புதன், 17 மார்ச், 2010

மட்டக்களப்பின் பெயர் சொல்ல ஒரு பாடல்




 "'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே" என்பதைப்  போல 
நாம் பிறந்த மட்டக்களப்பைப் பற்றிய பாடல்.பாடலை  இயற்றிப் பாடியவர் திரு.ஞானப்பிரகாசம்,இசை ஆதவன் இசைக்குழுவினர்.

1975 ஆம் ஆண்டு காலப் பகுதியில்,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய
அரங்கேற்றம் நிகழ்ச்சியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்,அதில் சக்கை போடு
போட்ட பாடல்.மட்டக்களப்பின் தேசிய கீதம் என்ற மட்டத்தில்.பட்டி தொட்டியெல்லாம்
ஒலித்த பாடல்.1975 ஆம்,ஆண்டு  காலப் பகுதியில் மட்டுநகர் முற்றவெளியில் நடந்த
பௌர்ணமிக் கலை நிகழ்ச்சிகளை நினைவூட்டும் பாடல்.முன்பு நான் இப்பாடலை யூ
டீயுப்பில் வெளியிடும் போது தரமானதாக கொடுக்க முடியவில்லை,ஆனால் தற்பொழுது,சகல தரத்துடன்  இப்பாடலை மீண்டும் வெளியிடுவதில் பெருமையடைகிறேன்,நீங்களும் கேட்டுச் சொல்லுங்கள் 


அன்புடன்,!.....

  

5 கருத்துகள்:

  1. அன்று ஈழத்துப் பாடல்களுக்கு இலங்கை வானொலி முக்கிய இடம் கொடுத்த போது பல
    பாடல்கள் உருவாகின.
    இது மட்டக்களப்பின் பெயர் சொன்ன பாடல் ;மட்டக்களப்புக்கு என்றும் பெருமை சேர்க்கும்
    இறவாப் புகழ் கொண்ட பாடல், நாமனைவரும் இளமையில் படித்த பாடல்
    சுவாமி விபுலானந்தரின் ஈசன் விரும்பும் இன்மலர்த் தொகுப்பில் இடம் பெற்ற "வெள்ளை நிற மல்லிகையோ"
    என்ற பாடலே!
    படம் சேர்த்துப் பாடலைத் தந்ததற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஈழத்தமிழர்களின் வலைப்பூக்களை நான் ஆர்வமாய் தேடுவேன். வளமையான வலைப்பூவாய் இல்லாமல் இருப்பது உங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. தங்களின், மீள் வரவு எனக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது,பிரச்சினைகளைச் சந்திப் பவருக்குத்தான்,அதன் பெறுமதி தெரியும்,உடலும்,உள்ளமும் மிக விரைவில் குணமாகியதற்கு,இறைவனுக்கு முதற்கண் நன்றி செலுத்துகின்றேன்

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பெறுமதியான கருத்துரைக்கும்,அன்பான வருகைக்கும்.நன்றிகள்

    பதிலளிநீக்கு
  5. மறக்கத்தான் முடியுமா அந்த நாட்களை

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள