மஹிந்தவின் பகிரங்க எச்சரிக்கை?? இரகசியம் காக்கும் மைத்திரி !
வெட்டிச் சவால்களுக்கும் வீரச் சபதங்களுக்கும் சிறப்பானதொரு கல்வி கூடம் இலங்கை அரசியலே.
ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சபதங்கள் செய்வதில் மட்டும் குறைவில்லை ஆனால் இலங்கையின் நிலை மட்டும் அன்று தொடக்கம் இன்று வரை மாற்றம் இல்லை. இப்போதைய அப்போதைய ஜனாதிபதிகளும் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஆனாலும் கூட அரசியல் அனுபவம் அற்றவர்களின் கருத்து பாரதூரமானது அல்ல ஆனால் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஒருவரது கருத்து இப்போது மிகப்பெரிய சந்தேகமாகவும், எச்சரிக்கையாகவும் மாறியுள்ளது.
விட்ட இடத்தில் மீண்டும் கோட்டை கட்டும் கனவோடு மஹிந்த புதல்வர் சகிதம் அண்மையில் பாதயாத்திரையை மேற்கொண்டார். குறித்த கனவு, கனவாகவே போனது வேறு விடயம்.
ஆனாலும் அவரின் கனவைக் கண்டு எச்சரிக்கை அடைந்த மைத்திரி “ஆட்சியை கவிழ்க்க எவராவது முயன்றால் இரகசியங்களை வெளியிட்டு வீதியில் அலைய விடுவேன் என்று பகிரங்கமாக எச்சரித்தார்.
அந்த நேர சூழ்நிலைக்கு அமைய அவர் மகிந்தவையே எச்சரித்தார் என்பதே உண்மை. ஆனாலும் இப்போது?
மஹிந்த தரப்பு புதுக் கட்சி ஆரம்பித்து விட்டது மட்டுமல்லாமல் 2017ஆம் ஆண்டு ஆட்சியை கவிழ்ப்பேன் என்றும் மஹிந்த தெரிவித்து விட்டார் ஆனாலும் இன்று வரை ஜனாதிபதி மட்டும் அமைதியே.
ஏற்கனவே ஆட்சியை கவிழ்க்க மகிந்த சதித்திட்டங்களை தீட்டிவருவதமாக தென்னிலங்கை தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கப்பட்டுள்ளதோடு அரசிற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இப்போதைக்கு ஆட்சி மாற்றம் என்பது சாத்தியம் இல்லை காரணம் 5 ஆண்டுகள் இன்னும் நல்லாட்சிக்கு பூர்த்தியாகவில்லை.
ஆனாலும் ஜனாதிபதியாக நாட்டை ஆண்ட ஒருவர் இந்த விடயத்தை அறிந்து கொள்ளாமல் வெளிப்படையாக ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்க மாட்டார் என்பது தெரிந்த விடயமே.
அவ்வகையில் முன்னாள் ஜனாதிபதி எந்த நம்பிக்கையில் இவ்வாறு ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தை அரங்கேற்றப் போகின்றார் என்பது தெரியவில்லை.
மஹிந்த தெரிவித்ததற்கு அமைய ஜனாதிபதியாகும் திட்டம் அவருக்கு இல்லை ஆனாலும் பிரதமராகும் எண்ணம் உள்ளது, இங்கு ஜனாதிபதி பதவிக்கான போட்டியாளர் கோத்தபாய ராஜபக்சவே.
அப்படியானால் இவர்கள் இருவரும் சேர்ந்து தமது திட்டத்தை அரங்கேற்றப் போகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இப்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் பகிரங்கமாக அதிகாரங்களை கைப்பற்ற வேண்டும் அதற்கு இராணுவ பலம் அவசியம்.
அந்த பங்களிப்பு ராஜபக்சர்களுக்கு நிறையவே கிடைக்கும், காரணம் யுத்த வெற்றி செல்வாக்கு இன்றும் அவர்களுக்கு இருக்கின்றது.
அப்படி என்றால் மஹிந்த மற்றும் கோத்தபாய இராணவ புரட்சியை பயன்படுத்தி ஆட்சி கவிழ்ப்பினை நிறைவேற்றப் போகின்றார்களா? என்பது மிகப்பெரிய சந்தேகமே.
ஏற்கனவே வெளிவந்த இராணவப்புரட்சி கதைகள் இன்றும் அடங்கவில்லை, இனவாதம் என்ற புதுக்கதையினால் அது மறைக்கப்பட்டுள்ளது அவ்வளவே.
இங்கு ஜனாதிபதி ஏற்கனவே கூறிய இரகசியக் கதைகளையும் மறந்து விட்டு பொறுமை காத்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது ஜனாதிபதியின் குடுமி மஹிந்தவின் கையிலா என்ற சந்தேகம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி அரசியல் அறிவும் அனுபவும் நிறைந்தவர், அவர் முறையாக பின்புலத்தை ஆராயாமல் 2017இல் ஆட்சியை கவிழ்ப்பேன் என பகிரங்கமாக தெரிவித்திருப்பது அவர் அரசிற்கும் நாட்டிற்கும் விடுத்துள்ள வெளிப்படையாக எச்சரிக்கையாகவே நோக்கப்படுகின்றது.
அதன் படி 2017 நாட்டிற்கு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி. ஆனாலும் அது இராணுவப் புரட்சியா? இனவாதமா என்பது மட்டும் இப்போதைய கேள்வி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள