அடம்பிடிக்கும் கூட்டமைப்பு...! அறிவுரை கூறும் அரசாங்கம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சமஷ்டி என அடம்பிடிக்காது, சமஷ்டிப் பண்புக்கூறுகளைக் கொண்ட தீர்வுத்திட்டமொன்றை ஒற்றையாட்சிக்குள் பெறுவதற்கு முன்வரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இனப்பிரச்சினை தொடர்பான தீர்வு விடயத்தில் சமஷ்டி என்ற சொற்பதமானது பெரும்பான்மை இனத்தவரிடையே பாரிய பிரச்சினையாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, ஒற்றையாட்சிக்குள் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையான அதிகாரப் பகிர்வை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டுமெனவும், அதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமனதோடு செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், கிடைக்காது எனத் தெரிந்த ஒரு விடயத்திற்காகக் காத்திருப்பதை விட கிடைக்கக்கூடிய விடயத்தை வேறு வடிவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லையென குறிப்பிட்டுள்ள அவர், கூட்டமைப்பு இதனை உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள