இரத்த தானம் செய்யும் இரத்தத்தால் டி.என்.ஏ. பிரச்சினை ஏற்படுமா?
ஒரு துளி ரத்தத்திலும் நம் மரபுப் பண்புகளை நிர்ணயிக்கும் டி.என்.ஏ. இருக்கிறது என்கிறோம்.அப்படியென்றால் உடல்நலப் பிரச்சினைகளின்போது, மற்றவரிட மிருந்து ரத்தம் பெற்று நோயாளியின் உடலில் செலுத்துகிறார்கள்.
இப்படிச் செய்யும்போது இரு வேறு டி.என்.ஏ.க்கள் ஒரே உடலில் எப்படி உயிர்ப்புடன் இருக்கும்? அப்போது உடலுக்கு என்ன ஆகும்? இதற்கு எளி மையான விடை, நோயாளியின் உடலில் செலுத்தப்படும் ரத்தத்தில் டி.என்.ஏ.வே இருக்காது என்பதுதான். புரியவில்லையா?
ரத்த வெள்ளை அணுக்களில் மட்டுமே நியூக்ளியஸ் எனும் உட்கரு இருக்கிறது. ஒருவர் ரத்த தானம் செய்யும்போது, அந்த ரத்தத்தில் உள்ள ரத்தத் வெள்ளை அணுக்களில் மட்டுமே ரத்த தானம் செய்பவரின் டி.என்.ஏ. இருக்கும். ரத்தச் சிவப்பணுக்களும் தட்டணுக்களும் (பிளேட்லெட்) எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும்போதே உட்கருவை இழந்துவிடுகின்றன.
மீறிச் செலுத்தினால்…
அது மட்டுமில்லாமல் ஒருவரிடம் இருந்து பெறப்படும் ரத்தம், அப்படியே மற்றவருக்குச் செலுத்தப்படுவதில்லை. மையவிலக்கு விசை கருவி (centrifuge) மூலம் ரத்தம் சுழற்சிக்கு உட்படுத்தப் படுகிறது. இதில் பிளாஸ்மா, தட்டணுக்கள், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் போன்றவை தனித்தனியாகப் பிரிக்கப்படுகின்றன. அதன் பிறகு, வெள்ளையணுக்களைத் தவிர்த்த மற்ற மூன்று அம்சங்கள் மட்டுமே தானம் பெறுபவரின் உடலில் செலுத்தப்படுகின்றன.
ஒரு வேளை பெறப்படும் ரத்தம் பிரிக்கப்படாமல், நோயாளிக்கு உடனடி யாகச் செலுத்த வேண்டிய அவசர நிலை இருந்தால், febrile என்ற வகை காய்ச்சல் நோயாளிக்கு ஏற்படும். ரத்தத் தானம் பெறுபவரின் ரத்த வெள்ளையணுக்கள் அயல் டி.என்.ஏ.வை அழிக்கும் செயல்பாட்டால் உருவாகும் காய்ச்சல்தான் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள