வெள்ளி, 9 டிசம்பர், 2016

அமெரிக்காவில் சிக்கலில் மாட்டியுள்ள கோத்தபாய! நீதிமன்றில் பீ அறிக்கை சமர்ப்பிப்பு


அமெரிக்காவில் சிக்கலில் மாட்டியுள்ள கோத்தபாய! நீதிமன்றில் பீ அறிக்கை சமர்ப்பிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மகனுக்கு எதிராக பீ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது பொது மக்களின் பெருமளவு பணத்தில் அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஆடம்பர வீடொன்று வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது கோத்தபாயவின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளதன் ஊடாக பொது மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு நீதிமன்றில் பீ அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்வின் முன்னிலையில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆடம்பர வீடொன்றை வாடகைக்கு பெற்றக் கொண்டு வசிப்பதற்கு வழங்கியது யார் என ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிடம் கடந்த 3ஆம் திகதி முறைப்பாடு ஒன்று செய்திருந்தார்.
இதற்காக ஆவணங்கள் மற்றும் பல தகவல்கள் நிதி மோசடி விசாரணை பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர், லொஸ்ஏஞ்சல் தூதரக அலுவலகத்திற்காக என கூறி வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ள இந்த வீட்டிற்காக வெளிவிவகார அமைச்சினால் மாதாந்தம் 8000 அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒரு நாளும் அலுவலகம் ஒன்று நடத்தி செல்லப்படவில்லை என கூறப்படுகின்றது.
2015 மார்ச் மாதம் வரை ராஜபக்ச ஆட்சியில் இருற்த பிரபல அதிகாரியின் மகனின் உயர் கல்வி நடவடிக்கைக்காக இந்த வீட்டில் தங்கியிருந்ததாக தூதரக அலுவலக ஆவணங்களின் தெரியவந்துள்ளதென தனது முறைப்பாட்டில் மங்கள குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாயவின் மகனின் பாதுகாப்பிற்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட இராணுவ சிப்பாய் இருவர் சாரதியாக செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிப்பாய்கள் இருவரும் இராணுவத்தில் மாத்திரம் இன்றி வெளிவிவகார அமைச்சிலும் சம்பளம் பெற்றுக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு ஆவணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டிற்காக மாதாந்த வாடகைக்கு மேலதிகமாக நீர், மின்சாரம் மற்றும் தொலைக்காட்சி கட்டணம் வெளிவிவகார அமைச்சினாலே செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் இந்த வீட்டை மீளவும் ஒப்படைக்கும் போது சேத கட்டணமாக 10000 அமெரிக்க டொலர் தனது அமைச்சிற்கு செலுத்த நேரிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எப்படியிருப்பினும் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிடும் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜப்கசவின் மகனுக்கு அரசாங்கத்தின் செலவில் வீடொன்று வழங்கியதாக அமைச்சர் மங்கள சமரவீர கொண்டு சென்ற பிரச்சாரம் முற்றிலும் போலியானதென குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள