சனி, 28 செப்டம்பர், 2019





பலருக்கும் கணையம் என்றால் என்ன? அதன் பணி என்னவென்று தெரியாது. ஆனால் உடலிலேயே மிகப்பெரிய சுரப்பி தான் கணையம். அதேப்போன்று இதன் பணியும் மிகப்பெரியது. அது என்னவெனில், கணையம் தான் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரக்கிறது. மேலும் இது தான் உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்புவதும் கூட.
அதுமட்டுமின்றி, கணையம் தான் உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனையும் சுரக்கிறது. இவ்வளவு வேலையை செய்யும் கணையத்தில் நச்சுக்கள் சேராமலா இருக்கும். எனவே கணையத்தில் சேரும் நச்சுக்களை நீக்கவும், கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருசில உணவுப் பொருளை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
இல்லாவிட்டால், கணைய அழற்சி, வலி மற்றும் வீக்கம் கொண்ட கணையம், கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரி, இப்போது கணையத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்த்து, அவற்றை உணவில் சேர்த்துக் கொள்வோமா!
ப்ராக்கோலி ப்ராக்கோலி, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், கேல் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வருவது கணையத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவுப் பொருட்கள் கணைய புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.
பூண்டு பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பயோஆக்டிவ் பொருள், கணையத்தில் எவ்வித கட்டிகளும், காயங்களும் ஏற்படாமல் நல்ல பாதுகாப்பு தரும். எனவே முடிந்த வரையில் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.
சிவப்பு திராட்சை சிவப்பு திராட்சையில் உள்ள ரெஸ்வரோட்ரோல் என்னும் பொருள், ப்ரீ ராடிக்கல்களால் கணைய செல்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும். ஒருவேளை உங்களுக்கு சிவப்பு திராட்சை சாப்பிட பிடிக்காவிட்டால், ரெட் ஒயின் குடிக்கலாம். ஆனால் கணைய அழற்சி இருந்தால், ரெட் ஒயின் குடிக்கக்கூடாது.
ப்ளூபெர்ரி மற்றும் செர்ரி இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, ப்ரீ-ராடிக்கல்களால் செல்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பீட்டா கரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது. இவை கணைய புற்றுநோய் அண்டுவதைத் தடுக்கும். ஏனெனில் அந்த அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டது தான் சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதேப்போல் ஆப்ரிகாட், கேரட், சோளம் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டீன் அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தக்காளி தக்காளியில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ-ராடிக்கல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கி, கணைய புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
பசலைக்கீரை பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற கணையத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் 2-3 முறை பசலைக்கீரையை உட்கொண்டு, கணையத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
டோஃபு டோஃபுவில் கணையத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே டோஃபுவை பிடித்தவாறு சமைத்து உணவில் சேர்த்து வாருங்கள்.
தயிர் ஆம், தயிர் கூட கணையத்திற்கு நல்லது. தயிர் சாப்பிட்டால், கணையத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலமும் வலிமைப் பெறும். ஆனால் தயிரை உட்கொள்ளும் போது, அவற்றில் சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 நன்றிhttp://www.vanakkamkarur.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள