எத்தனை ஒப்பந்தம், எவ்வளவு உறுதிமொழி, - மொத்தமாய்
அத்தனையும் செத்தனவே அடுக்கடுக்காய் இரவினிலே
எல்லா ஜனாதிபதியும் ஏற்றிய தீபத்தை- எதிர்வரும்
இந்த ஜனாதிபதியும் ஏற்றத்தான் போகிறார்.
மாண்டவர் மீண்டதில்லை நான்குமறை தீர்ப்பு -இதை
மறக்காமல் முன்னெடுப்பதில்தான் தமிழர்கள் முனைப்பு
ஆண்டவன் கொடுத்ததுதான் அவரவரின் இருப்பு -அதை
மாற்ற நினைப்பது மானிடத்தின் எதிர்பார்ப்பு
இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் -என்றும்
நிமிராது எந்த நாயினதும் சுருண்ட வால்
இனவெறி மதவெறி இலங்கையின் மொத்தச் சொத்து-இதை
எவராவது துறக்க நினைத்தாலே இருக்குது ஆபத்து.
ஆற்றைக் கடக்கும்வரை அண்ணன் தம்பி உறவு -எந்தத்
தேர்தல் முடியும்வரைக்கூடக் காத்திருக்காது இந்தத்துறவு
சிறுபாண்மை மக்களுக்கு இல்லை ஒரு முடிவு-இன்னும்
பெரும்பான்மை இனத்துக்கும் இல்லையொரு வடிவு
மக்களைப் பற்றிச் சிந்திக்கும் மனம் வரும்வரை-யாருக்கும்
அக்கறை கிடையாது, அழியும் இலங்கையைப்பற்றி.
கிடப்பது கிடக்கட்டும் கிழவியையும் என்னையும் உள்ளேவிடு
இதுதானே இந்நாட்டின் இப்போதைய அதிசயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகள