பெண்களின் பிறந்த ஜாதகத்தை வைத்து தனது எதிர்காலக் கணவர் எத்திசையில் இருந்து வருவார் என்பதை நீங்களே அறிந்து கொள்ள இலகுவான ஒரு முறை சோதிடத்தில் வகுக்கப்பட்டுள்ளது."ஜாதக பாலா போதினி" எனும் சோதிடப் புத்தகத்தில் காணப்படும் இருபாடல்கள் மூலம்
சகல பெண்களும் தனது கணவன் இருக்கும் திசையை அறிந்து கொள்ளலாம்.இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு உள்ளது. ஒன்று சரியாகக் கணிக்கப்பட்ட ஜாதகம் மிக முக்கியம்.
இராண்டாவது பிறந்த இடம் நன்கு தெரிந்து இருக்கவேண்டும், வைத்திய சாலையில் பிறந்து இருந்தால் அதையே உங்களது பிறந்த இடமாகக் கொண்டு கணிக்க வேண்டும்.இவை இரண்டும் சரியாக இருந்தால்தான்
சரியான திசையைக் கணித்துப் பயன் பெறலாம். ஆண்களுக்கும் இந்த விதி
சரியாகப் பொருந்தும் ,முயற்சி பண்ணிப் பாருங்கள், கீழ் வரும் பாடல்களை வாசித்து தலை கிறு கிறுத்துப் போபவர்கள் அதன் கீழ் காணப்படும் விளக்கத்தை கவனியுங்கள்.
மங்கையர் தனக்கு வாய்க்கும் மனமக னிரதங் காணத்
தங்கியே யுதித்தராசி தனக்குமே ழிடத் தோனரியேல்
இங்கிதங் கிழக்குமாலோ னிசைவட மேற்குச் சேயேல்
தங்கிடுந் தென்பாற் புந்தித் தனக்குஉத் திரமென்றோதே
ஆகுமே பொன்னோனுக்கு வமைந்தது வடகீழ்பாலில்
போகமாம் புகருக்கேதான் பொருந்திய தென்கீழ்மந்த
னாகமம் மேற்கிரண்டு அரவினுக் குரை தென்மேறப்பால்
பாகமாய் விளம்பலாகும் பனிமதிக்கிது வென்றோதே
மான்விழி மங்கையர்க்கு,மணமகன் இருக்குந் திசை இன்னதென்று அறிய,
அம் மங்கையர் அவனியில் உதித்த போது கணித்த ஜாதகத்தில் "ல " என்று
இருக்கும் கட்டத்தில் இருந்து ஏழாவது கட்டம் எதுவென்று பாருங்கள், அந்த
பாவந்தான் பெண்களின் மணவாளனைக் குறிக்கும் பாவம் உதாரணமாக
ரிஷப, துலா லக்கினமானால் சுக்கிரன் இந்த இரு ராசிக்கும் அதிபதி.அதேபோல் மேஷ, விருச்சிக இராசியானால் செவ்வாய் அதிபதி இதை இலகுவாக பின்வரும் அட்டவணை மூலம் இலகுவாக அறிந்துகொள்ளலாம்.
ராசி அதிபதிகள்
ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் அதிபதி சூரியன் ஆக இருந்தால் கிழக்குத் திசையிலிருந்து மணவாளன் அமைவார். சந்திரன் அதிபதியானால் வட
மேற்குத் திசை, செவ்வாய் ஏழாம் அதிபதியானால் தென்திசையிலிருந்தும்
புதன் ஏழாம் இடத்ததிபனானால் வடக்குத் திசையிலிருந்தும்.
வியாழன் ஏழாம் வீட்டுக்கு அதிபதியானால் ஈசான்ய மூலையிலிருந்தும்
(வட கிழக்குத் திசை ) சுக்கிரனின் வீடு ஏழாம் வீடாக வருமானால் அக்கினி
மூலையான தென்கிழக்கென்றும் சனியின் வீடுகள் ஏழாம் வீடாக வந்தால்
மேற்குத் திசையிலிருந்தும் ராகு கேது பலமாக ஏழாம் வீட்டை ஆக்கிரமித்திருந்தால் நைருதியாகிய தென்மேற்குத் திசையிலிருந்தும்
வரன்கள் அமையும். சந்திரனிருக்கும் ராசி பெலமடைந்திருந்தால் அந்த
ராசியையும் அதற்கு ஏழாம்மிடமாக அமையும் ராசி நாதனையும் அனுசரித்து பலன் காண வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள