சனி, 17 டிசம்பர், 2016

அமெரிக்காவின் பட்டியலில் தனி இடம்பிடித்த இலங்கை

அமெரிக்காவின் பட்டியலில் தனி இடம்பிடித்த இலங்கை


இலங்கை அரசியலில் அண்மைக்காலமாக ஓரளவு முன்னேற்றம் எற்பட்டு வருகிறது. இதனையே மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு சபையின் தீர்மானம் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பினால் நாடுகளுக்கு உதவி வழங்கும் 


திட்டத்தினுள் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 13ஆம் திகதி நடைபெற்ற மிலேனிய சவால்களுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் பணிப்பாளர் சபையின் சந்திப்பில் இலங்கை, புர்கினோ ஃபசோ மற்றும் ரியூனியா ஆகிய நாடுகள், ஊக்குவிப்பு திட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்டிருந்தன.
இலங்கை மக்களுடனான அபிவிருத்தி பங்களிப்புக்கு பாரிய உந்துசக்தியாக, காணப்படுகின்றது. மேலும் பல வகையில் குறிப்பிடத்தக்க ஆதரவை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்திற்குள் இலங்கை உள்வாங்கப்பட்டதன் அடிப்படையில் ஜனநாயக ஆட்சி, மக்களுக்கான முதலீடு மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பை இலங்கை உணர்வு பூர்வமாக நிரூபிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உலகத்தின் வறுமை ஒழிப்பு நாடுகள் பட்டியலில் இலங்கையும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள