சனி, 31 டிசம்பர், 2016

மைத்திரியை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் எதிர்வரும் மார்ச் மாதம் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கு ஏதுவான சில முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்திற்கு முன்னர் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இரண்டு ஜனாதிபதிகளுக்கும் இடையிலான இந்த சந்திப்பை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள மைக் ஹெஜ்ஸ்ரு ஒழுங்கு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இலங்கைக்கு எதிரான யோசனை குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துரையாடப்பட உள்ளது.
2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்கும் ட்ரம்ப், இலங்கை உட்பட சில தென்கிழக்காசிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவரது .ஊடகப் பேச்சாளர் கெத்தரினா பியர்சன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைத்த ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் கெய்ன் ஹாபர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் அமைதியான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
a

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள