புதன், 25 ஜனவரி, 2017

மட்டக்களப்பில் கடும் மழை! தாழ் நிலங்கள் மூழ்கும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் கடுமையான மழை காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ள அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன், இன்று (24) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 86 மில்லி மீற்றர் மழை வீச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், மட்டக்களப்பு நகர் 97.4 மில்லி மீற்றர், மைலம்பாவெளி 81.0 மில்லி மீற்றர், பாசிக்குடா 50.8 மில்லி மீற்றர், உறுகாமம் 72.4 மில்லி மீற்றர், உன்னிச்சை 95.4 மில்லி மீற்றர், வாகனேரி 42.3 குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் கூறியுள்ளது.
கடுமையான வறட்சி காரணமாக நீர்மட்டம் கடுமையான முறையில் குறைந்திருந்த நிலையில் இரண்டு தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், வாகனேரிக்குளம் மற்றும் வெலிக்காகண்டிக்குளம், வடமுனைக்குளம், கித்துள் வடிச்சல் குளம், கட்டுமுறிவுக்குளம், புணானைக்குளம், நவகிரிக்குளம், தும்பங்கேணிக் குளம், புளுகுணாவைக்குளம் ஆகியவற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள