இலங்கை–மலேஷியாவுக்கிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்து
(கோலாலம்பூரிலிருந்து ரொபட் அன்டனி)
இலங்கைக்கும் மலேஷியாவுக்கும் இடை யில் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகளில் ஐந்து உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டன. உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டு மலேஷியா வந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே இந்த ்ஐந்து உடன்படிக்கைளும் கைச்சாத்திடப்பட்டன.
இளைஞர் ஒத்துழைப்பு, சுற்றுலாத்துறை , விவசாயம், வௌிநாட்டு வேலைவாய்ப்பு கலாசாரம் ஆகிய துறைகளிலேே்ய ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மலேஷிய பிரதமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் முன்னிலையில் இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.
இளைஞர் ஒத்துழைப்பு,
இளைஞர் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையில் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மலே ஷிய வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
சுற்றுலாத்துறை
சுற்றுலாத்துறை குறித்த உடன்படிக்கையில் வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மலேஷிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
விவசாயம்,
இரண்டு நாடுகளுக்கு இடையிலான விவசாயத்துறை தொடர்பான உடன்படிக்கையில் மலேஷியாவுக்கன இலங்கை உயர்அர ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மற்றும் மலேஷிய நிறுவனம் ஒன்றின் உயர் அதிகாரி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு
வௌிநாட்டு வேலைவாய்ப்பு விடயம் தொடர்பான உடன்படிக்கையில் பிரதியமைச்சர் மனுஷ்ய நாணயக்கார மற்றும் மலேஷியாவின் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
கலாசாரம்
இலங்கை மற்றும் கலாசார விடயதானம் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும கைச்சாத்திட்டார்.
இது இவ்வாறு இருக்க மலேஷியாவுக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோலாலம்புரில் இரண்டு நாடுகளினதும் வர்த்தக பிரதிநிதிகளின் பங்கேற்புடனான வர்த்தக மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த வர்த்தக மாநாட்டில் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் அரசாங்கததின் வர்த்தகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். அத்துடன் மலேஷயாவின் வர்த்தக பிரமுகர்கள் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டனர்
மேலும் இந்த வர்த்தக மாநாட்டின்போது இரண்டு நாடுகளினதும் வர்த்தக பிரதிநிதிகள் மட்டத்திலான நேருக்கு நேர் இருதரப்பு சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும் நடை பெற்றன. இதில் உரையாற்றிய மலேஷியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் முஸ்தபா மொஹம்மட் இலங்கையில் தற்போது பாரிய மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இலங்கையானது அடுத்த ்நிலைக்கு செல்கின்றது என்று கூறலாம். இலங்கையின் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அதனை மலேஷிய வர்த்தகர்கள் பயன்படுத்தவேண்டும். எனது நாட்டின் வர்த்தகர்களை நான் ஊக்குவிக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள