புதன், 14 டிசம்பர், 2016


சோதிடமும் பலனும்.
சோதிடம் தெரிந்தால் மாத்திரம் போதாது.சரியான நேரத்தில்,சரியான முறையில் சோதிடத்தை பயன் படுத்தவும் தெரிய வேண்டும்.தன்னைக் காப்பதற்கும் சோதிடருக்குத் தெரியவும் வேண்டும்.

மன்னர் பதினொன்றாம் லூகி க்கு ஒரு ஆஸ்தான ஜோதிடர் இருந்தார். அவர் ஒரு முறை லூகியிடம் "எண்ணி சரியாக 14 ஆம் நாள் உங்கள் ராணிகளில் ஒருவர் இறந்துவிடுவார் "என கணித்து கூறினார்.அவர் கூறியது போலவே ராணியும் இறந்து விட்டார். லூகிக்கு பயம் பிடித்து கொண்டது .எனவே அந்த ஜோதிடரை தன்னை தன் மாளிகையில் வந்து சந்திக்குமாறு கூறினார். அவரை கொல்வதற்கு ஆட்களை மறைத்து வைத்தார். ஜோதிடர் வந்ததும் " உங்களுக்கு எப்பொழுது மரணம் நிகழும் என வினவினார்.?" அவர் பதில் சொன்னதும் அவரை கொல்வதற்கு ஆட்கள் தயாராகினர். ஆனால் ஜோதிடர் தான் கொல்லப்பட போவதை அறிந்து கொண்டார். எனவே அவர் லூகியிடம் "மன்னா என் வாழ்கையை கணித்ததில் , நீங்கள் இறப்பதற்கு சரியாக 3 நாட்களுக்கு முன் என் மரணம் நிகழும் " என்று கூறினார்.
உடனே மன்னர் அவரை கொல்ல நியமிக்கப்பட்ட ஆட்களை தடுத்ததோடு அவர் நீண்டகாலம் வசதியாக வாழ எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார். அதற்கு பிறகு அந்த ஜோதிடர் மன்னர் இறந்து பல ஆண்டுகள் சுகமாக வாழ்ந்தது தனி கதை.
ஒரு மனிதனின் வாய் சாமர்த்தியம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள