களத் தேர்தல் முடியுமட்டும் அறிக்கை-பின்பு
கனிவு கொடுக்கும் கொழும்பில் ஓய்வு
வெற்றியடைந்தால் வெளிநாட்டில் விளையாட்டு -இது
முத்தமிழர் அறிந்தது தானே தப்பா!,
பிறந்தது நாங்கள் அடிவாங்க -முழுதும்
பேசுவதும்,கூட்டங்கள் போடுவதும் நீங்க,
சுற்றம் சூழ ஈரோப்புக்கு போங்க -அடுத்த
தேர்தலுக்கு கட்டாயம் வாங்க
ஏருபிடித்து நானுழைத்து நாளாகிப் போச்சு -இருந்த
எருமையும் கண்டும் யுத்தத்தில் போச்சு
பாராளும் இறைவனுக்கும், பார்வை போச்சு -இந்தப்
பாராளுமன்றத் தேர்தலால் எனக்கென்ன ஆச்சு!
ரோட்டிலே நான்போக,நீபோக முடியுமா? -நடு
வீட்டிலேயே நான் இருக்க முடிந்ததா?
காட்டிலும் கூட கால்வைக்கலாகுமா?-நான்
பட்ட கஷ்டம் நீ அறியக்கூடுமா?
எல்லா இறப்பும் அறிந்துவிட்டேன் -இருந்த
எல்லாம் முழுசாக இழந்தும் விட்டேன்
பொல்லாத நேரம் கல்லாக இருந்து விட்டு -எதுவும்
இல்லாத போது எதுவும் சொல்லாதே!
தமிழர் பூமியை மீண்டும் இணைக்கவும்-இன்பத்
தமிழ் மொழியை அழியாமல் காக்கவும்
தமிழன் ஒருவன் இருந்தாலே போதும்-அவன்
தமிழுக்காய் இந்தத் தரணியையே மீட்பான்!
அன்புடன்! .....
பாராளுமன்றம், தேர்தல், தமிழ் மக்கள்,
அருமை. கவிதை வலி உண்ர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களின் வரவும், வார்த்தைகளும் ,எனக்குப் பெறுமதி மிக்கவை,நன்றிகள்
பதிலளிநீக்குமுழுவதும் உண்மை அண்ணா! சாட்டை அடி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும்,உங்களின் கருத்துக்கும் உயரிய நன்றிகள்.
பதிலளிநீக்குபாரதியாரை அடியொற்றி அருமையான வேதனைமிக்க கிண்டல்.
பதிலளிநீக்குஇதை எங்கள் பா.உ களுக்குப் பிரதி பண்ணியனுப்ப வேண்டும்.
இத்தனை வரிகளானால் எத்தனை வேதனைகள்....ம்
அருமை ,அருமை..
காலம் மாறும் என நம்புவோம்.
very nice
பதிலளிநீக்கு