எவ்வாறு கூற முடியும். இது பொறாமையின் வௌிப்பாடு. கடந்தகாலத்தில் சர்வதேசத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர்.
கேள்வி அம்பாந்தோட்டையில் 15000 ஆயிரம் ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பு முழு நாட்டுக்கும் பாதகமானது என்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில் இந்த எதிர்ப்பை வௌியிடுகின்றவர்கள் யார்? உறுதிபத்திரத்தின் ஊடாக அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்க முன்வந்தவர்களே இதனை கூறுகின்றனர். இந்த நாட்டு மக்களுக்கு பொருளாதார முன்னேற்றமே அவசியமாகும். அது அம்பாந்தோட்டையில் சீனாவா? திருகோணமலையி்ல் இந்தியாவா, ? இல்லாவிடின் மற்றுமொரு இடத்தில் அமெரிக்காவா? என்பது சிக்கல் அல்ல. முன்னேற்றமே அவசியமாகும்.
எமது நீதித்துறையின் சுயாதீனம் காரணமாக பொருளாதார செயற்பாடுகளை சர்வதேச மட்டத்தில் முன்னெடுப்பது இலகுவாக இருக்கின்றது. முதலீடுகளுக்கு சிறந்த சூழல் உள்ளது. எமக்கு ஏற்கனவே இந்தியா பாகிஸ்தனுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளது. தற்போது சீனா சிங்கப்புர் மலேஷியா போன்ற நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்யவுள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள