2017 ஆம் ஆண்டு தீர்மானம் மிக்கது
அதிகாரப் பகிர்வு அழிவையே தரும் மக்கள் முகம் கொடுக்க தயாராக வேண்டும் என்கிறார் மஹிந்த
(க.கமலநாதன்)
2017 ஆம் ஆண்டானது மிக தீர்மானம் மிக்க ஆண்டாகும், அதற்கு முகம்கொடுப்பதற்கு இலங்கை மக்கள் தயாராக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தனிப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ள அதிகார பகிர்வு தொடர்பிலான பொதியும் இந்தியர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் எட்கா ஒப்பந்தமும் அழிவின் ஒரு பகுதி மாத் திரமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை யிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2017 ஆம் ஆண்டில் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட போகின்றது. நாட்டின் தனிப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ள அதிகார பகிர்வு தொடர்பிலான பொதியும் இந்தியர்களுககு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் எட்கா ஒப்பந்தமும், அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட அரச நிறுவனங் களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் கீழ் இயங்கச் செய்தல் என்பன நாட்டின் அழிவிற்கு வித்திடும் செயற்பாடுகளாகும்.
இந்த செயற்பாடுகள் அனைத்தும் தேசிய கடன் அதிகரிப்பு, ரூபாயின் வீழ்ச்சி, பொருட்களின் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு கொள்கைகளில் வீழ்ச்சி, வட்டிவீத அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களின் மத்தியிலேயே இடம்பெருகின்றன.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டாட்சி அமைக்க தீர்மானித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் தற்போது தமது மனசாட்சியுடன் போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் இன்றும் இரண்டும் கெட்டான் நிலையில் தடுமாறிக்கொண்டுள்ளனர். அவர்கள் மத்திய வங்கி விவகாரத்தின் போது அர்ஜுன் மகேந்திரன் மீது குற்றம் சாட்டுகின்ற போதும் பிரதமர் அவரை காப்பாற்றுகின்றார்.
இன்று அவர்கள் வெற் வரி சட்டமூலம் , காணாமல் போனோர் அலுவலகம், சிறப்பு அமைச்சு சட்டமூலம் மற்றும் நாட்டினை பிளவுபடுத்த போகின்ற அதிகார பகிர்வு பொதி என்பவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் அவர்கள் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.
நாட்டின் நிலைமை குறித்து சிந்தித்து அது தொடர்பிலான தீர்மானமான ஒரு கட்டம் வருகின்ற போது அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள அமைச்சர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பக்கத்திலேயே உள்ளனர். எனவே அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிக்கும் அமைச்சர்கள் சுதந்திர கட்சிக்குள் போன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் உள்ளனர் அவர்களுக்கு என்றும் கூட்டு எதிரணியின் கதவுகள் திறந்துள்ளன.
எவ்வாறாயினும் இன்று நாட்டின் செயற்பாடுகள் செழிப்பற்றதாக உள்ளன எனவே அடுத்த வருடத்தின் முதல் வாரத்திலிருந்தே மக்கள் சவால்களுக்கு முகமகொடுக்க தயாராகிவிட வேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள