வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

"தாசுமகால்" கட்டமுதல்.....


"தாசுமகால்" கட்டமுதல் உண்மையாயுன் 
தங்கநிற மேனிக்கோர் உவமையிந்த 
ஆசியாவில் எங்கணுமே இருந்த தில்லை;
"அஜந்தாவி"ன் ஓவியத்தில் கண்டேனில்லை
வீசுமிளந் தென்றலிடை அசைந்தே ஆடி 
வீதியிலே நீபவனி போகுங் காட்சி 
தேசமெலாஞ சுற்றிடினுங் காண லாமோ?
தெரிசனந்தான் காணமல் தேய்கின்றேனே...

உண்ணாமல் இரவெல்லாம் உறங்கிடாமல் 
உனைக்கானத் தவிக்கின்ற உள்ளமொன்று 
புண்ணாகிப் பொடியாகிப் புழுக்கழூறும்
புற்றாகிப் போயிற்றே... பூவாய் இன்னும்
கண்ணாடிக் கன்னத்தால் கடைக்கண் வீச்சால்
கற்பூரங் கமழுந்தேன் கசிந்த வாயால் 
என்னோயைத் தீராத நீலி! என்னை 
எதற்காக நேசித்தாய் சொல்லு கண்ணே...

கொந்தளிக்கும் ஆழியிலோர் ஓடம்;கோரக் 
கூச்சலிடும் புலிக்காட்டில் ஒருமான் குட்டி 
வெந்தவியும் சுவாலையிலோர் விட்டில் வெய்ய 
விசநாகக் கொடுவாயில் தவளைக் குஞ்சு .....
இந்தரகப் பட்டியலில் என்றன் சீவன் 
ஏகாமல் ஓயாமல் எதிர்பார்க்கின்ற
உந்தனுக்கோர் உருகாத உள்ளம் கட்டி
உருக்காலே வார்த்ததடி சொல்லு கண்ணே...

சாகத்தான் போகின்றேன் என்னை நம்மூர்ச் 
சாலையதாற் பிணமாகக் காவிக்கொண்டு 
போகத்தான் போகின்றார் பொங்குங் கண்ணீர்ப் 
பொய்கையிலே என்னுயிர்ஓர் பூவாய்மாறும்
"ஆ"அத்தான் எனைவிட்டா   போனீர் என்று
அலறத்தான் போகின்றாய் அப்போதப்பூ 
சோகத்தால் கரிகிப்போய் வாடும் பின்னர்
சொர்க்கத்தில் வந்தா நீ என்னைக் காண்பாய்?  

கவிதையென்றால் என்னவென்று தெரியாத நேரம், இதுதான் கவிதை இப்படித்தான் எழுத வேண்டும்,பாரதியார், பாரதிதாசன், கம்பன், ஔவையார், திருவள்ளுவர் இவர்களை அறிமுகப்படுத்தி, தமிழை நன்றாகப் படிக்கவேண்டும் என்று,எனக்குத் தமிழை அள்ளியூட்டிய எனதருமை ஆசான்காலம்சென்ற திரு.பிரவுன் கிரகரி இராசதுரை இராஜ பாரதியின் இனிய கவிதைகளில் இதுவுமொன்று. தங்க மயில் விருது பெற்ற கவிதை.1980   களிற்கு முன்னர்  ஈழத்து
இலக்கிய உலகில் கொடிகட்டிப் பறந்தவர்களில் இவரும் ஒருவர்.ஈழத்துப் பூராடனார் திரு  செல்வராஜா கோபாலின் நெருங்கிய நண்பர். இவரின் படைப்புகள் ஒரு சிலதைத் தவிர எதுவுமே காணப்படவில்லை.இது ஒரு வேதனைக்குரிய நிலை.இணையதளத்தில் இவரின் பெயரில் ஒரு வரி கூடக் காணப்படாதது எனது நெஞ்சை ஏதோ செய்வது போலிருந்தது,அதற்காகத்தான் இந்தப் பதிவு . ஈழத்துக் கவிஞர்களில் இப்படி விடுபட்டுப் போனவர்களையும்,விடுபட்டுப் போன படைப்புகளையும் கண்டுபிடித்து தமிழ் இலக்கிய உலகிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நிருபிக்க வேண்டும்              

புதன், 17 பிப்ரவரி, 2010

மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள்



மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள். இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில் எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கரைவாகுப் பற்றுப் பிரிவிலும் (கல்முனை,திகாமடுல்லை) விவசாயம் சம்பந்தமான தொழில் ஈடுபடுபவர்கள்
மத்தியில் இந்தப் பாடல்கள் பிரபல்யம். ஆண்களை விட பெண்கள்தான் பிரபல்யம் ஒருவர் ஆரம்பித்தால் தொடர்ந்து பாடுவதற்கு ஏனையவர்கள் தயாராகி விடுவார்கள். மிகவும் மனவருத்தமான விஷயம் இந்தத் தலை முறையுடன் இது அழிந்து விடும். நாட்டார் பாடலுக்கு களமே, களத்து மேடுதான்.தற்போது
அறிமுகமாகியுள்ள நவீன விவசாயமுறைகள்,இயந்திர மயப்படுத்தல்,கட்டாயக் கல்வி முறை இவைகளெல்லாம் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி,அடுத்த தலைமுறைக்கு இது இறுவட்டாக மட்டுமே காட்சி அளிக்கும்.

கீழ்வரும் பாடல்கள் தன்னைக் கல்யாணம் பண்ண முனையும்,ஒருவரை பெண் வெறுத்து ஒதுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டபாடல்கள்.தற்போதைய காலத்திற்கு ஏற்றமாதிரிக் கூறுவதானால்,கடலை  போடுபவரைக் கண்டால்,கட்டோடு பிடியாத பெண்ணின் வரி வடிவம்.

கச்சான் அடித்த பின்பு -நடுக்
காட்டில் மரம் நின்றதுபோல்
உச்சியில் நாலு மயிர்-தலை
ஓரம் எல்லாம் வழுக்கை

கண்ணுமொரு பொட்டை-இரு
காதுகளும் செவிடாம்
குருத்தெடுத்த வாழை போல-அவர்
கூன் வளைந்திருப்பார்

முப்பத்தி இரண்டில் இப்போ -இந்த
மூணு பல்லுத்தான் மீதி
காகக் கறுப்பு நிறம்-ஒரு
காலுமெல்லோ முடமவர்க்கு

நாணற்பூப்போல -தலை
நரைத்த கிழவனுக்கு
கும்மாளம் பூப்போல -இந்தக்
குமர்தானோ வாழுறது

தங்கத்தாற் சங்கிலியும் -ஒரு
தக தகவென்ற பட்டுடையும்
பட்டணத்துச் செப்புமிட்டு-எனை
பகல் முழுதுஞ் சுற்றி வாறான்.

அத்தர் புனுகாம்
அழகான பவுடர் மணம்
இஞ்சி தின்ற குரங்குபோல -
இவருக்கேனோ இச்சொகுசு.

பட்டுடுத்துச் சட்டையிட்டு -நறு
பவுசாக நடந்திட்டாலும்
அரைச் சல்லிக் காசுமில்லை -ஆள்
ஆறுநாட் பட்டினியாம்.

சங்கிலியும் தங்கமில்லை -
சரியான பித்தளையாம்
இடுப்பிலேயும் வாயிலேயும்-
இருக்கிறது இரவல் தானாம் 
     

தமிழா..! நீ பேசுவது தமிழா...!-02

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் கவி வண்ணம் -உங்கள் 
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் என்பதே யெந் எண்ணம் 
தேனிசைச் செல்லப்பாவின் தேர்ந்த இனிய குரல் வண்ணம் -ஐயா
தெள்ளு தமிழின் இன்றைய நிலைதான் இந்த இனிய பண்ணும்.   



தமிழா! நீ பேசுவது தமிழா!
நமது உடன் பிறப்பு "உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்"அவர்களின் கவிவரிகள்,தேனிசைச் செல்லப்பா அவர்களின் குரல் வளம், அருமையான இசை வெள்ளம்  ,அனைத்தும் இணைந்த ஒரு இசைத் தமிழ்ப்பழம்.(இந்த இணைய தளத்தில் திரு.புஸ்பவனம் குப்புசுவாமி
பாடியுள்ளார்)
http://moganaraagam.blogspot.com/search/label/காசி%20ஆனந்தன்


நமது பாடலைப் பாடியிருப்பவர் தேனிசைச் செல்லப்பா இருபாடலையும் கேளுங்கள்,நமது
தாய் மொழியின் தற்போதைய நிலைமையைப் பாருங்கள்,இப்படியே போனால் இன்னும் சில வருடங்களின் பின் தமிழ் என்னவாகும்? நீங்களே யோசித்துக் கொண்டு இரு பாடலையும் கேளுங்கள். புலம் பெயந்தவர்களுக்கு இப்பாடல்கள் பழையவை.இணைய இணைப்பில் மௌசை வைத்து பிளே பட்டினை(play ) அழுத்துங்கள்.இன்னும் அநேக பாடல்கள், தமிழக முதல்வருக்குப் பிடியாத பாடல்களும் உண்டு.உணர்ச்சிக் கவிஞரின்
வேறு பாடல்க்களுமுண்டு.
http://www.theesam.com/music/index.php?action=song&id=186

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இலங்கைச் சரித்திரம்-27

Posted by Picasaஇலங்கைச் சரித்திரம் முதல் பகுதிக்குச் செல்வதற்கு இங்கே அழுத்துங்கள்
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிவதற்கு
பக்கத்தின் மேல் மௌசை வைத்து அழுத்துங்கள்.வாசித்ததும் உங்கள் எண்ணத்தின்
வெளிப்பாடுகளை பின்னூட்டமாக இரண்டு வரி எழுதுங்கள். பக்கம் 28க்குச் செல்ல 

இலங்கைச் சரித்திரம் -26

Posted by Picasaஎழுத்துக்கள் பெரிதாகத் தெரிய மௌசைப் பக்கத்தின் மேல் வைத்து அழுத்துங்கள்.புதிதாகத் தொடர்பவர்கள் பகுதி ஒன்றில் இருந்து ஆரம்பியுங்கள்  இணைப்புக்கு இங்கே அழுத்துங்கள்பக்கம் 27 க்குச்  செல்ல 

திங்கள், 15 பிப்ரவரி, 2010

இலங்கைச் சரித்திரம்--25

Posted by Picasaஇலங்கைச்ச் சரித்திரம் தொடரை தொடர்வதற்கு ஏகப்பட்ட தொழில் நுட்பப் பிரச்சனைகள்.தொழில் நுட்பம் தெரியாததுதான் பிரச்சினை,அதுவும் தமிழர் பிரச்சினை மாதிரி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.நானும் விடுவதாக இல்லை, உங்கள் அனைவரது வெறுப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்வேன்.,தொடர்ந்து 
படிக்க 26வது பக்கத்திற்கு. உங்கள் மனதிலுள்ளதை,பினநூட்டமாக,எழுதுங்கள் கடுப்பையும் வெறுப்பையும் ஏற்றுக்கொண்டு விடை பெறும் கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா.  

ஆப்பிளில் இருந்து மின்சாரம்.


Charge The Mobile Phone From An Apple! - The top video clips of the week are here




ஆப்பிளில் இருந்து மின்சாரம்.நீங்களும் தயாரிக்கலாம்.அவசரத்திற்கு உங்கள் கைத்தொலைப் பேசியையும் மின்சாரத்தால் நிரப்பிக் கொள்ளலாம்.தேவை ஒரு ஆப்பிள் மட்டுமே,மற்றவைகள் எல்லாம் நமது வீடுகளில்  கிடைக்கக் கூடியவையே,முயற்சி செய்து பாருங்கள்.


செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இது உண்மையா?




கவி கற்றவர்க்குங் கணிகற்றவர்க்குங் கம்மாளருக்கும்
ஓவி கற்றவர்க்கு முபாத்திகளுக்கு முயர்ந்த மட்டும்
குவி வைக்கு மொட்டர்க்குங் கூத்தாடிகட்குங்  குருக்களுக்கும்,
இவரெட்டுப்பேர்கட்கு நீங்காத் தரித்திர மென்றைக்குமே.

கவிதை எழுதுபவர்களுக்கும்,சோதிடம் அறிந்தவர்க்கும் ,கம்மாளருக்கும்,
ஓவியம்வரைபவர்க்கும்.ஆசிரியர்களுக்கும்,ஆசாரிகளுக்கும்,   நடிகர்களுக்கும்,குருக்களுக்கும்,தரித்திரம் என்றைக்கும் குடி கொண்டிருக்கும் என்கிறது இந்தப் பாடல்.இது உண்மையா?
விஷயம் தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள். 

வெள்ளி, 29 ஜனவரி, 2010

K.Pயும் குழுவினரும்.....




இலங்கை அரசின் துணையோடு வெளிநாடுகள் சிலவற்றிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குமரன் பத்மநாதன் [kp]என்பவரை எமக்கு ஆதரவாக செயற்பட்ட சிலரும் சில இயக்க உறுப்பினர்களும் இரகசியமான சந்தித்துள்ளமை எம்மால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாடுகளில் கடந்த காலங்களில் எமது அமைப்பு சார்ந்து இயங்கி வந்த அணைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும் இலங்கை அரசின் துரோகச் செயல்களுக்குள் அகப்பட்டு எமது விடுதலைப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதும் எம்மால் உறுதி செய்யப்பட்டுள்ளது.



முழுவதையும் அறிந்து கொள்ளhttp://lttepress.com/more1.html

வடகிழக்குத் தமிழர்களும் சனாதிபதித் தேர்தலும்


நடந்து முடிந்த சனாதிபதித் தேர்தலில் வட கிழக்கு மாகாணத்தின் தமிழ் பேசும் மக்களின் பங்கு என்ன? மஹிந்த சிந்தனையை வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? தமிழ் கூட்டமைப்புத் தலைமையை இன்னும் தமிழ் மக்கள் நம்புகிறார்களா? அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமென்கிறார்களா?ஆயுதக் குழுக்கள் தொடர்ந்தும் தங்களை வழி நடத்த வேண்டும் என்கிறார்களா?இப்படி ஆயிரம் கேள்விகள்? இதற்கெல்லாம் விடை யாரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இவற்றுக்கெல்லாம் விடைகளை வழங்க சம்பந்தப் பட்டவர்களே முன்வருவார்கள்.
எப்பொழுது என்கிறீர்களா? பாராளுமன்றத் தேர்தலின் போது.அதுவரை பொறுமையுடன்
காத்திருங்கள்.இந்தச் செய்தியை பதிவிடும் போது, ஒரு செய்தி அதுதான் நமது கேள்வியுடன் தொடர்புடையது.

இந்த இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள் நமது கேள்விகள் பலதிற்கு இங்கு விடை கிடைக்கும் http://ustertamil.blogspot.com/2010/01/blog-post_1659.html

வழமைபோல இந்த சனாதிபதித் தேர்தலிலும் வடகிழக்கு மக்கள் பத்து லட்சம் வாக்குகளை பயன்படுத்தாமலே விட்டு விட்டார்கள்.மொத்த பதிவு செய்த வாக்காளர்கள் 19 ,83 ,946 ,அதில் வாக்களித்தவர்கள் 9,64 ,146 .பேர்   பேர். வட கிழக்குச் சிங்கள மக்கள்,முஸ்லிம் மக்கள் தங்கள் வாக்குகளை 90 % -99 % பயன் படுத்தி எதோ ஒன்றை நிறைவேற்றி விட்டார்கள். ஆனால் என் இனிய தமிழ் மக்கள் ஏதோ ஒன்றை நினைத்து
தயங்கிவிட்டார்கள்.
ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்கிறார்களோ? மறக்கவும் மாட்டோம்,மன்னிக்கவும்  மாட்டோம்.பொறுத்திருந்து பார்ப்போம்.பாராளுமன்றத் தேர்தலில் எம் இனிய தமிழ்
மக்களின் எண்ணத்தில் என்ன இருக்குது என்று.