அதிகார போதையின் உச்சத்தை காட்டுகிறது
சாத்தியமே இல்லை என்கிறது சுதந்திரக் கட்சி
(லியோ நிரோஷ தர்ஷன்)
ஆட்சியை கவிழ்ப்பதான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கூற்றானது அவரது ஆட்சி அதிகாரத்தின் மீதான போதையை குறிப்பிடுகின்றது. தனி நபரொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாற்ற முடியும் என்பது சாத்தியமற்ற விடயமாகும். வலுவான நிலையில் நல்லாட்சி அரசாங்கம் புத்தாண்டிலும் பயணிக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர
கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் உட்பட மூன்று மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடை பெற உள்ளன. இந்த தேர்தல்களை எதிர் கொள்வதற்கான கட்சியின் அடிமட்ட ஒழுங்குப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுதந்திர கட்சிக்கு புதிய உறுப்பினர்களாக 4 மில்லியன் பேர் அடுத்த ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புத்தாண்டிற்கான திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் போதே கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில் ஜனவரி தொடக்கம் மார்ச் மாதம் வரையில் சுதந்திர கட்சியின் புதிய உறுப்பினர்கள் தேர்வு இடம்பெற உள்ளது. 4 மில்லியன் பேரை அடுத்த ஆண்டில் கட்சியின் புதிய உறுப்பினர்காளக இணைத்துக் கொள்ள உள்ளோம். மேலும் உள்ளுராட்சிமன்ற தேர்தல் மற்றும் மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்கள் அடுத்த ஆண்டில் நடைப்பெற உள்ளன. அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து தயார்ப்படுத்தல்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.
எவ்விதமான தார்மீக தன்மையோ அப்படை தன்மையோ அற்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷ 2017 ஆம் ஆண்டில் ஆட்சியை கவிழ்க்க போவதாக குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத தனது நிலைப்பாட்டையே அவர் வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் ஆணைக்கு எதிராகவா ? மஹிந்த ராஜபக்ஷ அடுத்த ஆண்டில் செயற்பட போகின்றார் என்ற சந்தேகமும் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் ஆட்சி கவிழப்பு என்பதற்கு வாய்ப்பே இல்லை. அவ்வாறு மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றமை வேடிக்கையாக உள்ளது.
நாட்டில் ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் புதிய ஆணையை வழங்கினார்கள். அதற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டியது அனைவரதும் கடமையாகும். குறிப்பாக அரசியல் தலைவர்கள் என்றால் மதிப்பும் கௌரவமும் காணப்பட வேண்டும். அவ்வாறான பல தலைவர்களை வரலாற்றில் நாம் கண்டுள்ளதுடன் அவர்களை முன்மாதிரியாகவும் கொண்டுள்வோம். அதே போன்று நாட்டில் காணப்பட்ட முப்பதாண்டு கால போரை முடிவிற்கு கொண்டு வந்து அனைத்து மக்களின் உள்ளங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ இடம்பிடித்தார். ஆனால் தற்போது அவரது தற்போதைய செயற்பாடுகள் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும் நாட்டில் மேம்பாலம் மின்சாரம் புதிய பாதைகள் அதிவேக வீதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் காணப்படுகின்ற போதிலும் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புக்களை எடுக்கும் போது மக்கள் பக்கம் இருந்து செயற்பட வேண்டுமே தவிர முட்டுக்கட்டையாக இருக்க கூடாது. அதிகாரத்தை மீண்டும் தன்வசப்படுத்திக் கொள்வதற்காக சுயநலமாக செயற்பட்டு குழப்பங்களை ஏற்படுத்த கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள