வேண்டாம் இன்னும் ஒரு பிறவி--எனக்கு
மீண்டும் இப்புவியில் இறைவா !
தாண்டும் பலம் இல்லையே--தினம்
மாண்டு போகிறேன் அடையாளத் தொல்லையாலே!
அண்டவெளியில் ஆவியாய் அலைந்தாலும்-கூவி
என் அடையாளம் கேட்பார் யாரு மில்லை
சண்டைபிடியாமல் சாகிறோம், கைதாகிறோம்-சாமி
வான் வெளியில் வாழ வளி விடுவாய்
வேண்டும் வரம் எனக்களித்தால் --தமிழனாய்
மீண்டும் தோன்றமட்டும் எனக்கருளாதே!
கண்டுவிட்டேன் கடும் நரகத்தை --வீணாகக்
கொன்றுவிடுகிறார்கள் என்ன கொடுமையிது!
என்னவென்று கேட்க நாதியில்லை---சாமி
என்னையடித்தவன் வேறு சாதியில்லை!
ஆண்ட பரம்பரையில் பிறந்தெனக்கு--யாம்
ஆளத்தான் சான் பூமியில்லை!
ஆண்டியாக்கியும் ஆளை விடவில்லை --பூச்
சாண்டிகாட்டிப் புரட்டிப் பிரட்டுகிறார்கள்!
வேண்டாம் சாமி ஆமி வாழ்க்கை--யான்
வேண்டியது போதும் இந்த யாக்கைக்கு!
kavithai valikkirathu. thamilan nilai kuriththu vetkamataikiren. aaluvom naalkal kaththirukku.
பதிலளிநீக்குதங்களது வரவுக்கும் ,பொன்னான கருத்துரைக்கும்,-யென்
பதிலளிநீக்குபாங்கான வணக்கமும்,பெருமையான நன்றிகளும்.
நம்மவரின் திகிடு தத்தங்கள் நிறையவே இருக்கிறது -அனுபவமாய்
சும்மா சொல்லக்கூடாது ,சுவையுடன் பின் சொல்வேன்