வியாழன், 16 பிப்ரவரி, 2017

அடிக்கடி ஏலக்காய் டீயைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்

அடிக்கடி ஏலக்காய் டீயைக் குடிப்பதால் பெறும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
இந்திய சமையலில் உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள் தான் ஏலக்காய். இது மசாலாப் பொருட்களின் ராணியும் கூட. இந்த ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் டீயை பலரும் விரும்பி குடிப்பார்கள்.
ஏலக்காயில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி, சி, ரிபோஃப்ளேவின் போன்றவை அதிகமாக உள்ளது. 
மேலும் இதில் அத்தியாவசிய கனிமச்சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது. சரி, இப்போது ஏலக்காய் டீயைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.
#புற்றுநோய்
ஏலக்காய் டீயைக் குடித்தால், ஏலக்காயில் உள்ள பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, உடலை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
#உயர்இரத்தஅழுத்தம்
உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா? அதை இயற்கை வழியில் கட்டுப்படுத்த வேண்டுமா? அப்படியெனில் ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் நுரையீரலில் இரத்த ஓட்டம் மேம்படுவதோடு, உயர் இரத்த அழுத்தமும் குறையும்.
#தலைவலி
தலைவலி அடிக்கடி வருகிறதா? அப்படியெனில் தலை வலிக்கும் போது ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் விரைவில் தலைவலி மறையும்.
#செரிமானபிரச்சனைகள்
செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க, ஏலக்காய் டீயைக் குடியுங்கள். இதனால் அஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம் போன்றவை நீங்கும்.
#இதயபிரச்சனைகள்
இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு, ஏலக்காய் டீ மிகவும் நல்லது. அதிலும் தினமும் ஏலக்காய் டீயைக் குடித்து வந்தால், இதய நோய்களில் இருந்து விடுபடலாம்.
#நோயெதிர்ப்புமண்டலம்வலுபெறும்
ஏலக்காய் டீ, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். வேண்டுமானால், தினமும் ஒரு கப் ஏலக்காய் டீ குடித்து வாருங்கள். இதனால் உங்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை நன்கு உணர்வீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள