செவ்வாய், 15 நவம்பர், 2016

மட்டக்களப்பு விகாராதிபதியை தூண்டிவிடும் அமைச்சர்?



மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அண்மையில் மேற்கொண்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவர் உள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த அமைச்சரே அண்மையில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அவர்களை அழைத்து கூட்டம் ஒன்றை நடாத்தி ஆர்ப்பாட்டம் நடாத்த ஆலோசனை வழங்கியதுடன் அதற்கு அரசாங்க உயர் அதிகாரி ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்தோடு குறித்த அமைச்சர் அவர்கள் பட்டிப்பளை பிரதேச அதிகாரி ஒருவரிடம் நீங்கள் இன்று அந்த பிக்குவுக்கு 30 ஏக்கர் காணியை வழங்க மறுத்தால் பின்னர் 600 ஏக்கரை வழங்க வேண்டிவரும் என தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த அமைச்சர் மாவட்டத்தில் இன முரண்பாட்டை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் அதற்காகவே குறித்த பிக்குவுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

thanks to Tamilwin





உலகில் நல்லாட்சி நடைபெறும் 10 நாடுகள் எவை தெரியுமா?



ஒட்டு மொத்த உலகில் நல்லாட்சி நடைபெறும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தை பின்லாந்து தட்டிச் சென்றுள்ளது.
உலக நாடுகளில் நல்லாட்சி நடைபெறும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. கல்வி, வருவாய் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளுக்கு இந்த பட்டியலில் முதன்மை இடங்கள் கிட்டியுள்ளன.
அந்த வரிசையில் முதலிடத்தில் பின்லாந்து அரசு தட்டிச் சென்றுள்ளது. கடந்த ஆண்டு 5-வது இடத்தில் இருந்த பின்லாந்து இந்த ஆண்டு முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து உள்ளது. கடந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தே இருந்தது. 3-வது இடத்தில் நோர்வே உள்ளது. 4-வது இடத்தில் நெதர்லாந்து எட்டியுள்ளது.
இதன் பாராளுமன்றம் அமைந்துள்ள ஹேக் நகரில் உலக நாடுகளின் 150 அமைப்புகள் இங்கு தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 5-வது இடத்தில் ஸ்வீடன் உள்ளது.
கடந்த ஆண்டைவிடவும் ஒரு இடம் பிந்தங்கி இருந்தாலும் உலக நாடுகள் வரிசையில் நல்லாட்சி நடைபெறும் நாடுகளில் ஆகச்சிறந்த நாடு ஸ்வீடன் என கூறப்படுகிறது.
நல்லாட்சி நடைபெறும் நாடுகளின் தரவரிசை பட்டியல்:
  1. பின்லாந்து
  2. நியூசிலாந்து
  3. நோர்வே
  4. நெதர்லாந்து
  5. ஸ்வீடன்
  6. சுவிட்சர்லாந்து
  7. டென்மார்க்
  8. லக்சம்பர்க்
  9. கனடா
  10. ஜேர்மனி
ஆசிய நாடுகளில் ஜப்பான் மடுமே குறித்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 17-வது இடத்தில் ஜப்பன் உள்ளது.











ஞாயிறு, 13 நவம்பர், 2016

புத்த துறவியின் இன்னுமொரு காணொளி


புத்த துறவியின் இன்னுமொரு காணொளி

புத்த துறவியின் இன்னுமொரு காணொளி 

பொலிசாருக்கு புத்தரின் போதனைகளை பிக்கு செய்கைமூலம் காட்டியபோது
எனக்கும் அடிக்கிறார் என பொலிஸ் கூறுகிறது

மட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரையும் நாளை முதல் சேலை கட்டுமாறு மக்கள் வேண்டுகோள்!

மட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரையும் நாளை முதல் சேலை கட்டுமாறு மக்கள் வேண்டுகோள்!

எந்தவொரு வகையிலும் நான் பெரியவன் நீ சிறியவன் என்ற ஒரு பாகுபாடு இருக்கும் வரையில் வீடாக இருந்தாலும் சரி அது நாடாக இருந்தாலும் சரி சீரழிந்தே போகும் என்பது மட்டும் திண்ணம்.
நல்லிணக்க நாடு என்ற வகையில் சர்வதேச ரீதியில் இலங்கை நற்பெயரை பெற்றுக் கொள்ள மட்டும் முயன்றால் போதாது, அது நடைமுறையில் சாத்தியப்படவேண்டும், அப்போதே நாடும் சரி மக்களும் சரி நிம்மதி பெற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு மதக் போக்காளர் கடும் போக்காளராக மாறினால் அதன் விளைவு எப்படி அமையும், என்பது எவருக்கும் சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
இன்று ஓர் பௌத்த பிக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த போது, அவர் தமிழர்கள் மீதும் மக்கள் மத்தியில் மதிக்கத்தக்க அரசாங்க பதவியை வகிக்கும் கிராம சேவையாளர் ஒருவர் மீதும் பிரயோகித்த வார்த்தைகள் மிகவும் கீழ்த்தரமாக அமைந்தன.
மக்கள் வேவையாளரான ஒருவர் பொது மக்களின் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டதற்கும், அதனை மற்றவர் வேடிக்கை பார்க்கும் நிலையும் ஏற்பட முக்கிய காரணம் அவர் தமிழர் என்பதாலேயே.
“கடந்த காலங்களில் புலியாக நீங்கள் ஆயுதம் ஏந்தி சிங்களவர்களை கொன்றீர்கள், புலித் தமிழர்களா உங்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்கின்றேன் இனியும் சிங்களவர்கள் மீது கை வைக்க நினைக்க வேண்டாம்.
மீறி கைவைத்தீர்கள் ஆயின் என்ன நடக்கும் என்பது தெரியாது, உங்களைப்பார்க்கும் போது உடம்பெல்லாம் பற்றி எரிகின்றது. ஒரு சிங்களவர் மீதாவது அதிகாரம் செய்ய நினைத்தால் தமிழர்களின் அதிகாரங்கள் இனி நிலைக்காது.........”
இவை பௌத்த மதப்பிக்குவான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கடுமையாக எச்சரித்து திட்டிய வார்த்தைகள். இவற்றில் குறிப்பிட்டுள்ளவை சில மாத்திரமே, இன்னும் ஏராளமான வார்த்தைகள்... ஆனால் அவற்றை ஊடக நலம் கருதி எழுதப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அவருடைய வார்த்தைகளை கேட்டுவிட்டு இவர் எல்லாம் ஓர் பிக்குவா? உண்மையான பிக்கு இவ்வாறான வார்த்தைகளை பிரயோகிப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியமை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
முடிந்து போன யுத்தத்தை மீண்டும் மீண்டும் மக்களிடையே பரப்புவது ஏன் என்பது மட்டும் புரியவில்லை. இவை முற்று முழுதாக தமிழர்கள் மீது அடக்கு முறையை மேற்கொள்ள வேண்டும் என சகோதர இனத்தவர்களை தூண்டிவிடும் வார்த்தை பிரயோகங்களே என்பது வெளிப்படை.
அண்மையில் தமிழர்களுக்கு உரிமை சரி சமமாக கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக வடக்கு முதல்வர் விடுத்த கோரிக்கைகள் மிகப்பெரிய பிரளயமாக மாறி, கைது கோரிக்கைகளும், போராட்டங்களும் தென்னிலங்கையில் வலுப்பெற்றமை மறந்த விடயம் அல்ல.
ஆனால் இன்று ஒழுக்க விதிமுறைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸாருக்கும், நீதிமன்றத்திற்கும் முன்னிலையில் பிக்குவின் வார்த்தை பிரயோகங்கள் வேடிக்கை பார்க்கப்பட்டதே தவிற கட்டுப்படுத்தப்பட வில்லை என்பது வருத்தம் கலந்த உண்மை.
இங்கு அவர் சரி, இவர் பிழை என கூறப்படுவதனை விடவும், மதங்களே வாழ்க்கை என நினைக்கின்ற மக்கள் வாழ்கின்ற சூழலில் மதக் கருத்துகளை போதிக்க வேண்டிய ஒரு மதப்போதகர் அதுவும் அவர் வார்த்தைகளை மதிப்பு கொடுப்பதற்காக ஓர் கூட்டம் இருக்கின்றது, என்ற நிலையில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.
ஒரு வித பதற்ற சூழலில் நாடு பயணித்து கொண்டு இருக்கும் வேளையில், மக்களை தூண்டி விடுவதற்காகவே இவ்வாறாக செயற்பாடுகளை செய்து வருபவர்களை அரசு தரப்பு வேடிக்கை பார்த்து வருகின்றமை மட்டும் வேடிக்கையான விடயம் தான்.
ஒரு தரப்பை தூண்டிவிட்டு மற்றுமோர் தரப்பிற்கு எச்சரிக்கைகளையும், கட்டளைகளையும் பிறப்பித்து வரும்போது பாதிக்கப்படுவது மட்டும் முழு நாடும் என்பதே நிச்சயம்.
இதேவேளை தற்போதைய அரசியல் என்பது ஒன்று வடக்கு தமிழர்கள், மற்றொன்று சிங்கள பிக்குகள் இவர்களை அடிப்படையாகக் கொண்டே எண்ணெய் ஊற்றப்படுகின்றது. அத்தோடு ஆங்காங்கே விடுதலைப்புலிகளை தொட்டுப்பார்க்கவும் மறக்கவில்லை தென்னிலங்கை, என்பதனை அண்மைக்கால அரசியல் பாதையினை உற்று நோக்கினால் தெளிவாக தெரிந்து விடும்.
எவ்வாறாயினும் இனவாதம் முற்றாக நாட்டை விட்டு விரட்டப்பட்டு, விஷக்கிருமிகளை நசுக்காவிட்டால் அரசுக்கு அபிவிருத்தியும் நல்லிணக்கமும் நிறைந்த நாடு என சர்வதேசத்திற்கு நிறுவுவது மட்டும் எட்டாக்கனியாகவே அமையும்.
அதனை விடுத்து ஆட்சி மாற்றம், வாக்குறுதிகள் மட்டும் கொடுத்துக்கொண்டு வரப்படுமாயின், எத்தனை ஆட்சியும் தலைமைகளும் வந்தாலும் ஒற்றுமை என்பது இலங்கையை பொறுத்த வரை “சீச் சீ... இந்தப் பழம் புளிக்கும் கதைதான்”

நல்லாட்சிக் காலத்தில் இந்தப் பௌத்த துறவி பேசுவதை மொழிபெயர்த்தால் இப்படி வருகிறது செய்தி....!



தமிழ் மொழியில் துறவி என்றால் எல்லாம் துறந்தவர் என்று அர்த்தம் 
சிங்களத்தில் புத்த துறவி என்றால் என்ன அர்த்தம் என்பதை இந்தக் காணொளியைப் பார்த்து இதில் உள்ள தமிழ் மொழி உரைபெயர்ப்பையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவரின் உரைக்கும் புத்த சமயத்திற்கும் ஒரு வீதமும் தொடர்பு உள்ளதாக எனக்குத் தெரியவில்லை 
நல்லாட்சிக் காலத்தில் இந்தப் பௌத்த துறவி பேசுவதை மொழிபெயர்த்தால் இப்படி வருகிறது செய்தி....!


வில்பத்துல வெட்டுறாங்கள். அங்க போய் வழக்கு போடுடா..
ஸ்ரீபாதல வெட்டுறாங்கள் அங்க போங்கோடா.. போங்கோ..
பறையன்களே...
நீ புலிடா...
புலிடா...
நீ புலியே தான்ரா...
சிங்களவன அண்டைக்கு சுட்ட...
இண்டைக்க அடிக்கிற
நீ அதைத் தான்ரா செய்யிற...
உன்னைப் பாக்கும்போது எரிச்சல் வருது..
இந்த நாய்தான் தொடர்ந்து வழக்கு போட்டது...
நீ கிராம சேவகர் எண்டத நினைச்சிக்கொள்...
நீ தமிழன்...
நீ சிங்களவனுக்கு எதிரா தொடர்ந்து வழக்கு போடுறத நிப்பாட்டு..
உனக்கு நல்லபடியா சொல்றன்...
ஒரு சிங்களவனையும்
ஒரு இடத்திலயிருந்து அசைச்சாலும் ..........
தம்பிய நீதிமன்றமும் முடிந்துவிட்டது. (முஸ்லிம் நீதிமன்றம்)
தமிழனின் நீதிமன்றமும் முடியும்...
நீ நல்லா நினைவு வச்சிக்கொள்...
உன்ர தாடைய இப்ப அடிச்சி நொருக்கிடுவேன்...
நான் பொறுமையா இருக்கிறன்
ஏன் எண்டா இந்தக் காக்கிச்சட்டைக்காகத்தான்.
அதை நீ நினைவு வச்சிக்கொள்
பறையா....தமிழா...
இவனுக்கும் சொல்லனும் (பொலிஸ்க்கு )........
(கிராம சேவையாளருக்கு) நீ சிங்களவன் எட்டுப் பேருக்கு எதிரா வழக்குப் போட்ட
ஏன் உன்ர அப்பாவின்ர இடமா? அம்மாவின்ர இடமா?...
டேய் அப்பாவிகளுக்கு இப்பிடி செய்யாத...
நீ புலியாகி சுட்ட....
நாங்க பொறுமையா இருந்தோம்....
பு....(கெட்டவார்த்தை)
திரும்பியும் கைவைக்க வெளிக்கிட்டால் எந்தவொரு பு...மகனுக்கும் (கெட்டவார்த்தை) நான் சொல்றன் நல்லா தெரிஞ்சிக்கொள் கடைசி காலம்தான்
அம்மா ஓ....(கெட்டவார்த்தை)
உங்களுக்கு....அடிப்பேண்டா...ம்ம்ம்....இவன் சாகும் வரைக்கும்....!
மொழிபெயர்ப்பு JE RA





விபச்சாரியின் மட்டத்திற்கு கீழ் இறங்கியுள்ள பித்தளை அமைச்சரே பதில் சொல்வீர்களா? தாராபுரம் பதுர்தீன்

விபச்சாரியின் மட்டத்திற்கு கீழ் இறங்கியுள்ள பித்தளை அமைச்சரே பதில் சொல்வீர்களா? தாராபுரம் பதுர்தீன்

வெள்ளி, 11 நவம்பர், 2016

நம்பிக்கை!


ஒரு முறை "சிவனும் பார்வதியும்" பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது பார்வதி கேட்டார் .
“ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்களே?
குளிக்கும் அத்தனை பேரும் மோட்சத்துக்கு வந்தால் மோட்சம் தாங்காதே,
அது ஏன் அப்படி நடக்கவில்லை? “ என கேட்டார்.
சிவன் சொன்னார் ”அது ஏன் எனும் காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா,
ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார்.
கங்கைக்கரையினை அடைந்த சிவன் ”நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து காப்பாற்றுங்கள் என்று சொல் "
என கூறிச்சென்று ஆற்றில் விழுந்ததை போல நடித்தார்.
உடன் பார்வதி தேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார்.
அழைத்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி ”பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள்” என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின்வாங்கினார்கள்,
அனைவரும் தயங்கி தயங்கி செய்வதறியாது சிலையென நின்றார்கள்.
சிவபெருமானோ நன்றாகவே நடித்து கொண்டிருந்தார்.
அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த இளைஞன் ஒருவன் ஓடி சென்று சிவபெருமானை காப்பாற்றி கரை சேர்த்தான்.
மக்களுக்கு எல்லாம் அதிர்ச்சி எப்படி ஒருவன் பாவமே செய்யாமல் இருக்க முடியும் ?
என நினைத்து அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
உடன் பார்வதி அன்னை
“ அப்பா நீ பாவமே செய்யவில்லையா? “
என வினவினார்.
"அவன் சொன்னான்”
எனக்கு எதுவுமே தெரியாது அம்மா.
கங்கையில் குளித்தால் பாவம் போகுமென கேள்விப்பட்டு இருக்கிறேன்.
அப்படியிருக்கும்போது கங்கையில் இறங்கியவுடன் என் பாவங்கள் மறைந்து விடுமல்லவா அப்புறம் என்னால் அவரை காப்பாற்ற முடியுமென நினைத்தேன்.
நம்பி செய்தேன் அவ்வளவுதான் அம்மா” என்றான்.
முதியவராகிய சிவபெருமான் சொன்னார்.
" குளிக்கும் அனைவரும் நம்பிக்கையோடு குளிப்பதில்லை கடமைக்கு தான் கங்கை ஸ்நானம் செய்கிறார்கள்."
"நம்பி செய்பவர்கள் மட்டுமே மோட்சம் போக முடியுமென்பது அவர்களுக்கு தெரியாது அதனால் தான் மோட்சம் நிரம்பவேயில்லை
"" மனதார நம்பியவர்க்கு மட்டுமே நம்பிவேண்டிய அனைத்தும் கிடைக்கும் ""....

வியாழன், 10 நவம்பர், 2016

இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...!




*மருத்துவமனைகளின் மறுபக்கம் !!!
இதுதான் நடக்கிறது மருத்துவமனைகளில்...! - இரு மருத்துவர்களின் ஒப்புதல்
ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும் தில்லுமுல்லுகள்* பற்றி அங்கொன்றும், இங்கொன்றுமாக விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இப்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு மருத்துவர்கள்_ மூலம். மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே*, “ _*Dissenting Diagonisis*_" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்கள். _மருத்துவத்துறையின் இருட்டுப்பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்_.
*நோயாளிகளின் நலன் அல்ல, பங்குதாரர்களின் நலனே முக்கியம்*:
' *மருத்துவச் சுற்றுலாவில் இந்தியா, _குறிப்பாக சென்னை கோலாச்சுகிறது_' என்று இங்குள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகள் பிதற்றிக் கொள்ளும் இந்த தருணத்தில்*, இந்த புத்தகத்தின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த புத்தகத்தின் ஆசிரியர்களான மருத்துவர்கள் *அருண் காத்ரே* மற்றும் *அபய் சுக்லே* முன் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு, “ _*இங்குள்ள பெரிய மருத்துவமனைகள் நோயாளிகளின் நலன்காக இயங்குவதை விட, அதன் பங்குதாரர்களின் நலனுக்காகதான் இயங்குகின்றன*_” என்பதுதான். இவர்கள் எந்த குற்றச்சாட்டையும் மேம்போக்காக கூறவில்லை. _பாதிக்கப்பட்ட நோயாளிகள், நேர்மையான மருத்துவர்களின் வாக்குமூலங்களை கொண்டே பதிவு செய்திருக்கிறார்கள்_.
நம் அனைவருக்கும் ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அதாவது *_தேவையற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்று_*. இது குறித்து இந்த மருத்துவர்கள், “ *பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை மட்டும் பதம் பார்க்கவில்லை*. பரிசோதனை சாலைகள், *நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும் ரத்த மாதிரிகளை உண்மையாக பரிசோதிப்பதே இல்லை*. _மருத்துவர்கள் எது மாதிரியான அறிக்கையை விரும்புகிறார்களோ... அதைதான் இவர்கள் தயார் செய்து தருகிறார்கள்_” என்கிறார். இப்போது உங்கள் சொந்த அனுபவங்களை இந்த வாக்கியத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.
பெரும் மருத்துவமனைகள், இலாப இலக்கு நிர்ணயத்துக் கொண்டு வேலை செய்கின்றன. *அவர்களுக்கு எப்போதும் அப்பாவி நோயாளிகளின் நலன் முக்கியமே இல்லை*... _*லாபம்*_.. _*லாபம்*_... _*லாபம்*_... _*மேலும் லாபம்*_ மட்டுமே முக்கியமாக இருந்து வருகிறது என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.
*நியாயமான மருத்துவர்களை உதாசீனம் செய்யும் மருத்துவமனைகள்*:
_ஒரு பிரபலமான மருத்துவமனை_, தன் மருத்துவமனையில் வேலை பார்த்த *சிறந்த சிறுநீரக சிறப்பு மருத்துவரை பணி நீக்கம் செய்தது*. அதற்கான காரணம், _*ஒரு நோயாளிக்கு அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை சிகிச்சையை செய்யாமல், சாதாரண சிகிச்சை மூலம் குணப்படுத்தியது*_. " *இது கார்ப்பரேட் மருத்துமனைகள் எவ்வளவு வக்கிர மனநிலையில் செயல்படுகிறது என்பதற்கான சான்று*" என்கிறார்கள் இந்த மருத்துவர்கள்.
“லாபத்தை முதன்மையான நோக்கம் கொண்ட மருத்துவமனைகள் அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. *அவர்களுக்கு நோயாளிகளின் நலன் முக்கியம் அல்ல*. லாபத்திற்காக _*தேவையற்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை தன்னை நம்பி வரும் நோயளிக்கு அளிக்கின்றன*_” என்று வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.
_சுக்லே_, “ *எனக்கு தெரிந்த ஒருவர், தனக்கு சொந்தமான வீட்டை விற்று, தன் மனைவிக்கான மருத்துவ கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை கட்டினார். ஆனால், உண்மையில் அந்த சிகிச்சைக்கு அவ்வளவு கட்டணமெல்லாம் இல்லை*...” என்கிறார்.
இதைதாண்டி இவர்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு பகீரென்று இருக்கிறது. _*சில மருத்துவமனைகள் உண்மையில் அறுவை சிகிச்சையே செய்யாமல், வெறும் மயக்க மருந்தை மட்டும் கொடுத்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்துவிட்டோமென்று பணம் பறிக்கிறார்கள்*_
கொல்கத்தாவை சேர்ந்த புண்யபிரதா கூன் என்னும் மருத்துவர், “ *எங்கள் பகுதியில் மருத்துவர்களுக்கு நியாயமாக மருத்துவம் பார்த்தும் ஈட்டும் தொகையை விட, ஆய்வு மையங்கள் அளிக்கும் பங்கு தொகை அதிகம். x-ray எடுக்க பரிந்துரைத்தால் 25 சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் 33 சதவீதமும் கமிஷன் தருகிறார்கள்*...” என்று தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
" _தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, தங்களின் தொடர் வாடிக்கையாளர்களாக வைத்துக் கொள்ள தான் பல மருத்துவமனைகள் விரும்புகின்றன_. அதாவது *தேவையற்ற அறுவை சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து, நோயாளிகளை மீண்டும் மீண்டும் திரும்ப வரவைக்க வேண்டும்*. அதை மருத்துவர்கள் செய்ய தவறும் போது, _*அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்*_" என்று இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம் சாதாரணமாக கடந்துவிட முடியாது.
*இந்திய மருத்துவ கவுன்சில் என்ன செய்து கொண்டிருக்கிறது*...?
என்ற நம் கேள்விக்கு இந்த மருத்துவர்களின் பதில், “ *பெரும் மருத்துவமனைகள் மருத்துவதுறையை திட்டமிட்டு கொலை செய்து கொண்டிருக்கிறார்ள்
*. ஆனால், *_இதை மெளனமாக இந்திய மருத்துவக் கவுன்சில் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது_*. *உடனடியாக மருத்துவக் கவுன்சில் தன்னை புதுப்பித்துக் கொண்டு, இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்த வேண்டும்*” என்று வலியுறுத்துகிறார்கள் இந்த இரு மருத்துவர்களும்.
இந்திய மருத்துவ துறையின் இன்றைய வணிக மதிப்பு *100 பில்லியன்* அமெரிக்க டாலர்கள். *இது 2020 ம் ஆண்டு 280 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கப்போகிறது* என்கிற விபரங்களே, _இதில் உள்ள அரசியலையும், அக்கிரமங்களையும் நமக்கு உணர்த்துகிறது_.
*இவர்களின் குற்றச்சாட்டுகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது இந்திய சுகாதாரத் துறை*...?
நன்றி :- வாட்ஸ் அப்  thanks tamilar neethi

திங்கள், 7 நவம்பர், 2016

தமிழ் மக்கள் தொலைத்ததை வெளிநாட்டவர்கள் தேடி எடுக்கிறார்கள்


இந்த வீடியோ சுவீடனில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் எடுக்கப்பட்டது

பாருங்கள் நாம் மறந்து கொண்டிருப்பதை அவர்கள் தொடருகிறார்கள்

யார் சொன்னது மெல்லத் தமிழ் இனிச்  சாகுமென்று,தமிழிருக்கும்  நாம் தான் .தமிழீழத்திலும்  தமிழகத்திலும் இவைகளை மறந்து கொண்டு வருகின்றோம்






தமிழ் மணக்கும் Moreh

தமிழ் மணக்கும் Moreh பர்மா 



இங்கிருந்து just 3200 கி.மீ. தாண்டினால் – ஒரு தமிழ் ஊர் ….!!!
சூரியன் அஸ்தமிக்காத ராஜ்ஜியமாக பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்
இருந்தபோது, பாஸ்போர்ட் வேண்டாம், விசா வேண்டாம் –
கஸ்டம்ஸ் கிடையாது – இமிக்ரேஷன் தொல்லை இல்லை….
தென் ஆப்பிரிக்காவிலிருந்து, சிலோனிலிருந்து
(இன்றைய ஸ்ரீலங்கா ) மலேயா, சிங்கப்பூரிலிருந்து,
பிஜி, மொரிஷியஸ்,ரீ-யூனியனிலிருந்து, பர்மா (இன்றைய
மியான்மர் ) வரை எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
எப்போது வேண்டுமானாலும் போகலாம் – எப்போது
வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை இருந்தபோது –
சிறு சிறு குழுக்களாக, குடும்பம் குடும்பமாக தமிழர்கள்
இந்த நாடுகளுக்கு கரும்புத் தோட்டங்களிலும், தேயிலை
தோட்டங்களிலும் வேலை செய்யவும், வியாபாரம் செய்யவும்
சென்றார்கள். பல ஆண்டுகள் அங்கேயே தங்கினார்கள்…
சொத்துக்கள் வாங்கினார்கள்.
ஆனால், இந்த நாடுகள் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு,
சுதந்திரம் பெற்றபோது, பல நாடுகள் – அங்கேயே இரண்டு
மூன்று தலைமுறைகளாக வசித்து வந்த தமிழர்களை
தங்களுடன் இணைத்துக் கொண்டு, குடியுரிமை கொடுத்து
கௌரவப்படுத்தின….
ஆனால், சில வக்கிர நாடுகள் – ஸ்ரீலங்கா, பர்மா போன்றவை-
தமிழர்களை அந்நியராகவும், தங்கள் வாய்ப்புகளை
பறிக்க வந்தவர்களாகவும் கருதி துன்புறுத்தி, வெளியேற்ற
முனைந்தன.
பர்மாவில் 1962-ல் ராணுவப்புரட்சி ஏற்பட்டபோது,
அதிகாரத்திற்கு வந்தவர்கள், தமிழர்களை நசுக்கி விரட்டத்
துவங்கினர். தமிழர்களின் சொத்துக்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. வலுக்கட்டாயமாக அவர்கள் கப்பலில்
ஏற்றப்பட்டு ( s.s.ரஜூலா நினைவிருக்கிறதா…? ) இந்தியாவிற்கு
“மறு ஏற்றுமதி” செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் நிறைய “பர்மா தமிழர் காலனி”கள் ஏற்பட்டது
அப்போது தான். மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள்
இவ்வாறு விரட்டப்பட்டனர். தாய்நாட்டிற்கு திரும்பி
வந்தவர்களில் சிலர் இன்னமும் தங்கள் பழைய வாழ்விடம்,
சொத்துக்களை மறக்க இயலாமல் மீண்டும் பர்மா செல்லும்
முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் வடகிழக்கே மணிப்பூர் மாநிலத்தின்
எல்லையை அடைந்து, அங்கிருந்து பர்மாவின் தலைநகரம்
ரங்கூனுடன் இணைக்கும் பாலத்தின் வழியே பர்மாவுக்குள்
செல்ல முயற்சித்தனர். ஆனால், பர்மிய ராணுவம் அவர்களின்
முயற்சியை முறியடித்து, அவர்களை எல்லைக்கு வெளியே
விரட்டியது.
tamils-in-moreh
அங்கிருந்து திரும்ப தமிழ்நாட்டிற்கு வர விருப்பமில்லாத
சிலர் அந்த நுழைவு பாலத்தை ஒட்டிய “மோரே” என்கிற
பழங்குடியினரின் கிராமத்திலேயே தங்கி தங்கள் பிழைப்பை
கவனிக்கத் துவங்கினர். இரண்டாம் உலகப்போரின்போது,
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் தங்கியிருந்த
பெருமை இந்த “மோரே”வுக்கு உண்டு. இந்த மோரே
கிராமத்தின் மொத்த பரப்பே 7.38 சதுர கிலோமீட்டர் தான்.
இங்கே தங்க ஆரம்பித்த தமிழர்கள், கொஞ்சம் கொஞ்சமாக
தங்களது உறவினர்களையும், பழைய நண்பர்களையும்
அழைத்து சேர்த்துக் கொண்டனர். அந்த காலத்தில் அங்கே
இருந்தவர்கள் “குக்கீஸ்”என்கிற பழங்குடி இனத்தவர்.
துவக்கத்தில் இவர்களுக்குள் பிரச்சினைகள் மூண்டாலும்,
காலப்போக்கில் அனவரும் இணைந்து வாழத்துவங்கி
விட்டனர்.இவர்களுடன் சேர்ந்து கொண்டவர்களில் சில
நூறு நேபாளிகளும், பஞ்சாபிகளும் கூட உண்டு.
இன்றைய “மோரே” யின் மக்கள் தொகை சுமார் 30,000.
இதில் தமிழர் மட்டும் 17,000 பேர். எல்லாரும் சகஜமாக
தமிழிலும், பர்மிய மொழியிலும் பேசிக்கொள்கின்றனர்.
moreh-way-to-burma-and-thailand
நாள்தோறும் மணிப்பூர் வழியாக பர்மா செல்லும்
நூற்றுக்கணக்கான வாகனங்கள், சரக்கு லாரிகள்,
அதில் பயணிப்பவர்கள், அதே போல் பர்மாவிலிருந்து
தரைமார்க்கமாக இந்தியா வருவோர் -அவர்களின் தேவைகளை
இவர்கள் கவனித்துக் கொள்கின்றனர். நிறைய உணவகங்கள்,
கடைகள் இருக்கின்றன.
தமிழர்கள் இங்கு குடியேறிய காலகட்டத்தில், அருகில் உள்ள,
நாம்ப்லாங் சந்தையில் சிறிய அளவில் பண்டமாற்று
வியாபாரம் நடந்து வந்தது. அங்கு தொழிலாளர்களாகப்
பணிபுரியத் தொடங்கிய தமிழர்களுக்கு அவர்களது
புத்திசாலித்தனமும், உழைப்பும் புதிய கதவுகளைத் திறந்தன.
கூப்பிடு தொலைவில் உள்ள மியான்மரில், ஆடைகள் முதல்
மளிகைப் பொருட்கள் வரை இந்திய உற்பத்திகளுக்கு ஏக
கிராக்கி இருந்தது. எனவே தமிழர்கள் அதைப் பயன்படுத்திக்
கொள்ளத் தொடங்கினார்கள். துணிவகைகள், பாத்திர
பண்டங்கள், மளிகைப் பொருட்கள் எனத் தொடங்கி
மின்சாதனங்கள் உள்பட பல்வேறு பொருட்களும் வணிகம்
செய்யப்படுகிறது.
moreh-7
சில வருடங்கள் முன்பாக, இந்திய-பர்மிய அரசுகளின்
ஒத்துழைப்போடு – மோரே -மியான்மர் எல்லையில்
தடையற்ற வர்த்தக மையம் ஒன்று அமைக்கப்பட்டது.
காலை 7மணிமுதல் மாலை 5 மணி வரை இங்கு
இருநாட்டினரும் வணிகம் செய்ய அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மியான்மரின் டம்மு
பகுதிக்குள்ளும் வணிகத்துக்காக சென்று வர அனுமதி
தரப்பட்டுள்ளது.
மோராவில் மலைவாழ் மக்கள் சிறிய அளவிலான சில
கிறிஸ்தவ கோவில்களை கட்டியுள்ளனர்.
20அல்லது 30 குடும்பத்தினருக்கு ஒரு கோவில்
என்ற அளவில் இருக்கிறது.
moreh-6
அதே போன்று இங்குள்ள தமிழர்கள் தங்களுக்கென்று
“மோரே தமிழ்ச்சங்கம் ” என்கிற ஒரு அமைப்பை நிறுவி,
அதன் மூலம் தங்களது பண்பாடு, கலாச்சாரம், கல்வி
தொடர்பான விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
தமிழ்ப் பிள்ளைகள் படிக்க “நேதாஜி மெமோரியல் ஹை
ஸ்கூல் “ஒன்று செயல்படுகிறது.
moreh-1
தமிழ்நாட்டை பிரதிபலிக்கும் வகையில் இங்கு 4 இந்து
கோவில்கள் இருக்கின்றன. லுங்கியுடன் தமிழர்களையும்,
சேலை கட்டிய தமிழ்ப்பெண்களையும், தமிழர் உணவு
விடுதிகளையும் இங்கு காணலாம். கடைகளில்
தமிழ் திரைப்படப்பாடல்களையும் கேட்கலாம்.
தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும்
“மோரே”யில் காணக் கிடைக்கின்றன – சி.டி. மூலமாக….!!!
வேறென்ன வேண்டும்….?
நல்ல வேளை நமது தமிழக அரசியல்வாதிகள் இன்னமும்
“மோரே” வுக்குள் நுழையவில்லை…!!
👍👌👍👌👍👌👍👌👍👌
காவேரி மைந்தனுக்கு நன்றி