வெள்ளி, 26 மார்ச், 2010

டீலா? நோ! டீலா!!

நகைச்சுவை, கற்பனைக் கதை.




"இலங்கையிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக இருப்பது,வேலையில்லாப் பிரச்சனை,இதை முதல் இல்லாமல் செய்துவிட்டால்,ஏனைய பிரச்சனைகளையெல்லாம்,கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்,வேலையற்றிரு ப்போரின்,கணிசமான அளவினரின்,தொகையைக் குறைத்தால்,இலங்கையின் இருப்போர்களின் வாழ்க்கை வளம்பெறும்,இலங்கையில் மிதமாக உள்ள ஊழியத்தை இருக்கின்ற வளத்தோடு இணைத்து,வேலையில்லாப்
பிரச்சினைக்கு முடிவுகாணலாம்" என்று தனதுரையை முடித்தார் இலங்கையின் சனாதிபதி.

வியாழன், 25 மார்ச், 2010

உங்கள் ஜாதகம் தமிழில்.

உங்கள் ஜாதகம் தமிழில்








செவ்வாய், 23 மார்ச், 2010

தேர்தல் பேச்சு.



தேர்தல் கூட்டங்கள் தூள் எழும்புது -தேறுதல் 
வார்த்தைகள் கூட்டத்தை தூள் கிளப்புது 
யாரும் இருந்ததில்லை சொந்தத் தொகுதியில்-இவர்கள்   
இருந்ததெல்லாம் இலங்கைக்கு  வெளியில். 

திங்கள், 22 மார்ச், 2010

இலங்கைசரித்திரம் -28

இலங்கைக் சரித்திரம்.1883   ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணம்.மானிப்பாய் திரு.ஆ. முத்து தம்பிப்
பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது.இதை முதல் பக்கத்தில் இருந்து
வாசிக்க  இங்கே அழுத்தவும்.எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய பக்கத்தில் மேல் மௌசை
வைத்து அழுத்தவும்.எப்படி இலங்கையின் சரித்திரம் இருந்தது என்பதை இலங்கை வாழ்
தமிழர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.யாழ்ப்பாண நூலகம் எரியாமல் இருந்திருந்தால் இவைகளை நமது இளம் சந்ததியினர் அங்கு போய் வாசித்து அறிந்திருக்கலாம்.இப்படியான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே யாழ்.
நூலகம் திட்டமிட்டு அழிக்கப் பட்டதோ?

ஞாயிறு, 21 மார்ச், 2010

இலங்கை தந்த இலக்கியம்.



இலங்கையின்,தமிழ் இலக்கிய வரலாற்றை, மு.வரதராசனார் ஐயா ஆராய்ந்து  
இருக்கிறார்.அவர் பார்வையில் "இலங்கை தந்த இலக்கியம்".இந்த இலங்கை இன்று இருந்தால் எப்படி இருக்கும்? வாசிப்பவர்களின் எண்ணங்களின் இந்தக் கேள்வி கட்டாயம் 
எழும்.இலங்கையில் இருப்பவர்களின் மனதில், நமது, இலங்கையில் இப்படி இருந்த
தமிழனுக்கா இந்தக் கெதி? என்ற ஆச்சரியம் தொக்கி நிக்கும்    


இலங்கை
பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் வளர்த்த நிலமாக இருந்து வருகிறது இலங்கையின் வட பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் கிழக்குப்
பகுதியாகிய மட்டக்களப்பிலும் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார்.அவர் இயற்றிய ஏழு பாட்டுக்கள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன (ஈழம் என்பது இலங்கையைக் குறிக்கும் பழைய தமிழச்சொல்.)இலங்கையின் ஆட்சி மொழியாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் தமிழே இருந்து வந்தது.
சிங்களவரும் தமிழ் கற்று வந்த்தனர்.சிங்களவரில் சிலர் தமிழ் நூல்கள் இயற்றியுள்ளனர்.சிங்கள அரசர்கள் ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட காலத்திலும் தமிழிலேயே கையெழுத்து இட்டனர்.ஆகையால்
நெடுங்காலமாகத் தமிழ் இலக்கியம் இலங்கையிலும் வளர்ச்சி பெற்று வந்ததில் வியப்பு இல்லை.

இலங்கையின் தமிழ் நூல்களும்,புலவர்களும்.
வட மொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத்தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பவரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும்.ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.
தமிழ் நாட்டில் தல புராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும்
அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன.தமிழ் நாட்டில் கோவை,உலா,
கலம்பகம்,சதகம்,தூது அந்தாதி,முதலான நூல்வகைகள் பெருகிய காலத்தில்
இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன.தக்கினா கைலாச
புராணம்,கோனாசல புராணம்,புலியூர்ப் புராணம்,சிதம்பர சபாநாத புராணம்,
முதலியன இயற்றப்பட்டன சிவராத்திரிப் புராணம்,எகாதாசிப் புராணம் என்பனவும் அங்கு பிறந்தவைகளே. சூது புராணம்,வலைவீசு புராணம் என்பன புதுமையானவை.கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.
கிறிஸ்தவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன.முருகேசு பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை
இயற்றினார்.சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார்.ஊஞ்சல் ஆடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.நவாலீயூர் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப்
பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார்.ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்
முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார்.
அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார்.
கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளை பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்கள் போற்றி வருகின்றார்கள்.


சனி, 20 மார்ச், 2010

கணனியை இயக்கும் நேரம்.



நாம் கணனியை இயக்குவதற்கு எடுக்கும் நேரத்தை,எப்படி? கணனியை விரைவாக இயக்கி, வீணாகச்  செலவாகும்
பொன்னான நேரத்தை மீதம் செய்யலாம் என்பதை,விளக்கமாக மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்,கணனி படிப்பவர்களுக்கும்,கணனி பற்றி கூடுதலாக
அறிய விரும்புபவர்களுக்கும்,எவ்வளவு படிச்சாலும் தலைக்குள் எதுவும் இறங்க்காதவர்களுக்கும், இந்தப் பதிவு மிகவும் பிரயோசனமாக இருக்கும்.




வலைப்பூவில் தமிழ்.


நமது வலைப்பூவில்(blogger) தமிழில் எப்படி பதிவிடுவது.பலவகைகள் இருந்தாலும் மிகவும் இலகுவான வழி முறை ஓன்று உண்டு.Google Transliteration IME  என்பது இதில்
இருக்கும் மொழிகள் நேரடியாக மொழி மாற்றமும் செய்யலாம் , தமிழ் மாத்திரமன்று,கிட்டத்தட்ட பதின்மூன்று   இந்திய  மொழிகள் தரவிறக்கம் செய்யலாம்.ஓட்டுவது,வெட்டுவது எதுவும் கிடையாது.நேராகவே பதிவிடலாம்,விளக்கம கூடுதலாக தேவைப் படாதவர்கள் இந்தப் பக்கத்துடன் தரவிறக்கி பதிவாக்கம் செய்து கொள்ளலாம் Google Transliteration IME  தரவிறக்க,.இங்கே அழுத்தவும் .இதில் விண்டோ எக்ஸ். பி, விண்டோ செவென்,
விண்டோ விஸ்டா,இவைகளுக்கு இவற்றைப் பதிவிறக்கலாம் எனச் சொல்லப் பட்டிருந்தாலும்,நான் விண்டோ எக்ஸ்.பி,விண்டோ விஸ்டா  இரண்டிலும் 
பயிற்சி செய்து,  நல்ல பலன் பெற்ற பின்னரே உங்களுக்குப் பதிவிடுகின்றேன்.   




வியாழன், 18 மார்ச், 2010

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?



கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

வாசித்து அறிந்து கொள்ளுங்கள்,எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய.மௌசை பக்கத்தின் மேல் வைத்து அழுத்துங்கள்.






புதன், 17 மார்ச், 2010

மட்டக்களப்பின் பெயர் சொல்ல ஒரு பாடல்




 "'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்பதைப்  போல 
நாம் பிறந்த மட்டக்களப்பைப் பற்றிய பாடல்.பாடலை  இயற்றிப் பாடியவர் திரு.ஞானப்பிரகாசம்,இசை ஆதவன் இசைக்குழுவினர்.

1975 ஆம் ஆண்டு காலப் பகுதியில்,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய
அரங்கேற்றம் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்,அதில் சக்கை போடு
போட்ட பாடல்.மட்டக்களப்பின் தேசிய கீதம் என்ற மட்டத்தில்.பட்டி தொட்டியெல்லாம்
ஒலித்த பாடல்.1975 ஆம்,ஆண்டு  காலப் பகுதியில் மட்டுநகர் முற்றவெளியில் நடந்த
பௌர்ணமிக் கலை நிகழ்ச்சிகளை நினைவூட்டும் பாடல்.முன்பு நான் இப்பாடலை யூ
டீயுப்பில் வெளியிடும் போது தரமானதாக கொடுக்க முடியவில்லை,ஆனால் தற்பொழுது,சகல தரத்துடன்  இப்பாடலை மீண்டும் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்,நீங்களும் கேட்டுச் சொல்லுங்கள் 


அன்புடன்,!.....

  

செவ்வாய், 16 மார்ச், 2010

மாணவர்களுக்கான இணையதளங்கள் -14

மாணவர்களுக்கான இணையதளங்கள்.-14

பாடசாலையில் படிக்கும் மாணவர்களுக்கான பதின் நான்கு இணைய தளங்களை,மைக்ரோசொப்ட் நிறுவனம் சிபார்சு செய்துள்ளது,இதில், கணிதம்,விஞ்ஞானம் உட்பட மாணவர்களுக்குத் தேவையான சகலதையும் உள்வாங்கப் பட்டுள்ளது.ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரைப் படிப்பவர்களுக்கு,நல்லதரமுள்ள,பிரயோசனமான இணைய தளங்கள்.உங்கள் எதிர்காலத்தின் விடிவெள்ளிகளுக்கு,ஏற்ற இணைய தளம்.பார்த்துப் பரிசளியுங்கள்,படித்துப் பயன் அடையட்டும்.கீழ் உள்ள உள்ள தலையங்கங்களை  அழுத்தியும் உள் நுழையலாம்.



ஒரு சிறிய மனவருத்தம்,நாங்கள் மாணவர்களாக இருந்த போது,இப்படி வசதிகள் இல்லையே,என்று படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்த வரப்பிரசாதததைப் பயன் படுத்துங்கள்,இந்தப் பதினான்கு இணைய தளத்திற்கும் அழைத்துச் செல்ல,இங்கே அழுத்துங்கள் பார்க்கின்சன் (நடுக்குவாதம்) பற்றியறிய எனது சைட் பாரில் உள்ள மனுவை அழுத்திப் படியுங்கள். 
படித்து விட்டு இரண்ண்டுவரி எழுதுங்கள்.உங்களின் விமர்சனங்கள் இந்தத் தளத்தை மேலும் மெருகூட்ட வழியமைக்கும்.


அன்புடன்..!............