செவ்வாய், 12 நவம்பர், 2019

கோட்டபாய "அமெரிக்க விசா சர்சைக்கு "  அமெரிக்காவின் பதில்


இரட்டைப் பிரஜா உரிமை பற்றி அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க இங்கே செல்லுங்கள்



திங்கள், 11 நவம்பர், 2019

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் சிங்கள பௌத்த வாதிகள்.

  ஜனாதிபதி  வேட்பாளர்கள் இருவரும்  சிங்கள பௌத்த வாதிகள்.


 பிரான்ஸ்  நாட்டின்  மனித  உரிமைகள்  மையத்தின் பொறுப்பாளரும்,மனித
உரிமை ஆர்வலருமான ச.வி கிருபாகரன் கூறுவதை  நீங்களும் கேளுங்கள் 

வீரகேசரியின் இன்றைய கேலிச்சித்திரம்


வீரகேசரியின்  இன்றைய கேலிச்சித்திரம் .



வெள்ளி, 8 நவம்பர், 2019

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | Virakesari.lk

சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் | Virakesari.lk: சஜித்திடம் 30 கோடி ரூபாவை கூட்டமைப்பு பெற்றுள்ளது - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்பு !

ஜனாதிபதி  தேர்தல்  கருத்துக் கணிப்பு !


தினகரன்  பத்திரிக்கை கருத்துக் கணிப்பு, முடிந்தால் நீங்களும்  வாக்குப் பண்ணிப் பாருங்கள்  வாக்களிக்க இங்கே செல்லுங்கள்  பக்கத்தின்  அடிப்
பக்கத்தில்  இதைக் காணுங்கள்

புதன், 6 நவம்பர், 2019

ஜனாதிபதித் தேர்தல் 2019 சோதிடர்களின் கணிப்பு !

ஜனாதிபதித் தேர்தல் 2019 சோதிடர்களின் கணிப்பு !

sajith premadasa க்கான பட முடிவு



gotabaya க்கான பட முடிவு


நடைபெறவுள்ள  ஜனாதிபதி  தேர்தல் 2019  முடிவுகள்  என்னமுடிவுகளை  ஏற்படுத்தும்  என்பதை  இலங்கையின் சோதிடர்களின் கணிப்புகள் வெளிவரத்  தொடங்கியுள்ள  நிலையில், சோதிடர்களின் கணிப்பையும்  மீறி
அரசியல் ரவுடிகளின் அட்டகாசம்  தொடர்கிறது. முழுவதையும்  அறிய இங்கே  செல்லவும்,

செவ்வாய், 5 நவம்பர், 2019

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழர்களின் தீர்மானமாகாது - மஹிந்த சம­ர­சிங்க | Virakesari.lk

தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழர்களின் தீர்மானமாகாது - மஹிந்த சம­ர­சிங்க | Virakesari.lk: தமிழரசுக் கட்சியின் தீர்மானம் ஒட்டு மொத்த தமிழர்களின் தீர்மானமாகாது - மஹிந்த சம­ர­சிங்க

ஜனாதிபதி தேர்தல் (2015)

கடந்த ஜனாதிபதி தேர்தலில் (2015) தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவும்,
வெற்றி பெற்ற  மைத்திரி பால  சிறிசேனவும்  மாவட்ட  ரீதியாகப்  பெற்ற
வாக்குகள்  உங்கள் பார்வைக்கு. சென்ற  தேர்தலுக்கும் , எதிர்வரும்
ஜனாதிபதித்  தேர்தலுக்கும்  வேட்பாளர்கள்தான் வித்தியாசம் வேறு பெரிதாக வித்தியாசம் எதுவுமில்லை. ஜனநாயகத்தை மதிப்பவர்களும்
ஜனநாயகத்தை மிதிப்பவர்களும்  மோதுகிறார்கள். மக்களின் சிந்தனைகள்
பெரிதாக  மாற்றம்  எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.ஒரு புறம் இனவாதப்  பீரங்கிகளின் சங்க நாதம். மறுபுறம் சிறுபாண்மை இனங்கள்  எதுவும்  இருப்பதாகவே  கண்டுகொள்ளாதவர்கள் மறுபுறம்.
முடிவு  நவம்பர்  17ம்  திகதி  இரவு.




நன்றி: விக்கிபீடியா
ராசபக்ச வெற்றி பெற்ற மாவட்டங்கள்
சிறிசேன வெற்றி பெற்ற மாவட்டங்கள்

மாவட்டம்மாகாணம்ராசபக்சசிறிசேனஏனையோர்மொத்தம்வாக்களிப்பு %
வாக்குகள்%வாக்குகள்%வாக்குகள்%வாக்குகள்%
யாழ்ப்பாணம்வடக்கு74, 45421.85%253, 57474.42%12, 7233.73%546, 265100%64.22 %
வன்னிவடக்கு34,37719.07%141,41778.47%4,4312.46%126,725100%98.05 %
திருகோணமலைகிழக்கு52, 11126.67%140, 33871.84%2, 9071.49%195, 356100%72.50 %
மட்டக்களப்புகிழக்கு41,63116.22%209,42281.62%5,5332.16%256,586100%69.30 %
அம்பாறைகிழக்கு121,02733.82%233,36065.22%3,4300.96%357,817100%73.85 %
அனுராதபுரம்வட மத்திய281,16153.59%238,40745.44%5,0650.97%524,633100%77.98 %
பதுளைஊவா249,24349.15%249,52449.21%8,3031.64%458,104100%79.56 %
கொழும்புமேற்கு562,61443.40%725,07355.93%8,6730.67%1,266,085100%81.49 %
காலிதெற்கு377,12655.64%293,99443.37%6,6910.99%677,811100%80.46 %
கம்பஹாமேற்கு664,34749.49%669,00749.83%9,1420.68%1,342,496100%80.77 %
அம்பாந்தோட்டைதெற்கு243,29563.02%138,70835.93%4,0731.05%389,427100%81.23 %
களுத்துறைமேற்கு395,89052.65%349,40446.46%6,6900.89%751,984100%82.08 %
கண்டிமத்திய378,58544.23%466,99454.56%10,3291.21%855,908100%79.71 %
கேகாலைசப்ரகமுவா278,13051.82%252,53347.05%6,1081.14%536,771100%98.80 %
குருநாகல்வட மேற்கு556,86853.46%476,60245.76%8,1540.78%1,041,624100%78.82 %
மாத்தறைதெற்கு297,82357.81%212,43541.24%4,8920.95%515,150100%99.07 %
மாத்தளைமத்திய158,88051.41%145,92847.22%4,2141.36%309,022100%78.76 %
மொனராகலைஊவா172,74561.45%105,27637.45%3,0951.10%281,116100%79.90 %
நுவரெலியாமத்திய145,33934.06%272,60563.88%8,8222.07%426,766100%79.25 %
பொலனறுவைவட மத்திய105,64041.27%147,97457.80%2,3820.93%242,140100%79.38 %
புத்தளம்வட மேற்கு197,75148.97%202,07350.04%4,0271.00%403,850100%72.50 %
இரத்தினபுரிசப்ரகமுவா379,05355.74%292,51443.01%8,5171.25%680,08410098.89 %
மொத்தம்5,768,09047.58%6,217,16251.28%138,2011.14%%%

திங்கள், 4 நவம்பர், 2019

ஆட்சி அதிகாரத்துக்காக நிபந்தனைக்கு அடி பணிந்த சஜித் - மஹிந்த யாப்பா  | Virakesari.lk

ஆட்சி அதிகாரத்துக்காக நிபந்தனைக்கு அடி பணிந்த சஜித் - மஹிந்த யாப்பா  | Virakesari.lk: ஆட்சி அதிகாரத்துக்காக நிபந்தனைக்கு அடி பணிந்த சஜித் - மஹிந்த யாப்பா

வடக்கிலுள்ள எந்த கட்சியுடனும் ​இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை

வடக்கிலுள்ள எந்த கட்சியுடனும் ​இரகசிய ஒப்பந்தம் செய்யவில்லை

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் தரப்பினருடனும் பகிரங்கமாகவோ இரகசியமாகவோ எத்தகைய உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லையென தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர் வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைத்து விடயங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களிலும் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுதொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வடக்கில் எந்தவொரு அரசியல் கட்சியுடனோ வேறு அமைப்புகளுடனோ இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ எந்த ஒரு உடன்படிக்கையையும் செய்துகொள்ளவில்லை.
நாட்டு மக்களுக்கான ஒரே உடன்படிக்கையாக தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கிறார்.
அந்த விஞ்ஞாபனத்திற்கு இணங்கி நவீன மற்றும் அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்காக இணைந்துகொள்ளுமாறு வடக்கிலும் கிழக்கிலுமுள்ள சகல அரசியல் கட்சிகளையும் அழைக்கின்றோம்.
வடக்கிற்கும் தெற்கிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடியதான பொது உடன்படிக்கையாகவோ இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. அந்த ஆரோக்கியமான வேலைத் திட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல நாம் அழைப்பு விடுக்கின்றோம். எந்தவொரு கட்சியையும் விட எமது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒரு காத்திரமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான கொள்கைப் பிரகடனமாகும் எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
இதே வேளை, கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், 2015 ஆம் ஆண்டு அன்னத்திற்கு வாக்களித்த எம்மிடம் ஆட்சியை வழங்கியமையால்தான் நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டது.
கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று (03) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்பொழுது நாட்டில் வெள்ளை வான் வருவது கிடையாது. ஆனால் மக்களை தேடி அவசர அம்பியூலன்ஸ் வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? இல்லையா என்பதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மொட்டுக் கட்சிக்கு வாக்களித்தால் வெள்ளை வான் மட்டுமே வரும் எனத் தெரிவித்த பிரதமர்,
2015 க்கு பின்னர் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யலாம், ஊர்வலம் போகலாம், பேசலாம், எழுதலாம் இந்த நிலைமை தொடர வேண்டுமா? வேண்டாமா? நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பலவற்றை உருவாக்கி சுதந்திரத்தை உருவாக்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.

கோட்டா ஆட்சியமைத்ததும் தமிழ் தலைமைகள் பேசும்

கோட்டா ஆட்சியமைத்ததும் தமிழ் தலைமைகள் பேசும்

சஜித் பிரேமதாஸவின் தோல்வி தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது. ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு அவரிடம் சென்று அவர்கள் பேசுவார்கள் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.  
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோடாபய ரஜபக்ஷவுக்கு ஆதரவான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம் வெள்ளிக்கிழமை (01) ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.  
இதில் உரையாற்றும்போதே பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,  
இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள்  சிங்களவர்கள் ஆவர். அவர்களின் அதிகப்படியான வாக்குகள் கோதாபய ராஜபக்ஷவுக்குத்தான் கிடைக்கும். அதே போல சிறுபான்மை மக்களின் ஒரு தொகை வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை மக்களின் சிறுபான்மை வாக்குகளையும் பெறுபவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதே இந்நாட்டு அரசியல் நிலவரம் ஆகும்.  
பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கவே மாட்டாது. மேலும் பிரேமதாசவுக்கு ரணில் கழுத்தறுப்பு செய்கின்றார். ஜே.வி. பியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொடுத்த 05 இலட்சம் வாக்குகள் இம்முறை சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க போவதும் இல்லை.  
70 வருடங்களாக சமயோசிதமாக தமிழ் சமூகம் தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. விடுதலை வேண்டி யுத்தம் செய்த சமூகமாகவும் அது இருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை கூட்டாக பிரதான வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. ஆயினும் பிரதான வேட்பாளர்கள் எவரும் அவை தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கவிலை. அதுவே தமிழ் கட்சிகளின் தேவையாகவும் இருந்தது. ஒருவருடனும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தும் இருந்தார்கள். ஆகவேதான் எவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு அற்று போய் விட்டது.  
அப்போதுதான் வெற்றி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுடன் தேர்தலுக்கு பிற்பாடு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மாத்திரம் அல்லாமல் சி. வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் சஜித்தின் தோல்வி விளங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்டு இருக்கின்றார்.அதுவும் கோதாவுக்கு வாய்ப்பான விடயமே ஆகும். 2005 ஆம் ஆண்டு தமிழர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையிலே மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றதை நான் நினைவூட்டுகின்றேன் என்றார். 
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)  

ஞாயிறு, 3 நவம்பர், 2019

உலகப் புகழ்பெற்ற புலிட்சர் விருது பெற்ற புகைப்படம்





உலகப் புகழ்பெற்ற  புலிட்சர் விருது  இந்தப் படத்தை எடுத்தகெவின் கார்ட்டருக்கு  கிடைத்தது  ஆனால். அவர்  தற்கொலை செய்துகொண்டார் ஏன்?
கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு
மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.
இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது
சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு
நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய
படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத
நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு
வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்
சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு
பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.
இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்;
பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம்
நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம்
தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்?
அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி
ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான
அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த
விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின்
பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர்
அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு
அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது.
அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு
ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry...
நாம் எவராக இருந்தாலும்
சரி நண்பர்களே,
நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்க்கே ஒப்பாவோம். . 
...

சனி, 2 நவம்பர், 2019

30 அரசியல் கட்சிகள், 32 சிவில் அமைப்புகள் புரிந்துணர்வு

30 அரசியல் கட்சிகள், 32 சிவில் அமைப்புகள் புரிந்துணர்வு

சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிகா ஆதரவு
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டது.
பதிவுசெய்யப்பட்ட 30 அரசியல் கட்சிகள் உள்ளிட்ட 36 கட்சிகளைச் சேர்ந்தவர்களும் 32 சிவில் அமைப்புகளும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. ஜனநாயக தேசிய முன்னணியை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போஷகர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் தலைமையில் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்களும் ஐ.தே.க. அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களுமான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்தன, அர்ஜுன ரணதுங்க, வே.இராதாகிருஷ்ணன் மற்றும் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
‘நாட்டையும மக்களையும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஜனநாயக தேசிய முன்னணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜாதிக ஹெல உருமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நவசமசமாஜ கட்சி, இலங்கை மக்கள் கட்சி உட்பட 30 கட்சிகள் கைச்சாத்திட்டதுடன், புரவெசி பலய, தேசாபிமான உட்பட 32 சிவில் அமைப்புகளும் இக்கூட்டணியில் கைக்கோர்த்துள்ளன. அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும்’ அமைப்பும் ஜனநாயக தேசிய முன்னணியுடன் கைக்கோர்த்துள்ளது.
இப்புதிய கூட்டணியின் தலைவர் பதவி தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. பொதுச் செயலாளராக ராஜித சேனாரட்ன செயற்படுகிறார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்தான் தலைவர் பதவி உட்பட ஏனைய பதவிகள் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளன. இதேவேளை, எதிர்வரும் 5ஆம் திகதி ‘லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும்’ அமைப்புச் சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டமொன்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் அறிவிப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடவுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் நிஷாந்தன்