செவ்வாய், 31 ஜனவரி, 2017

*"நான் குழந்தையாக* இருந்தபோது ......!

*"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."*
அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.
அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.
நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.
என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.
அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.
காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.
அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.
விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.
அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.
நாட்கள் விரைந்தது .
நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. *அம்மாவுக்கு* இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.
அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
*அப்பா* அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.
தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.
நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.
எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.
சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும் தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல் தினந்தோறும் கூறி வந்தார்.
செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.
எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .
நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.
எனது *தாய் தந்தையர்* பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.
நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .
நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.
இப்போது நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.
இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.
அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?
அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.
கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.
இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.
சொல்கிறேன் கேளுங்கள்.
அவரை நாங்கள் *"டிவி"* என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.
அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.
அவருடைய மனைவியின் பெயர் *கம்ப்யூட்டர்.*
இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் *கைபேசி*
இவர்களை குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!
படித்ததில் பிடித்தது...

புலிகளிடமிருந்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொண்டதில் தவறில்லை.


தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரப் பிடியிலிருந்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத் தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நுகேகொடை கூட்டத்தில் உலமா கட்சி கலந்து கொண்டதில் எவ்வித தவறும் இல்லை என அக்கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கட்சியின் கல்முனை அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்திற்கு உலமா கட்சித்தலைவர் என்ற ரீதியில் கட்சி சார்பாகவே சென்றேனே தவிர அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பிரதிநிதியாக செல்லவில்லை.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக் கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் மஹிந்தவுக்கு தூது அனுப்பியதாக சிலர் தெரிவித்திருப்பது மிகப்பெரிய அபாண்டமாகும்.
இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன்.
உண்மையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத் தெளிவுள்ள அரசியல்வாதியாவார். எமது உலமா கட்சியானது அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு பங்காளிக் கட்சியாக இணைந்து, அதன் உயர் பீடத்தில் இருந்தாலும் தனியான கட்சி என்ற வகையில் எமக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.
இன்றுவரை அவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் போகும்படியோ போக வேண்டாம் என்றோ ஒரு வார்த்தையும் எம்மிடம் கூறாத அளவுக்கு எமது கட்சிக்குரிய இறைமையை அவர் மதிக்கின்றார்.
இப்படிப்பட்ட பண்பட்ட அரசியல்வாதிகள் எவரும் முஸ்லிம் சமூகத்தில் இல்லை என்பதை உறுதியாக கூறுவேன்.
ஒரு உயர் பீட உறுப்பினர் எதிர் கட்சியின் கூட்டத்திற்கு போக முடியுமா என சம்பந்தப்பட்டவர் கேள்வி எழுப்பியுள்ளமை அரசியல் தெரியாத முட்டாள் தனமாகும்.

முதலில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவரை பாராளுமன்றம் ஆளும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினராகவே இன்னமும் பார்க்கிறது.
அதனால் தான் தமிழ்க் கூட்டமைப்பு எதிர்க் கட்சியாக உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்துள்ள ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான கட்சியின் ஆலோசகர் பதவியில் இருப்பவரே மஹிந்த ராஜபக்ஷ.
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரியின் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்றால் மஹிந்தவின் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ள முடியாது? முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா என சில கேட்கின்றனர். புலிகள் செய்த அளவுக்கு மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்யவில்லை.
இன்று அதே புலிகளின் வாரிசுகளான தமிழ்க் கூட்டமைப்புடன் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்வது முஸ்லிம் சமூகத்திற்கான துரோகம் இல்லையா? அத்தகைய கட்சியொன்றின் கூட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர்கள் கலந்து கொள்ளும்போது புலிகளை ஒழித்து முஸ்லிம்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாவீரர் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன தவறு இருக்கிறது.
கடந்த மஹிந்த ஆட்சியில் சில தவறுகள் ஏற்பட்டன என்பது உண்மை. அதன் காரணமாகவே அமைச்சர் ரிசாத் பதியுதீன் துணிச்சலுடன் நல்லாட்சிக்கு ஆதரவளித்தார்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியலை பொறுத்தவரை மிகச்சிறந்த தேசியத்தலைவராக நாம் அமைச்சர் ரிசாத் பதியுதீனை பார்ப்பதால் அவரை பலப்புடுத்தும் நோக்கில் அவரது கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றோம் என தெரிவித்தார்.
மேலும் அவருக்கு இனவாதிகளால் ஆபத்து ஏற்படும்போது அக்கட்சியின் பதவிகளில் வசதிகளை அனுபவித்து கொண்டிருப்பவர்களை விட நாமே குரல் கொடுக்கிறோம் என்பதால் எம்மை எப்படியாவது அக்கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம் காங்கிரசின் போராளிகள், எம்மீது அபாண்டங்களை கட்டவிழ்த்து விடுகின்றனர் என அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
Tamilwin.

ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்.

*Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...*
*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*
*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.
*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*
*3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*
*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*
*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.*
*6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*
*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*
*8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக (Gift) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*
*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.
*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*
*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*
*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*
*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.
*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*
*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.
*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*
*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*
*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*
*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"
*மேற்கண்ட* *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்*
Whatsup msg

வியாழன், 26 ஜனவரி, 2017

காணாமல்போனோர் தொடர்பில் தகவல்கள் பெறமுடியவில்லை



காணாமல் போனோர் தொடர்பான எந்தத் தகவலையும் இலங்கையிலிருந்து பெற முடியாதுள்ளதுடன் அவர்கள் சட்டபூர்வமாக வெளிநாடு சென்றதாக தகவல்கள் எதுவும் கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து தெரிந்த சகல தகவல்களையும் வழங்கத் தயார் என பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அமைச்சர் சுவாமிநாதன் இன்று (26) வவுனியா செல்லவுள்ளதாகவும் கூறினார். வவுனியாவில் உண்ணாவிரதமிருக்கும் காணாமல்போனோரின் உறவினர்கள் குறித்து ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதற்குப் பதிலளித்த பிரதமர்:
வவுனியாவில் உண்ணாவிரதமிருப்பது குறித்து சிவசக்தி ஆனந்தன் எம்.பி எமக்கு அறிவித்தார். காணாமல் போனோர் தொடர்பாக தெரிந்த சகல தகவல்களையும் தரத்தயாராக இருப்பதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். இந்த மக்களை சந்திப்பதற்காக நாளை (இன்று 26) அமைச்சர் சுவாமிநாதன் வவுனியா செல்லவுள்ளார்.
காணாமல் போனவர்கள் இலங்கையில் உள்ளனரா என்பது குறித்து எந்தத் தகவலையும் பெற முடியாதுள்ளது. அவர்கள் சட்டபூர்வமாக ​ெவளிநாடு சென்றமைக்கான தகவல் எதுவும் கிடையாது. திருட்டுத்தனமாக படகில் சென்றனரா அல்லது இறந்தார்களா என்று தெரியவில்லை. அவர்கள் சென்றிருக்கலமென சிலர் கருதுவதோடு இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
சாட்சிகள் இல்லாது இத்தகையோருக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவு எடுக்க வேண்டும். இவர்கள் சட்டபூர்வமாக வெ ளியேறவில்லை. எனவே இவர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காணாமல் போனோர் தொடர்பான சட்டம் தொடர்பில் ஜே.வி.பி முன்வைத்துள்ள திருத்தங்கள் கிடைக்கவில்லை. அது குறித்து ஆராயத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அநுரகுமார திசாநாயக்க (எம்.பி)
யுத்தத்தின் போது காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். காணாமல்போன தமது பிள்ளைகள், கணவன்மாருக்காக போராட அவர்களுக்கு உரிமையுள்ளது. இவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிவிட்டோம்.
காணாமல்போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை குறித்து அறிவிக்க வேண்டும். காணாமல்போனோர் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்ய சில யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

புதன், 25 ஜனவரி, 2017

சிவபெருமான் பொலிசை அனுப்பினார், அலறியது யார் தெரியுமா? வம்பிழுக்கும் சுப்ரமணியன் சுவாமி


சிவபெருமான் பொலிசை அனுப்பினார், அலறியது யார் தெரியுமா? வம்பிழுக்கும் சூப்புர மணியன் சுவாமி


தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் தாமாக முன்வந்து போராடி வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்து நேற்று சில வன்முறை சம்பவங்களுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி, சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் அலறிக்கொண்டு ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில், ”தைரியம் இருந்தால் மெரினாவிற்கு வருமாறு பொறுக்கிகள் என்னை அச்சுறுத்தினார்கள்.
சிவபெருமான் பொலிசை அனுப்பினார், பொறுக்கிகள் ஐய்யோ, ஐய்யோ என அலறி அடித்துக் கொண்டு ஓடிவிட்டனர். தற்போது பொறுக்கிகள் தமிழ்நாட்டிற்கு வருமாறு கூறுகிறார்கள். சிவபெருமான் முடிவு செய்யட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், “முதல்வர் ஓ.பி 3 நல்ல விஷயங்களை செய்துள்ளார். 1.சுப்ரீம் கோர்ட் உத்தரவுகளின் படி நடந்த ஜல்லிக்கட்டை நிறுத்திவிட்டார். தமிழக சட்டசபையில் சட்டதிருத்த மசோதாவை கொண்டு வந்தார் 3.பொறுக்கிகள் மீது தாக்குதல் நடத்தும்படி உத்தரவிட்டார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில் பொறுக்கிகள் என்று கூறி சுப்ரமணியன் சுவாமி மீண்டும் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, போராட்டம் தொடங்கிய சில தினங்களில், பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில், “டுவிட்டரில் பீட்டா அமைப்பை அச்சுறுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்யும் அனைத்து தமிழ் பொறுக்கிகளும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்காக தங்கள் முகவரியையும் எழுத வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் தமிழக முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மத்தியில் சுப்ரமணியன் சுவாமியின் கருத்துக்கு கடுமையாக கொந்தளிப்பு நிலவியது.
இந்த விவகாரத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும் இடையேயும் கருத்து மோதல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

07 முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்த கோரிக்கை

07 முஸ்லிம்களையும் சுதந்திர வீரர்களாக பிரகடனப்படுத்த கோரிக்கை

RSM
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
 
 
பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணத்தினால் 1804ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 7 முஸ்லிம்களையும், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எஎம். ஹிஸ்புல்லாஹ் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
 
பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஊவா, வெல்லஸ்ஸ பகுதிகளில் கிளர்ச்சி செய்த சிங்கள தலைவர்கள் 19 பேர் 1818 ஆம் ஆண்டு தேசத்துரோகிகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில், புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாசவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவர்களுக்கு எதிரான பிரகடனம் ரத்து செய்யப்பட்டு போர்வீரர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில், தேசத்துரோகிகளாக பிரித்தானிய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள 7 முஸ்லிம்களையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துமாறு  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த இலங்கை திருநாட்டை அவர்களிடமிருந்து விடுவிப்பதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனால், பிரித்தானியரால் பல சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் தேசத் துரோகிளாக பிரகடனம் செய்யப்பட்டனர்.
 
1815 பிரித்தானியர் கண்டி இராச்சியத்தை கைப்பற்றி முழுநாட்டையும் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக ஊவா,வெல்லஸ்ஸ மற்றும் வலப்பன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்த 19 சிங்கள தலைவர்களும் தேசத்துரோகிகளாக   1818 ஜனவரி 10 ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டனர்.
 
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற அடிப்படையில் அந்த பிரகடனத்தை  வர்த்தமானி அறிவித்தல் மூலம் அதிகாரபூர்மாக நீக்கி இரத்துச் செய்திருந்தீர்கள்.
இதே போன்று, பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக பல முஸ்லிம் தலைவர்களும் கிளர்ச்சி செய்து தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர். 
 
அந்த வகையில், 1804 ஜுன் மாதம் 4ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம்களும், திருகோணமலை மாவட்;டத்தைச் சேர்ந்த மூன்று முஸ்லிம்களும் தேசத்துரோகிகளாக பிரகடம் செய்யப்பட்டனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மீரா ஒசன் அவ்வக்கர் (ராய்மூனை), ஒசன் லெப்பை உதுமா லெப்பை (ராய்முனை), அவ்வக்கர் ஈஸா முகாந்திரம் (சம்மாந்துறை), அனீஸ் லெப்பை (மருதமுனை) ஆகியோரும், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சேகு தீதி (தோப்பூர்), சலம்பதி உடையார் (குச்சவெளி), பீர் முகம்மது ஆகியோரும் இவ்வாறு தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
நாட்டின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்காக பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயற்பட்ட குறித்த 7 முஸ்லிம் தலைவர்களுக்கும் எதிராக தேசத்துரோகிகள் என முன்வைக்கப்பட்டுள்ள பிரகடனத்தை வர்த்தமானி மூலமாக அதிகாரபூர்மாக இரத்து செய்து, நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய முஸ்லிம் தலைவர்கள் என பிரகடனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
குறித்த கடிதத்தின் பிரதி வருமாறு...
 
 
 
 
(காத்தான்குடி விஷேட நிருபர் - பழுலுல்லா பர்ஹான்)
 

ஆற்றல், அறிவு இல்லாததே இலங்கையின் அபிவிருத்திக்குத் தடை

ஆற்றல், அறிவு இல்லாததே இலங்கையின் அபிவிருத்திக்குத் தடை



ஹாவார்ட் கென்னடி அரச கல்லூரியின் பேராசிரியர் ரிக்காடோ ஹோஸ்மான் 'அகமான வலயத்திலிருந்து வெளியேறி உங்களுடைய வெற்றிவாய்ப்பை அதிகரிப்பது: புதிய நெருக்குதல்களுக்கு இலங்கையின் வளர்ச்சியை ஒரு மாதிரியாகப் பின்பற்றுதல்' என்ற தலைப்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.
கென்னடி அரச பாடசாலையின் சர்வதேச அபிவிருத்தி மையத்தை நடத்தும் ஹோஸ்மானும் அவருடைய குழுவினரும் இலங்கையின் கடந்த வருட பொருளாதாரத்தை ஆய்வு செய்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த அவருடைய உரை நாட்டின் தற்போதைய பொருளாதார குறைபாடுகள் மற்றும் அதிகரித்த வளர்ச்சிக்கான அதன் பாதைகள் தொடர்பானதாக இருந்தது. உண்மையாகச் சொல்வதென்றால்,
அவருடைய ஆய்வின் முடிவுகள் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் முற்றிலும் எழுச்சி பெறும் என்று கூறுவதாக இல்லை. இருப்பினும், மனித அபிவிருத்தி குறியீட்டைப் பொறுத்தவரையில் இலங்கை மிக நல்ல நிலையில் மெச்சத்தக்க வகையில் தெற்காசிய நாடுகளிலேயே முதன்மையாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் யுத்தத்துக்குப் பின்னான பொருளாதார வளர்ச்சி வருடா வருடம் 4% என்றுதான் கடந்த நான்கு வருடங்களாக இருந்தது. இது ஏன் நடந்தது?
ஏற்றுமதி முன்னேற்றம்
“யுத்தத்தின் பின்னான காலக்கட்டத்தில் பரந்த கடன் பற்றாக்குறையுடனான வளர்ச்சி ஏற்பட்டது தெளிவாகத் தெரிகிறது. பரந்த நடைமுறைக்கணக்கு பற்றாக்குறையான ஒரு போக்குடன்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது” என ஹோஸ்மான் கூறினார். 2009 க்குப் பின்னர் அரச செலவினத்தால் பொருளாதார வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்றுமதி வளர்ச்சி காணப்படவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் போது இறக்குமதியும் அதிகரிக்கின்றது. இறக்குமதிக்கு ஒத்ததாக ஏற்றுமதி இருக்கவில்லையென்றால் நடைமுறைக்கணக்கின் பற்றாக்குறை விரிவடையும்.
இதனால் வளர்ச்சி குறைவடையும். பொருளாதாரத்தின் ஏனைய வளர்ச்சியுடன் இணைந்து செல்லும் விதமாக நீங்கள் உங்களுடைய ஏற்றுமதிகளை அதிகரிக்கும் வேகத்திலும் முக்கியத்துவம் இருக்கிறது. தாய்லாந்து, மலேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி மிகவும் பின்தங்கியதாக உள்ளது" எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த ஏற்றுமதி பற்றாக்குறைக்கு பிரதான காரணம் ஏற்றுமதிப் பொருட்களில் பல்வகைத் தன்மை இல்லாததே. 2000-2015 காலப் பகுதியின் போது சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களுடன் இன்னும் அதிகமாக தனிநபர் வருமானத்துக்கு 245 டொலர்கள் பெறுமதியான 76 பொருட்களையும் சேர்த்துக்கொண்டது.
தாய்லாந்து தனியார் வருமானத்துக்கு 326 டொலர்கள் பெறுமதியான 70 பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்தது. ஒப்பீட்டளவில், இலங்கை அதன் தனியார் வருமானத்தில் ஏழு டொலர்கள் பெறுமதியான ஐந்து பொருட்களையே உற்பத்தி செய்தது.
இதன்படி பார்த்தால் இலங்கை தனது ஏற்றுமதிப் பொருட்களில் இன்னும் பல பொருட்களைச் சேர்க்க வேண்டிய தேவை இருப்பது தெளிவாகிறது. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, இறப்பர், மாணிக்கக்கற்கள், தைத்த ஆடைகள் என்பன பல வருடங்களாக இருக்கின்றன.
சீனாவோ மின்னணுவியல் பொருட்கள், இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள் என்பவற்றை ஏற்றுமதி செய்து பெரும் செல்வந்த நாடாக மாறியிருக்கின்றன. ஒரு நாடு பலதரப்பட்ட புதிய பல்வகைத் தன்மையான கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்வது எவ்வாறு? ஹோஸ்மானைப் பொறுத்தவரையில் இதற்குப் பிரதானமானது தொழில் நுட்ப அறிவுதான்.
ஒன்றின் மாதிரிப்படி செய்வது, அதை மறுபடியும் மறுபடியுமாகச் செய்வது என நீண்ட காலமாக கற்றுக்கொள்வதன் மூலமே அந்த அறிவு கிடைக்கிறது. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி நடப்பதெனக் கற்றுக்கொடுப்பதில்லை. பிள்ளைகள் மற்றவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் யூகித்துத்தான் நடக்கக் கற்றுக் கொள்கிறார்கள். கண்ட காட்சிகளை உணர்ந்து அதன்படி செய்யும் மூளையின் திறன்தான் அறிவு. அது மூளையைச் சுற்றி பின்னப்படும் ஒரு செயல்முறையாகும்.
பல்வேறு திறமைகளைக் கொண்டிருத்தல் :
வளர்ச்சியடையாத சமூகங்களில் உள்ள மக்களுக்கு விவசாயக் கருவிகளை உருவாக்குதல் போன்ற அறிவு இருந்தாலும் பரந்த அறிவு இருப்பதில்லை. உதாரணமாக, பல நாடுகளுக்கு இன்று, வீடுகளை அமைக்கவும் மீன் பிடிக்கவும் அறிவு உண்டு. ஆனால், ஒரு கைத்தொலைபேசியை எப்படி உருவாக்குவது என்று தெரியாது.
வளர்ச்சியடைந்த நாட்டிலுள்ள ஒருவருக்கு தனியாக கைத்தொலைபேசி ஒன்றை உருவாக்கத் தெரியாமலிருக்கலாம். ஆனால், அவரது சமூகத்திலுள்ள பலர் சேர்ந்து கைத் தொலைபேசியை உருவாக்க முடியும். பலவகைப்படுத்தல். பொருளாதார அபிவிருத்தி என்ற இந்த இரண்டுக்கும் முக்கியமாக இருப்பது நானாவித திறமைகளும், அறிவும் கொண்ட தனிநபர்கள்தான். அறிவை ஒன்றாகச் சேகரிப்பதன் மூலம் பல வகையான உயர் பெறுமதிமிக்க பொருட்களை நீங்கள் உருவாக்க முடியும். இங்கு ஹோஸ்மான் பல திறமைகளுக்கு எழுத்துக்களை ஒப்பிட்டுப் பேசினார்.
‘A’ என்ற ஒரு எழுத்து இருந்தால் நீங்கள் ஒரு சொல்லை உருவாக்கலாம். பத்து எழுத்துக்களைக் கொண்டு பலவகையான நீண்ட 595 சொற்களை உருவாக்கலாம். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான எழுத்துக்களுக்கும் ஆற்றல்களுக்கும் வசதிகள் உண்டு எனக் கருதுகிறார் அவர். சின்ன அறிவுள்ள ஒரு நாட்டில் ஒருசில குறைந்த சொற்களை இலகுவாக உருவாக்க முடியும்.
பல சொற்கள் கொண்ட நாடுகளில் கடினமான பல பொருட்களை உருவாக்கிவிடலாம். பல எழுத்துக்களுக்கும், செல்வத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் ஹோஸ்மான் கூறுகிறார். பாகிஸ்தானைவிட பிரான்ஸில் அதிக எழுத்துக்கள் இருப்பதால் இந்த எழுத்து கருத்தியலானது பல நாடுகளின் விடயத்தில் உண்மையாக இருக்கிறது. ஆனால், நாடுகளிலுள்ள பிராந்தியங்களை ஆய்வு செய்யும் போதும் அது உண்மையாகவே இருக்கிறது.
இலங்கையில் முல்லைத்தீவு, மன்னாரில் உள்ள மக்களைவிட கொழும்பிலுள்ளவர்கள் பல பொருட்களை உருவாக்கி பெரும் செல்வத்தை அனுபவிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, இலங்கையின் நாளாந்த பொருட்களின் ஏற்றுமதி 1995ம் ஆண்டு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது.
இப்போதும் அது குறைவுதான். செல்வந்த நாடாக மாறுவதற்கு இலங்கைக்கு உள்ள பிரச்சினை போதுமான அறிவோ, ஆற்றல்களோ இல்லாததுதான். திறமைகளை முயன்று பெறுவது என்பது கடினம். உங்களுக்குத் தெரியாத பொருட்களை நீங்கள் உருவாக்கவும் முடியாது. உதாரணமாக, கைக்கடிகாரம் செய்பவர்கள் இல்லாமல் நீங்கள் கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்க முடியாதே. நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய பொருட்களுக்கு ஒத்த பொருட்களை தயாரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை இலகுவாக்கலாம்.
உதாரணம்: பெண்களின் பாவாடையை தைக்கத் தெரிந்த நாடுகள் பெண்களின் ஆடைகளைத் தைக்கலாம். இதற்கு மாறாக, எண்ணெய் அகழ்வுக்கென நீங்கள் பெருங் குழிகளைத் தோண்டினால் அந்த ஆற்றலை வேறு கைத் தொழில்களுக்கு பயன்படுத்த முடியாது.
ஒரு பொருளுக்கான வரைபடத்தை உருவாக்குவதனால் ஒரு நாட்டின் பொருட்கள் எவ்வளவு பலதரப்பட்டவை; தொடர்புபட்டவை என அறிந்து கொள்ளலாம். தைத்த ஆடைகள், கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள், மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் சீனா கைதேர்ந்த நாடு. இதனால், அந்த நாடு பலவகையான, பெறுமதிமிக்க பொருட்களை தயாரிக்கக் கூடியதாக இருக்கிறது. மின்னணுவியல் பொருட்களைத் தயாரித்தல்.
இலங்கையின் பொருட்கள் நன்கு கட்டமைக்கப்படுவதில்லை. நாட்டில் புதிய பொருட்களை உருவாக்கக் கூடிய அறிவு இல்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இந்த வடயத்தில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறிதளவாக முயற்சிகளையே செய்திருக்கிறது.
1995ம் ஆண்டு பலவகைக் பொருட்களை ஏற்றுமதி செய்த விடயத்தில் இலங்கையை விடக் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட வியட்நாம் மின்னணுவியல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியிருப்பதால் இலங்கையை இப்போது அது விஞ்சிவிட்டது. அறிவின் பெருக்கம் வளர்ச்சி என நாம் நினைக்கிறோம். ஒரு ஊமை மேதையாக மாறுவது போன்றதன்று அது.
ஒரே பொருளை எவ்வாறு செய்வது என்ற அறிவுள்ள ஒரு சமூகத்திலிருந்து வெவ்வேறான பல பொருட்களை செய்யக் கூடிய அறிவுள்ள மக்கள் உள்ள சமூகத்துக்கு செல்வதுதான் அது. அது மின்னணுவியல் பொருட்கள், கார், மருந்துகள் தயாரிக்கும் ஒரு சமூகமே.
இந்த யோசனைகள் இலங்கைக்கு உபயோகமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார பல்வகைத் தன்மையை மேம்படுத்துவதற்கான ஓர் தெளிவான திட்டம் அல்ல. ஹோஸ்மானின் உரையின் இறுதிப்பகுதி ஒரு பொருளை உற்பத்தி செய்யும் அறிவை ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பால் பரவச் செய்வது தொடர்புபட்டதாக இருந்தது.
பாரம்பரியமாக ஐந்து வழிகளில் இந்த அறிவை பரவச் செய்யலாம். நிறுவனங்களுக்கிடையே தொழிலாளர்களை நகர்த்துதல், குடியகல்வு, புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், வியாபார நோக்கத்திலான பிரயாணம், வெளிநாட்டு நேரடி முதலீடு, இதில் முதலாவதாக உள்ள நிறுவனங்களுக்கிடையே தொழிலாளர்களை நகர்த்துதல் என்பது குறித்து நாட்டில் அறிவில்லாததால் எமக்கு அது பொருத்தமானதாக இல்லை. எனவே, குடியகல்வு, வெளிநாட்டவர்களுக்கு நாட்டைத் திறந்து விடுவதுமே மிக முக்கியமாகும்.
இலங்கையில் 1% மக்கள் வெளிநாட்டவர்கள். இவர்களில் 99% இந்தியாவில் பிறந்தவர்கள். சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் அங்குள்ள மக்களில் 40% நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள். இந்த இணைப்பினால் அறிவு விசாலமடைகிறது. அதாவது பல நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஒரு நாட்டுக்குள் பல ஆற்றல்களைக் கொண்டு வருகிறார்கள்.
ஆக்கபூர்வமான அபிவிருத்தி கொள்கைகள் அவசியம்:
ஆற்றல்களுக்கும், அறிவுக்கும் இலங்கை தனது புலம் பெயர்ந்து வாழும் மக்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புகளை விருத்தி செய்து கொள்வது இப்போது நடப்பதில்லை. வியாபார நோக்கத்துடனான பிரயாணம் மூலம் இலங்கை நன்மை பெறுவதுமில்லை. அத்துடன், யுத்தம் முடிந்ததிலிருந்து வெளிநாடடு நேரடி முதலீடுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பையும் காண முடியவில்லை.
அயல்நாடுகளுடன் சாத்தியமான பல திட்டங்கள் 2010ம் ஆண்டு முதல் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறும் ஹோஸ்தான் இலங்கை வெளிநாடுகளுடன் கூட்டு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட சிறந்த வழிகளில் செயற்பட வேண்டுடமெனவும் ஆலோசனை கூறுகிறார்.
குடியகல்வு, புலம்பெயர் தமிழர்களுக்கான கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டியுள்ளதுடன் கைத் தொழில்களுக்கு இன்னும் எவ்வளவு சார்பாக சேவையாற்றலாம் என சிந்திக்கவும் வேண்டும். புதிய கைத்தொழில்கள் நாட்டுக்குள் வருவதற்கு ஏற்ற சூழலையும் அது மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே செயல்படும் கைத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசுக்கும், தனியார் துறைக்கும் இடையில் அதிக ஒத்துழைப்பும், இலாபத்துக்கு பதிலாக உற்பத்தி மீதான கூடிய கவனமும், கூட்டு தொழில் முயற்சிகளுக்கு ஆர்வமும் காட்ட வேண்டும்.
இலங்கையில் செயல்படும் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதில் அதிக வெளிப்படைத் தன்மை முக்கியம். புதிய கைத்தொழில் நிறுவனங்களைக் கவர்வதற்கு அதற்கான சாத்தியம், தொடர்புடைய தடைகளைப் பற்றி ஆராய குழுக்களை நியமிக்கவும் வேண்டும். கடைசியாக, நேரடி சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள், சந்தர்ப்பங்களைத் தேடும் முதலீட்டார்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு முதலீட்டுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் ஹோஸ்மான் தனது பரிந்துரைகளில் மேலும் குறிப்பிட்டார்.
Sam Bresnick
ஷாம் பிரேஸ்னிக்

மட்டக்களப்பில் கடும் மழை! தாழ் நிலங்கள் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ள அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன், இன்று (24) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 86 மில்லி மீற்றர் மழை வீச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு நகர் 97.4 மில்லி மீற்றர், மைலம்பாவெளி 81.0 மில்லி மீற்றர், பாசிக்குடா 50.8 மில்லி மீற்றர், உறுகாமம் 72.4 மில்லி மீற்றர், உன்னிச்சை 95.4 மில்லி மீற்றர், வாகனேரி 42.3 குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் கூறியுள்ளது.
கடுமையான வறட்சி காரணமாக நீர்மட்டம் கடுமையான முறையில் குறைந்திருந்த நிலையில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வாகனேரிக்குளம் மற்றும் வெலிக்காகண்டிக்குளம், வடமுனைக்குளம், கித்துள் வடிச்சல் குளம், கட்டுமுறிவுக்குளம், புணானைக்குளம், நவகிரிக்குளம், தும்பங்கேணிக் குளம், புளுகுணாவைக்குளம் ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி..! சபையில் போட்டுடைத்த சம்பந்தன்

கூட்டு எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்த ஐக்கிய தேசிய கட்சி..! சபையில் போட்டுடைத்த சம்பந்தன்



கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஊழல் செய்பவர்களை சிறை வைப்பதையும் ஐக்கிய தேசிய கட்சி தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஊழல் செய்தமைக்காக எந்தவொருவரும் இதுவரை குற்றவாளியாக அடையாளம் காணப்படவில்லை.
அத்துடன் ஊழல் செய்தமை தொடர்பில் எந்தவொரு நபரும் இதுவரை சிறை வைக்கப்படவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தில் உள்ள சிலரும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட வேண்டும். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஊழலில் ஈடுபடுவதாக தாம் கூறவில்லை.
எனினும் ஊழல் செய்வதை இருவரும் அனுமதிக்கின்றனர். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் செயற்பாடுகள் குறித்து மக்கள் சோர்வு அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வுக்­கான வடி­வத்தை தயா­ரிக்க முயற்­சிக்கும் அர­சாங்கம்

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய தூதரகம் யாழில்..! | Virakesari.lk

வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய தூதரகம் யாழில்..! | Virakesari.lk: வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய தூதரகம் யாழில்..!

தமிழர் நிலை!-தமிழ நம்பி

  தமிழர் நிலை!
மூத்த தமிழே முதற்றாய் மொழியாம்
            
முடிவைச் சொல்கின்றார்!
ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்
            
எவர்க்கும் முதலென்றார்!
காத்தல் பேணல் கருதாத் தமிழர்
            
கடைகெட் டழிகின்றார்!
ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால்
            
உலகில் இழிகின்றார்!
#########தமிழ நம்பி############ 

திங்கள், 23 ஜனவரி, 2017

தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? -


தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? - மு.திருநாவுக்கரசு


களத்தில் திரு.சம்பந்தனா?, திரு.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாருமா? புலம்பெயர் மேற்குலகில் திரு.உருத்திரகுமாரனா?, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா? அல்லது வேறு யாருமா? இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.நா. உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தொகை மேலும் அதிகமாக இருக்க முடியுமே தவிர குறையாது.
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் நிகழ்ந்த மிகப் பெரும் மனிதப் படுகொலை இது என்பதும் அதிகம் ஆதாரங்களைக் கொண்ட ஒரு படுகொலை இது என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.
லண்டனை தலைமையகமாகக் கொண்டுள்ள சனல் - 4 தொலைக்காட்சியால் நேரடி களநிலை காணொளிப்படம் மற்றும் நிழற்படம் என்பனவற்றைக் கொண்ட ஆவணப்படம் வெளியாகியிருந்தது.
அவ்வாவணப்படத்தை ஏற்கத்தக்க உண்மையான ஆவணங்களென ஐ.நா. நிபுணர் குழு ஒப்புக்கொண்டுள்ளது. இதைத் தவிர உயிருள்ள நேரடி சாட்சியங்களும் உண்டு.
இப்பின்னணியில் தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச கவனத்திற்கு உரியதாக மாறியது மட்டுமல்ல நடந்து முடிந்த ஒரு பெரும் மனித அவலத்திற்கு உலகமும், அண்டைநாடும்
பெரிய ஜனநாயக நாடுமான இந்தியாவும், இலங்கை அரசும், ஈழத் தமிழ்த் தலைவர்களும் தக்க பதிலும், தீர்வும் காணவேண்டிய அவசியமும், பொறுப்பும் உண்டு.
இந்நிலையில் இக்கட்டுரையானது இது விடயத்தில் ஈழத் தமிழ்த் தலைவர்களின் பங்கையும், பணியையும், பொறுப்பையும், கடமையையும் தலைமைத்துவ மேன்மையையும் பற்றிய அக்கறையை எழுப்புகிறது.
ஈழத் தமிழரின் வாழ்வில் தேசிய முக்கியத்துவம் மிகப் பெரிதாக எழுந்துள்ள காலமிது. இதற்கு முன்னரான காலங்களில் வாழ்ந்த ஈழத் தமிழ்த் தலைவர்கள் எவ்வளவு தூரம் தமிழ்த் தேசியப் பண்பு நிறைந்தவர்களாக, தமிழ்த் தேசியத் தலைவர்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் விடைகாணப்பட வேண்டுமேயாயினும் தற்போது உள்ள தலைவர்கள் எவ்வளவு தூரம் தமிழ்த் தேசிய பண்புள்ளவர்களாகவோ அல்லது தேசியத் தலைவர்களாகவோ உள்ளனர் என்பதை இன்றைய சமூகம் தெளிவு கண்டறிந்தாக வேண்டும்.
மலை உச்சியில் இருக்கும் விளக்கிற்கு விளம்பரம் தேவையில்லை. ஒருவர் தேசியத் தலைவராக இருக்கிறார் என்றால் அது அவரது வாழ்வில் பளிச்சிடும்.
எப்படியோ மண்ணோடு ஒட்டிய சிந்தனை இல்லாதவர்களும், மக்களின் வாழ்வோடு இணைந்திருக்காதவர்களும் ஒருபோதும் தேசியத் தலைவர்களாக இருக்க முடியாது.
90,000க்கும் மேற்பட்ட விதவைகள் இதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இளம் விதவைகள்.
தாயை இழந்த பிள்ளைகள், தந்தையை இழந்த பிள்ளைகள், தாயையும் - தந்தையையும் இழந்த பிள்ளைகள், அங்கவீனமுற்றோர் என்று ஒரு பெரும் தொகையினரைக் கொண்ட தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் இக்காலத்திற்தான் அதிக முன்னுதாரணத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு உலகிற்கு உன்னதங்களின் தோற்றுவாய்களாக காட்டவேண்டிய காலமும், சூழலும் தமிழ் மக்கள் முன் விரிந்திருக்கிறது.
கொல்லப்பட்டவர்கள் ஒருபுறம், கொல்லப்பட்டவர்கள் பற்றிய துயரத்தை சுமக்கும், கூடவே அவர்களின் பொறுப்புக்களைச் சுமக்கும் உறவினர்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது.
குடும்பத் தலைவர்களை இழந்தோரும், குடும்பத்திற்கு சோறுபோடும் உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களும், காணாமல் ஆக்கப்பட்டோரை எண்ணித் தவிக்கும் இனிய உறவினர்களின் துயரங்கள், சுமைகள், இடப்பெயர்வுகள், குடும்பத்தோருடனான பிரிவுகள், பிள்ளையைப் பார்க்க முடியாத தாய், உறவினர்களைப் பிரிந்துள்ள உறவினர்கள் என சின்னா பின்னப்பட்டுள்ள குடும்ப உறவுகள் போன்ற பின்னணியில் சமூகத் தலைவர்களினதும், அரசியல் தலைவர்களினதும், அறிஞர்களினதும், சமூக ஆர்வலர்களினதும் பொறுப்பும், பணியும் முக்கியமானது. இவற்றில் அரசியல் தலைமைத்துவம் தனி முதன்மை வாய்ந்தது.
தமிழ் மக்களின் பிரச்சனை வெறுமனே மனிதஉரிமை பிரச்சனையல்ல. அதற்கும் அப்பால் அவர்களுடைய தேசிய வாழ்வும், உயிர் பாதுகாப்பும், உடைமை பாதுகாப்பும், வாழ்விடப் பாதுகாப்பும், பண்பாட்டு பாதுகாப்பும் பற்றியது மட்டுமன்றி அச்சமின்றி எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் உட்படாத சூழல் நிறைந்த பின்னணியில் தமது ஆக்க சக்திகளை வளர்த்தெடுக்கக்கூடிய நிலையே வாழ்வுரிமையும், வளர்ச்சிக்கான உரிமையுமாகும்.
இராணுவ, பொலீஸ், உளவுத்துறை அச்சுறுத்தலற்ற சூழலில் சுதந்திர பூமியில், சுதந்தர காற்றைத்தழுவும் இனிய சூழலில் ஆக்கத் திறன்களை வளர்க்கவல்ல, கலை, இலக்கிய பண்பாட்டு அம்சங்களை மேம்படுத்தவல்ல ஒரு வாழ்க்கைச் சூழலே தமிழ் மக்களினது தேசிய வாழ்விற்கான அடிப்படையாகும்.
நீரும், நிலமும், மண்ணும் வளமும், காற்றும், வனமும், பயிரும், வனவிலங்குகளும், வீட்டு விலங்குகளும், பூச்சிகளும் பூராண்களும் என்பனவற்றுடன் கூடவே வாழும் வாழ்நிலைதான் தேசிய வளர்ச்சிக்கான அடிப்படையாகும்.
யுத்தத்தால் அனைத்துவகை நிறுவனங்களும் அமைப்புக்களும் ஒன்றுகூடல் முறைகளும், கூடிக்குலவும் சூழலும் சின்னா பின்னப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் புதிய வீச்சுடன் உன்னதங்களும், உன்னத முன்னெடுப்புக்களும் முதன்மை பெறவேண்டிய காலம்.
சங்ககாலம் யுத்தத்தில் அழிந்த போது வெறுமனே உயிரிழப்புக்கள் மட்டும் ஏற்படவில்லை. வாழ்க்கையின் கட்டமைப்பும், பண்பாட்டு தளமும் சீர்குலைந்தது.
இந்நிலையில் அவற்றை மீட்டெடுக்க சங்கம் மறுவிய காலம் தோன்றியது. அறநூல்கள் தோன்றின, அறவழி இலக்கியங்கள் எழுந்தன. அன்பும், அறமும், வாழ்வும் வளமும் முதன்மைப்படுத்தப்பட்ட சமூக நிர்மாணம் உருவானது.
2ஆம் உலக யுத்தத்தின் பின்பு இது ஜப்பானுக்கும் பொருந்தும், ரஸ்யாவிற்கும் பொருந்தும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பொருந்தும்.
முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்திற்கும், பேரழிவிற்கும் உள்ளாகி பௌதீக ரீதியாக சின்னா பின்னப்பட்டிருப்பது மட்டுமன்றி ஆத்மாத்த ரீதியாக, நம்பிக்கைகளையும், எதிர்பார்க்கைகளையும் இழந்து நடைப்பிணங்களாக ஆகியுள்ள ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு புதிய சிந்தனையும், வீரியமுள்ள ஒரு புதிய தலைமையும் தேவைப்படும் காலமாக 2010க்கள் விரிந்தது. இதில் இதுவரை ஏழரை ஆண்டுகள் கடந்துவிட்டன.
இப்பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த புதிய சிந்தனை என்ன? புதிய வழிகாட்டல் என்ன? என்பனவற்றுடன் வீரியமுள்ள தலைமை எழுந்துள்ளதா? என்ற கேள்விகளுக்கான பதில் மக்களின் கண்முன் இயல்பாகவே காட்சியளிக்கின்றன. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்சிகள் வெளிப்படையாக உள்ளன.
தமிழ்த் தலைவர்கள் கடந்த ஏழரை ஆண்டுகளில் எத்தகைய சிந்தனைகளை முன்வைத்ததார்கள், எத்தகைய திட்டங்களை வரைந்தார்கள். அதில் எவற்றில் வெற்றிபெற்றார்கள்.
எவற்றில் வெற்றி பெறவில்லை என்பது போன்ற லாப நட்ட கணக்கை அனைவரும் பார்த்தாக வேண்டும். என்ன திட்டத்தைக் கொண்டிருந்தோம். எத்தகைய தமிழ்த் தேசிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம்.
எமது குழந்தைகளுக்கு எத்தகைய நம்பிக்கைகளை முன்னிறுத்தியுள்ளோம் என்ற கேள்விகளை தலைவர்களும், அறிஞர்களும் தம்மைத்தாமே கேட்டு பதில் காணவேண்டும்.
தலைவர்களாக முன்தோன்றி அதற்கான பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றிற்காக எத்தகைய தெளிவான சிந்தனைகளை முன்வைத்தார்கள், எத்தகைய தீர்க்கதரிசனங்களுடன் எதிர்காலத்தை அணுகினார்கள் அல்லது அணுகுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு அவர்களே பதில்காண வேண்டும்.
இவ்விடத்தில்தான் தேசிய சிந்தனை பற்றிய பிரச்சினையும், அவற்றிற்கான தலைமைத்துவம் பற்றிய பிரச்சினையும் அந்த தலைமைத்துவத்திற்கான ஆளுமை பற்றிய பிரச்சினையும் முன்னெழுகிறது. இதில் தம் ஆளுமையை நிலைநாட்டியுள்ள தேசியத் தலைவர்கள் யார் என்பதற்கு அவர்களே பதில்காண வேண்டும்.
யூதர்கள் உலகில் ஒரு சிறிய மக்கள் தொகைதான். ஆனால் அவர்கள்தான் இன்றைய உலக நாகரிகத்தின் ஈட்டிமுனையாக உள்ளார்கள். உலக நாகரீகத்திற்கு பெரும் பங்களித்த விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள், தீர்க்கதரிசிகள் என உன்னதமான மாந்தர்கள் தோன்றிய ஒரு தேசிய இனம் அது.
காலத்திற்குக் காலம் தொடர் அழிவுகளுக்கு உள்ளான மக்கள் அவர்கள். அவர்களின் 3000 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாறு அழிவுகளின் வரலாறுதான். அந்த மக்கள் மத்தியிலிருந்துதான், அந்த அழிவுகளின் படிப்பினைகளிலிருந்துதான், அதன் தாக்கத்திலிருந்துதான் மேற்படி பெரும் மாந்தர்கள் அச்சமூகத்தில் தோன்றினர்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீனும், தத்துவஞானி கார்ல்மார்க்சும், உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டும் இதில் சில உதாரணங்கள்.
70,000 ஆண்டுகால தொடர் வரலாற்றைக் கொண்டது சீனம். அவர்கள் தமக்கென வீரியமான ஒரு தேசிய, பேரரச உணர்வைக் கொண்டவர்கள். அவர்களின் ஆக்க சக்தி தொடர் வளர்ச்சியில் உள்ளது.
கடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சர்வதேச ரீதியில் தங்கம், வெள்ளி, பித்தளை பதக்கங்களை குவித்தவர்கள். இது இது அவர்களது சமூக எழுச்சியனதும், கூட்டு உழைப்பினதும், முன்னுதாரணங்களை படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினதும் குறியீடு.
1949ஆம் ஆண்டிலிருந்து சீனா தனது நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் தொடர்ந்து அகட்டி வருகிறதே தவிர குறைக்கவில்லை. 1949ஆம் ஆண்டு புரட்சியில் வெற்றி பெற்ற சீனா 1950ஆம் அக்டோபர் மாதம் திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1962ஆம் ஆண்டு அது இந்தியாவுடன் யுத்தம் புரிந்து ஒரு பகுதி நிலைத்தை தன்னுடைன் இணைத்துக் கொண்டது. 1979ஆம் ஆண்டு வியட்நாமிற்குள் படையை அனுப்பி அங்கு இராணுவ மேலாண்மையை நிருபித்தது.
1999ஆம் ஆண்டு கொங்கொங்கை தன்னுடன் இணைத்துக் கொண்டது. அடுத்து அது தாய்வானை தன்னுடன் இணைக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது.
இங்கு இது தொடர்பான சரி பிழை என்ற விமர்சனத்தை இக்கட்டுரை செய்யவில்லை. ஆனால் அவர்கள் தமது பேரரச தேசியப் பாதையில் நேர்கணியமாக தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார்கள்.
அதேவேளை ஜப்பான் தேசியத்திற்கு தனிவிசேட முன்னுதாணங்களைக் கொண்டது. கடும் உழைப்பார்வம், அர்ப்பணிப்பு, பண்பாட்டு விருப்பார்வம், பேரரச விசுவாசம், தொழில்நுட்பத் திறன், தற்பெருமை, தன்னாதிக்க உணர்வு என்பன அதிகம் கொண்ட ஒரு தேசிய சிந்தனையைக் கொண்ட ஒரு சமூகமாக அவர்கள் காணப்படுகிறார்கள்.
இதில் உள்ள குறைபாடுகள், விமர்சனங்கள் என்பன வேறுவிடயம். ஆனால் அவர்களிடம் காணப்படும் தேசியம் பற்றிய சிந்தனையும், முனைப்பும் இங்கு கவனத்திற்குரியது.
ரஸ்யர்கள் வினோதமான தேசியப்பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் ரஸ்யாவின் மேலாண்மை பற்றிய சிந்தனையில் விட்டுக் கொடுப்பின்றி ஊறிப் போனவர்கள். அவர்களை நாம் சரிவரப் புரிந்து கொள்வதற்கான தகவல் வளம் எம்மிடம் இல்லை.
ஆனால் அவர்களை உலகம் புரிந்து கொண்டதும் குறைவுதான். எப்படியோ அவர்கள் தேசிய மேலாண்மையின் மீது தமது சமூக மேண்மையை சிந்திப்பவர்கள் என்பது தெரிகிறது.
அமெரிக்கா கேள்விக்கு இடமற்ற முதற்தர உலகப் பெருவல்லரசு. அது மேலாண்மையை தனது ஆத்மாவாகக் கொண்டுள்ளது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட பல்லின குடியேற்ற கலாச்சாரத்தால் வடிவம் பெற்ற நாடு அது.
ஆனாலும் வெள்ளையின மேலாண்மையின் கீழ் பல்லின கலப்பிற்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாடு. அதற்குள் அது ஆதிக்க மனப்பாங்கை தனது அச்சாணியாக நிறுத்தியுள்ளது.
ஒலிம்பிக் விளையாட்டில் அமெரிக்கா முதல்தர வரிசையில் நிற்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அதன் வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் அமெரிக்கா நோக்கி கவர்விசைக்கு உள்ளாகி அமெரிக்க குடிமக்கள் என்ற பெயரில் பரிசு பெறுபவர்கள்.
இதில் ஒரு வினோதமான தேசியம் உண்டு. இத்தகைய ஒரு வினோதமான கலப்பு தேசியத்தை வடிவமைத்ததில் அமெரிக்க சிந்தனையாளர்களும், தலைவர்களும் பல முன்மாதிரிகளைக் கொண்டுள்ளனர்.
மேற்படி நாடுகளினதும், சமூகங்களினதும் அனுபவங்களிலிருந்து ஈழத் தமிழர்கள் தம்மை ஒரு வளமான வீரியமிக்க தேசியமாக கட்டமைப்பு செய்ய வேண்டும்.
இதற்கு அறிஞர்களும், தலைவர்களும் தயாராக உள்ளனரா என்பதற்கான அறிகுறிகள் இன்னும் தெரியவில்லை என்பதை முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலம் சோகத்துடன் முன்னிறுத்துகிறது.
2ஆம் உலக யுத்தத்தின் பின் கொமோண்டோ தாக்குதல்களின் வரிசையில் இஸ்ரேலிய கொமோண்டோ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட “என்டர்பே” பணயக் கைதிகள் மீட்பு விவகாரம் முதன்மையானது.
அடுத்து மேலும் இஸ்ரேலால் ஈராக்கின் அணு உலைகள் மீது நடத்தப்பட்ட வெற்றிகரமான அதிரடி விமானத் தாக்குதலும் இராணுவ வரலாற்றில் தனி முத்திரைக்குரியது.
இந்த வரிசையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட “கட்டுநாயக்கா” விமானதளத்தின் மீதான கொமோண்டோ தாக்குதலின் வெற்றி, மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆணையிறவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது குடாரப்பு தரையிறக்கல், அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீதான பில்லேடனின் அதிரடித் தாக்குதல், அமெரிக்க கொமோண்டோக்கள் ஊடுருவி பில்லேடனை கொன்ற அதிரடித் தாக்குதல் என்பவெல்லாம் அதிரடித் தாக்குதல்களில் உலக முக்கியத்துவத்திற்குரிய வரிசையைச் சார்ந்தவை. சரி-பிழை, நல்லது, கெட்டது என்பவற்றிற்கு அப்பால் இவை சமூக ஆளுமைகள் பற்றிய மதிப்பீட்டிற்கான குறியீடுகள் என்பதை மட்டும் கருத்தில் எடுத்தால் போதும்.
ஈழத் தமிழர்கள் வீரியத்துடன் செயற்படுவதற்குரிய புவியியல் மற்றும் வரலாற்று பின்புலத்தைக் கொண்டவர்கள். இந்த மக்களிடம் நல்ல விடயங்களை முன்னெடுத்து சிறப்பான ஒரு புதிய தேசியவாதத்தை கட்டியெழுப்ப முற்பட்டால் அது செயற்திறனுடன் கைகூடக்கூடியது.
ஆனால் தமிழ் மக்களின் தலைவர்களிடம் தெளிவான பார்வையும், தீர்க்கமான சிந்தனையும், திடசித்தமான தீர்மானங்களும், உறுதியான நடவடிக்கைகளும், நீண்டகால கண்ணோட்டமுள்ள உன்னத முன்னெடுப்புக்கள் இன்னும் கண்முன் தோன்றவில்லை.
இப்போது இதுபற்றி தமிழ்த் தரப்பினரும், தமிழ்த் தலைவர்களும், தமிழறிஞர்களும் தம்மை நோக்கி தாமே கேள்வி கேட்டு அதற்கு பதில்காணவேண்டும்.
களத்தில் சம்பந்தன், விக்கினேஸ்வரன் என்போர் இருவழிகளில் தமிழ் மக்களால் பெரிதும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கான பொறுப்பு பெரியது.
எப்படியோ கடந்த காலம் முழுவதிலும் அனைத்து தமிழ்த் தலைவர்களுமே இறுதித் தோல்வி அடைந்தவர்கள். இப்போது சம்பந்தனின் தலைமையும் தோல்வி முகத்திற்தான் இருக்கிறது.
விக்கினேஸ்வரனின் தலைமைத்துவமும் வெற்றிக்கான பாதையை இன்னும் காட்டவில்லை.
விக்கினேஸ்வரனின் கண்ணியத்தின் மீது தமிழ் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். தலைவரின் கண்ணியம் சமூகத்தின் மதிப்பிற்கு ஊன்றுகோலானது.
விக்கினேஸ்வரனின் கண்ணியமும், அவரது குரல் கொடுப்பும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கும், நியாயத்திற்கும் மதிப்பையும், கௌரவத்தையும் தேடிக் கொடுக்கத் தவறவில்லை.
ஆனால் அவரிடன் தமிழ்த் தேசிய ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும், வெற்றிக்குமான திட்டங்கள், தீர்மானங்கள் இருப்பதாக வெளிப்படை அர்த்தத்தில் தெரியவில்லை. அவரிடம் சமூகத்தின் எதிர்ப்பார்க்கையும் பெரியது, அதற்கான பொறுப்பும் பெரியது.
எப்படியோ தாம் வீரியமுள்ள முன்னுதாரணம் கொண்ட செயற்திறன்மிக்க தலைவர்கள் என்பதை நிரூபிக்க சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் அதிக தூரம் பயணித்தாக வேண்டும்.
ஆயிரம் பிரசங்கங்களைவிடவும், கண்ணியமான தேசியத் தலைவனின் பிரசன்னம் மேலானது. இதனை தமிழ்த் தலைவர்களுக்கு சொல்லி வைக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு முன்னெழுந்துள்ளது.
1970களில் அமைச்சர்களுக்கு கறுப்பு கொடி காட்டுமாறு அழைப்புவிடுத்த தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் இன்று அமைச்சர்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் காலம் கண்ணில் தெரிகிறது.
பகவத்சிங்கையும், கரிபால்டியையும், மாசினியையும் முன்னுதாரணமாக அழைத்து 1977 தேர்தல் கூட்டங்களில் தமிழ்த் தலைவர்கள் பேசி இளைஞர்களை போராட வருமாறு அழைத்தனர்.
அந்த அழைப்புக்களால் உந்தப்பட்டு அப்போது மேடைகளில் தம் விரல்களை கூரிய கத்திகளால் பிளந்து ரத்தத் திலகமிட்டவர்கள் புதைகுழிகளுக்குள் விதையாகிவிட்டனர்.
ஆனால் ரத்தத் திலகத்தை நெற்றியில் ஏந்தியவர்கள் தங்கள் தலைகளில் கீரிடங்களை அணிந்துள்ளனர். கறுப்புக் கொடிகளுக்கும், செங்கம்பளங்களுக்கும் இடையே மாண்டு மடிந்த இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் மற்றும் இழப்புக்கள் என்பனவற்றிற்கு மறுமதிப்பீடு செய்ய வேண்டிய காலமிது. கூடவே உரியவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்கவேண்டிய காலமிது.
இப்பின்னணியில் தமிழ்த் தலைவர்களின் தேசியப் பணியென்ன?
களத்தில் சம்பந்தன் தேசியத் தலைவரா? விக்கினேஸ்வரன் தேசியத் தலைவரா? அல்லது வேறு யாரும் தேசியத் தலைவர்களாக தம்மை நிரூபித்துள்ளனரா என்ற கேள்விக்கு அவர்கள் பதில்காண வேண்டும்.
புலம்பெயர் தேசத்தில் இக்கேள்விக்கு மேற்குலகில் உத்திரகுமாரும், இந்தியாவில் காசி ஆனந்தனும் இதைத் தவிர புலம்பெயர் நாடுகளில் வேறுயாராவது இருப்பின் அவர்களும் இதற்கான பதிலை தம்மிடம் தாமே கேட்டு கண்டுகொள்ள வேண்டும்.