நான் இறக்கப்போகின்றேன்..! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்யுங்கள் - இதில் மஹிந்தவிற்கு என்ன தொடர்பு??
நாட்டுக்காக குரல் கொடுத்த நான் பயங்கரமான உயிர் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றேன், இனி நான் உயிருடன் இருப்பேனா? என்பது தெரியாது என மட்டக்களப்பு சுமனரத்ன தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.
முகப்புத்தகங்களின் ஊடாக நேற்று அவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த காணொளி மூலமாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தலங்களில் பலவாறான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள குறித்த காணொளியில் மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்துகளாவன,
இப்போது நாடு அதி பயங்கர நிலையில் சென்று கொண்டிருக்கின்றது. வேரு இனத்தினருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பில் நான் பல அபிவிருத்திகளை செய்து வந்தேன் பௌத்தத்தை காக்க பல வகையிலான செயற்பாடுகளை செய்து வந்தேன் இவற்றை பொறுக்க முடியாதவர்கள் எதிர்ப்புகளை செய்து வருகின்றார்கள்.
இப்போது மட்டக்களப்பில் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சிறிய உதாரணம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றேன்.
அண்மையில் இது போன்றே மட்டக்களப்பில் பல வகையிலும் இராணுவத்தினருக்கு நினைவுத் தூபி ஒன்றினை எழுப்பவும், பௌத்த கல்வி நிலையம் ஒன்றினை எழுப்பவும் நான் அடிக்கல் நாட்டு வைபவம் ஒன்றினை ஏற்பாடு செய்தேன்.
அதற்கு யுத்தத்தை வென்ற மஹிந்த ராஜபக்சவையே அழைத்திருந்தேன் இதன் போது எவருமே கல்எறிந்து குழப்ப வில்லை. அவர் மட்டக்களப்பிற்கு வந்த போது யாரும் எதிர்க்க வில்லை.
அதேபோன்று அதற்கு அடுத்து சுமார் 3500 பேருக்கும் அதிகமானவர்களை நான் திரட்டினேன் அப்போதும் எவரும் குழப்ப வில்லை, ஆனால் இப்போது பல எதிர்ப்புகள் வருகின்றது.
பிக்குகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் அதற்கு உத்தரவு இட்டவர்களையும் மக்கள் தட்டிக் கேளுங்கள். இதனைப்பற்றி யாரும் பேசுவது இல்லை அதற்காக நாம் இப்போது தட்டிக் கேட்க வேண்டும்.
இதனைப்பார்க்கும் அனைவரும் மிகுந்த மிகுந்த கவனத்தை எடுங்கள். பிரிவினையாளர்களின் செயற்பாடுகளை தடுக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
மேலும் பௌத்தத்தை அழித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை கைது செய்ய வேண்டும். அதனை விடுத்து அரசு வேரு இனத்தை மகிழ்ச்சி படுத்த வேண்டுமாயின் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது.
அனைவரும் கூடுதல் அவதானமான இருங்கள். இப்போது உள்ள நிலவரப்படி இது என்னுடைய கடைசி பதிவாக வேண்டுமானாலும் அமைந்து விடும். எது வேண்டுமானாலும் எனக்கு நடக்கலாம்.
அதனால் முடிந்தளவு நான் பாதுகாப்பாக இருந்து கொண்டு நாட்டுக்காகவும் பௌத்தத்திற்காகவும் போராடுவேன் எனவும் தெரிவித்து கொள்கின்றேன் என சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுமனரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு கருத்தினை மக்கள் மத்தியில் பரப்பியுள்ளார் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள