செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தமிழ் ஈனத்தின் தலைவன்.



ஏட்டுச் சுரக்காய்களை எடுத்து விளையாடும் கலையில்-ஈழ
நாட்டுப் பற்றாளர், நமது தமிழ்நாட்டுக் கலைஞர் முதல்வர்,
வோட்டுப்போட்ட  தமிழன் தலையில் வேட்டுவைத்து -தேங்காய்
உடைத்து தன் வீட்டுச் சோத்திற்கு சொதிவைத்த வல்லவர்.


கூட்டைவிட்டு உயிர் போகுமுன் மீட்டிடுவாய் என நம்பினோம்-நீயோ
ஆட்சியை விட்டு அகல்வோம் எனநினைத்து,பட்டோலையில்  பம்பினாய்.
காட்டிவிட்டாய் யுன் நரிக் குணத்தை உண்ணும் விரதத்தில் அன்று-பாரத
நாட்டியமா? நாடகமா? நன்றாக ஆடுகின்றாய் உலகுக்கு இன்று 


அடித்துத்துவைத்து  அலகாகக் கிள்ளி,அள்ளி எறிந்து-புலருமுன்
தேடிப் பிடித்து சிறையில், இறுக்கி அடைத்து முறித்துவிட்டு
பட்டுச் சட்டைக்கு அளவெடுத்த பரிதாபம், அநியாயம் -தமிழ்
நாட்டுத் தமிழன் ஆளுகின்ற ஆட்சியில்தான் இந்த  நியாயம்.


வேட்டைக்காரன் பார்த்து வெகு வேடிக்கையாய் இருந்துவிட்டு-யுங்க
கட்சி கடைசியில் கட்டையில் காலடி வைத்து ஏறும்போது
ஆட்சி கொடுக்க வேண்டும் இலங்கைத் தமிழருக்கு -நிலை
நாட்டப்படவேண்டும் தமிழர் முழு உரிமைகள் ஈழத்தில்.


மாட்டிவிட்டு மறு படியும்  நோட்டம் பார்க்கும் -கண்
கட்டுவித்தை தமிழ் நாட்டு மக்களுடன் முடியட்டும்.
தொட்டிலை ஆட்டிவிட்டுப் பிள்ளையையும் கிள்ளி விட்ட-பழம்
பாட்டிக்கதை  ஈழத்தில், இங்கு முழுப்பேருக்கும் அத்துபடி. .
  
தமிழ் ஈனத்தின் தலைவன்

திங்கள், 22 பிப்ரவரி, 2010

மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் -01


வெள்ளிக் கிழமையில-வரும்
 வேளை யொரு வேளையில
பள்ளிக்குப் போற மச்சி-உண்ட
பவர என்ன சொல்லுவங்கா?

நடையழகி,தொடையழகி
நாலு லட்சம் பல்லழகி
கதைய்ழ்கி கதிஜா உம்மா-எண்ட
கைலேன்ச வரக்காட்டுகா


ஆசைக் கிளியே! -என்ர
ஆசைப் பத்தும்மாவே!
ஓசைக் குரலாலே -உங்க
உம்மாவைக் கூப்பிடுகா

தங்கச் சிலையே! மச்சி!-யெந்
தாமரைப் பூ முகநிலவே!
சுட்ட செங்கல் வடிவே -நாம
சுகமாக சேருவது எப்பகிளி.

புல்லைப் புடிங்கி வைச்சன்-எங்க
புற வளவைத் தூத்து வைச்சன்
அன்னப் பசுங்கிளியின் -கால்
அடி அழகைப் பார்ப்பதற்கே 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

கருணா அம்மானுக்கு தேசியப் பட்டியலில் இடம்





ஒன்பது வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம்


21/02/2010/ வீரகேசரியில் வந்த செய்தி.திகிலிவட்டை கற்பழிப்பு எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மௌசைப் பக்கத்தின் மேல் வைத்து அழுத்தவும். .

சனி, 20 பிப்ரவரி, 2010

ஆளத்தான் சான் பூமியில்லை!



வேண்டாம் இன்னும் ஒரு பிறவி--எனக்கு 
மீண்டும் இப்புவியில் இறைவா !
தாண்டும் பலம்  இல்லையே--தினம் 
மாண்டு போகிறேன் அடையாளத் தொல்லையாலே!

அண்டவெளியில் ஆவியாய் அலைந்தாலும்-கூவி  
என் அடையாளம்  கேட்பார் யாரு மில்லை 
சண்டைபிடியாமல் சாகிறோம், கைதாகிறோம்-சாமி  
வான் வெளியில் வாழ வளி விடுவாய் 

வேண்டும் வரம் எனக்களித்தால் --தமிழனாய் 
மீண்டும் தோன்றமட்டும் எனக்கருளாதே!
கண்டுவிட்டேன் கடும் நரகத்தை --வீணாகக் 
கொன்றுவிடுகிறார்கள் என்ன கொடுமையிது!

என்னவென்று கேட்க நாதியில்லை---சாமி 
என்னையடித்தவன் வேறு சாதியில்லை!
ஆண்ட பரம்பரையில் பிறந்தெனக்கு--யாம்  
ஆளத்தான் சான் பூமியில்லை! 

ஆண்டியாக்கியும் ஆளை விடவில்லை --பூச் 
சாண்டிகாட்டிப் புரட்டிப் பிரட்டுகிறார்கள்!
வேண்டாம் சாமி ஆமி  வாழ்க்கை--யான்  
வேண்டியது போதும் இந்த யாக்கைக்கு!



வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

"தாசுமகால்" கட்டமுதல்.....


"தாசுமகால்" கட்டமுதல் உண்மையாயுன் 
தங்கநிற மேனிக்கோர் உவமையிந்த 
ஆசியாவில் எங்கணுமே இருந்த தில்லை;
"அஜந்தாவி"ன் ஓவியத்தில் கண்டேனில்லை
வீசுமிளந் தென்றலிடை அசைந்தே ஆடி 
வீதியிலே நீபவனி போகுங் காட்சி 
தேசமெலாஞ சுற்றிடினுங் காண லாமோ?
தெரிசனந்தான் காணமல் தேய்கின்றேனே...

உண்ணாமல் இரவெல்லாம் உறங்கிடாமல் 
உனைக்கானத் தவிக்கின்ற உள்ளமொன்று 
புண்ணாகிப் பொடியாகிப் புழுக்கழூறும்
புற்றாகிப் போயிற்றே... பூவாய் இன்னும்
கண்ணாடிக் கன்னத்தால் கடைக்கண் வீச்சால்
கற்பூரங் கமழுந்தேன் கசிந்த வாயால் 
என்னோயைத் தீராத நீலி! என்னை 
எதற்காக நேசித்தாய் சொல்லு கண்ணே...

கொந்தளிக்கும் ஆழியிலோர் ஓடம்;கோரக் 
கூச்சலிடும் புலிக்காட்டில் ஒருமான் குட்டி 
வெந்தவியும் சுவாலையிலோர் விட்டில் வெய்ய 
விசநாகக் கொடுவாயில் தவளைக் குஞ்சு .....
இந்தரகப் பட்டியலில் என்றன் சீவன் 
ஏகாமல் ஓயாமல் எதிர்பார்க்கின்ற
உந்தனுக்கோர் உருகாத உள்ளம் கட்டி
உருக்காலே வார்த்ததடி சொல்லு கண்ணே...

சாகத்தான் போகின்றேன் என்னை நம்மூர்ச் 
சாலையதாற் பிணமாகக் காவிக்கொண்டு 
போகத்தான் போகின்றார் பொங்குங் கண்ணீர்ப் 
பொய்கையிலே என்னுயிர்ஓர் பூவாய்மாறும்
"ஆ"அத்தான் எனைவிட்டா   போனீர் என்று
அலறத்தான் போகின்றாய் அப்போதப்பூ 
சோகத்தால் கரிகிப்போய் வாடும் பின்னர்
சொர்க்கத்தில் வந்தா நீ என்னைக் காண்பாய்?  

கவிதையென்றால் என்னவென்று தெரியாத நேரம், இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும்,பாரதியார், பாரதிதாசன், கம்பன், ஔவையார், திருவள்ளுவர் இவர்களை அறிமுகப்படுத்தி, தமிழை நன்றாகப் படிக்கவேண்டும் என்று,எனக்குத் தமிழை அள்ளியூட்டிய எனதருமை ஆசான்காலம்சென்ற திரு.பிரவுன் கிரகரி இராசதுரை இராஜ பாரதியின் இனிய கவிதைகளில் இதுவுமொன்று. தங்க மயில் விருது பெற்ற கவிதை.1980   களிற்கு முன்னர்  ஈழத்து
இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் இவரும் ஒருவர்.ஈழத்துப் பூராடனார் திரு  செல்வராஜா கோபாலின் நெருங்கிய நண்பர். இவரின் படைப்புகள் ஒரு சிலதைத் தவிர எதுவுமே காணப்படவில்லை.இது ஒரு வேதனைக்குரிய நிலை.இணையதளத்தில் இவரின் பெயரில் ஒரு வரி கூடக் காணப்படாதது எனது நெஞ்சை ஏதோ செய்வது போலிருந்தது,அதற்காகத்தான் இந்தப் பதிவு . ஈழத்துக் கவிஞர்களில் இப்படி விடுபட்டுப் போனவர்களையும்,விடுபட்டுப் போன படைப்புகளையும் கண்டுபிடித்து தமிழ் இலக்கிய உலகிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நிருபிக்க வேண்டும்              

புதன், 17 பிப்ரவரி, 2010

மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்



மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில் எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்
மத்தியில் இந்தப் பாடல்கள் பிரபல்யம். ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம் ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள். மிகவும் மனவருத்தமான விஷயம் இந்தத் தலை முறையுடன் இது அழிந்து விடும். நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.தற்போது
அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்,இயந்திர மயப்படுத்தல்,கட்டாயக் கல்வி முறை இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

கீழ்வரும் பாடல்கள் தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.

கச்சான் அடித்த பின்பு -நடுக்
காட்டில் மரம் நின்றதுபோல்
உச்சியில் நாலு மயிர்-தலை
ஓரம் எல்லாம் வழுக்கை

கண்ணுமொரு பொட்டை-இரு
காதுகளும் செவிடாம்
குருத்தெடுத்த வாழை போல-அவர்
கூன் வளைந்திருப்பார்

முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
மூணு பல்லுத்தான் மீதி
காகக் கறுப்பு நிறம்-ஒரு
காலுமெல்லோ முடமவர்க்கு

நாணற்பூப்போல -தலை
நரைத்த கிழவனுக்கு
கும்மாளம் பூப்போல -இந்தக்
குமர்தானோ வாழுறது

தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
தக தகவென்ற பட்டுடையும்
பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

அத்தர் புனுகாம்
அழகான பவுடர் மணம்
இஞ்சி தின்ற குரங்குபோல -
இவருக்கேனோ இச்சொகுசு.

பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
பவுசாக நடந்திட்டாலும்
அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
ஆறுநாட் பட்டினியாம்.

சங்கிலியும் தங்கமில்லை -
சரியான பித்தளையாம்
இடுப்பிலேயும் வாயிலேயும்-
இருக்கிறது இரவல் தானாம் 
     

தமிழா..! நீ பேசுவது தமிழா...!-02

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவி வண்ணம் -உங்கள் 
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதே யெந் எண்ணம் 
தேனிசைச் செல்லப்பாவின் தேர்ந்த இனிய குரல் வண்ணம் -ஐயா
தெள்ளு தமிழின் இன்றைய நிலைதான் இந்த இனிய பண்ணும்.   



தமிழா! நீ பேசுவது தமிழா!
நமது உடன் பிறப்பு "உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்"அவர்களின் கவிவரிகள்,தேனிசைச் செல்லப்பா அவர்களின் குரல் வளம், அருமையான இசை வெள்ளம்  ,அனைத்தும் இணைந்த ஒரு இசைத் தமிழ்ப்பழம்.(இந்த இணைய தளத்தில் திரு.புஸ்பவனம் குப்புசுவாமி
பாடியுள்ளார்)
http://moganaraagam.blogspot.com/search/label/காசி%20ஆனந்தன்


நமது பாடலைப் பாடியிருப்பவர் தேனிசைச் செல்லப்பா இருபாடலையும் கேளுங்கள்,நமது
தாய் மொழியின் தற்போதைய நிலைமையைப் பாருங்கள்,இப்படியே போனால் இன்னும் சில வருடங்களின் பின் தமிழ் என்னவாகும்? நீங்களே யோசித்துக் கொண்டு இரு பாடலையும் கேளுங்கள். புலம் பெயந்தவர்களுக்கு இப்பாடல்கள் பழையவை.இணைய இணைப்பில் மௌசை வைத்து பிளே பட்டினை(play ) அழுத்துங்கள்.இன்னும் அநேக பாடல்கள், தமிழக முதல்வருக்குப் பிடியாத பாடல்களும் உண்டு.உணர்ச்சிக் கவிஞரின்
வேறு பாடல்க்களுமுண்டு.
http://www.theesam.com/music/index.php?action=song&id=186

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இலங்கைச் சரித்திரம்-27

Posted by Picasaஇலங்கைச் சரித்திரம் முதல் பகுதிக்குச் செல்வதற்கு இங்கே அழுத்துங்கள்
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிவதற்கு
பக்கத்தின் மேல் மௌசை வைத்து அழுத்துங்கள்.வாசித்ததும் உங்கள் எண்ணத்தின்
வெளிப்பாடுகளை பின்னூட்டமாக இரண்டு வரி எழுதுங்கள். பக்கம் 28க்குச் செல்ல 

இலங்கைச் சரித்திரம் -26

Posted by Picasaஎழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மௌசைப் பக்கத்தின் மேல் வைத்து அழுத்துங்கள்.புதிதாகத் தொடர்பவர்கள் பகுதி ஒன்றில் இருந்து ஆரம்பியுங்கள்  இணைப்புக்கு இங்கே அழுத்துங்கள்பக்கம் 27 க்குச்  செல்ல