செவ்வாய், 3 நவம்பர், 2009

கனவின் கருவில்....

நமது இளைஞர்களின் படைப்பு,இருகரம் கொண்டு வரவேற்போம்

புதன், 21 அக்டோபர், 2009

நிலவு மகள் பாடினாள் நீல வானில் ஆடினாள்


மட்டுநகர் ஆதவன் இசைக்குழுவின் இனிய மீன் பாடுங்கானங்கள் பாடலை இயற்றிப் பாடியவர் திரு.ஞானப்பிரகாசம் தொடர்ந்து பாடுபவர் செல்வி ஞானப்பிரகாசம் இசை மட்டுநகர் ஆதவன் இசைக்குழு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது


இசை:T.K. இராமமூர்த்தி பாடியவர்கள்:T.M. சௌந்தராஜன் இயற்றியவர்;கண்ணதாசன் படம்;தங்கச் சுரங்கம் ஆண்டு 1969

நித்திரை வருகுதில்லை









                                                                                                                   www.tamil10.com/submit
                                                                                                                                                        

நித்திரை வருகுதில்லை ரதியே -என்
நெஞ்சமும் பொறுக்குதில்லை சகியே
சித்திரம்போலே வந்து சிரித்து-நீ
சீக்கிரம் மறைவதாலே எனக்கு


சுற்றிடும் உலகமெல்லாம் தூசியே-யுனைப்
பார்த்திடும் நேரமெல்லாம் ருசியே
கொட்டிடும் மழையுமெனக்கு இராசியே-ஆட்
கொண்டிடும் பார்வை யுனக்கில்லையே  

இட்டிடு எனக்கொரு ஈ-மெயிலே-யெந்
இதயமெல்லாம் நிறையவேனுமதிலே
கட்டிடும் ஆசை யுனக்கில்லையோ- என்
கடைசிதான் உந்தன் முடிவுரையோ

பட்டென உடைத்துவிடு முடிவை -நான்
பட்டணம் போய் எடுக்கவேணும் உடையை
சட்டென விக்கவேணும் ஒரு வளவை-தாலி
கட்டி வளர்க்கவேணும் நம்ம  உறவை

அமுதே தமிழே

புலமைப் பித்தனின் வரி வண்ணம்,இளைய ராஜாவின் இசைவண்ணம் இவர்களின் குரல் வண்ணம்.சுசிலா,உமா ரமணன் மற்றும் வலம்புரி சோமநாதன்.படம் கோயில் புறா

புதன், 23 செப்டம்பர், 2009

இறுதி மூச்சு ஒன்றுதான்......!

www.tamil10.com/supmit                                                                                                                                                        











இதயத்தின் ஓசை உன் பெயராச்சு -அது
இனியவள் உந்தன் இருப்பிடமாச்சு
கனாவே நாளும் தொழிலாகிப் போச்சு-என்  
கன்னுறக்கமெல்லாம் கடனாகிப்போச்சு

உச்சிமுதல் உள்ளங்கால்வரை உன்னினைவாச்சு -நான்
மூச்சுவிடும் நேரமட்டும் காற்று வரலாச்சு
பேசும் மொழியாவும் உந்தனது பேச்சு-இங்கு
வீசும் தென்றலெல்லாம் உன்னுடைய மூச்சு

நிமிஷ்மெல்லாம் நீண்டு முழு நாளகியாச்சு-உந்தன்
நினைவே முழு நாளும் எனக்கு உணவாகியாச்சு
நாளும் பொழுதும் மாறியே போச்சு-எனக்கு
நள்ளிரவு கூட நல்ல பகலாகப்போச்சு

நிம்மதி இன்று பகையாகிப்போச்சு-எனது
நிழல்கூட இங்கு நிலைமாறிப் போச்சு
கண்கள் இரண்டும் சிறு குளமாகிப் போச்சு -உன்னைக்
காணாமல் இமையிரண்டும் சருகாகிப்போச்சு

பாலும் பழமும் நல்ல பழசாகிப்போச்சு -புதுப்
படுக்கையும் பஞ்சணையும் தூசாகிப் போச்சு
பார்த்துப் பார்த்து கண்ணும்  பூத்துப்  போச்சு -நீ
பாராமலே எனக்கு   நல்ல  வயசும் ஆச்சு

உலகமெனக்குச் சிறிதாகிப் போச்சு- இந்த
உருவமும் உள்ளமும் சிறு ஓடாகிப் போச்சு
இதையத்தில் இருந்ததெல்லாம் எழுத்தாக்கியாச்சு-இனி
இறுதி மூச்சு ஒன்றுதான் இருப்பாக்கியாச்சு             

திங்கள், 21 செப்டம்பர், 2009

களுதாவளை கு பாக்கிய ராஜாவின் பக்தி கீதங்கள்

.பாடலை எழுதிப் பாடியிருப்பவர் களுதாவளை குஞ்சித்தம்பி பாக்கியராஜா இசையமைத்து ஒலிப்பதிவு மருதமுனை M.H.M. நாசார்

களுதாவளை கு.பாக்கிய ராஜாவின் பக்தி கீதங்கள்
தனி ஒரு மனிதனாக ஒரு சாதனையைச் சாதிப்பது என்பது எழுத்திலே விவரிக்க முடியாத ஒன்று.அதை சாதித்துக் காட்டியிருக்கிறார் களுதாவளை குஞ்சித்தம்பி பாக்கிய ராஜா.ஓய்வுபெற்ற பெரும் பாக உத்தியோகஸ்தரான இவர் கல்முனையைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருந்தபோதும். களுதாவளை அவர் வாழும் இடம் (திருமணம் மூலம்) ஆகிவிட்டது.தனது அயராத முயற்சியால் "பாக்கியராஜாவின் பக்தி கீதங்கள்" என்ற இறுவட்டை அண்மையில் வெளியிட்டு இருந்தார். அதில் இருந்த பன்னிரு பாடல்களும் இனிமையானவை,அருமையானவை இதில் ஒரு பாடல் "வா வா வாணியே " ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா? கலையில் ஆர்வமுள்ள ஒருவரான மருதமுனை M.H.M. நசார் இசையமைத்து ஒலிப் பதிவும் வழங்கி உள்ளார் நீங்களும் கேட்டுப் பாருங்கள் வெளியிட்டவர்கள் டிஜிட்டல் மியுசிக் சென்ரர் களுதாவளை.

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

புத்திமான் பலவான்

www.tamil10.com
இதுவரையில் புத்தியுள்ளவர்கள் என்று நாம் நினைத்தவர்கள்,நாளை முட்டாளாகலாம்

புதன், 16 செப்டம்பர், 2009

உறவுகளை முழுசாக நம்பி.......

















வருமானம் வற்றி வருந்தி அழுகின்றோம்
வயிற்றின் தேவைகள் கூடிவருந்துகின்றோம்
பெறுமானம் குறைந்து பேயாக அலைகின்றோம்
பெருமானே வந்து யுன் பேரருளைக் காட்டாயோ!



மண்டியிட்டோம் மாரடித்தோம் மலையெனவே நம்பினோம்
பண்டையயுறவு பார்த்திருக்குமா பெரிதாகப்  பம்பினோம்

கண்டவிலைக்கு காசாக்குவாரன்று கணவிலுமா எண்ணினோம்
தென்னாடுடைய சிவனே  பெருமானே கண்திறந்து பாராயோ!www.tamil10.com/submit/



சண்டை முடிந்து  சமாதானம்   நாடினோம்
மண்டை வெடிக்குது  சமரசமாம் ஓடினோம்
கண்டநாள் முதல் இதையே சுதி  பாடினோம்
கண்கண்ட  கடவுளே கருணைதான் புரியாயோ!



ஆண்ட பரம்பரைதான் அடிகள்தான் வாங்கினோம்
ஈன்டதாயுமதை இனிதாக நாடினாள் நசுங்கினோம்
மீண்டுமொருமுறை  மாண்டுபோகவா  மிஞ்சினோம்
கண்கண்ட தெய்வமே  கருணைதான்   புரியாயோ!



உறவுகளை முழுசாக  நம்பி  ஓட்டாண்டியானோம்
உடன்பிறவாச் சகோதரத்தால்  ஓரமடைந்தோம்
பெருமாளின் பிறப்புக்களால்  இந்தநிலை கண்டோம்
திருநீறு  புனைந்த  ஈசனே  கருணை  பொழியாயோ!