சனி, 15 அக்டோபர், 2016

உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!




உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!: உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால...


புதன், 12 அக்டோபர், 2016

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..! - வில்லங்க செய்தி

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..! - வில்லங்க செய்தி



உலகத்தில் இமயம் பெரிது
கண்டுபிடிப்பு!
 உலகம்,  இருப்பதில்  பெரிது
பொது அறிவு !

ஆனாலும்,
ஆகாயம் அதைவிடப் பெரிது
ஆன்மீகம்!

என்ன பெரிதாக இருந்தால்
எனெக்கென்ன?

என்
அம்மாவின் முன்னால்
இவையெல்லாமே
சிறிசு.

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

நினைப்பது நிறைவேறும்! அதற்கு ,நீங்க இருக்கணும் இவ்வாறு.

நினைப்பது நிறைவேறும் அதற்கு நீங்க இருக்கணும் இவ்வாறு 



நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்
சோடசக்கலையைப் பின்பற்றுங்கள் !!!
எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?
எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவும்.திருமூசோடேசக்கர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.
மிஸ்டிக்செல்வம்
இம்மாதம் சோடசக்கலை நேரம் 18.08.2016 வியாழக்கிழமை அன்று மதியம் 2:52 PM முதல் 4:52 PM மணி வரை வாழ்க வையகம் !! வாழ்கவளமுடன் !!
M.சூர்யா - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com⁠⁠⁠⁠

சார்,வின்ஸ்டன் சேர்சில்ஸ் கூறியது,!

சார்,வின்ஸ்டன் சேர்சில்ஸ் கூறியது,எப்படி இந்தியா வல்லரசாகும் என்று



சனி, 8 அக்டோபர், 2016


குளிர்பாணப் பிரியர்களா நீங்கள்



ஓர் எச்சரிக்கை பதிவு ...
கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு மையம் பெப்சி, கோக், மவுன்டைன் டியூ, செவன் அப் மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட 5 குளிர்பானங்களில் பரிசோதனை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஐந்து குளிர்பானங்களின் 600 மில்லி பாட்டில்களில் சோதனை செய்யப்பட்டது. ஆய்வு முடிவில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் 5 வகையான வேதிப் பொருட்கள் கலந்துள்ளது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு லிட்டர்
#ஸ்ப்ரைட்டில் ஈயம் 0.007 மில்லி கிராமும் காட்மேனியம் 0.003 மி.கி. ஆண்டி மானி 0.015 மி.கி குரோமியம் 0.015, ஃபிளேவர் வருவதற்காக சேர்க்கப்படும் டிஇஹெச்பி 0.016 மி.கிராமும் உள்ளன.
#கோக்கில் 0.009 மி.கி ஈயம், 0.011 காட்மேனியம் 0.026 குரோமியம், ஆண்டிமானி(Antimony) 0.006,டிஇஹெச்பி 0.026 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.
#மவுன்டைன் டியூவில் 0.006 மி.கி ஈயம், 0.016 காட்மேனியம், 0.017 மி.கி குரோமியம், 0.012 ஆண்டிமானி டிஇஹெச்பி 0.014 மி.கிராம் உள்ளன.
#பெப்சியில் 0.016 மி.கி ஈயம், காட்மேனியம் 0.002, குரோமியம் 0.017 மி.கி. ஆண்டிமானி 0.029 டிஇஹெச்பி 0.28 மி.கிராமும் சேர்க்கப்பட்டுள்ளன.
#செவன்அப்பில் 0.004மி.கி. ஈயம், காட்மேனியம் 0.012, குரோமியம் 0.017, ஆண்டிமானி 0.011, டிஇஹெச்பி 0.018 மி.கிராமும் உள்ளன.
இந்த ஆய்வு முடிவுகள் #அகில_இந்திய_உணவு_தரக்கட்டுப்பாடுமற்றும் #மக்கள்நலத்துறை இயக்குனர் ஜக்திஷ் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட மருந்து பொருட்களிலும் இதுபோன்ற உலோகத் தாதுக்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
இந்த ஆய்வு #மிக_துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா உணவு தரக்கட்டுப்பாட்டுக் கழகமும் அடுத்து தேசிய ஆய்வுக் கழகமும் பரிசோதனை நடத்தி முடிவை அறிவித்துள்ளன.
பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களில் கலந்துள்ள வேதிப் பொருட்களின் அளவு அறையில் உள்ள #வெப்பநிலைக்கு ஏற்ப அதிகரிக்கவும் செய்கிறதாம்.
#உதாரணமாக 40 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் உள்ள அறையில் இந்த பாட்டில்கள் 10 நாட்கள் இருந்தால் அதில் உள்ள ஈயத்தின் அளவு 0.006ல் இருந்து 0.009 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதேபோன்றே ஒவ்வொரு வேதிப் பொருட்களின் அளவும் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார மையத்தின் [WHO] சமீபத்திய ஆய்வின்படி, காட்மேனியமும் ஈயமும் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் பட்டியில் முதல் 10 இடத்துக்குள் இடம் பெற்றுள்ளன.
குளிர்பானங்களில் கலந்துள்ள ஈயம் #குழந்தைகளின் உடல் நலனுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது. குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. நரம்பு மண்டலங்களையும் பாதித்து கோமா நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. குழந்தைகளின் மன நிலையிலும் மாற்றத்தை விளைவிக்கக் கூடியது .
சில சமயங்களில் மனநிலை பாதிப்பை கூட ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
காட்மேனியம் கிட்னியை பாதிக்கக் கூடியது. எலும்பு மண்டலம் மற்றும் சுவாச மண்டலங்களை பாதிக்கிறது. ஆண்மனி, டிஇஹெச்பி போன்றவை உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

நன்றி முகநூல் நண்பர் சாம் மகேந்திரன்

வெள்ளி, 7 அக்டோபர், 2016

இலங்கையின் வரலாறு








இலங்கையின் வரலாறு விருப்பமானவர்கள் இந்த லிங்கிற்குச் சென்று படிக்கலாம்.கேள்வி பதில்களாக தொகுக்கப்பட்டுள்ளது





படிப்பதற்கு இங்கு செல்லவும்  

அடா லவ்லேஸ்









அடா லவ்லேஸ் இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலாளர் ஆவார். சார்லஸ் பாப்பேஜின் அனலிடிக்கல் இஞ்சின் என்னும் கருவி  முதன்  முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணனி (computer)  ஏற்கக்கூடிய படிமுறைத் தீர்வு ஒன்றை எழுதினார். இதனால் உலகின் முதல் கணினி மொழி நிரலாளராகக் கருதப்படுகிறார்.
ஓவியர்: ஆல்பிரட் எட்வர்ட் சலோன்

வியாழன், 6 அக்டோபர், 2016

விதியும்! மதியும் !!

விதியும் மதியும் 


நாம் மனிதனாகப் பிறந்தது,
விதி.
நாம் பிறந்தவுடன்  
மாத, பிதா, குரு ,தெய்வம் ,
எல்லோரும்  
தலையெழுத்தை 
அறிந்து,
நம்மை 
இப்படி நட,
அதைப் படி 
அவனோடு கூடாதே!
சொல்வதுதான் 
மதி 

கேட்பவன்
விதியை வெல்கின்றான்.
கேளாதவன்,
விதியோடு 
மடிகின்றான்.

ஆபிரகாம் லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் 




நான் சிறுவயதில் 3ம் வகுப்பில் படிக்கும் போது 3ம் வகுப்பா  4ம் வகுப்பா என்பது எனக்கு சரியாக நினைவில்லை தமிழ் பாடப் புத்தகத்தில் ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு பற்றி  ஒரு அதிகாரம் இருந்தது.அது கஷ்டத்துடன் படிக்கும் பிள்ளைகளுக்கு ஒரு உந்துசத்தியாக இருக்கும்.இவரே இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்துள்ளார் நாம் எம்மாத்திரம் என்ற சிந்தனையை ஊட்டியது இதை வாசித்து தமது கஷ்டங்களை மறந்து படித்து 
பட்டம் பெற்று நன்றாக வாழ்ந்தவர்களை நாமறிவோம் 

இவரின் சரித்திரம் முழுவதும் தமிழில் நீங்களும் வாசித்துப் பாருங்கள்  ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர். 1865 இவர் வாஷிங்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்.