ஆற்றல், அறிவு இல்லாததே இலங்கையின் அபிவிருத்திக்குத் தடை
Wednesday, January 25, 2017 - 01:00
ஹாவார்ட் கென்னடி அரச கல்லூரியின் பேராசிரியர் ரிக்காடோ ஹோஸ்மான் 'அகமான வலயத்திலிருந்து வெளியேறி உங்களுடைய வெற்றிவாய்ப்பை அதிகரிப்பது: புதிய நெருக்குதல்களுக்கு இலங்கையின் வளர்ச்சியை ஒரு மாதிரியாகப் பின்பற்றுதல்' என்ற தலைப்பில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார்.
கென்னடி அரச பாடசாலையின் சர்வதேச அபிவிருத்தி மையத்தை நடத்தும் ஹோஸ்மானும் அவருடைய குழுவினரும் இலங்கையின் கடந்த வருட பொருளாதாரத்தை ஆய்வு செய்தனர். இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்த அவருடைய உரை நாட்டின் தற்போதைய பொருளாதார குறைபாடுகள் மற்றும் அதிகரித்த வளர்ச்சிக்கான அதன் பாதைகள் தொடர்பானதாக இருந்தது. உண்மையாகச் சொல்வதென்றால்,
அவருடைய ஆய்வின் முடிவுகள் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் முற்றிலும் எழுச்சி பெறும் என்று கூறுவதாக இல்லை. இருப்பினும், மனித அபிவிருத்தி குறியீட்டைப் பொறுத்தவரையில் இலங்கை மிக நல்ல நிலையில் மெச்சத்தக்க வகையில் தெற்காசிய நாடுகளிலேயே முதன்மையாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பிரச்சினை என்னவென்றால் யுத்தத்துக்குப் பின்னான பொருளாதார வளர்ச்சி வருடா வருடம் 4% என்றுதான் கடந்த நான்கு வருடங்களாக இருந்தது. இது ஏன் நடந்தது?
ஏற்றுமதி முன்னேற்றம்
“யுத்தத்தின் பின்னான காலக்கட்டத்தில் பரந்த கடன் பற்றாக்குறையுடனான வளர்ச்சி ஏற்பட்டது தெளிவாகத் தெரிகிறது. பரந்த நடைமுறைக்கணக்கு பற்றாக்குறையான ஒரு போக்குடன்தான் இந்த வளர்ச்சி ஏற்பட்டது” என ஹோஸ்மான் கூறினார். 2009 க்குப் பின்னர் அரச செலவினத்தால் பொருளாதார வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
ஏற்றுமதி வளர்ச்சி காணப்படவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் போது இறக்குமதியும் அதிகரிக்கின்றது. இறக்குமதிக்கு ஒத்ததாக ஏற்றுமதி இருக்கவில்லையென்றால் நடைமுறைக்கணக்கின் பற்றாக்குறை விரிவடையும்.
இதனால் வளர்ச்சி குறைவடையும். பொருளாதாரத்தின் ஏனைய வளர்ச்சியுடன் இணைந்து செல்லும் விதமாக நீங்கள் உங்களுடைய ஏற்றுமதிகளை அதிகரிக்கும் வேகத்திலும் முக்கியத்துவம் இருக்கிறது. தாய்லாந்து, மலேஷியா, வியட்நாம் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி மிகவும் பின்தங்கியதாக உள்ளது" எனவும் அவர் மேலும் கூறினார்.
இந்த ஏற்றுமதி பற்றாக்குறைக்கு பிரதான காரணம் ஏற்றுமதிப் பொருட்களில் பல்வகைத் தன்மை இல்லாததே. 2000-2015 காலப் பகுதியின் போது சீனா தனது ஏற்றுமதிப் பொருட்களுடன் இன்னும் அதிகமாக தனிநபர் வருமானத்துக்கு 245 டொலர்கள் பெறுமதியான 76 பொருட்களையும் சேர்த்துக்கொண்டது.
தாய்லாந்து தனியார் வருமானத்துக்கு 326 டொலர்கள் பெறுமதியான 70 பொருட்களை அதிகமாக ஏற்றுமதி செய்தது. ஒப்பீட்டளவில், இலங்கை அதன் தனியார் வருமானத்தில் ஏழு டொலர்கள் பெறுமதியான ஐந்து பொருட்களையே உற்பத்தி செய்தது.
இதன்படி பார்த்தால் இலங்கை தனது ஏற்றுமதிப் பொருட்களில் இன்னும் பல பொருட்களைச் சேர்க்க வேண்டிய தேவை இருப்பது தெளிவாகிறது. இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, இறப்பர், மாணிக்கக்கற்கள், தைத்த ஆடைகள் என்பன பல வருடங்களாக இருக்கின்றன.
சீனாவோ மின்னணுவியல் பொருட்கள், இயந்திரங்கள், இரசாயனப் பொருட்கள் என்பவற்றை ஏற்றுமதி செய்து பெரும் செல்வந்த நாடாக மாறியிருக்கின்றன. ஒரு நாடு பலதரப்பட்ட புதிய பல்வகைத் தன்மையான கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்வது எவ்வாறு? ஹோஸ்மானைப் பொறுத்தவரையில் இதற்குப் பிரதானமானது தொழில் நுட்ப அறிவுதான்.
ஒன்றின் மாதிரிப்படி செய்வது, அதை மறுபடியும் மறுபடியுமாகச் செய்வது என நீண்ட காலமாக கற்றுக்கொள்வதன் மூலமே அந்த அறிவு கிடைக்கிறது. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி நடப்பதெனக் கற்றுக்கொடுப்பதில்லை. பிள்ளைகள் மற்றவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் யூகித்துத்தான் நடக்கக் கற்றுக் கொள்கிறார்கள். கண்ட காட்சிகளை உணர்ந்து அதன்படி செய்யும் மூளையின் திறன்தான் அறிவு. அது மூளையைச் சுற்றி பின்னப்படும் ஒரு செயல்முறையாகும்.
பல்வேறு திறமைகளைக் கொண்டிருத்தல் :
வளர்ச்சியடையாத சமூகங்களில் உள்ள மக்களுக்கு விவசாயக் கருவிகளை உருவாக்குதல் போன்ற அறிவு இருந்தாலும் பரந்த அறிவு இருப்பதில்லை. உதாரணமாக, பல நாடுகளுக்கு இன்று, வீடுகளை அமைக்கவும் மீன் பிடிக்கவும் அறிவு உண்டு. ஆனால், ஒரு கைத்தொலைபேசியை எப்படி உருவாக்குவது என்று தெரியாது.
வளர்ச்சியடைந்த நாட்டிலுள்ள ஒருவருக்கு தனியாக கைத்தொலைபேசி ஒன்றை உருவாக்கத் தெரியாமலிருக்கலாம். ஆனால், அவரது சமூகத்திலுள்ள பலர் சேர்ந்து கைத் தொலைபேசியை உருவாக்க முடியும். பலவகைப்படுத்தல். பொருளாதார அபிவிருத்தி என்ற இந்த இரண்டுக்கும் முக்கியமாக இருப்பது நானாவித திறமைகளும், அறிவும் கொண்ட தனிநபர்கள்தான். அறிவை ஒன்றாகச் சேகரிப்பதன் மூலம் பல வகையான உயர் பெறுமதிமிக்க பொருட்களை நீங்கள் உருவாக்க முடியும். இங்கு ஹோஸ்மான் பல திறமைகளுக்கு எழுத்துக்களை ஒப்பிட்டுப் பேசினார்.
‘A’ என்ற ஒரு எழுத்து இருந்தால் நீங்கள் ஒரு சொல்லை உருவாக்கலாம். பத்து எழுத்துக்களைக் கொண்டு பலவகையான நீண்ட 595 சொற்களை உருவாக்கலாம். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ்வாறான எழுத்துக்களுக்கும் ஆற்றல்களுக்கும் வசதிகள் உண்டு எனக் கருதுகிறார் அவர். சின்ன அறிவுள்ள ஒரு நாட்டில் ஒருசில குறைந்த சொற்களை இலகுவாக உருவாக்க முடியும்.
பல சொற்கள் கொண்ட நாடுகளில் கடினமான பல பொருட்களை உருவாக்கிவிடலாம். பல எழுத்துக்களுக்கும், செல்வத்துக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு எனவும் ஹோஸ்மான் கூறுகிறார். பாகிஸ்தானைவிட பிரான்ஸில் அதிக எழுத்துக்கள் இருப்பதால் இந்த எழுத்து கருத்தியலானது பல நாடுகளின் விடயத்தில் உண்மையாக இருக்கிறது. ஆனால், நாடுகளிலுள்ள பிராந்தியங்களை ஆய்வு செய்யும் போதும் அது உண்மையாகவே இருக்கிறது.
இலங்கையில் முல்லைத்தீவு, மன்னாரில் உள்ள மக்களைவிட கொழும்பிலுள்ளவர்கள் பல பொருட்களை உருவாக்கி பெரும் செல்வத்தை அனுபவிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, இலங்கையின் நாளாந்த பொருட்களின் ஏற்றுமதி 1995ம் ஆண்டு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே இருந்தது.
இப்போதும் அது குறைவுதான். செல்வந்த நாடாக மாறுவதற்கு இலங்கைக்கு உள்ள பிரச்சினை போதுமான அறிவோ, ஆற்றல்களோ இல்லாததுதான். திறமைகளை முயன்று பெறுவது என்பது கடினம். உங்களுக்குத் தெரியாத பொருட்களை நீங்கள் உருவாக்கவும் முடியாது. உதாரணமாக, கைக்கடிகாரம் செய்பவர்கள் இல்லாமல் நீங்கள் கைக்கடிகாரம் ஒன்றை உருவாக்க முடியாதே. நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய பொருட்களுக்கு ஒத்த பொருட்களை தயாரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை இலகுவாக்கலாம்.
உதாரணம்: பெண்களின் பாவாடையை தைக்கத் தெரிந்த நாடுகள் பெண்களின் ஆடைகளைத் தைக்கலாம். இதற்கு மாறாக, எண்ணெய் அகழ்வுக்கென நீங்கள் பெருங் குழிகளைத் தோண்டினால் அந்த ஆற்றலை வேறு கைத் தொழில்களுக்கு பயன்படுத்த முடியாது.
ஒரு பொருளுக்கான வரைபடத்தை உருவாக்குவதனால் ஒரு நாட்டின் பொருட்கள் எவ்வளவு பலதரப்பட்டவை; தொடர்புபட்டவை என அறிந்து கொள்ளலாம். தைத்த ஆடைகள், கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள், மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் சீனா கைதேர்ந்த நாடு. இதனால், அந்த நாடு பலவகையான, பெறுமதிமிக்க பொருட்களை தயாரிக்கக் கூடியதாக இருக்கிறது. மின்னணுவியல் பொருட்களைத் தயாரித்தல்.
இலங்கையின் பொருட்கள் நன்கு கட்டமைக்கப்படுவதில்லை. நாட்டில் புதிய பொருட்களை உருவாக்கக் கூடிய அறிவு இல்லை என்பதைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இந்த வடயத்தில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இலங்கை சிறிதளவாக முயற்சிகளையே செய்திருக்கிறது.
1995ம் ஆண்டு பலவகைக் பொருட்களை ஏற்றுமதி செய்த விடயத்தில் இலங்கையை விடக் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட வியட்நாம் மின்னணுவியல் பொருட்களை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியிருப்பதால் இலங்கையை இப்போது அது விஞ்சிவிட்டது. அறிவின் பெருக்கம் வளர்ச்சி என நாம் நினைக்கிறோம். ஒரு ஊமை மேதையாக மாறுவது போன்றதன்று அது.
ஒரே பொருளை எவ்வாறு செய்வது என்ற அறிவுள்ள ஒரு சமூகத்திலிருந்து வெவ்வேறான பல பொருட்களை செய்யக் கூடிய அறிவுள்ள மக்கள் உள்ள சமூகத்துக்கு செல்வதுதான் அது. அது மின்னணுவியல் பொருட்கள், கார், மருந்துகள் தயாரிக்கும் ஒரு சமூகமே.
இந்த யோசனைகள் இலங்கைக்கு உபயோகமாக இருந்தாலும் நாட்டின் பொருளாதார பல்வகைத் தன்மையை மேம்படுத்துவதற்கான ஓர் தெளிவான திட்டம் அல்ல. ஹோஸ்மானின் உரையின் இறுதிப்பகுதி ஒரு பொருளை உற்பத்தி செய்யும் அறிவை ஒரு நாட்டின் எல்லைக்கு அப்பால் பரவச் செய்வது தொடர்புபட்டதாக இருந்தது.
பாரம்பரியமாக ஐந்து வழிகளில் இந்த அறிவை பரவச் செய்யலாம். நிறுவனங்களுக்கிடையே தொழிலாளர்களை நகர்த்துதல், குடியகல்வு, புலம்பெயர்ந்து வாழ்பவர்கள், வியாபார நோக்கத்திலான பிரயாணம், வெளிநாட்டு நேரடி முதலீடு, இதில் முதலாவதாக உள்ள நிறுவனங்களுக்கிடையே தொழிலாளர்களை நகர்த்துதல் என்பது குறித்து நாட்டில் அறிவில்லாததால் எமக்கு அது பொருத்தமானதாக இல்லை. எனவே, குடியகல்வு, வெளிநாட்டவர்களுக்கு நாட்டைத் திறந்து விடுவதுமே மிக முக்கியமாகும்.
இலங்கையில் 1% மக்கள் வெளிநாட்டவர்கள். இவர்களில் 99% இந்தியாவில் பிறந்தவர்கள். சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் அங்குள்ள மக்களில் 40% நாட்டுக்கு வெளியே இருந்து வந்தவர்கள். இந்த இணைப்பினால் அறிவு விசாலமடைகிறது. அதாவது பல நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஒரு நாட்டுக்குள் பல ஆற்றல்களைக் கொண்டு வருகிறார்கள்.
ஆக்கபூர்வமான அபிவிருத்தி கொள்கைகள் அவசியம்:
ஆற்றல்களுக்கும், அறிவுக்கும் இலங்கை தனது புலம் பெயர்ந்து வாழும் மக்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுடன் தொடர்புகளை விருத்தி செய்து கொள்வது இப்போது நடப்பதில்லை. வியாபார நோக்கத்துடனான பிரயாணம் மூலம் இலங்கை நன்மை பெறுவதுமில்லை. அத்துடன், யுத்தம் முடிந்ததிலிருந்து வெளிநாடடு நேரடி முதலீடுகளின் தொடர்ச்சியான அதிகரிப்பையும் காண முடியவில்லை.
அயல்நாடுகளுடன் சாத்தியமான பல திட்டங்கள் 2010ம் ஆண்டு முதல் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறும் ஹோஸ்தான் இலங்கை வெளிநாடுகளுடன் கூட்டு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட சிறந்த வழிகளில் செயற்பட வேண்டுடமெனவும் ஆலோசனை கூறுகிறார்.
குடியகல்வு, புலம்பெயர் தமிழர்களுக்கான கொள்கைகளும் வகுக்கப்பட வேண்டியுள்ளதுடன் கைத் தொழில்களுக்கு இன்னும் எவ்வளவு சார்பாக சேவையாற்றலாம் என சிந்திக்கவும் வேண்டும். புதிய கைத்தொழில்கள் நாட்டுக்குள் வருவதற்கு ஏற்ற சூழலையும் அது மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே செயல்படும் கைத்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை அரசுக்கும், தனியார் துறைக்கும் இடையில் அதிக ஒத்துழைப்பும், இலாபத்துக்கு பதிலாக உற்பத்தி மீதான கூடிய கவனமும், கூட்டு தொழில் முயற்சிகளுக்கு ஆர்வமும் காட்ட வேண்டும்.
இலங்கையில் செயல்படும் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதில் அதிக வெளிப்படைத் தன்மை முக்கியம். புதிய கைத்தொழில் நிறுவனங்களைக் கவர்வதற்கு அதற்கான சாத்தியம், தொடர்புடைய தடைகளைப் பற்றி ஆராய குழுக்களை நியமிக்கவும் வேண்டும். கடைசியாக, நேரடி சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள், சந்தர்ப்பங்களைத் தேடும் முதலீட்டார்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு முதலீட்டுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் ஹோஸ்மான் தனது பரிந்துரைகளில் மேலும் குறிப்பிட்டார்.
Sam Bresnick
ஷாம் பிரேஸ்னிக்
ஷாம் பிரேஸ்னிக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள