திங்கள், 18 மார்ச், 2019

திருமணப் பொருத்தத்தில் புத்திர பாக்கிய நிலை .

திருமணப் பொருத்தத்தில் புத்திர பாக்கிய நிலை
                                                                         
தற்காலம் திருமணம்  நடைபெற்று ஓர் ஆண்டுக்குள் குழந்தைப் பேறு அடையும் நிலை மிக மிக அரிதாகிவிட்ட்து.இயற்கையாக குழந்தை அமையும் பலாபலன் ஏற்படும் காலத்தை தாமாகவே தவிர்த்து விட்டு,
பின்னர் தங்களின் எண்ணத்தில் குழந்தை பெறலாம் எனத் திட்டம் போட்டு
செயற்படும் தம்பதியர்களே இன்றைய காலத்தில் அதிகம் உள்ளனர்.இதிலே
அவர்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் அதிகம் பலருக்கும் குழந்தைப்பேறு அமைவதில்லை.அதன் பின்னர்  மருத்துவ சிகிச்சையை   நாடுகின்றனர்.
அடைபவர்களுக்கு
பிறப்பும் இறப்பும் இறைவன் தீர்மானித்து எமக்குத்தரும் விடயங்கள்.இதிலே  நாம் அதி மேதாவித்தனமாக செயற்படும்போது அதிகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.பொதுவாக  குழந்தைப் பிறப்பு என்பது இன்றைய காலம் 75வீதமும் சத்திரசிகிச்சை  மூலமாக நடைபெறுகிறது.மருத்துவ சிகிசசை
மூலம் குழந்தை  பேறு அடைபவர்களுக்கு இயற்கையான பிறப்பு நிலை அமையாது.இப்படியான நிலைகள் பெருகி வருவதற்கு  என்ன காரணம்?
எமது  ஜோதிட சாஸ்திரம் குழந்தைப் பேறுபற்றிக்  கூறும் விடயங்கள் என்ன?
திருமணப் பொருத்த நிலையில், புத்திர பாக்கிய நிலையை எப்படி அறிந்து
கொள்வது? இப்படியான பல கேள்விகள் பலருக்கும் உண்டு.பொதுவாக நவக்கிரகங்களில்  "புத்திரகாரகன்" எனப்படும் "குரு " பிறந்த ஜாதகத்தில் மறைவு பெற்றோ, பாவக்கிரக சேர்க்கை பெற்றோ 5ம், 9ம், இடங்களை பார்வை கொள்ளாமலோ அமைந்திருந்தால் புத்திர பாக்கியத்திற்கு சிரமமான பலன் இருக்கும்.ஆனால் இந்த அமைப்பு ஆண்,பெண் என இரு
ஜாதகங்களிலும் அமையப்பெற்றால் முறையான பரிகாரம், குலதெய்வ
வழிபாடு, பிதுர் வழிபாடு என்பன சரியான முறையிலே  செய்யப்பட வேண்டும். ஒருவர் ஜாதகத்தில்  புத்திர பாக்கிய பலன் அமைந்து,மற்றவர்
ஜாதகத்திலே அப்பலன் குறைவானதாக அமைந்தால் புத்திர பாக்கிய நிலை தாமதப்படும்.

புத்திர பாக்கியம் அறவே அற்ற நிலை.

புத்திர பாக்கியம் அறவே அற்றதாய் அமைய என்ன காரணம். இதில் பல
விடயங்கள் உண்டு.பெண் ஜாதக அமைப்பில் 5ம்,9ம் இடத்ததிபதிகள் பாவக்
கிரக சேர்க்கை பெற்று, மறைவு நிலை,நீசநிலை பெற்று அமைவதாலும்.5ம்
9ம் இடங்கள் குருவின் பார்வை அற்று இருப்பதும்  ஜாதகநிலையில் குருவும்
மறைவு நிலை பெற்று அமைவதும்  இந்த அமைப்பு ஆண் ஜாதகத்திலும்
அமையும் போதும் புத்திர பாக்கியம் அற்ற நிலை அமைகின்றது.இதற்கு
இன்னுமொரு காரணமுண்டு "பிதுர் தோஷம்"நமது மூதாதையர்களின் பிதுர்க் கடன் சரியானமுறையில் செய்யாது விடும் பட்ஷசத்திலும் பிதுர் தோஷத்தால் நம் வம்ச வளர்ச்சி தடைப்படும்.குலதெய்வ வழிபாட்டில் குறை
பாடு வைத்தாலும் மேற்படி பிரச்சினை அமையும் நிலை இருக்கும் .எனவே
ஜாதக நிலைத் தோஷம்,பிதுர் தோஷம் குலதெய்வ குறைபாடு என அனைத்தும் ஒரு சேர அமையும்போது  புத்திர பேறு அறவே தடைப்படும் நிலைகள் உண்டு.

ருதுவான நாள்முதல் பெண் செய்யவேண்டியது.

ஒரு பெண் ருது ஜனனம் எனும் கன்னிகைப்பேறு பெறும் நாளில் அமையும்
ஜாதக கட்டமும் குழந்தைப்பேறுக்கு ஒரு அங்கமாக அமைகின்றது.இந்த ஜாதக அமைப்பிலும் குழந்தைப் பேற்றுக்குரிய ஸ்தானங்கள் கவனிக்கப்படவேண்டியதாகும்.சில பெண் ஜாதகம் பிறப்பு ஜாதகத்தில்
குழந்தைப் பேறு  பலன் சிறப்பாக இருந்தாலும் குழந்தை பேறு தடை தாமத நிலை அமைய ருது ஜாதகம் காரணமாகின்றது.பொதுவாக ஒரு பெண் \ருதுவானதும்  9ம்,11ம்,16ம்,21ம்,31ம் நாட்களில் ஒரு நாட்கணக்கிலே  ருது
தோஷ சாந்தி  செய்யவேண்டும்.இதிலே பொதுவாக நவக்கிரக ஹோமம்
செய்து பெண்ணின் பிறந்த நட்சத்திர அதிபதி கிரகம்,ருதுவான நட்சத்திர
அதிபதிக் கிரகம்,. ருதுவான நட்சத்திர அதிபதி கிரகம் இவற்றுக்கு  பிரிய
ஹோமம் செய்து கும்ப நீரினால் பெண்ணுக்கு அபிஷேகம் செய்து தோஷ
நிவர்த்தி செய்ய வேண்டும்.இது ஒரு முக்கியமான விடயம் பெண்ணின்    புத்திர பாக்கியத்திற்கு அத்திவாரமாக அமையும் கிரியை இது வீட்டிலே
வைத்து  சாஸ்திர பூர்வமாகச் செய்ய  வேண்டும்.அடுத்து ருதுவான காலத்தில் இருந்து பெண் மஞ்சள் பூசி  நீராட வேண்டும்.அதாவது நீராடுவதற்கு முன்பு  மஞ்சள் அரைத்து முகத்திற்கும்,வயிற்றுப்பகுதிக்கும்
கால் பாதத்திற்கும் மஞ்சள் பூசி சிறிது நேரத்திற்குப்  பின்னராக நன்றாக
மஞ்சளைக் கழுவி நீராட வேண்டும்.வெறும் மண் தரையில்  நிலத்தில்
பெண் தனது வயிறு,மார்பும் படும்படி படுக்கைக் கூடாது. தினமும்
காலையில் நன்றாகக் குளித்து வீடு பெருக்கி,கோலம் போடுதல் மாதவிலக்கு
காலங்களில் தனித்து இருத்தல், முக்கியமாக அடுப்பங்கரையில் சமையல்
செய்வதை தவிர்த்தல், மாதவிலக்கு வந்து  5ஆம் நாள் தலையில் பாலும்,அறுகும் வைத்து தலை முழுகுதல் இவற்றை சரியாக கடைப்பிடித்து
வந்தால்,ஜாதக நிலையில் புத்திர தோஷம் இருந்தாலும் பரிகாரம் செய்யும்போது சுலபமாக புத்திர பாக்கியம் கிடைத்துவிடும்.


திருமணப் பொருத்த நிலையில் புத்திர பாக்கியம்.

பெண்,ஆண்  இருவர் ஜாதகங்களிலும்  5ஆம்,9ஆம் அதிபதி கிரகங்களின் நிலையும்,குருவின் நிலை,குருபார்வை கொள்ளும் நிலை  இவற்றை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும். 5ஆம்,9ஆம் இடங்களில் ராகு,கேது அமைந்திருந்தால்,புத்திர பாக்கியத் தடை,தாமத நிலை அமையும்.
காலசர்ப்ப தோசம் இருந்தால்,புத்திர பாக்கியத் தாமத நிலை ஏற்படும்.
அத்தோடு பொருத்த நிலையில்  யோனி அல்லது வசியம் ஏதேனும் ஒன்று உத்தமமாக அமைவதும் புத்திர பாக்கியத்திற்கு சிறப்பு நிலையாக அமையும்.இதிலே வசியம் என்பது தனியாக பெண்,ஆண் ராசிநிலைகளை.
மட்டும் வைத்து நிர்ணயிப்பது மட்டும் அல்ல.ராசி வசியம் இல்லை என்றால்
நவாம்ச வசியமும் பொருத்தமாக அமைய நற்பலன் கொடுக்கும்.அல்லது
இருவர் லக்னமும்  வசியமாக  இருந்தாலும் நற்பலன் கொடுக்கும் என்பது
முக்கிய அம்சமாகும்.எனவே திருமணப் பொருத்த விடயத்திலே  இவற்றை
நன்கு  கவனிக்க வேண்டும்.குருவின் பார்வை  5ஆம்,9ஆம் இடங்களை நோக்கி அது சுப நிலையில் இருந்து அமைந்தால் தாமதமாகியேனும்
குழந்தைப் பேறு  சிறப்பாக அமையும் நிலையுமிருக்கும்.


குழந்தைப்பேறு பிரச்சினை  பொதுவான அமைப்பு.
  

ராகு,கேது சம்பந்தமுடைய நட்சத்திரம் கொண்டவர்கட்கு, புத்திர தோசை நிலையிருக்கும் அதாவது இவர்கட்கு புத்திரர் இருந்தாலும் புத்திரர்களால்
பிரச்சினை,யோசனை,சிக்கல் நிலை என்பன  தொடரும்  பலன் இருக்கும்.
இவர்கள் அதற்கேற்ப சிறு வயது முதல்  புத்திரர்களை வளர்க்கும் விடயங்களில்   திட்டமிட்டு செயற்படவேண்டும். ராகுவின் நட்சத்திரமான
திருவாதிரை,சுவாதி,சதயம், கேதுவின் நட்சத்திரமானஅஸ்வினி,மகம், மூலம் போன்ற  நட்சத்திரம் கொண்டவர்க்கு புத்திரர்களால் மன   சஞ்சலம் இருக்கும். புத்திர பாக்கிய குறை இருக்கும்.இந்த நிலை கார்த்திகை,பூசம்
பூராடம், சித்திரை,ஆயிலியம்,நட்சத்திரமுடையவர்க்கும்  மத்திமமாக  அமைகின்ற நிலையிருக்கும்.இவர்கள் நிதானமாக  பொறுமையாக தமது
புத்திரர்களுடன்  செயற்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தோடு ஒருவரின் ஜாதக அமைப்பில் 1,5,9,எனும் மூன்று நிலைகளும்
சிறப்புற்று  இருந்தால், தடையேதும் இன்றி  குழந்தைப் பேறு அமையும்.
நிலை இருக்கும்.

திரிகோண ஸ்தானங்களின் சிகரம்  

லக்னம்,பஞசமஸ்தானம்,பாக்கியஸ்தானம் எனும்  மூன்றும் முறையே 1ஆம் ,
5ஆம், 9ஆம் இடங்களாகும்.இதைச் சந்திரகாவியம் எனும் நூல் பின்வருமாறு
கூறுகின்றது."கேந்திரத்திற் பத்தாம் கிளர்  திரிகோணாத் தொன்பான் ஆய்ந்த பெலமாம்" எனும் பாடல் கூறும் விளக்கம் ஜனன லக்கினத்தை விட
ஐந்தாம் இல்லம் அதிக பலம் என்றும்,ஐந்தாம் இல்லத்தைவிட  ஒன்பதாம்
இல்லம் மிக மிக பலம் கொண்டது என்று கூறுகிறது.  எனவே இந்த மூன்று
ஆதிபத்திய கிரகமும் ஜாதக  நிலையில் சிறப்பான ஆதிபத்திய நிலை சேர்க்கை சுபகிரக பார்வை பெற்று அமைந்தால் நிறைந்த புத்திர பாக்கியம்
என்பதில் ஐயமில்லை .


இயற்கையை மாற்றுதல் சிரம பலன்.
இன்றைய திருமணத் தம்பதிகள் தங்கள் வசதிக்காக குழந்தைப் பேறு
விடயத்தை தாமதப்படுத்தி பின் தம் வசதிக்கு ஏற்ப குழந்தை பெறும்
நிலையே சிரமமான பலனையே கொடுக்கும்.எமக்கு எதை எப்போது,எப்படி,
தர வேண்டும்,எனும் நியதி இறைவன் வகுத்து  வைத்திருக்கும்போது நாம் வேண்டாத  விஞ்ஞான வசதியால் தடை செய்து  தாமதப்படுத்தி பின்னர்
அதனாலேயே உடல் உபாதை துன்ப நிலை சஞ்சல  நிலை என உருவாக்கி
கொள்கின்றோம்.இயற்கையை  மாற்றாது தர்ம நெறியோடு வாழுங்கள்
அனைத்தும் இன்பமாக அமையும்.


ஜோதிட பூசணம்:ராம்-தேவலோகேஸ்வரக் குரு
வீரகேசரி,10/03/2019












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள