புதன், 16 நவம்பர், 2016

கல்விக் கண்ணோட்டம் !



இலங்கையின் நீண்ட கல்வி  வரலாறானது இரண்டாயிரம் ஆண்டுகளையும் பின்னோக்கிச் செல்வதோடு, இலங்கை அரசியலமைப்பானது அடிப்படை உரிமையொன்றாக கல்வியை ஏற்பாடு செய்கிறது. இலங்கையின் சனத்தொகையில் 92 வீதமானோர் எழுத்தறிவு வீதத்தை கொண்டவர்களாவர். இது மூன்றாம் உலக நாடொன்றிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதை விட அதிகமானதாகும். இலங்கை, தெற்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கல்வியறிவை கொண்டு ஆசியாவில் மிகச் சிறந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் வாழ்க்கை முறை, கலாசாரம் என்பவற்றில் கல்வி முக்கிய பங்கை வகிப்பதோடு, இது கி.மு. 543ஆம் ஆண்டை பின்னோக்கிச் செல்கின்றது. நவீன கல்வி முறைமையானது, இலங்கை 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய இராஜ்ஜியத்திற்கு உட்பட்டபோது கொண்டு வரப்பட்டதாகும்.  இது மத்திய அரசாங்கத்தினதும் மாகாண சபைகளினது கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றது. சிலவற்றில் மத்திய அரசாங்கம் பொறுப்பை கொண்டுள்ளதோடு,  ஏனையவற்றுக்கு மாகாணசபை சுய அதிகாரத்தை கொண்டதாக உள்ளது.

உள்ளூர் இராஜ்ஜியங்களின் காலப்பிரிவில் இலங்கையில் உயர் கல்வியானது பல்வேறு முக்கிய  பிரிவெனாக்களின் (பண்டைய பௌத்த மதகுருகள்  பயிற்சி நிலையங்கள்) அடிப்படையில் அமைந்திருந்தது. இலங்கையில் நவீன பல்கலைக்கழக முறைமையின் மூலமானது லண்டன்  பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கொழும்பு ரோயல் கல்லூரியின் முன்னைய இடத்தில் தாபிக்கப்பட்ட இலங்கை பல்கலைக்கழக கல்லூரி என்றவாறு பல்கலைக்கழக கல்லூரியொன்று 1921 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகும்.
எவ்வாறாயினும் இலங்கையில் நவீன உயர் கல்வியின்  ஆரம்பமானது 1870 இலங்கை மருத்துவ பாடசாலையின் தொடர்ந்ததுடன் ஆரம்பமாகி, அதன் பணிகள்  கொழும்பு சட்டக் கல்லூரி (1875) விவசாய பாடசாலை (1884), அரசாங்க தொழிநுட்பக் கல்லூரி (1893) என்பன தாபிக்கப்பட்டன.

இலங்கை பல்கலைக்கழகமானது 1942 ஆம் தனியான 20 ஆம் இலக்க இலங்கை பல்கலைக்கழக கட்டளைச் சட்டத்தினால் தனியான, வதிவிட, சுயாதீனமுள்ள, முள்ள நிறுவனமொன்றாக 1942 யூலை 01 ஆம் திகதியன்று தாபிக்கப்பட்டது. பல்கலைக்கழகம் கொழும்பில் தாபிக்கப்ட்டதோடு, பலவருடங்களின் பின்னர் இரண்டாவது வளாகம் பேராதனையில் நிர்மாணிக்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழகமானது 1972 ஆம் ஆண்டில் 1ஆம் இலக்க இலங்கைப் பல்கலைக்கழக சட்டத்தினை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பல்கலைக்கழகமாக மாறி மிகவும் வினைத்திறன்மிக்க அரசாங்க கட்டுப்பாட்டையும் கொண்டதாக மாறியதோடு, 1978 ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் பின்னர் தனியானனன தனியான பல்கலைக்கழகங்களின் சுயாதீன அடையாளங்களுடன் தாபிக்கப்பட்ட போதிலும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினூடாக அரசாங்கம் அதன் நேரடி கட்டுப்பாடு, மத்திய அரசாங்கத்திற்கு இடப்பட்ட நிருவாக முறை என்பவற்றை பேணியது கல்வி அமைச்சர் காலஞ்சென்ற கௌரவ லலித் அதுலத் முதலி அவர்கள் 1980 களில் நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்னெடுப்பொன்றை மேற்கொண்டார். அவரால் தாபிக்கப்பட்ட மகாபொல நிதியமானது புலமைப் பரிசில் வழங்கியதோடு, நவீன உயர் கல்வி நிறுவனத்திற்கு தேவையான நிதியிடலையும் மேற்கொண்டது. 1999 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டுவரப்படும் வரை அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமே இளமாணிப் பட்டங்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டன.  எவ்வாறாயினும் இம்முறை அதன் பிறகு மாற்றமடைந்தது.

இலங்கையில் தற்போது 15 பல்கலைக்கழகங்கள் உள்ளன. மிக முன்னணியில் இருப்பவைகளாக கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், ருஹுன பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் என்பன உள்ளன. பல்கலைக்கழக சட்டத்திற்கான மாற்றங்களுடன் அண்மைக் காலங்களில் சில நிறுவனங்கள் சுயமாகவே தமது பட்டங்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றன. இதன் மிகப் பிரதானமானதாக அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவகம் திகழ்கின்றது.
உயர் கல்வி முறைமையின் கீழான நிறுவகங்களை ஒழுங்குபடுத்தி, விரிவாக்கி விருத்தி செய்வதற்காக அரசாங்கம் உயர் கல்வி அமைச்சை உருவாக்கியது. அந்த வகையில் இந்த அமைச்சானது சமூக, பொருளாதார, அபிவிருத்தி துறையில் ஒரு பாரிய பொறுப்பை  கொண்டுள்ளது. பிரதான துறைகளினால் கோரப்படுகின்ற மனித வளத்தின் அபிவிருத்தியை நோக்கியதாக பாரிய செல்வாக்கொன்றை அது கொண்டுள்ளது. / தற்போதைய நிலைமை கல்வித்துறைக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதோடு இது அரசாங்கம் இறுதியாக கல்வி மற்றும் ஏனைய பொருளாதார , சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கு சுதந்திரமாக விட்டுள்ளது. இதன் விளைவாக கல்வி, மற்றும் உயர் கல்வி அமைச்சுகள் கொள்கைகள், உபாயமுறைகள் என்பவற்றை ஏற்கனவே வகுத்தமைத்துள்ளதோடு, உலகின் ஏனைய நாடுகளின் தரத்திற்கு சமமானதாக நாட்டின் கல்விமுறைமையை கொண்டுவருவதற்கு அவற்றை நடைமுறைபடுத்துகின்றது.

உயர் கல்வி அமைச்சு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுடன் கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள் ஏனைய பிரதான பங்காளர்களுடன் தேவையான மட்டத்தில் உயர் கல்வி முறைமையை தரமுயர்த்துவதற்கு தொடரான உரையாடலில் ஈடுபட்டிருக்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான உயர் கல்வி கருத்திட்டமானது உயர் கல்வி முறைமையின் தரத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அது நாட்டில் இணைய ரீதியான உயர் கல்வி முறையை மேம்படுத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளது. தேசிய இணைய, தொலைக்கல்வி அமைப்பை விரிவாக்கும் செயன்முறையில் ஈடுபட்டுள்ளது. உயர் கல்வி அமைச்சானது அதன் சர்வதேச சட்டத்தினை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழுவின் கீழ் தர உத்தரவாத, அங்கீகரிப்பு சபையொன்றையும் தாபித்துள்ளது. த.உ.அ.ச. யின் பிரதான நோக்கம் யாதெனில் தர உத்தரவாதத்தினூடாக உயர் கல்வியில் கீர்த்தியை உறுதிப்படுத்துவதாகும்.

உள்ளூர் பட்டதாரிகளுக்கு தொழில் சந்தை பெறுமதியில் கேள்வியினை மேம்படுத்துவதற்காக அவர்களை தொழில் சார்ந்த கல்வி முறையை நோக்கி நகர்த்துவதற்கும் அவர்களுக்கு வினைத்திறனுள்ள தொடர்பியல் திறன்கள், தகவல் தொழில்நுட்ப அறிவு என்பவற்றையும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதற்கான ஒரு பிரதான முன்னெடுப்பாக தொழில் சந்தையில் உயர் கேள்வியைக் கொண்டிருக்கக் கூடிய த.தொ.தொ. விசேட இளமாணிப் பட்டம் இருக்கும். இந்த உபாயமுறை இலங்கையில் மனித மூலதனத்தின் நிகர பெறுமதியை மேம்படுத்தும்.
உயர் கல்வி அமைச்சானது சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இரு வழிமுறை மூலவள பரிமாற்றம், இலங்கையர்களுக்கான வெளிநாட்டு கற்கைக்கான புலமைப் பரிசில்களுக்கான வாய்ப்பை அதிகரிப்பதற்கும் பங்குடமைத் தன்மையை விருத்தி செய்கின்றது. உயர் கல்வி அமைச்சின் ஏனைய துறையாக கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பொறியியல், மருத்துவம், சட்டம், கலை போன்ற பீடங்களுக்கான பொருத்தமான திறமையுள்ள உசாவுகை குழுக்களை பெறுவதுடன் சம்பந்தப்பட்டதாகும். அது தகவல்களை பரப்புதல், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளல், திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக நிபுணத்துவத்தையும் வாய்ப்புக்களையும் வழங்குகின்றது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள