செவ்வரத்தை
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
ஞாயிறு, 24 அக்டோபர், 2010
பெண்னியல் நோய்கள்.
பெண்களுக்கு தாய்மை எவ்வளவு முக்கியமோ,அதே போல் அது சார்ந்த நோய்களுக்கும்
முக்கியத்துவம் கொடுத்து,தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.அவதானம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவு.
நன்றி: வீரகேசரி
லேபிள்கள்:
பெண்னியல் நோய்கள்,
வைத்தியம்.ஆலோசனை.
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
இருதய தாக்கமும் கொதி தண்ணீரும்.
இருதய தாக்கமும் கொதி தண்ணீரும்.
நாம் உணவு உண்டபின் அருந்தும் நீர்,அனேகமாக எல்லோரும் குளிர்ந்த நீரையே அருந்துகிறோம்,குளிர்ந்த நீரைஅருந்துவதை விட சூடாக இருக்கும் நீரை அருந்துவது,இருதயதயத்தை தாக்கும் நோய்களில் இருந்து நாம் விடுபட பெரிதும் உதவி செய்யும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆராய்ச்சியாளர்கள் முழுவதையும் தெரிந்து கொள்ள இரண்டு நிமிடங்கள் போதுமானது.
அன்புடன்,!......

Heart Attacks and Hot Water
இந்த பிரயோசனமான தகவலை எனக்கு அனுப்பியவர் : Johan (johan54@free.fr) இவருக்கு நமது நன்றிகள் |
அன்புடன்,!......
லேபிள்கள்:
.இருதயம்,
சுடு தண்ணீர்,
தாக்கம்
வியாழன், 8 ஏப்ரல், 2010
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் -2004
2004ம்,ஆண்டு நடை பெற்ற,பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்,கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் ,கிடைத்த ஆசனங்கள்,போனஸ் ஆசனங்கள்,சகலதும் ஒரே பார்வையில்,
படம் பெரிதாகத் தெரிய,மௌசை படத்தின் மேல் வைத்து அழுத்துங்கள்.
இன்னும் சில மணித்துளிகளில், தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் கிடைத்து விடும்.
அதுவரை பொறுமை கொள்ளுங்கள்

புதன், 7 ஏப்ரல், 2010
5 ways to speed up your PC
உங்கள் கணனியின் வேகம் குறைந்து விட்டதா? கவலையே வேண்டாம்,இலகுவான முறையில்,
அவற்றை சரிப்படுத்திக் கொள்ள 5 வகையான,இலகு செய் முறைகளை மைக்ரோ சொவ்ட் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.எந்த விதமான செலவுகளும் இல்லாமல்,நீங்களே முயற்சி
செய்து பார்க்கலாம்.கணனியின் வேகம் சரியாக இல்லையே என்று கவலைப்படுபவர்கள் இங்கே
சென்று உங்கள் கவலையை முடிவுக்குக் கொண்டுவாருங்கள்.l
முயற்சி செய்ய இங்கேயும் அழுத்தலாம்.
சரியாக வேலை செய்கிறதா?
அன்புடன்,!...
லேபிள்கள்:
கணனி,
பராமரிப்பு,
மைக்ரோ சொவ்ட்
யாருக்கு வாக்கு?
யாருக்கு வாக்கு?
கீழ் இருக்கும் படத்தைப் பாருங்கள்,அதில் சொல்லி இருப்பதைப் பாருங்கள்,பிடித்திருந்தால் அதன் படி
செய்யுங்கள். படங்களின் மேல்,மௌசை வைத்து அமர்த்தினால் படம் பெரிதாகத் தெரியும்.
இவர் நல்ல துணிவுள்ளவர்,இதையும் வாசியுங்கள்,நாட்டு மக்கள் எப்படியானவர்களைப் பாராள மன்றத்துக்குத் தெரிவு செய்துள்ளார்கள் என்று.
நாளைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு என்ன நடக்கும் என்ற சிந்தனையில் இருந்தபோது,இன்றைய
வீரகேசரி பத்திரிகையில் வெளியானவைதான் இவைகள்.ஜனநாயகத்தின் காவலர்கள் யாவருக்கும்,நாளை மட்டும் சுதந்திரம்,அதன் பிறகு வழமைபோல் துண்டைக் காணோம்,துணியைக் காணோம்,ஓட்டம்தான்,
அன்புடன்,!....

திங்கள், 5 ஏப்ரல், 2010
ஒரு நேரடி ரிப்போர்ட்
கொழும்பு,புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால்,முன்னாள் சனாதிபதி வேட்பாளரும்,பாதுகாப்பு உயர் அதிகாரியுமான,ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பதிமூன்று
புத்த பிக்குகளை,சீருடை அணியாதவர்களால்,சீருடை அணிந்த போலீசார் வளைத்து காவலில் நிற்க,குண்டுக்கட்டாகத் தூக்கி,தனியார் பஸ்ஸில் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
இது சம்பந்தமாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த.பிக்குகளின் வழக்கறிஞர்,பி.பகல் 2 -30க்குத்தான்,
கோட்டை நீதிமன்ற நீதிபதியால்,மக்களுக்கு அசௌகரியமாக நடந்து கொண்டவர்களை,அகற்றுமாறு
பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்ததாகவும்,ஆனால் பி.பகல் 01 -30 க்குமுதலே, பிக்குகள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்ட தாகவும்.முன்பு கடத்தியவர்கள் யார் என்றும்,கடத்திக் கொண்டு செல்லப்பட்ட
பிக்குகள் எங்கு வைக்கப் பட்டுள்ளார்கள் போன்ற விசயங்கள்,நீதிமன்ற தலையீட்டின் பின்னரே வெளியிடப்
பட்டதாகவும் கூறினார்,
வழமைபோல பத்திரிகைத் தர்மமும்,பொலிசாரால் கடுமையாகக் கடைப்பிடிக்கப் பட்டது,என்ன செய்வது,
நானும் மட்டக்களப்புக்கு பிரயாணம் செய்வதற்கு,அந்த இடத்திற்குப் போகவேண்டிய சூழ்நிலை,போனதால்
ஒரு உண்மையை அறிந்து கொண்டேன்.
காலில விழுந்து கும்பிடுபவர்களும் அவங்கதான் காலில பிடிச்சி தூக்கி ஏறியிறவங்களும் அவர்கள்தான்.
ஒரு நேரடி ரிப்போர்ட் தந்திருக்கன், உங்கள் என்னத்தை பின்னூட்டமாக எழுதுங்கள்.

உண்ணாவிரதம்,
பிக்குகள்,
போலிஸ்
சனி, 3 ஏப்ரல், 2010
மாதம் பன்னிரெண்டுக்கும் பலன்கள்.
தமிழ் மாதத்திகதிகளுடன்,ஒத்துப்பாருங்கள்,சரியாக வரும்,கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களூடன்,எனது வாழ்க்கையில் நடந்த சில அதிருப்தியான முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துத்தான் இதை வெளியிடுகிறேன்
மாதம் பன்னிரெண்டுக்கும் பலன்கள்.
மாதம் பன்னிரெண்டுக்கும் பலன்கள்.
கேளப்பா பனிரண்டு மாதந்தோறுங்
கெடிதான கரிநாட்கள் வாறபோது
ஆளப்பா ருதுவான மங்கையர்க்கும்
அதிற்பிறந்த குழந்தையின் றன்வழிசெல்வோர்க்கும்
சூளப்பா மனையெடுக்க வித்துப்போட
தோகை மனஞ்செய்வதற்கு நலமுள்ள தெல்லாம்
நாளப்பா ஆகாத நாளேயாகா
நன்மையில்லை யெப்போது மிடறுண்டாமே
தை மாத பலன் .
நீங்குமே தைமாத மிரண்டாந்தெய்தி
நெறிநெடுக்கு மூன்றிலையும் பதினொன்றிலேயும்
பாங்குடனே பதினொன்றுங் கரிநாளாகும்
பால்மாடு வாங்கினால் சேதமாகும்
தூங்கிவிடும் ருதுவானால் பெண்கள் சேதம்
தூரவழி போவார்க்குத் துன்பமுண்டாம்
அலங்கார பூமி நட்டங் காலி நட்டம்
அழித்துவிடும் வீடு கட்டத் தீக்கோளாமே.
மாசிமாதப் பலன்
கோளான மாசியிலே பதினைந்தாம் நாள்
குணங்கெடுதி பதினாறும் பதினேழா நாள்
மீளார்கள் வழி போனால் வீடு தீக்கோள்
மெல்லியர்கள் ருதுவானால் தாலிபோகும்
நாளான பயிர் தீயுங் காலி சேதங்
நற்குழ்ந்தை பிறந்தாலுஞ சேதமாகும்
வாழ்வெல்லாமிழந்து விடும் வீடும் பாழாம்
வந்தபிணி கொல்லுமென்று வகுத்திட்டேனே
பங்குனி மாத பலன்
வகுத்திட்டேன் பங்குனியில் பதினைந்தாக
வகையான பதினாறும் பத்தொன்பதாநாள்
தொகுத்துமே வீடு கட்டப் பாழாகும் பார்
தோகை ருதுவானாலுந் தாலி சேதம்
மகுத்துவமுமழிந்துவிடுங் கெர்ப்ப சேதம்
மாடாடு சேதமாம் பூமி நட்டம்
தொகுத்துமே வழிபோனாலிடறுண்டாகுந்
துன்ப மெல்லாந் தொடர்ந்து வருமறிந்து பாரே
லேபிள்கள்:
பலன்கள்.பன்னிரெண்டு,
மாதம்
வியாழன், 1 ஏப்ரல், 2010
கடவுள் மனிதனாக ......
கடவுள் மனிதனாக .......
"கடவுளுடைய திரு நாமம் பேசப்படும் இடமெல்லாம்,புண்ணிய தலங்களே" இது நான்
சொல்லல்ல, திரு. கண்ணதாசன், சொன்னதுதான்,தொடர்ந்து படியுங்க அவர் இன்னும் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை..
கடவுளின் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?
தெய்வீக உண்மைகளை வெளிப்படுத்தும் இவர்களிடம், நாம் எவ்வளவு பக்தியுடன்,இருக்கவேண்டும்?
உலகத்தின் கடவுளின் பெருமையை எடுத்துக் கூறி,ஆன்மீக உண்மைகளை வழங்கும்
மகான்கள், மிகவும் குறைவானவர்களே உள்ளனர்.அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமித்து,வாழ்வது இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்;
தமக்கென்று நோக்கமில்ல கருணா சமுத்திரம் அவர்கள்.
"குருவை நான் என்று அறி"என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் கூறியிருக்கிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம், முதல் இல்லாமல் போகிறார்களோ,அப்பொழுதே
உலகம் பயங்கரமான நரகமாகி,அதன் அழிவை நோக்கித் துரிதமாகச் செல்லத்
தொடங்குகிறது.
உயர்வும் மகிமையும் உள்ள ஆசாரியார்கள் உலகில் அவ்வப்போது தோன்றுகிறார்கள்.
அவர்களே ஈஸ்வர அவதாரங்கள்,அவர்கள் தங்கள் விருப்பத்துடன் ஒருமுறை
தொடுவதன் மூலமே,ஆன்மீக அறிவை மற்றவர்களுக்கு வழங்க முடியும்.அவர்கள்
கட்டளையினால் மிக இழிந்தவர்களும் ஒரு வினாடியில் பெரிய ஞானிகள் ஆக
முடியும். அவர்கள் ஆசாரியர்களுக்கும் ஆசாரியர்கள்;கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே அவர்கள். அவர்கள் மூலமாக
வன்றிக் கடவுளை நாம் காண முடியாது.அவர்களை நாம் பூஜிக்காமல் இருக்க முடியாது.
உண்மையாக அவர்களே நம் பூஜைக்குரியவர்கள்.
கடவுளை அவரது பரிபூரண நிலையிலிருத்திப் பார்க்க முயலும்போதெல்லாம் ,நமக்குத்
தோல்வியே உண்டாகிறது.நாம் மனிதராய் இருக்குமட்டும்,மனித நிலையை விட்டு
வேறாக,நாம் அவரைக் கருத இயலாது.நாம் நம் மானிட நிலையைத்தாண்டி மேலேறுவோமானால்,அவரை அவர் உள்ளபடி நாம் உணரக்கூடும்.ஆனால் நாம்
மனிதராய் இருக்குமட்டும் கடவுளை மனிதரில் வைத்து மனிதராகவே பூஜிக்கவேண்டும்.
நீ எதை வேண்டுமானாலும் பேசலாம்.எப்படி வேண்டுமானாலும் முயலலாம். ஆனால்,
கடவுளை மனிதராகக் கருதி பூஜிக்கும்போது,அவர் உனக்கு அருகில் காட்சி தருகிறார்.
மானிடர்க்குரிய குறைகளைக் கடவுள் அறிகிறார்.மானிட இனத்திற்கு நன்மை புரியும் பொருட்டு அவர் மனிதராகிறார்.
"தர்மம் குறைந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம்,நான்,அவதரிக்கிறேன். ,யுகந்தோறும், அறத்தை நிலை நிறுத்தவும், மறத்தைஅளிக்கவும், நல்லோர்களைக்காக்கவும் நான் வருகின்றேன்" என்று கீதையில் பகவான் கிருஷ்ணன் கூறியுள்ளான்.
இந்துக்கள் கடவுளையே மனிதராகக் காண்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் சொல்வதுபோல்,எருமையின் கண்ணுக்குக் கடவுள் ஒரு பெரிய
எருமை என்றால்,மனிதனின் கண்ணுக்குக் கடவுள் ஒரு உயர்ந்த மனிதர்தான்.
அதனால்தான் அவதார புருஷர்களை நாம் வழிபடுகிறோம்.இராமாவதாரத்தையும்,
கிரிஷ்ணவதாரத்தையும் மனிதர்கள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட,அந்த இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவதாரங்கள்.
அவர்களிலே கிருஷ்ணன் ஒரு ஞானாசிரியன்;இராமன் ஒழுக்கத்துக்கு இலக்கணமான
பேராசிரியன். கடவுளை மனிதனாகப் பார்ப்பதால்தான்,அவனை நண்பனாக,தலைவனாக,
தாயாகப் பார்க்கிறோம்.
இந்த பாவனையில் தெய்வத்தின் ஸ்வரூபமல்லாது, விஸ்வரூபமும் வெளியாகிறது.
தாயைப்பார்க்கும் மகனைப்போல ஆண்டவனை நாம் பார்க்கிறோம்.
மனிதர்கள் அணியும் ஆடைகளையே,அவனுக்கும் அணிவிக்கிறோம்.மனிதர்கள் சூடிக்
கொள்ளும்,மலர்களையே இறைவனுக்கும் சூட்டுகின்றோம்.அந்த மனித பாவத்தில்
நம்முடைய அறிவு லயித்து விடுகிறது.
தெய்வம் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்ற நிலைபோய்.அது நம்மோடிருக்கும்
ஒன்று என்ற நிலை வந்து விடுகிறது.
மனிதனுடைய பகுத்தறிவு தெய்வத்தைப் பக்கத்தில் காணவே விரும்பி இருக்கிறது.
அந்த விருப்பத்தின் விளைவே கடவுளின் பல்வேறு வடிவங்கள்.
ஞானசிரியர்கள் பலர்,தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை.அவர்களில் ஒருவரை நாடி, நாம் உபதேசம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பால வயதில் இருந்து குரு-சிஷ்ய பாவத்தில் ஈடுபடாதவர்கள், நடுத்தர வயதில் அப்படி
யொருவரை அணுகுவதே நிம்மதிக்கு வழி. வெறும் புத்தகங்களைப் படிப்பதின் மூலமே
ஞானம் பெற்றுவிட முடியாது.
ஸ்ரீ ஆதிசங்கரர் "குரு என்பவர் யார்?" என்பதை எடுத்துக் காட்டிய அவதார புருஷர்.
இன்றைய இந்து தர்மத் தத்துவங்கள் அவர் மூலம் மெருகேறி வளர்ந்த ஆன்மீகச்
சுரங்கம்.
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால்தான் அழுகை அடங்கும். யாராவது ஒரு ஞானசிரியரிடம் உபதேசம் கேட்டுக் கொன்ட பின்னாலேதான்,ஏற்கனவே இருந்த
மனோபாவம் மாற முடியும்.
வாழ்க்கை வெறும் கேள்விக்குறிகளாலே ஆனது.சிக்கல் விழுந்து விட்ட அந்த நூலை
அறுந்து விடாமல், ஜாக்கிரதையாகப் பிரிக்க வேண்டும்.அந்த வேலை தையைல்காரருக்குத் தெரிந்த அளவு நமக்குத் தெரியாது.
நாமே நமக்குள் பெற்றுக் கொள்ளக்கூடிய நிம்மதியை நூறு மடங்காக ஆக்கத் தெரிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே.அவர்களை அண்டி மிச்சக்கால வாழ்க்கையை
மேன்மைப்படுத்திக் கொள்ள முயல்வதே நிம்மதிக்கு ஒரே வழி.
கண்ணதாசன் இன்று இருந்தால் என்ன எழுதியிருப்பார்?அதை நீங்கள் பின்னூட்டமாக
எழுதுங்க.
அன்புடன்,!......
"கடவுளுடைய திரு நாமம் பேசப்படும் இடமெல்லாம்,புண்ணிய தலங்களே" இது நான்
சொல்லல்ல, திரு. கண்ணதாசன், சொன்னதுதான்,தொடர்ந்து படியுங்க அவர் இன்னும் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை..
கடவுளின் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?தெய்வீக உண்மைகளை வெளிப்படுத்தும் இவர்களிடம், நாம் எவ்வளவு பக்தியுடன்,இருக்கவேண்டும்?

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)