வெள்ளி, 13 ஜனவரி, 2017

முதன் முறையாக "டாடா" சாம்ராஜியத்தின் தலைவராக தமிழர்..!

முன் முறையாக "டாடா" சாம்ராஜியத்தின் தலைவராக தமிழர்..!


முதன் முறையாக



உலகின் முதன்மை தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைவராக தமிழ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். என்.சந்திரசேகரன் என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
100 ஆண்டுகள் வரலாற்றைக்கொண்ட சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல் கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நபராக என்.சந்திரசேகரன் இடம்பிடித்துள்ளார்.
1963ஆம் ஆண்டு பிறந்த இவர், திருச்சியில் உள்ள மண்டல பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இந்நிலையில். 1987ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸில் இணைந்துகொண்டார்.
தனது அபார திறமையினால் படிப்படியாக பதிவியுயர்வு பெற்ற அவர், 2009ஆம் ஆண்டு டி.சி.எஸ் இன் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த ஆண்டு ஒக்டோம்பர் மாதம் டாடா குழுமத்தின் கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்ட அவர், நேற்றைய தினம், டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, all - asia executive ranking அமைப்பினால் தொடர்ந்து ஐந்து முறை சிறந்த தலைமை அதிகாரியாக என்.சந்திரசேகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 ஜனவரி, 2017

கோபம் !


ஒரு சமயம், கண்ணன், பலராமன் மற்றும் யாதவ குல வழி தோன்றலான சாத்யகி ஆகிய மூவரும் குதிரையில் ஏறி, பயணம் புறப்பட்டனர். இருள் சூழும் நேரத்தில் அடர்ந்திருந்த காட்டுப் பகுதியை அடைந்தவர்கள், 'இருட்டும் நேரத்தில் இதற்கு மேல் பயணம் செய்ய வேண்டாம்...' என, நினைத்து, அக்காட்டிலேயே தங்க தீர்மானித்தனர்.
குதிரைகளின் சேணங்களை அவிழ்த்து, அவைகளை அங்கிருந்த மரங்களில் கட்டி முடிப்பதற்குள், இரவின் முதல் யாமம் கடந்து விட்டது. அதனால், மூன்று யாமங்கள் தூங்கி, விடியற்காலையில் புறப்படலாம் என, முடிவு செய்தனர். பின், 'தூங்கும் போது குதிரைகளை யாராவது திருடி விட்டால் என்ன செய்வது...' என நினைத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு யாமம் காவல் காப்பதென்றும், அந்நேரத்தில், மற்ற இருவரும் தூங்குவதென்றும் முடிவு செய்தனர்.
முதலில், சாத்யகி காவல் காக்க, மற்ற இருவரும் தூங்கினர். சிறிது நேரத்தில் பெரும் பிசாசு ஒன்று தோன்றி, 'தூங்கும் இருவரையும், தின்னப் போகிறேன்; அதற்கு நீ அனுமதித்தால், உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்...' என்றது!
சாத்யகி பயப்படாமல், 'பிசாசே... வாயை மூடி, பேசாமல் போய்விடு; இல்லை என்றால், உன் கதையை முடித்து விடுவேன்...' என்று மிரட்டினார்.
'என் ஒரு பிடிக்கு தாங்க மாட்டாய்... என்னை மிரட்டுகிறாயா...' என்றபடி, சாத்யகி மீது பாய்ந்தது, பிசாசு.
உடனே, சாத்யகிக்கு கடுமையான கோபம் வர, பிசாசுடன் கட்டிப் புரண்டார். சாத்யகியின் கோபம் அதிகரிக்க அதிகரிக்க, பிசாசின் பலம் கூடிக் கொண்டே போனது. இதனால், சாத்யகியின் உடலெங்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன. அடுத்த யாமம் நெருங்கும் நேரம், பிசாசு, 'பளிச்' சென்று மறைந்தது.
பலராமரை எழுப்பி, தூங்கப் போனார் சாத்யகி. சற்று நேரத்தில், மறுபடியும் பிசாசு வந்தது. சாத்யகியை போலவே, பலராமரும், பிசாசுடன் சண்டை போட்டார். பலராமருக்கு கோபம் அதிகரிக்க, பிசாசுக்கு பலம் கூட, பலராமருக்கு உடலெங்கும் காயம்.
இந்நிலையில், அடுத்த யாமம் நெருங்க, பிசாசு மறைந்தது. பலராமர் கண்ணனை எழுப்பி, காவலுக்கு அனுபினார். கண்ணன் காவல் காத்த போது, வழக்கம் போல் பிசாசு வந்தது.
'நீயாவது நான் சொல்வதைக் கேள்; இவர்கள் இருவரையும் எனக்கு உணவாக விட்டு விட்டு, ஓடிப் போய் விடு...' என்றது!
கோபிக்கவில்லை, கண்ணன். மாறாக, 'நல்லவேளை... நீ வந்தாய். தனியா அமர்ந்திருக்கிறோமே என நினைத்தேன். இப்போது உன்னுடன் சண்டை போடுவதன் மூலம் பொழுதும் கழியும்; சோம்பலும் இருக்காது...' என்று கூறி சிரித்தார்.
கோபத்துடன் கண்ணன் மீது பாய்ந்தது, பிசாசு. அது, கோபத்தோடு எகிற எகிற, கண்ணன் சிரித்தபடியே, 'ஆகா... நீ எவ்வளவு பெரிய வீரன்; என்ன அருமையாக சண்டையிடுகிறாய்...' என்று சொல்லச் சொல்ல, பிசாசின் வடிவமும், பலமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சிறு புழு போன்று ஆகிவிட்டது.
அதை, துணியின் ஓரத்தில் முடிந்து வைத்தார், கண்ணன். பொழுது விடிந்ததும், சாத்யகியும், பலராமரும் இரவில் பிசாசுடன் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை சொல்லி, உடலில் ஏற்பட்ட காயங்களை காட்டினர். அப்போது, தான் துணியில் முடிந்து வைத்திருந்த சிறு புழுவை எடுத்து வெளியில் விட்டு, 'நீங்கள் இரவில் சண்டையிட்டதாக கூறிய பிசாசு இதுதான்; இதன் பெயர்: கோபம். நாம் கோபத்தை காட்டக் காட்ட, இது வளர்ந்து கொண்டே போகும்; கோபப்படாமல் இருந்தால், இதுவும் பலமிழந்து, செயலற்று போய் விடும். நாம் கோபத்தை அடக்கும் போது, எதிராளி பலமிழப்பான்...' என விவரிக்க, சாத்யகியும், பலராமரும், தங்கள் தவறை உணர்ந்தனர்.
நாமும், நம் கோபத்தை கைவிட்டு, எல்லாரையும் அன்பினால், வசப்படுத்துவோம்! 
வாழ்க வளமுடன் 
G N சாமி

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்-

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்-
*******************வணங்கி வழி படுவோம்..வழி நடப்போம் ************
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியில் அமெரிக்கா வின் சிக்காகோ மாநிலத்தில் நடந்த உலக ஆன்மீக மாநா ட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளி லிருந்து பல மதங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடி யிருந்தனர்.
இந்தியாவை பிரதிநிதியாக ஒருவர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவ தற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லா மல் காவி உடையும் தலைப்பா கையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசா ன சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர்,
வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட் டா வி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திரு ந்தவரிட ம் பேசத் தொடங்கினர்.அந்த அலட்சியத்தை யெல்லாம் பொருட் படுத்தா மல் அமைதியாக சிறிது நேரம் அனை வரையும் பார்த்த பிறகு சகோதர சகோத ரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கி னார். அவர் கூட்டத்தி னரை அவ்வாறு அழைத்த விதத்திலே யே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர் மீது திரும்பி யது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார்
அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.
இதை விட முக்கியமானது என்னவென்றால் நம்ம நிக்கோலஸ் டெஸ்லா தெரியுமா..அதாங்க நாம் உபயோகபடுத்துகிற அல்டர்நேடிவ் கரண்ட்டை கண்டு பிடித்தது நம்ம டெஸ்லா தாங்க.. அது மட்டுமல்லாமல் ரிமோட் கண்ட்ரோல்,லேசர் வானொலி,நியான் பல்பு என்று நிறைய கண்டு பிடித்தார்.தாமஸ் ஆல்வா எடிச னின் கண்டு பிடிப் புகளில் பாதிக்கும் மேல் டெஸ்லாவி னால் கண்டுபிடிக்கப்பட்டு எடிசனால் காப்பிரைட் வாங்க ப்பட்டது என்றுஅமெரிக்க மீடியாக்கள் இன்றும் சொல்லி க் கொண்டு இருக் கிறது.
நம்ம விவேகானந்தர் சிகாகோவில் சமய சொற்பொழிவு ஆற்றும் பொழுது நின்று கொண்டே மெய் மறந்து கேட்ட விஞ்ஜானிகளில் இந்த நிக்கோலஸ் டெஸ்லாவும் ஒருவ ர். அதன் பின் விவேகா நந்தரை வணங்கிய டெஸ்லா சொன்ன வார்த்தை என்ன தெரியுமா?எங்களின் கண்டு
பிடிப்புகளுக்கு இந்துமதத்தின் வேதாந்த கருத்துக்களே மூல காரணம் என்றாராம்.பார்த்தீர்களா நம்ம இந்து மதத்தின் பெருமையை..வெளி நாட்டு விஞ்ஜானிக்கு தெரிந்தது நம்ம பகுத்தறிவு மூதேவிகளுக்கு தெரிய வில்லையே..
இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங் கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய விவேகானந்தர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற தத்தா குடும்பத்தில் உதித்தார்.
நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயற்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி, செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரி யாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.
தினசரி நரேந்திர நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரத கதைகளை சொல்வார். ராமர் கதாபாத்திரின் மீது மரி யாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர். சிறுவயதிலேயே தியானத்தில் மூழ்க தொடங்கினார்.
குழந்தையாக இருந்த போதே,நரேந்திர நாதர் அவர்களுக்கு துறவிகள் மீது பெரும் மரியாதை இருந்தது. யார், எதை அவரிடம் கேட்டால், கேட்டவுடனேயே விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற மனப்பக்குவம் கொண்டிருந்தார். அவரி டம் பிச்சைக்காரன் பிச்சைக் கேட்கும் போதெல்லாம், அவரிடத்தில் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விடு வார். இதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே நரேந்திர நாதருக்கு அவர்களுக்கு, தியாகம் மற்றும் துறவற உணர்வு இருந்தது
1879ல் மெட்ரிக் பள்ளிப்படிப்பை முடித்து, கல்கத்தாவிலுள் ள பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். ஒரு வருடம் கழித்து, அவர் கல்கத்தாவிலுள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூ ரியில் சேர்ந்து தத்துவப் பாடத்தைப் படித்தார். அவர் மேற்கத்திய தத்துவங்களை யும், ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றை யும் படித்தார்.
அவர் தனது ஆய்வுகளில் முன்னேறியதும், அவரது சிந்தனை களின்பீடம் அபிவிருத்தி அடைந்தது. கடவுள் இருப்பது பற்றித் தொடர்பான சந்தேகங்கள், அவரது மனதில் எழத் தொடங்கியது. இதுவே, அவரை ‘கேஷப் சந்திர சென்’ தலைமையிலான முக்கிய மத இயக்கமான ‘பிரம்ம சமாஜில்’ இணைய செய்தது. ஆனால், பிரம்ம சமாஜின் பிரார்த்தனைகளும், பக்தி பாடல்களும் கடவு ளை உணர்த்ததாதன் காரணமாக அவருடைய ஆர்வம் பூர்த்தி அடையவில்லை.
இந்த நேரத்தில், தஷினேஸ்வர் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் பற்றி நரேந்திர நாதருக்குதெரிய வந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்கள், காளி அம்மன் கோவிலில் ஒரு பூசாரியாக இருந்தார். அவர் ஒரு கல்வியாளராக இல்லை யென் றாலும், ஒரு சிறந்த பக்தனாக இருந்தார். அவர் பல முறைக் கடவுளை உணர்ந்தார் என்றும் கூறி னார். ஒருமுறை நரேந்திர நாதர்அவரது நண்பர் களுடன் அவ ரைப் பார்க்க தஷினேஸ்வருக்குச் சென்றார்.
சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. புரிதலுக்கு பிறகே ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார். ராம கிருஷ்ணரை தனது குரு வாக ஏற்றுக் கொண்டு, இரட் டைத் தன்மையல்லாத அத்வைத வேதாந்தத்தில் ஐந்து ஆண்டுகள் அவரின் கீழ் பயிற்சி மேற் கொண்டார். யோகா சனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்க ளை கற்பிக்க தொடங்கினார்
மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு 'விவேகானந்தர்' என்ற பெயரை சூட்டினார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றி லிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். 1886ல், ஸ்ரீ ராமகிருஷ்ணரர் அவர்கள் காலமானார். அதன் பின்னர், சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவரது வாரிசாக பரிந்துரைக்கப்பட்டார்.
சுவாமி விவேகானந்தர் அவர்கள், கன்னியா கு மாரிக்கு டிசம்பர் 24, 1892ல் வந்தார்அவர் கடலில் சிறிது தூரம் நீந்தி, ஒரு தனி பாறையின் மீது அமர்ந்து, தனது தியானத்தைத் தொடங்கினார். 24,25,26 ஆகிய மூன்று நாட்கள் அங்கு தியானம் மேற்கொண்ட அவர், இந்தியாவி ன் கடந்த, தற்போதைய மற்றும் எதிர்காலம் பற்றி தன் தியானத்தில் கண்டு விழுமின் எழுமின் என்று இந்திய இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்.
உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும், இந்துமத த்தின் பெருமைகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் இறைவனடி சேர்ந்தார்.100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவையே மாற்றிக் காண்பிக் கிறேன் என்று அன்றே மோடி மாதிரி இந்தியாவை மாற்றிக் காண்பிக்கிறேன் என்று முழங்கிய விவேகானந்தரின் பிறந்த நாள் தான் இந்தியாவில் தேசிய இளைஞர் தினமாக இன்று கொண்டாடப்
படுகிறது

மீண்டும் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது..!

நீண்டகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கை மீது  விதிக்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீதான தடை இன்று நீக்கப்பட்டுள்ளது. 
இதன்படி இன்று முதல் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட மனித உரிமைகள், தொழில் சட்டங்கள், சுற்றாடல் பாதுகாப்பு, நல்லாட்சி ஆகிய விடயங்களின் கீழ் 27 சர்வதேச இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் அமுல்படுத்தவும் இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளதை கவனத்தில் கொண்டே ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை  இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக்க வேண்டுமாயின் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளும், ஐரோப்பிய நாடாளுமன்றமும் அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதனை நடைமுறைப்படுத்த சுமார் நான்கு மாத காலம் எடுக்கும் என என ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தைத்த ஆடைகள் மற்றும் மீன் உற்பத்திகள் உட்பட இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் குறிப்பிட்ட உற்பத்தி பொருட்களுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை மூலம் ஐரோப்பிய நாடுகள் 66 வீத வரியை அறவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்த பின்னர், இவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பதுடன் இந்த பொருட்கள் குறைந்த விலையில் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 Virakesari.lk

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..? நல்லாட்சி அரசுக்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..? நல்லாட்சி அரசுக்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு


இலங்கையில் பல தசாப்த காலமாக இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மற்றும் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் புறக்கணித்து வருகின்றது.
இலங்கை அரசின் இந்த புறக்கணிப்பின் காரணமாக யுத்தம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோர், மற்றும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதி, நியாயம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு இன்று இந்த விடயத்தினை வலியுறுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல முக்கிய பரிந்துரைகள் அடங்கிய 700 பக்கங்களுக்கு மேலான ஒரு விரிவான அறிக்கை ஒன்று கடந்த 3ஆம் திகதி நல்லிணக்க ஆலோசனைக்கான செயலணி வெளியிட்டது.
எனினும், இந்த அறிக்கையினை இலங்கை அரசாங்கம் மிகவும் எளிதாக அலட்சியப்படுத்தும் வகையில் செயற்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், அந்த அறிக்கை கையளிக்கப்பட்ட போது ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பங்கேற்கவில்லை.
அத்துடன், குறித்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீதி அமைச்சர் இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளில் தனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைகள் அமைப்பின் தெற்காசிய இயக்குநர் சம்பா பட்டேல் கருத்து வெளியிடுகையில்,
பிரதமரால் நியமிக்கப்பட்ட செயலணியின் அறிக்கையை மிகவும் விரைவாக தாக்கல் செய்ய இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டது.
சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள 7000க்கும் மேற்பட்ட மக்கள், குறிப்பாக மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட பலர் தாங்களே முன் வந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
இது தொடர்பான தங்களின் கடும் பணியை சிரத்தையுடன் நல்லிணக்க செயலிணியின் உறுப்பினர்கள் செய்து முடித்து விட்டனர்.
எனினும், செயலணியின் அறிக்கை மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை இலங்கை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.
தங்களின் குடும்ப உறுப்பினர் கொல்லப்பட்டதாலோ அல்லது காணாமல் போனதாலோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதற்கு அரசாங்கம் தனது உறுதியை காட்ட வேண்டுமெனில்,
இலங்கை அரசாங்கம், நல்லிணக்க செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகள் குறித்து வலுவாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எது நடந்துவிட கூடாது என்று தலைவர் பிரபாகரனிடத்தில் கூறினேனோ அதுவே இன்று நடந்துள்ளது..!


நாடு மீண்டும் ஒரு அழிவை சந்திக்கப்போவதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விடுதலைப் புலிகள் அழிந்தமையானது, ஒரு சிலருக்கு வேண்டுமானால், சந்தோசமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி அல்ல. நான், நாட்டு மக்கள் அனைவரையும் நேசிப்பவன்.
எது நடந்து விடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடிக்கடி கடிதம் எழுதினேனோ, அதுதான் கடைசியில் நடந்தும் முடிந்தது. அதேபோல்தான் இன்றும் தனித்து நின்று கூறுகின்றேன்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள், தாங்கள்தான் என்று கூறும் ஒருசிலருடன் மட்டும் நீங்கள் உறவு வைத்துக்கொண்டு, ஏனையவர்களை புறம்தள்ளி, தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நடத்தும் ஆட்சியில், எமது மக்களுக்கு நிலையான தீர்வு எதுவும் கிட்டப்போவதில்லை.
உங்கள் தேசிய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களே, அரசில் நம்பிக்கை இழந்து பேசுகின்றார்கள். இந்நிலையில், எமது மக்களுக்கு, இந்த அரசு எதனையும் சாதிக்கப்போவதில்லை.
காலங்காலமாக குறிப்பிட்ட ஒருசிலருடன், அவர்களை திருப்திப்படுத்துவதற்காக மட்டுமே நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. அதுதான் வரலாறும் ஆகும்.
அவ்வாறான ஒரு செயலையே மீண்டும் நீங்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இது நாட்டுக்கு மீண்டும் ஒரு அழிவையே கொண்டுவரும்.
சகல தமிழ் அமைப்புகள் மற்றும் சகல முஸ்லிம் தலைவர்கள் ஆகியோரை உள்ளடக்கி ஒரு பேச்சுவார்த்தை மூலம் விரைவில் ஒரு தீர்வை முன்வையுங்கள்.
புதிய அரசியல் அமைப்பு என்று கூறி காலத்தை இழுத்தடிப்பதும், மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றிவிட்டு, என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகைகளை அளிப்பதும், மாற்றத்தை ஏற்படுத்திய சகல இன மக்களையும் ஒரு ஏமாற்றும் செயலாகவே நான் கருதுகின்றேன்.
மீண்டும் மக்களிடையே இனக்குரோதம் வளரத் தொடங்கியுள்ளது என்பது, நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே சான்றுகூறுகின்றன.
இந்திய முறையிலான ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி, தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் உள்ளது போன்ற உரிமைகள் சட்டத்தை உள்ளடக்கி,
அதனை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் ஒரு நல்ல தீர்வை வழங்கி, நாட்டு மக்கள் அனைவரையும் சுபீட்சமாக வாழவைக்கலாம்” என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 11 ஜனவரி, 2017

பொது அறிவுத் தொடர் 04


பொது அறிவுத் தொடர்  04

01.# அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்போலிக்கால்கள்

02.# வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதுஹார்மோன்கள்

03.# புவி நாட்டம் உடையதுவேர்

04.# இடப்பெயர்ச்சி அடையும் தாவரம்வால்வாக்ஸ்

05.# டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம்புகையிலை

06.# ரேபிஸ்வைரசினால் உண்டாகிறது.

07.# முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வதுஹைடிரா

08.# நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டுகிளாமிடோமானஸ்

09.# மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரிபிளாஸ்மோடியம்

10.# அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டுமண்புழு

11.# தாவர வைரஸ்களில் காணப்படும் மரபு பொருள்ஆர்.என்.

12.# எய்ட்ஸ் நோயை உருவாக்கும் வைரஸ்எச்ஐவி

13.# பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம்தந்தித் தாவரம்

14.# இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம்ஹீமோகுளோபின்

15.# தாவர உண்ணிகளுக்கு எடுத்துகாட்டுயானை

16.# ஊன் உண்ணிகளுக்கு எடுத்துகாட்டுசிங்கம்

17.# அனைத்து உண்ணிக்கு உதாரணம்மனிதன்

18.# விழுங்கும் முறை உணவூட்டம் கொண்டதுஅமீபா

19.# ஒட்டுண்ணி உணவூட்டம் உடையதுபிளாஸ்மோடியம்

20.# அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையதுபிளாஸ்மோடியம்

21.# சக்தி தரும் உணவுச் சத்துகார்போஹைட்ரேட்

22.# தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்முதல் வகை நெம்புகோல்

23.# நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்ஆர்க்கிமிடிஸ்

24.# எதில் நிலையாற்றில் உள்ளதுநாணேற்றப்பட்ட வில்

25.# பற்சக்கர அமைப்புகளின் பெயர்கியர்கள்

26.# புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம்பிரையோஃபில்லம்

27.# ஆடு ஒரு தாவர உண்ணி

28.# தற்சார்ப்பு உணவூட்டம் என்பதுதானே தயாரித்தல்

29.# தாவரங்களில் ஒளிச்சேர்கேகையின் போது சேமிக்கப்படும் ஆற்றல்வேதி ஆற்றல்

30.# விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவதுசூரிய மின்கலம்

31.# விலங்குகளைவிடத் தாவரம் இறுகி இருப்பதற்குக் காரணம், தாவரங்களின் செல்சுவர் எனும் அமைப்பாகும்.

32.# செல்லுக்கு வடிவத்தைத் தரும் வெளியுறை செல்சுவர்.

33.# செல்சுவர் செல்லுலோசினால் ஆனது.

34.# செல்லின் உள் உறுப்புகளைப் பாதுகாப்பதும், செல்லுக்கு வடிவம் தருவதும் செல்சுவரின் பணி.

35.# தாவர செல்லுக்கு செல்சுவர் உண்டு

36.# விலங்கு செல்லுக்கு செல்சுவர் இல்லை

37.# தாவர செல்லுக்கு கணிகங்கள் உண்டு

38.# விலங்கு செல்லுக்கு கணிகங்கள் இல்லை.

39.# தாவர செல்லுக்கு சென்ட்ரோசோம் இல்லை

40.# விலங்கு செல்லுக்கு சென்ட்ரோசோம் உண்டு.

41.# தாவர செல்லின் நுண் குமிழ்கள் அளவில் பெரியவை.

42.# விலங்கு செல்லின் நுண் குமிழ்கள் அளவில் சிறியவை.

43.# கணிகங்கள் தாவர செல்லுக்கே உரிய நுண்ணுறுப்பு ஆகும்.

44.# கணிகங்களை நிறமிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கலாம்.

45.# தாவர ஒளிச்சேர்க்கைக்கு உதவுவது, மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிப்பது கணிகங்களின் பணியாகும்.

46.# குளோரோபிளாஸ்ட் (பசுங்கணிகம்) காணப்படும் நிறமிகுளோரோஃபில்பச்சை நிற நிறமி.

47.# குளோரோபிளாஸ்ட் பணிதண்டு, இலைகளுக்கு பச்சை வண்மம் தருதல்.

48.# குரோமோபிளாஸ்ட்டில் காணப்படும் நிறமி கரோட்டின்ஆரஞ்சு நிற நிறமி, சாந்தோஃபில்மஞ்சள் நிற நிறமி.

49.# குரோமோபிளாஸ்ட் பணிபூக்கள், கணிகளுக்கு வண்ணம் தருதல்

50.# லியூக்கோபிளாஸ்ட் பணிதாவரத்தின் வேர்பகுதி மற்றும் தரைகீழ் தண்டுகளில் காணப்படுதல்.

51.# செல் ஒவ்வொன்றும் ஒரு குட்டித்தொழிற்சாலை போன்றது.

52.# நமது மூளையில் இலட்சக்கணக்கான செல்கள் உள்ளன.

53.# மிகவும் நீளமான செல் நரம்புசெல்

54.# நுண் குமிழ்கள் பெரிய அளவில் காணப்படும் செல் வெங்காயத்தோலின் செல்

55.# இரத்த சிவப்பணுக்கள் உட்கரு இல்லாத விலங்குசெல்கள் ஆகும்.

56.# விலங்கு செல்லில் மிக கடினமான செல் எலும்புசெல் ஆகும்.

57.# விலங்கு செல்லில் மிக நீளமான செல் நரம்புசெல் ஆகும்.


மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்!


மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல்!

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்டிருந்த வந்தாறுமூலை சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பண்னையாளர்கள் மீது அவ்விடத்திற்கு வருகை தந்து அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த ஏனைய இரு பௌத்த பிக்குகளும் சேர்ந்து அந்த பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என கூறி கண்ணத்தில் அறைந்துள்ளனர்.
அத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, தாக்குதலுக்கு உள்ளான குமாரசாமி பேரின்பம் என்பவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மூன்று பண்னையாளர்கள் மீது குறித்த பௌத்த பிக்குகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அடியை வாங்கிக்கொண்ட மூன்று பண்ணையாளர்களும் இன்று இரவு வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும்,சம்பவம் குறித்து கிழக்குமாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதுடன், நாளைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன...? பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறமுடியாது..! சம்பந்தன் விளக்கம்


தமிழ் மக்கள் எதிர்ப்பார்த்தது என்ன...? பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாகவும் கூறமுடியாது..! சம்பந்தன் விளக்கம்


கடந்த கால ஆட்சியை மாற்றி அமைக்க பாரிய வாக்குகளை எமது மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்கள்.
அதற்கு காரணம் நாங்களும் இந்த நாட்டில் மற்ற சமூகங்களை போல் மதிக்கப்பட வேண்டும். நாங்களும் எல்லா உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். எமது சுய மரியாதையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த விடயங்களை எதிர்பார்த்தே தமது வாக்குகளை வழங்கினார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு நல்லினக்க அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க வாரம் இன்று கொழும்பு விவேகாநந்தா தேசிய கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இரண்டு இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தற்பொழுது அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாங்களும் அதனையே எதிர்பார்க்கின்றோம்.
சர்வதேசத்தின் மதிப்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
சமாதானத்தை ஏற்படுத்த இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிட்டதாக நாம் கூற முடியாது. பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஆடசியாளர்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. ஒரு வித்தியாசத்தை நாங்கள் அவதானிக்கின்றோம்.
இந்த பிரச்சினைகளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தீர்க்க எத்தனிக்கின்றார்கள்.
பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாவிட்டாலும் கூட அதற்கான எமது ஒத்துழைப்பை நாம் வழங்காமல் இருக்க முடியாது. ஏனென்றால் நாங்களும் இதில் ஒரு பங்காளிகள்.
எமக்கு இதில் முக்கிய ஒரு பங்கு இருக்கின்றது. அந்த பங்களிப்பை செய்ய நாம் பின்நிற்க கூடாது. காணாமல் போனோர் தொடர்பாக விரைவில் ஒரு முடிவு வர வேண்டும்.
நீண்ட நாட்களாக இது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஒரு அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்காக உருவாக்கப்பட்ட சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எங்கள் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.
அந்த மக்களுடைய வாழ்ககையில் ஒரு நிம்மதி ஏற்பட வேண்டும். ஒரு சமாதானம் ஏற்பட வேண்டும். அவர்களுடைய மனதில் ஒரு சாந்தி ஏற்பட வேண்டும். அவர்கள் நடந்த உண்மையை அறிய வேண்டும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் காலத்தை வீணடிக்காது செயற்பட வேண்டும் என நான் கருதுகின்றேன். எமது மக்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
அவர்களின் விவசாய நிலங்கள் அவர்களுக்கு கையளிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த விடயங்களில் தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் ஏற்படுகின்றது. ஆனால் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.