ஞாயிறு, 4 டிசம்பர், 2016

மட்டக்களப்பில் இவ்வளவு நடந்தும்,அரசாங்க அதிபர் எங்கே?


மட்டக்களப்பில் இவ்வளவு நடந்தும்,அரசாங்க அதிபர் எங்கே?

அரச உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை இடைநிறுத்த கூடிய ஒரு அதிகாரம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு உண்டு என இளைஞர் அணியின் உபதலைவர் எஸ்.பூபால் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று(03) இடம்பெற்ற மட்டக்களப்பு விகாராதிபதியின் செயற்பாடுகளை கண்டித்து விகாராதிபதிக்கு அவருக்கு எதிராக இடம்பெற்ற கண்டன கவனயீர்ப்பில் ஈடுபட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
பொதுபல சேனா உட்பட அவரது குழுக்கள் மட்டக்களப்பு நகருக்கு வருகைதந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனை நாங்கள் எதிர்க்கின்றோம்.
அரச உத்தியோகத்தர்கள் தங்களின் கடமையை சரிவர செய்யாத காரணத்தினால் அவர்களை இடைநிறுத்த கூடிய ஒரு அதிகாரம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு உண்டு.
ஆனால் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச பொலிஸ் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை சரியாக செய்யவில்லை.
அதாவது 162வது சட்டத்தின்படி அரச உத்தியோகத்தர்கள் சரியாக செய்ய தவறும் பட்சத்தில் குறித்த அரச அதிகாரியை இடை நிறுத்துவதற்கு சட்டத்தில் இடமுள்ளதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் இருந்து மட்டக்களப்பு விகாராதிபதி அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார்.
குறித்த விகாராதிபதியின் செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு இங்குள்ள பொலிசாருக்கு உள்ளது என்றார்.





நன்றி தமிழ் வின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள