வியாழன், 8 அக்டோபர், 2020

31வது நாள், நினைவுக்கவிதை.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )

பொழிப்பு (மு வரதராசன்):

உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

                                அமரர்  தங்கராஜா ஆனந்தராஜா அமலாதாஸ்.

தோற்றம்:1938-07-15                                            மறைவு :2020-09-16

எல்லாம் ஆனவர் நீங்கள் எங்களுக்கு -எதையும் 

சொல்லாமல் செய்வதில் நிகர் உங்களுக்கு

கல்லாமல் காலம்தள்ளிய பொல்லாத மாணவர்க்கு -ஆங்கில 

கல்வியை மல்லுக்கு நில்லாமல் புகட்டிய பேராசான் எங்களுக்கு .

பொறுமைக்குச் சிறந்த உதாரணம் நீங்கள்! -எந்த 

பொறுக்கியைக் கூட மன்னிக்கும் மாண்பு உங்களுக்கு!

சறுக்காத வளர்ச்சிக்கு சான்று நீங்கள்தான்! -சிற்பி 

செதுக்காத சிற்பமாய் சிறந்து விளங்கியதும் நீங்கள்தான்!.

மறக்க முடியவில்லை உங்களையும் நினைவுகளையும்! -யாரும்

எதிர்க்க முடியவில்லை பொல்லாக் கலானவனை!.

சிறந்த வாழ்க்கை வாழ்ந்த சிரித்த முகத்தை! -என்றும் 

புறந்தள்ளி வாழ புதியதாய் கற்கவேண்டும்!.

இறைவன் படைப்பில் எல்லோரும் ஒன்றுதான்! -பல 

வரைமுறை வைத்து வாழ்வது மனிதனின் பங்குதான்!.

குறைவற்ற வாழ்வை குறைவறப் பெற்றவர் நீங்கள்தான்!.-அந்த 

இறைபோற்றி எங்களுடன் நீங்கள் என்றும் வாழ்வீர்கள்!.

மனித நேயம் மறைந்து போகும் இவ்வுலகில்! -நீங்கள் 

இறைநேயம் நிறைந்த இனிய உள்ளம் இக்காலத்திலும்!.

காற்றில் கலந்து கடவுளடி கண்டதுவோ யுங்கள் ஆன்மா!-தினம்  

போற்றிப் புகழ்ந்து பூஜிப்போம் புகழுடம்பு அழிந்தாலும்!. 

கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா 

16/3,தர்மசேன வீதி 

கல்லடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள