செவ்வாய், 9 மே, 2017

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

Menon Balasubramanian
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளைக் காக்க‍வும், தீயவர்களை
அழிக்க‍வும் எடுத்த‍துதான் 10 அவதாரங்கள் என்பது நாமறிந்த செய்தியே! ஆனால் விஷ்ணு, இந்த 10 அவதாரங்களையும் எடுக்க‍க் காரணமாக இருந்தது ஒரு முனிவரின் சாபம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பலநூறு ஆண்டுகளுக்கு முன், சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷி என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமன் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தவன். அன்று முழுவதும் ஹரியைக் குறித்த பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பொழுதைக் கழித்தப்பின் அடுத்த நாளான துவாதசி அன்று விரதத்தை முடித்துக் கொள்வான். அந்தக் கடுமையான விரதமுறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.
அப்படி இருக்கையில் ஒரு முறை துவாதசி தினத்தன்று அம்பாரிஷின் அரண்மனைக்கு முனிவர்களில் மாமுனியான துர்வாசர் வந்திருந்தார். அவர் சற்று முன்கோபக்காரர். அன்று மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். மாமுனிவரைக் கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அர்க்கியபாத்யம் கொடுத்ததுடன் (கை கால்களை அலம்பிக்கொள்ள தண்ணீர் தருவது) மாமுனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்திற்குமுன் முடிக்க வேண்டி இருப்பதால் விரைவாக காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வந்து விடுமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோளை ஏற்ற மாமுனிவரும் நதிக் கரைக்குசென்று தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வரத்துவங்கினார் . ஆனால் துரதிஷ்டவசமாக அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள நேரம் ஆகிவிட்டது. துவாதசி காலநேரம் முடிந்துவிடும் என்பதை மறந்துவிட்டார். குறிப்பிட்ட நேரத்திற்குள் முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.
தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி காலநேரம் முடிவதற்கு முன் தவறாமல் தன் விரதத்தை முடித்துக்கொண்டு வந்திருந்தான். சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை. வந்த விருந்தாளி சாப்பிடுவதற்கு முன் தான் சாப்பிடுவது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி காலநேரம் கடக்கும்முன் முடிக்கவேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வரும் முன்னர் சாப்பிடக் கூடாது. என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பி நின்றவன் யோசனை செய்தான். என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு அருந்தியதற்கு சமானம் அல்ல என்பதினால் சிறிது தண்ணீர் மட்டும் பருகிவிட்டு விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை, தணிணீர்கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாகக் கருத முடியாது என்பதினால் அதைச் செய்தபின் முனிவர் வரும் வரை காத்திருந்தான்.
தனது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அங்கு மன்னன் விரதத்தைமுடித்துக் கொண்டு விட்டதைப் பார்த்தார். தன்னுடைய முக்காலமும் உணரும் சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்துகொண்டார். துவாதசி காலநேரம் முடியும்முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டது உணவு அருந்தியதற்கு இணை ஆகாது என்ற சாஸ்திரம் அவருக்கும் நன்கே தெரியும். ஆனாலும் முன்கோபம் அவரை மீறிக்கொண்டது. மன்னனை ‘நான் வரும் முன்னரே உணவை அருந்தி பாவம் செய்துவிட்டாய்’ எனக் கோபித்துக்கொண்டு சாபம் கொடுக்கத் தயார் ஆனார்; மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவை நாராயணன் மூலமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தான். ஆகவே மாமுனிவர் சாபம் தரத்துவங்கும் முன்னரே நாராயணனைத் துதித்து தியானம் செய்யத் துவங்கினார். அவர் தியானம் செய்யத் துவங்கியதுமே நாராயணன் அவர்களுக்கு இடையில் வந்துநின்று கொண்டுவிட்டார். துர்வாச முனிவர் சாபம் தரும்முன் தன்னைக் காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அம்பாரிச மன்னன் கெஞ்சினான். அதனால் துர்வாசமுனிவரை நோக்கி ஸ்ரீமன் நாராயணண் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிச மன்னன் என்னுடைய உண்மையான பக்தன். நீ எந்த சாபத்தைக் கொடுத்தாலும் அது அவனிடம் போய்ச் சேராது , என்னையே அது வந்தடையும். ஏனெனில் என்னிடம் தஞ்சம் அடைந்து விட்டவர்களைக் காப்பது என் கடமை. நீங்கள் என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்’
அதைக்கேட்ட துர்வாச முனிவருக்குத் தெரிந்தது உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கின்றது என்று. பூமியில் உள்ள மக்களின் நன்மையைக் கருதித்தான் கடவுள் பூமியில் அவதரிப்பார் என்பது தெரிந்திருந்ததாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டதினாலும் தன்னைப் போன்ற மற்ற முனிவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு ஸ்ரீமன் நாராயணனுக்கு தான்கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே இருக்கட்டும் என எண்ணிய துர்வாசர் கூறினார் ‘சரி, நான் கொடுக்க உள்ள சாபமும் ஸ்ரீஹரி ஆகிய உங்கள் மீதே விழட்டும். அதன்படி நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்கவேண்டும்’ அப்படி பொதுநன்மையை மனதில் கொண்டவண்ணம் துர்வாசமுனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது.

திங்கள், 8 மே, 2017

நிதி சம்பந்தமான குறிப்புகள்

நிதி சம்பந்தமான குறிப்புகள்




 அரசாங்க நிருவாகசேவை / தேர்வுப் பரீட்சசைக்குப் பயிற்சி எடுப்பவர்களுக்கு
உதவக் கூடிய ஒரு கைநூல் PDF வடிவில் படித்துப் பயன் பெறுங்கள்  பரீட்சசையில் சித்தி பெறுங்கள்.வர்த்தகம் கணக்கியல் படியாதவர்களுக்கு உதவும்.

இங்கே செல்லுங்கள் முழுவதும் படிக்க.

இப்ப சொல்லுங்கள். ?

T Arulmony
1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*
💯தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​
💯எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.​
💯கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.​
💯புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.​
💯சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.​
💯பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.​
💯நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.​
💯தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.​
💯ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.​
💯அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.​
💯காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.​
💯சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.​
💯உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.​
💯எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்​
💯எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல​
💯அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.​
💯உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை​
💯எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.​
💯எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்​
💯வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.​
💯எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.​
💯உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை​
💯இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 வார்த்தைகள்!





 
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 
 
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 
 
குழந்தை
 
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும். 
 
3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள். 
 
4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது? உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள். கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள். 
 
குழந்தை
 
5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். 
 
6. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள். 
 
7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ, குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள், 'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும். 
 
8. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள். 
 
9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.

ஞாயிறு, 7 மே, 2017

இணையதள பயன்பாட்டில் முதலிடம் பிடித்த தமிழ்.. இந்தியை பின்னுக்கு தள்ளி அசத்துகிறது !

இணையதள பயன்பாட்டில் முதலிடம் பிடித்த தமிழ்.. இந்தியை பின்னுக்கு தள்ளி அசத்தும்  தமிழ். !

By  


கூகுள் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் ரீதியான கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் இந்திய மொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் இருக்கும் மொழி தமிழ் மொழியே என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழர்கள் இந்தி மொழி பேசுபவர்களை விட எட்டு மடங்கு எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். இருந்தும் இணைய தளத்தை தாய் மொழியில் பயன்படுத்துவதில் வட இந்தியர்களை விட அதிக அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரியது. இனி வரும் காலங்களில் கூட தமிழ் மொழியின் பயன்பாடு இணையத்தில் இந்தியை விட அதிகரிக்கும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. இந்தி தான் ஆட்சி மொழி. இருந்தும் தமிழ் மொழி இணைய பயன்பாட்டில் முதல் இடத்தில் இருக்கும் காரணம் என்ன தெரியுமா ?
தமிழ் மொழி தமிழகத்தை தாண்டி பிற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ளது. மேலும் மலேசியா, மியன்மார் , மொரீசியஸ் போன்ற நாடுகளில் கணிசமாக பேசப்படுகிறது கற்பிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இவையெல்லாம் தமிழ் மொழியை முன்னுக்கு கொண்டு செல்கிறது .
தமிழகத்தில் இப்போது தான் தமிழ் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது . அதனால் வரக்கூடிய நாட்களில் இணையத்தில் தமிழ் மொழியின் ஆதிக்கம் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை . தொடர்ச்சியாக நாம் எல்லா துறைகளிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்தால் நிச்சயம் உலக நாடுகளும் இந்திய அரசும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கும் என்பதிலும் ஐயமில்லை .

வெள்ளி, 5 மே, 2017

பசுமை நிறைந்த நினைவுகளே....... பறந்து சென்றதே - ஒரு பறவை

பசுமை நிறைந்த நினைவுகளே.......
பறந்து சென்றதே - ஒரு பறவை.

செல்வி.சற்சொரூபவதி நாதன்-B.h. Abdul Hameed
இலங்கை வானொலி வரலாற்றில் 'சொற்சொரூபவதியாய்' போற்றப்பட்ட சகோதரி, செல்வி.சற்சொரூபவதி நாதன் அவர்கள், இன்று (4/5/17) பிற்பகல் 2.45 அளவில் தன் இன்னுயிர் நீத்த செய்தி, நம் வானொலிக்குடும்பத்தில் ஒரு 'மூத்த' சகோதரியை இழந்த துயரினைத் தருகிறது.
'யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம்' அவருக்கு "சகலகலா வித்தகி" எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தமைக்குப் பொருத்தமாக, வானொலித்துறையின் பல்வேறு அம்சங்களிலும் தன்னை ஈடுபடுத்தி மிளிர்ந்தவர்.
வானொலிக் கலைஞராக, அறிவிப்பாளராக,செய்தி வாசிப்பாளராக, செய்தி ஆசிரியராக, வானொலி எழுத்தாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வானொலித்துறைக்கான 'பயிற்சிப் பட்டறைகள்' பலவற்றின் நெறியாளராக, பல்கலைக் கழகத்தில் 'ஊடகத்துறைக்கான' பகுதிநேர விரிவுரையாளராக, என அவரது பங்களிப்புகள் பரந்து விரிந்தவை.
சிறிது காலத்திற்கு முன்.........
சென்னைப் பல்கலைக் கழகத்தில், 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவ மாணவியர் முன்னிலையில் உரையாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு நான் சென்று, கேட்போர் கூடத்துக்குச் செல்லும் மாடிப்படிக்கட்டுகளில் கால்வைத்தபோது, மேல்தளத்துச் சுவரில் மாட்டியிருந்த மிகப்பெரிய படம் ஒன்று வரவேற்றது. அண்ணார்ந்து பார்த்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதலாவது 'பட்டதாரி' C.Y. தாமோதரம் பிள்ளை என, எங்கள் மண்ணின் மைந்தரது பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெருமையால் நெஞ்சமும் நிமிர்ந்தது. கூடவே, இன்னும் யார் யாரெல்லாம் நம் மண்ணிலிருந்து இங்குவந்து கல்விகற்று பட்டம் பெற்றிருப்பார்கள்? என அறிய ஆவல் கொண்டு பார்த்தபொழுது, அவ்வரிசையில் எம் வானொலிக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'சற்சொரூபவதி நாதன்' என்ற பெயரும் இருக்கக் கண்டு இருமடங்குப் பெருமிதம் கொண்டேன்.
தன் 21 வது வயதிலேயே, 'ஜவஹர்லால் நேரு விருது' பெற்றவர் என்ற செய்தியும் அவர் பெருமையினைப் பறைசாற்றியது.
நாடு திரும்பி, கொழும்பு 'பௌத்த மகளிர் கல்லூரியில்' விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் வானொலி கலைஞராக, பங்களிப்பினை வழங்கிவந்தவர், 1965 ம் ஆண்டிலே ஒரு அறிவிப்பாளராகத் தெரிவாகி நிரந்தரமாகவே வானொலியோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டார்.
அவர் அறிவிப்பாளராக இணைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர்தான், நாம் அறிவிப்பாளர்களாக இணைந்தோம். விடலைப்பருவத்தைத் தாண்டிய இளையவர்களான, எம்மைத், தம் வயதொத்தவராக மதித்து, நேசமுடன் பழகியது அவரது பெருந்தன்மை. அறிவிப்பாளரானாலும் வானொலிக்கலைஞராகவும் தன் பங்களிப்பினைத் தொடர்ந்து வழங்கிவந்த அவருடன், நம் வானொலி நாடகத் தந்தை திரு. 'சானா' அவர்களது நெறியாழ்கையில் இணைந்து நடித்த நாடகங்கள். திரு. ராஜசுந்தரம் அவர்களது தயாரிப்பில் பங்கெடுத்த 'உரைச்சித்திரங்கள் யாவும், இன்னும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருக்கின்றன.
தமிழ் வானொலி வரலாற்றில் முதல் பெண் அறிவிப்பாளரான, திருமதி. செந்திமணி மயில்வாகனன் அவர்களுக்குப் பின், 'செய்தி' வாசிப்பில் தனி முத்திரை பதித்தவர் சகோதரி சற்சொரூபவதியே என்றால், அது மிகையாகாது. அவரது ஆங்கிலப் புலமை, பின்னாளில் செய்தி ஆசிரியராகவும், எமது வானொலியிலும், ரூபவாஹினி தொலைக்காட்சியிலும், மிக நீண்டகாலம் பங்களிப்பினை வழங்கும் வாய்ப்பினை அவருக்கு உருவாக்கித் தந்தது.
இளைப்பாறிய பின்னரும் ஊடகத்துறையோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக்கொண்டு வானொலி, தொலைகாட்சி எனத் தன் முதுமைக்கும் சவால் விட்டு வாழ்ந்துவந்தவர். கொழும்பு பல்கலைக் கழகத்திலும் அவ்வப்போது 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவருக்கு விரிவுரைகள் ஆற்றிவந்தவர்.
அதுமட்டுமன்றி 'கொழும்பு தமிழ்ச்சங்கத்தின்' துணைத்தலைவர் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சாரும். 'பெண்ணியத்தின்' பெருமை பாடவும், மகளிர் மேம்பாட்டுக்காகவும் அயராது உழைத்தவர். சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் 'உண்டா' விருதினை ஒலிபரப்புத்துறைக்காக முதலில் பெற்றவர் எனது ஆசான், திரு.எஸ்.கே. பரராஜசிங்கம் என்றால், அவரை அடுத்து 'உண்டா' விருதினைப் பெற்ற பெருமைக்குரியவர் சகோதரி சற்சொரூபவதியே.
சிறந்த ஒலிபரப்பாளருக்கான 'ஜனாபதி விருதினையும்' பெற்றவர்.
"பிறப்பவர் எல்லோருமே என்றோ... ஓர்நாள்
இறப்பதுவும் உறுதி" இது மாற்றவியலா விதி.
மூப்புடன் பிணியும் வாட்டிவைத்திட, தன் 80தாவது வயதில் இறப்பது என்பதை 'ஓர் பேரிழப்பு' என்ற வழக்கமான அனுதாபச் சொல்லோடு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிடாமல், தமிழ் ஊடகத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டினையும், தனது வழிகாட்டலில், 'விழுமியங்கள் பேணும் ஊடகவியலாளர்கள்' உருவாக அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவு கூர்ந்து, அவருக்கு நன்றி கூறுவதும், அவரது ஆத்மா, நற்பேறு அடைய, நம் இதயங்களால் பிரார்த்தனை செய்வதுமே நம் கடமை என உணர்வோம்.
அவரை இழந்து துயருறும் இரத்த உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
.

வியாழன், 4 மே, 2017

உலகின் முதல் மொழி தமிழ்! மொழி அறிவு இன சிறப்பு !!!

உலகின் முதல் மொழி தமிழ்!
மொழி அறிவு இன சிறப்பு !!!
ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்
- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.
1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்றவற்றின் நூல்கள் உள்ளன.

திங்கள், 1 மே, 2017

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அழகின் சிரிப்பு



அழகின் சிரிப்பு

காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்,
தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்! ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில்அந்த ‘அழகெ’ன்பாள் கவிதை தந்தாள்.
சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெ டுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்; அடடே செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.
திசைகண்டேன், வான்கண்டேன், உட்புறச்
செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன். யாண்டும்
அசைவனவும் நின்றனவும் கண்டேன். மற்றும்
அழகுதனைக் கண்டேன் நல் லின்பங் கண்டேன்.
பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்!
பழமையினால் சாகாத இளையவள் காண்!
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்!
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.
----பாவேந்தர் பாரதிதாசன்-----
தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர்,
அழகின் சிரிப்பு, பாடிவந்த நிலா.
அன்பு ஆசான்,புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
அவர்களின் பிறந்தநாள் இன்று

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

பொது அறிவு -09

பொது அறிவு -09


01.சிலப்பதிகாரத்தை எழுதிய ஆசிரியர்?
இளங்கோவடிகள்.

02.தமிழ் மொழியில் தோன்றிய முதல் காவியம்?


03.வீர மாமுனிவர் இயற்றிய உலா?


04."இன்னா நாற்பது" நூலின் ஆசிரியர்?
பிற்காலக் கபிலர்.

05.The  world  Trade  organization was  established   which year?
1995.

06.What is the expansion of the GST?
GODS  AND SERVICES TAX

07. 2017ம் ஆண்டுக்கான யூனஸ்கோவின் புத்தகக் கண்காட்ச்சியை நடத்த தெரிவான நகரம்?
CONAKRY


08.யுரேஷியன் எகனாமிக் யூனியன் (EAEU.)னில்  அங்கத்தவர் அல்லாத நாடு?
உஸ்பெகிஸ்தான் 

09 G -20ல் இல்லாத நாடு?
பாகிஸ்தான் 

10.பூண்டு வாசனைக்குரிய இரசாயனப் பதார்த்தம்?

Allyl Mercaptan

11.சர்வோதய இயக்கத்தின் தந்தை யார்?

வினோபா பாவே 

12. கௌதம    புத்தரின்  முதல் ஞானச்   சொற்பொழிவு நடந்த இடம்?

சாரநாத் 

13.18000/=ரூபாவிற்கு  இரண்டு வருடத்திற்கு கூட்டு வட்டியாக, ,வருடவட்டியை விட  405/=மேலதிகமாகக் கிடைத்தது.ஆண்டு வட்டி வீதம் என்ன?

15%

14.கூட்டு வட்டியாக ரூபா 1200/= க்கு இரண்டு வருடங்களின் பின்   மொத்தமாக  1348.32 சதம் கிடைத்தது.ஆண்டு வட்டி வீதம் என்ன?

6%

15., யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தர்  யார்?

பேராசிரியர் விக்னேஷ்வரன்  

16.  இந்தியாவின் அருணாசல பிரதேசத்தின் ஒரு பகுதியை சீனாவுடன் இணைத்து புதிய பெயரொன்றை அப் பகுதிக்குச் சூட்டியது.என்ன பெயர்சூட்டப் பட்டது?

தெற்கு தீபெத் 

17.திபெத்தின் ஆன்மிகத் தலைவர் யார்?

தலாய் லாமா 

18.கிரிக்கெட் உலகின் The Big Three எனச் செல்லமாக அழைக்கப்படும் நாடுகள் எவை?

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகள்  

19..கடல் மடடத்திற்கு கீழ் உள்ள நாடு எது?

நெதர்லாந்து 

20.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான இந்நாடு , கடுமையான பஞ்சத்தின் பிடியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது?.

 சோமாலியா

21.இலங்கையில்த டை செய்யப்பட்டகளைநாசினி?

க்ளைபொசேற் (Glyphosate) 

22.வில்லியம்    ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் எத்தனை?

39

23.ரோமியோ ஜூலியட் எனும் ஆங்கிலக் காவியத்தின் ஆசிரியர்?

வில்லியம்    ஷேக்ஸ்பியர்

24.இலங்கைக்கு GSP+ வரிச் சலுகையை அனுமதித்த அமைப்பு? 

 ஐரோப்பிய ஒன்றியம் 

25.GSP + இலங்கைக்கு வழங்கியதற்கு முக்கிய காரணம்?

"மூன்றாம் உலக நாடுகளின் அடிப்படையில் தனி நபர் வருமானம் குறைவடைந்துள்ளமையைக் காரணம் காட்டியே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப்பெற்றது.

26.நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து தனி நபர் வருமானம் கூடியதும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் இலங்கைக்கு இச்சலுகையினை வழங்காது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதைச் செய்வது எமக்கு அவசியமாகின்றது. 
.
27..பொதுநலவாய அமைப்பின் ஒரு பெருந் தலைவியாக தொடர்ந்து இருப்பவர்?
 மாண்புமிகு எலிசபத் இராணியார்

 
28.நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனத்தின் 20 ஆண்டு கூட்டு திட்டமாக உருவாக்கப் பட்ட விண்கலம்?

கசினி விண்கலம்

29.சனிக்கிரகத்திற்கும் அதன் வளையத்திற்கும் இடையில் முதல்முறை பாய்ச்சலை மேற்கொண்ட விண்லம் ?

 கசினி விண்கலம். 


30.இலங்கையில் போக்குவரத் துறையின் விரிவாக்கத்துக்கு பிரித்தானியர் கூடுதலான ஆர்வம் காட்டியமைக்கான காரணிகள்?
 இராணுவ நோக்கம். பெருந்தோட்ட  உற்பத்திகளை  இலகுவாக  கையாளவும் 
31.இலவசக்கல்வி  முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்திய ஆண்டு?
1940.

32.தென் கிழக்காசிய நாடுகளில் மொத்தச் சனத்தொகையில்  98%த்திற்கு மேல் கல்வியறிவு உடையவர்கள் உள்ள நாடு?


இலங்கை 


33.இலவசக்கல்வியை இலங்கையருக்கு அறிமுகப் படுத்தியவர்?

கிறிஸ்டோபர்  வில்லியம்விஜயக்கோன் கண்ணங்கரா 


34.பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கியவர்?

ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 



35.இலங்கையின் விலங்குப் புகலிடம் எவை?
வில்பத்து,சோமாவதி,குமண , யால 


36.இலங்கையின் முதலாவது மத்திய மகா வித்தியாலயம்? 

மத்துகம மத்திய மகாவித்தியாலயம் 

37. இலங்கையின் கடல் எல்லையின் தூரம்?
நாட்டின் கடற்கரை அடித்தள மட்டத்திலிருந்து 12 கடல் மைல் (அதாவது 22.2 கிமீ, 13.8 மைல்) வரை உள்ள கடற்பரப்பாகும்.  

38.மஹா வலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தற்போது அமைக்கப்படும் நீர்த் தேக்கம்?  மொரகா கந்த 

39. ஆசியாவில் மிக அதிகமாக வளி  மாசடையும் நகரம்?
Ulan Bator 

40. அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல்(2017)?
 கார்ல் வில்சன்

41.உலக அரிசி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள நாடு?
 – பிலிப்பைன்ஸ்

42.ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் உள்ள இடம் – டோக்கியோ

43. முதன் முதலில் தேசியக் கொடியை அறிமுகப்படுத்திய நாடு – டென்மார்க்


45.ஒளவை பாடிய நூல்கள் ?
– பன்னிரென்டு

46. திருக்குரானில் உள்ள மொத்த அதிகாரங்கள் ?

– 114

47. உலக மனித உரிமைகள் சட்டம் ஐ.நா.சபையால் இயற்றப்பட்ட வருடம் – 1948


48. உலகின் மிகப்பெரிய சிலை ?

– அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலை

49. புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் ?

– சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர்

50. உலகில் முதன் முதலில்  இலக்கியத்திற்கான  நோபல்  பரிசு பெற்ற ஆசிரியர்?

இரவீந்திர நாத் தாகூர் 

51. ராய்ட்டர்ஸ் என்ற செய்தி நிறுவனம் உள்ள இடம் ?

– இங்கிலாந்து


52. ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு?
 – 6 லிட்டர்

53. தலைமுடியின் கருமை நிறத்திற்குக் காரணம் ?

– அதில் உள்ள மெலனின் என்ற பொருள்.


54. மெர்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள இடம் – ஆஸ்திரேலியா

55. அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு – தென் அமெரிக்கா


56. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் உள்ள இடம் – ஜெனீவா


57.ஐக்கிய நாடுகள் டபை செயலாளரின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்


58. தமிழகத்தில் தமிழுக்கு அடுத்தப்படியாக அதிகம் பேசப்படும் மொழி – தெலுங்கு


59. மைக் விட்னி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் – கிரிக்கெட்

60. இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் – மகாபாரதம்


61. அடகாமா பாலைவனம் எந்த நாட்டில் உள்ளது – சிலி


62. சீனக் குடியரசின் முதல் தலைவர் – சன்யாட்சென்


63. ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்தியர் – மிகிர் சென்


64. உலக தொலை தொடர் தினமாக அனுசரிக்கப்படும் நாள் – மே 17

65.ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் – கொல்கத்தா


66. தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது – இமயமலை


67. இந்தியாவின் யூதர்கள் வாழும் இடம் – கொச்சி


68. அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு – தென் அமெரிக்கா


69. புகழ்பெற்ற மூலதனம் என்ற நூலை இயற்றியவர் – கார்ல் மார்க்ஸ்

70. வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் – அண்டார்டிகா


71. பவளத் தீவுகள் காணப்படும் இடம் – இலட்சத்தீவுகள்


72. எரிமலையே இல்லாத கண்டம் – ஆஸ்திரேலியா

73. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி – டிடிகாகா ஏரி – உயரம் 12,500 அடி


74. உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு – வெனிசுலா


75. ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ – சீனா

76. உலகின் மிகப் பெரிய தாபகற்பம் – அரேபிய தீபகற்பம்


77. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது – காடுகள்


78. உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு – அமெரிக்கா


79.மிதி வண்டியின் சக்கரங்களைக் (tyres) கண்டுபிடித்தவர் – ஜான் பாய்ட் டன்லப்


80. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் – ஹேலி வால் நட்சத்திரம்


81.சிரிப்பூட்டும் வாயுவான (நைட்ரஸ் ஆக்ஸைடு) கண்டுபிடித்தவர் – ஜோசப் பிரீஸ்லி


82.மின்கலத்தை கண்டு பிடித்தவர் ?

– அலெக்சாண்டரோ வோல்டோ

83. மிக வேகமாக சுழலக் கூடிய கோள் ?

– வியாழன்



84. சூரியனிடமிருந்து ஒளிக்கதிர் பூமியை அடைய ஆகும் நேரம் – 8 நிமிடம் 20 வினாடி

85.வானியல் தொலைவிற்கான அலகு?

 – ஒளி ஆண்டு
86. அதிக துணைக்கோள்கள் கொண்ட கோள் ?
 – சனி
87. முதன் முதலில் அச்சுப்பொறி  கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தவர்?
 ஜான் கூட்டன் பர்க்-கி.பி.1450ஆம் ஆண்டு

88.பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர்?

 தேசிய கொள்கைத்திட்டமிடல் மற்றும் வர்த்தக இராஜாங்க 
அமைச்சர் நிரோஷன் பெரேரா  

89. மறுமலர்ச்சி தோன்றிய நாடு?

 – இத்தாலி

90.யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட அகதிகள்  எந்த நாட்டவர்கள்?

  மியன்மார்

91.இலங்கையின் வணிகத் தலை நகர் எது?

கொழும்பு 

92..இலங்கையின்  "வானில் அமைந்த கோட்டை" என வர்ணிக்கப்படும் கோட்டை  எது?

 சிகிரியா கிபி 477இலிருந்து 495வரை ஆண்ட முதலாம் காசியப்பனால் கட்டப்பட்டது. 

93.பண்டைய இலங்கையில், உலகிலேயே முதலாவது மருத்துவமனையைக் கொண்டதாக இருந்துள்ளது . இது 4ம் நூற்றாண்டில் எங்கு நிறுவப்பட்டிருந்தது?

 மிகிந்தலையில் 

94.ருவன்வெலிசாய மீது அலங்காரப் பந்தலை அமைக்க ரோமுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி அங்கிருந்து செம்பவளங்களை வரவழைத்து பந்தலமைத்த மன்னன்?

, பாதிகாபய மன்னன் (கிமு 22-கிபி 7)

95.இலங்கையின் நிருவாகத் தலை நகரம்?

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை 

96.நெல்லின் அறிவியல் பெயர்?

ஓரைசா சட்டவா 

97. உலக அரிசி ஆராய்ச்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?

மணிலா 

98.மரபுப் பொறியியல்  முறையில் உருவவாக்கிய அரிசியின் பெயர்?

தங்க அரிசி 


99.அதிக மகசூல் தரும் நெல்லினம்?

ஐ ஆர் 8

100.நெல்லின் முளைக்குருத்து  என்னவென்று அழைக்கப்படும்?

கோலியாப்ஸ் 

101.நெல்லின் முளைவேர்  என்னவென்று அழைக்கப்படும்?

கோலியோ ரைசா  

102.நேபாள ஜனாதிபதி ?

பித்யா தேவி பண்டாரி (Bidhya Devi Bhandari) 

103.சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடித்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி? ஆல்பிரட் ஐன்ஸ்டீன்


104. தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கை


105.அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட புலனாய்வு அதிகார?

 எட்வேட் ஸ்நோவ்டென்

106.அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட புலனாய்வு அதிகாரியான எட்வேட் ஸ்நோவ்டென்னுக்கு தம்முடன் தங்க இடமளித்த இலங்கையர்களில் ஒருவர்?

முன்னாள் இராணுவ வீரர் அஜித் புஸ்பகுமார,


107.விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக புத்திக்கூர்மையுள்ள இந்திய வம்சாவளி சிறுமி?

 ராஜ்கவுரி(12)

108.பயணிகள் விமான தயாரிப்பில், உலகிலேயே முன்னணியில் இருப்பவை?

அமெரிக்காவின் போயிங் மற்றும் பிரான்ஸ்

109. சீனாவில்  பயணிகள் விமானத்தைத் தயாரிக்கும்   சீன அரசு நிறுவனம்?

 Commercial Aircraft Corporation of China (COMAC ).

110.சீனா தயாரித்த.(2017.)   முதல்  பயணிகள் விமானத்தின் பெயர்? 

`சி919'

111.சீனக்  கடற்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட   விமானம் தாங்கிக் 

கப்பலின் பெயர் 
 `001ஏ'
112.உக்ரேன் நாட்டிடமிருந்து ரஷ்யத் தயாரிப்பு விமானம் தாங்கிக் கப்பலைச் சீரமைத்து வாங்கியது. அதன் பெயர்?
`லிங்ஜோங்'.

113.33 ஆவது முதலமைச்சர்கள் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற 

114.இந்தியாவின் மிகப் பிரமாண்டமான காதலின் நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பின்னுக்குத் தள்ளி இலங்கையின் வணக்கத்தலம்?

தலதா மாளிகை
115.

116. 2011 உலக வலைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ண தொடரில் சிறந்த பந்து காப்பாளர்  சூட்டர் விருதுவென்ற  இலங்கையர்?சிவலிங்கம் தர்ஜினி
 

117.இலங்கையின்  உலக வலைப்பந்தாட்ட விளையாட்டின்  நட்சத்திரம்?
 சிவலிங்கம் தர்ஜினி, 


118.பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில்  வெற்றி பெற்றுள்ளவர்?
லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.

119பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில்  வெற்றி பெற்றஇமானுவல் மக்ரானை எதிர்த்து போட்டியிட்டவர்?

தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரைன் லெ பென்.

120.ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுத் தலைவர்?

 சுனில் ஹந்துனெத்தி

121.2561ம் வெசாக் தின நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகக்  கலந்து கொள்ளவுள்ள இந்திய அரசுத் தலைவர்?

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி

122. புகையூட்ட மருந்தாகப் பாவிக்கப் படுவது?

ஹைட்ரோ சையானிக் அமிலம்

123.உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி - 2016 சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாவது இடத்தினை பெற்றுள்ளது?

68 ஆவது 

124.உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி - 2016 சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில்  முதல் மூன்று இடங்கள்ப்பெற்ற நாடுகள்?

டென்மார்க் முதலிடத்திலும், நோர்வே இரண்டாவது இடத்திலும், பின்லாந்து மூன்றாமிடத்திலும் உள்ளன.

125..உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி - 2016 சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியலில் மொத்த நாடுகளின் எண்ணிக்கை?

113 நாடுகள்


126.உலக நீதி திட்டத்தின் சட்ட ஆட்சி சுட்டி - 2016 சட்டத்தின் ஆட்சி நடைபெறும்தெற்காசிய  நாடுகளின் பட்டியலில். நிலை?

தெற்காசிய நாடுகளில், நேபாளம் 63ஆவது இடத்திலும், இந்தியா 66ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 103ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 106 ஆவது இடத்திலும் இருக்கின்றன.

127.இலங்கையின் புராதான வரலாறுகளைக் கூறும் நூல்கள்? 

1.கம்ப இராமாயணம்    2. சூல வம்சம்     3. மஹா வம்சம்             4. நிக்காய சங்கிராய 

5.தீபவம்சம்                      6.  பூஜா வலிய    7. சமந்த பாசாதிக்கா 

128.ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவர்?இஸ்மாயில்ஹனியான் 


129.  பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த ஹாஸ்ய இலக்கியம்
ஆசிரியர் யார்?

வீர மா முனிவர்.

130.- தமிழில் விவிலிய நூலை முதன் முதல்  மொழிபெயர்ப்புச் செய்தவர்?

சீகன் பால்க் (1683 - 1719) - Ziegenbalg, Bartholomaeus (1683 - 1719) 

131. நபிகள் நாயகத்தை பாட்டுத் தலைவராக கொண்டு திருப்புகழ் இயற்றியவர்?.
காசீம் புலவர் -


132. சீறாப் புராணம் இயற்றியவர்?
உமறுப் புலவர் -


133. சின்ன சீறா காப்பியம் இயற்றியவர்?
பனீ அகமது மரைக்காயர் -


134.இந்திய -பாகிஸ்தான் எல்லையை வரைந்தவர்?ராட் கிளிப்