திங்கள், 31 அக்டோபர், 2016

தமிழ் மக்களுக்கு வெற்றி தர கூடிய தலைவர்கள் யார்? அறிஞர்கள் யார்?


அவர்களின் வார்த்தையில் அவர்கள் கூறிவந்த அந்தப் “பயங்கரவாதம்” முடிவடைந்துவிட்டது. ஆனால் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் இன்னும் முடிவடையவில்லை. தமிழ் மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களை அவர்களின் பலமான பண்பாடு ஒரு போதும் மண்டியிட அனுமதிக்காது.
ஒன்றின் மீது இன்னொன்று தாக்கம் புரியவல்ல. பல்வேறு வேதியற் கலவைகளின் சங்கமத்தால் இலங்கை அரசியல் கொதிநிலை அடைந்துள்ளது.
தற்போது இலங்கை அரசியல் எந்தொரு தலைவனினதும் அல்லது எந்தொரு கட்சியினதும் கட்டுப்பாட்டில் இல்லை. இராணுவம், பொலிஸ்துறை, புலனாய்வுத்துறை, கட்சிகள், மகாசங்கம், ஊடகங்கள் என உள்நாட்டில் பல்வேறு சக்திகளும் தனித்தனியே நிறுவன மயப்பட்டுள்ளன. இவை அனைத்தினதும் நிறுவன வளர்ச்சியென்பது ஈழத்தமிழர் பிச்சினையை மையப் பொருளாகவும், அச்சாணியாகவும் கொண்டவை.
இலங்கையின் சனத்தொகை அளவு மற்றும் பருமனுக்கு மீறிய வளர்ச்சியை இராணுவம் அடைந்துள்ளது. அதற்கான தளமும் ஊட்டச்சக்தியும் ஈழத்தமிழர் பிரச்சனையாகவே உள்ளது. ஆதலால் அத்தகைய இராணுவம் தனது வாழ்விற்கும், வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் ஈழத்தமிழரை களமாக பாவிக்கிறது. இப்படியே பொலிஸ் துறையும், புலனாய்வுத்துறையும், கட்சிகளும், ஊடகங்களும் ஈழத்தமிழர் பிரச்சினை மீதே தமக்கான நலன்களுக்கு தளம் அமைத்துள்ளன.
ஆதலால் வெளிநாட்டுச் சக்திகளும் கூடவே தமக்கான அரசியல், இராணுவ, வர்த்தக நலன்களை ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஊடாகவே அணுகுகின்றன. இதில் அப்பாவித் தமிழர்களே உள்ளாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளினது நலன்களுக்கான பலியாடுகளாய் உள்ளனர். இவ்வாறு ஆடுகளமாக்கப்பட்டுள்ள, நொந்து நூலாய் நலிவுற்றுள்ள தமிழ் மக்களுக்காக பேசுவதும் பாடுபடுவதிலும் இருந்துதான் நீதிக்கான பணியும் தர்மமும் ஆரம்பமாக முடியும்.
இவ்வாறு பலிக்கடாவாக்கப்படும் இந்த அப்பாவி மக்களின் நலன்களுக்காக பாடுபடாத எந்தொரு “இசமும்” எந்தொரு “நாயகமும்” எந்தொரு “தர்ம போதனையும்” உன்னதமானவைகளாக அமைய முடியாது.
அரசியல் ஒருபோதும் அதன் வெளித் தோற்றப்பாட்டில் இருப்பதில்லை, மாறாக அதன் உள்ளோட்டத்திலும் அதற்கான பொறிமுறையுமே தங்கியுள்ளது. இந்த வகையில் அரசியல் உடற்கூற்றியிலையும் அதன் உயிரோட்டங்களையும் உரிய முறையில் கண்டறியாமல் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது.
உள்நாட்டு அரசியலானது வெளிநாட்டு அரசியலின் நீட்சியாக உள்ளது. வெளிநாட்டு அரசியல் நலனானது பூகோளம் தழுவிய நலனை ஈட்ட முனையும் உலகப் பெருவல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது. அதேவேளை பூகோளம் தழுவிய நலன்களைக் கொண்ட பெருவல்லரசுகளான அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் உள்நாட்டு அரசியல் என்பது பூகோளம் தழுவிய வெளிநாட்டு அரசியலாக உள்ளது.
சர்வதேச அரசியல் (International Politics) என்பது இரண்டுக்குக் குறையாத நாடுகளிடையேயான அரசியலாகும். பூகோள அரசியல் (Global Politics) என்பது முழு உலகையும் தழுவிய உலகளாவிய அரசியலாகும். பூகோள அரசியலானதுவர்த்தகம் எனப்படும் ஒரேயொரு நாரில் முடியப்பட்டுள்ள பூமாலையாய் உள்ளது.
இந்த வர்த்தக ஆதிக்கமானது இராணுவம், யுத்தம், முகாமைத்துவம் என்ற மூன்றினாலும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் ஒன்றுடன் இன்னொன்று இணைந்தும் ஒன்றில் இன்னொன்று தங்கியும் உள்ளன.
அரசியலில் இராணுவம் ஒருபோதும் தனது முக்கியத்துவம் இழந்திடாது. நேரடியாக இரத்தம் சிந்தும் யுத்தம் மட்டுமல்ல இராணுவ ஏற்பாடுகளும், இராணுவ முஸ்தீபுகளும் ஒருவகை யுத்தம்தான். இரத்தம் சிந்தும் யுத்தத்தை தணிப்பதற்கான யுத்தத்தின் இன்னொரு பரிமாணம் தான் இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளுமாகும்.
இதன்படி முகாமைத்துவத்தின் வாயிலாக உலகை கட்டியாளுதல் என்ற தந்திரத்தில் அதற்கான அடித்தளமாய் இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளும் அமைகின்றன. அதன்படி இந்த உலகமானது மேற்படி பரிமாணம் கொண்ட முகாமைத்துவத்தால் ஆளப்படுகின்றது.
முகாமைத்துவத்தின் அங்கங்களே யுத்தமும், இராணுவ ஏற்பாடுகளும் இராணுவ முஸ்தீபுகளுமாகும். இந்தவகையில் வர்த்தக ஆதிக்கமானது இராணுவம், யுத்தம், முகாமைத்துவம் என்ற இழைகளினால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே யுத்தமும் முகாமைத்துவத்திற்குள் அடங்கும் ஒரு பகுதியாகும். அந்த முகாமைத்துவம் புவிசார் அரசியலையும் தனக்கான கருவியாக்கிக் கொள்கிறது. இத்தகைய அடியாழத்தில் இருந்துதான் அரசியலானது ஆயிரக்கணக்கான அலைகளாய் வெளியே தோன்றுகிறது.
யுத்தத்திற்கு முன்னோ அல்லது யுத்தத்திற்குப் பின்னோ பெருவல்லரசுகள் தமது தேவைக்குப் பொருத்தமான வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை வடிவமைத்துதமக்கான முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்கான பெயர்தான் “சமூக நிர்மாணிப்பியல் (SocialConstructionist)” என்பதாகும். உதாரணமாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்பு நிகழ்ந்த சனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் தமது நலன்சார்ந்த வகையில் வெளி அரசுகள் ஈழத் தமிழர்களை அதன்பால் செயற்படச் செய்தமையானது மேற்படி “சமூக நிர்மாணிப்பியல்” என்பதற்கு உட்பட்டதாகும்.
ஆட்டுவித்தால் ஆடுபவனாய் உள்நாட்டு அரசியல்கள் காணப்படுகின்றன. இதில் பலவீனமான இனங்கள் அல்லது மக்கள் பிரிவுகள் முதலில் பலியாகிவிடுகின்றன. கழுத்தில் வாள் வைக்கப்பட முன்பு போடப்படும் பூமாலையைக் கண்டு மகிழும் நேர்த்திக் கடாக்களின் கதைகளாக மக்களின் தலைவிதி ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உன்னதமான தலைவர்களையும் நல்லறிஞர்களையும் சார்ந்தாகும்.
“தந்தை செல்வாவிற்குப் பிறகு, தலைவர் திரு.வே.பிரபாகரனுக்குப் பிறகு, வடமாகாண முதல்வர் திரு. சி.வி.விக்கினேஸ்வரனைத்தான் நாங்கள் வீரியமுள்ள எமக்கான தலைவராக பார்க்கிறோம்” என்று லண்டன் ரெயினஸ்லேன் சொறொஸ்ரியன் சென்ரரில் 23-10-2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு விக்கினேஸ்வரனை அழைக்கையில் அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய திரு.கே.வி.நந்தன் அவர்கள் திரு.விக்கினேஸ்வரனை நோக்கிக் கூறிய வார்த்தைகளே இவை.
இலங்கை அரசியலில் இன்று முக்கிய பேசு பொருளாய் காணப்படுவோரின் அரங்கில் உள்ள திரு.விக்கினேஸ்வரனும், திரு.மகிந்த ராஜபக்சவும் முக்கியமானவர்கள். அதேபோல அரங்கில் இல்லாது பேசப்படுவோரில் திரு. பிரபாகரனும் திரு.ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் முக்கியமானவர்கள். இந்த நால்வரும் இலங்கை அரசியலில் குறியீட்டு அளவிலான இயங்கு சக்திகளாக உள்ளனர்.
சிங்களத் தரப்பின் அரசியலில் அரங்கத்தில் இருக்கும் சக்தி என்ற வகையில் மகிந்த ராஜபக்சவும், அரசியல் வழியை வடிவமைத்துவிட்டவராக அரங்கில் இல்லாத ஜெயவர்த்தனாவும் காணப்படுகின்றனர். அதே போல தமிழ்த் தரப்பில் அரங்கில் உள்ள சக்தியாக விக்கினேஸ்வரனும், அரங்கில் இல்லாத சக்தியாக பிரபாகரனும் காணப்படுகின்றனர்.
பனிப்போர் நிலவிய காலத்தில் அதாவது 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும் இந்தியாவில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது. இதன் பின்னணியிற் இந்திய, சோவியத் உறவு பனிப்போர் சக்திகளாக வீரியம் கொண்டன. இக்காலத்தில் தனது பனிப்போர் இலக்கின் பொருட்டு அமெரிக்கா இலங்கையில் தனது கவனத்தை வீரியத்துடன் செலுத்த முற்பட்டது.
இப்பின்னணயில் இனப்பிரச்சனையின் பேரால் அமெரிக்காவை இலங்கையில் பலமுறச் செய்யஜெயவர்த்தன அரசாங்கம் தீவிர பிரயத்தனத்தில் ஈடுபட்டது. இக்கால கட்டத்தில் தான் இந்தியாவும் ஈழத்தமிழர் பிச்சனைக்கு ஊடாக அதனை எதிர்கொள்ளத் தொடங்கியது. இப்பின்னணியில் அப்போது ஆயுதப் போராட்டத்தில் தலையாய பாத்திரம் வகிக்கத் தொடங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் அதற்கான இந்து சமுத்திர அரசியலில் முக்கிய ஒரு சுழற்சி மையமானார்.
1974ஆம் ஆண்டு சனவரி மாதம் தமிழ் மக்களின் நெஞ்சங்களை நிரப்பிய நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இலங்கை அரசின் பொசிப்பின்றி ஆனால் மக்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ந்து கொண்டிருந்த வேளை. அதுவும் இறுதிநாள், இறுதி நேரத்தின் போது பொலிசார் மேற்கொண்ட கலாட்டாவினால் ஒன்பது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் மாநாடு துயரத்தில் முடிந்தது.
இதனைக் கண்டு தமிழ் மக்கள் கொதிப்படைந்தனர். பொலிஸ் வன்செயலுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எஸ்.கே. சந்திரசேகரா மீதும் அதற்குப் பொறுப்பான யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா மீதும் பெரும் கோபம் கொண்டனர். இந்த நிலையில் சந்திரசேகர மீது திரு. பொன். சிவகுமார் என்ற இளைஞன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டாராயினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை.
பின்பு இவர் தனது அரசியலுக்கான வங்கிக் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட போது பொலிசாரால் துரத்தப்படுகையில் சைனைட் நஞ்சை உட்கொண்டு 1974ஆம் ஆண்டு யூன் 5ஆம் திகதி உயிர்நீத்தார். இது மக்கள் மத்தியில் இரட்டை சோகத்தை உருவாக்கியது. மக்களால் தமிழாராய்ச்சி மாநாட்டில் நிகழ்ந்த துயரை மறக்க முடியவில்லை.
இப்பின்னணியில், 1975ஆம் ஆண்டு யூலை 27ஆம் தேதியன்று அல்பிரட் துரையப்பா மீது பிரபாகரன் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது அவர் கொல்லப்பட்டார். இங்கு தமிழாராய்ச்சி மாநாட்டு துயரத்திற்கு பழிவாங்கப்பட்டதன் மகிழ்ச்சியையும், சிவகுமாரனது மரணத்தின் பின்பான மீட்சியையும் மக்களுக்கு இச்சம்பவம் ஏற்படுத்தியதன் பேரில் பிரபாகரன் மக்கள் மத்தியில் கதாநாயகனாக வளரத் தொடங்கினார்.
மக்களைப் பொருத்தவரையில் இராணுவம் மற்றும் பொலிஸ், இனக் கலவரம் என்பனவற்றின் வாயிலாக தாம் அடைந்த இன்னல்களுக்கான ஒரு நிவாரணியாக ஆயுதப் போராட்டத்தையும் பிரபாகரனையும் பார்த்தனர். இது அவர்கள் அடைந்த துயரத்தின் பிரதிபலிப்பான ஒரு குறியீடாகும். இதனால் மக்கள் பிரபாகரனையும் குறிப்பாக புலிகளையும் பொதுவாக ஆயுதப் போராட்டத்தையும் ஆதரித்தனர்.
ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு ஒப்பிடுகையில் புலிகள் தமிழ் மக்களின் இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதன் மூலம் தம்மை மக்களின் மனங்களில் முன்னரங்கப்படுத்தினர். உதாரணமாக புலிகள் பயன்படுத்திய சொற்கள் தம்பி, அன்னை, அம்மான், மாமா, சித்தி, மாமி, அப்பையாண்ணை, அய்யாண்ணை, தம்பியப்பாஷ போன்ற இரத்த உறவுமுறை சொற்களாகும்.
ஆனால் ஏனைய இயக்கங்கள் மக்களின் இயல்புடன் ஒட்டாத “தோழர்” என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இதில் சரி பிழை என்பதை பற்றி இக்கட்டுரை எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக மக்களின் மனங்களில் எது இடம் பிடித்தது என்பதை மட்டுமே இது பதிவு செய்கிறது. எப்படியோ தமிழ் மக்களின் மனங்களில் புலி இயல்புக்கு முக்கிய மதிப்பிருந்தது என்பது கவனத்திற்குரியது.
இத்தகைய பரிமாணங்களுடன் மக்கள் மத்தியில் வளர்ந்த புலிகள் பிராந்திய அரசியலிலும் கவனத்திற்கு உரியவர்களாகினர். இவ்வகையில் இந்துசமுத்திர அரசியலின் ஒரு புள்ளியாக காணப்பட்ட பிரபாகரனை 2009ஆம் ஆண்டு பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் வீழ்த்தியதன் மூலம் ராஜபக்சக்கள் இந்து சமுத்திர அரசியலில் தனி முக்கியத்துவம் வாய்ந்த புள்ளியாய் மாறினர்.
ஒருவகையில் பிரபாகரன் மைய அரசியலை ராஜபக்சக்கள் சுவிகாரம் எடுத்துக் கொண்டனர். 1980களின் முற்பகுதியில் இருந்து வளர்ந்து வந்த பிரபாகரன் மைய அரசியல் 2009 முள்ளிவாய்க்கால் தோல்வியுடன் ராஜபக்சக்கள் மைய அரசியலாக மாறியது.
புலிகள் களங்களில் வெற்றிகண்டாலும், யுத்தத்தில் தோல்விகண்டனர். இதுபற்றிய மதிப்பீடுகள் அதுவும் விருப்பு வெறுப்புக்களைக் கடந்து மிக ஆழமாக மேற்கொள்ளப்பட வேண்டியவைகளாகும். அத்தகைய மதிப்பீடுகளை மேற்கொள்வதன் மூலம் தான் தமிழ் மக்களின் விடிவுக்கான வழிகளை தேடமுடியும்.
“தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வா தனது அடுத்த கட்டத்திற்கான வழியின்மையை அறிவித்த வெற்றிடத்தில் பிரபாகரன் எழுச்சி பெற்றார்.
1980ஆம் ஆண்டு ஈரோஸ் அமைப்பினால் வெளியிடப்பட்ட முதலாவது “தர்க்கீகம்” என்ற மாதாந்த அரசியல் பத்திரிகையில் தலைப்புச் செய்தி பின்வருமான தலையங்கத்தின் கீழ் எழுதப்பட்டிருந்தது.
“தந்தையின் பின்பு தளபதி தலைவராவாரா?” என்பதே அந்த தலைப்பாகும். இது அன்றைய அரசியல் சூழலில் மிகவும் ஒரு சிறப்பான, மிகவும் ஆழமான ஒரு தலையங்கமாகும். ஆனால் தளபதி அமிர் அதனை நிரூபிக்கவில்லை.
இராணுவ பரிமாணம் வளாச்சியடைந்து வந்த அரசியல் சூழலில், பயங்கரவாத தடைச்சட்டம் உருவாகியிருந்த அரசியல் சூழலில் வாளேந்திய தளபதியைத்தான் மக்கள் வேண்டி நின்றார்கள். இந்த அரசியல் யதார்த்தத்தை இன்றைய நிலையில் வைத்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நல்லாட்சி, நல்லிணக்கம் என்பன கானல் நீராகி அது துப்பாக்கிக் குண்டுகளால் வெளிப்படும் நிலை பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிர்களைக் காவு கொண்ட அரசியல் நீடிக்கும் நிலையில் தமிழ் மக்கள் அதற்கெதிரான குறியீடுகளை தமக்கான சக்தியாக தேடுவார்கள். அதுதான் ஊடகவியலாளர் கே.வி. நந்தனின் குரலில் வெளிப்பட்டிருக்கிறது.
இப்போது அந்த “தர்க்கீகம்” என்ற பத்திரிகையில் வந்திருந்த தலையங்கத்துக்குப் பொறுப்பாக தன்னை ஆக்கிக் கொள்ளவல்ல தலைவன் யார்? இதனை மக்கள் விக்கினேஸ்வரனை நோக்கி எதிர்பார்க்கிறார்கள். இதனை அவர் செய்வாரா அல்லது வேறு யாரும் செய்வார்களா என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு இன்றுள்ள தமிழ்த் தலைவர்கள் முன் உள்ளது.
விலைபோகாத, கண்ணியமுள்ள செயல்திறன் கொண்ட நீண்டதூர பார்வை மிக்க சிறந்த தலைவர்களை தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்றவல்ல எவனோ அவனே வரலாற்று நாயகனாவான்.
இன்றைய பூகோள, புவிசார், அதி உயர் முகாமைத்துவ பலம் கொண்ட உலக அரசியல் சூழலில் இதனை நிறைவேற்றுவதற்கான பணி மிகவம் நுணுக்கமானவும், கடினமானதும் அதேவேளை மேன்மையானதுமாகும்.
காக்கையின் கூட்டில் குயில் முட்டையிட்டு குஞ்கு பொரிக்கும். இங்கு காக்கை கூடுகட்டுவதிலும் ஒரு பொறிமுறையுண்டு, காக்கையின் கூட்டில் குயில் முட்டையிடுவதிலும் ஒரு பொறிமுறையுண்டு. அந்த குயிலின் முட்டையை காக்கை
குஞ்சாக்குவதிலும் ஒரு பொறிமுறையுண்டு.
எப்படியோ காக்கையின் கூட்டில் அதுவும்; காக்கையின் சூட்டில் தன் முட்டையை குயில் குஞ்சாக்கிவிடுகிறது. காக்கையின் உழைப்பு, காக்கையின் அர்ப்பணிப்பு, காக்கையின் தியாகம், காக்கையின் இரையூட்டல் எல்லாம் அதன் மாறானான குயிலுக்கு சேவகமாக அமைந்துவிடுகிறது.
மேற்படி இந்தப் பொறிமுறை அரசியலுக்கும் பொருந்தும். ஈழத் தமிழர்கள் காக்கைகளாய் ஏமாறப் போகிறார்களா இல்லையா என்பதை அவர்களின் அறிவும், ஆற்றலும், ஆளுமையும்தான் நிரூபிக்க வேண்டும்.
“வேட்டைக்காரனின் கண்ணில் உடும்பின் வால் அதனைக் கட்டுவதற்கே” இவ்வாறே தமிழர்களை தமிழர்களால் கட்டிப் போடாத அரசியலை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கான ஆழமான அரசியல் விவேகமும், பொறுப்புமிக்க சமூக உணர்வும், அரசியல் பற்றிய உள்ளார்ந்த அறிவும் அவசியமாகும்.
இப்போது களத்திலும், புலத்திலும் தென்படுவோரில் யார் தமிழ் மக்களின் இரட்கரான அரசியல் தலைவராகப் போகிறார் என்ற கேள்விக்கான பதில் அவர்களின் அர்ப்பணிப்பிலும், முன்னுதாரணத்திலும் அதற்கான செயற்பாட்டிலுமே தங்கியிருக்க முடியும்.
தந்தை செல்வா போன்று தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறி ஓய்வெடுப்பீர்களா? அல்லது அதுக்கும் ஒருபடிமேற் சென்று தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அரசியலில் இருந்து ஓதுங்குவீர்களா? என்று மேற்படி லண்டன் கூட்டத்தில் ஊடகவியலாளர் பராபிரபாவின் தாயார் (பெயர் தெரியவில்லை) திரு.விக்கினேஸ்வரனைப் பார்த்துக் கேட்ட கேள்வியானது அனைத்து தமிழ்த் தலைவர்களையும் பார்த்து கேட்ட கேள்வியாகவே இக்கட்டுரை இங்கு பதிவு செய்கிறது.
இந்தியாவை காந்தி புரிந்திருந்தார். ஆதலால் அவர் துறவிகளினதும் ஏழைகளினதும், பாமரர்களினதும் அரை ஆடையை அணிந்துகொண்டார். கூடவே இந்தியாவின் பல்வேறு மதங்களும் பின்பற்றும் “உண்ணா விரதத்தை” கைக்கொண்டார்.
கறுப்பின மற்றும் தென்னாப்பிரிக்க விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த மண்டேலா சிறைச்சாலையை விடுதலைக்கான ஊர்த்தியாக்கிக் கொண்டார்.
மக்களை நேசிப்பதில் இருந்தும் அதற்கான அர்ப்பணிப்பில் இருந்தும் அதற்கேற்ற அறிவாற்றல் மற்றும் கண்ணியத்தில் இருந்தும் உன்னதமான தலைவர்கள் தோன்றுகிறார்கள் என்பதையே வரலாறு தன் பக்கங்களில் எழுதி வைத்திருக்கிறது.



thanks to tamilwin


வெள்ளி, 28 அக்டோபர், 2016


சம்பந்தனுக்கு வீ. ஆனந்தசங்கரி எழுதிய நீண்ட கடிதம்!








 தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனுக்கு கடிதமொன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
நான் எழுதியிருந்த கடிதங்களில் இது ஐந்தாவதாகும். எனது முன்னைய கடிதத்திற்கு உங்களுடைய அமைதி எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
பொதுவாக எமது மக்களையும் குறிப்பாக இலங்கை அரசாங்கத்தையும் உங்களையும் பாதிக்கின்ற மிக முக்கியமானதென்பதை உங்களால் கவனத்திற்கெடுக்கப்படவில்லை.
2004ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள், அவர்கள் தான் தமிழ் மக்களின் தேசிய தலைவர்கள் என்றும் வெளியிட்டமை பெரும் தவறென இப்போதாவது உணர்வீர்களென நம்புகின்றேன்.
அத் தேர்தல் விஞ்ஞாபனம் பாராளுமன்றத்தில் சில ஆசனங்களை பெற உதவியிருக்கலாம். ஆனால் முழு தமிழ் சமூகத்திற்கும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கள் கற்பனையில் அடங்கா.
நீங்கள் ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி என்பதால் இதன் தார்ப்பரியத்தை உணர்ந்திருக்க வேண்டும்.
வேறு எவரிடமிருந்தும் இது சம்பந்தமாக ஆலோசனையை பெற்றிருக்கக்கூடாது. தாம் ஒரு பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்கி அழைத்துச் செல்லப்படுகின்றோம் என்பதை உணராது நாடும் மக்களும் நன்கு உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
எனது முன்னைய கடிதத்தில் தங்களின் சகபாடியொருவர் ஒட்டாவா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பை அறியாமையால் மிகச்சாதாரணமாக எடுத்துக்கொண்டதை சுட்டிக்காட்டியிருந்தேன்.
இத் தீர்ப்பை நான் பாரதூரமாகவே கருதுகிறேன். ஏனெனில் இத் தீர்ப்புத்தான் தொடர்ந்து வரவிருக்கும் மகிழ்ச்சி தாராத சம்பவங்களுக்கு ஆரம்பமாக அமைகிறது.
அது மேலும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு நாடுகளில் நடக்கின்ற அகதி அந்தஸ்த்து கோரிக்கை வழக்குகளை பாதிக்கும் என்பது மட்டுமல்ல ஏனையோருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பெரும் கஸ்டத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.
தயவு செய்து விழித்தெழுந்து உங்களை சுற்றி என்ன நடக்கின்றதென்பதை பாருங்கள்.
தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றங்களில் பதவி வகித்தவர்கள் போட்டியிட உள்ளவர்கள் அனைவரும் தமது உறுப்பினர் அங்கத்துவத்தை இலங்கை தமிழரசு கட்சியிலிருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் வாபஸ் பெறுமாறு எனது ஆலோசனையையாக தெரிவிக்கிறேன்.
இந்த அமைப்புக்கள்; விரைவில் சர்வதேசத்தினால் பயங்கரவாத அமைப்புக்களென பிரகடனப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
திரு. சம்பந்தன் அவர்களே, தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த மோசமான அறிக்கையை வெளியிடும்போது மறைமுகமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிவருமென என்றாவது உணர்ந்தீர்களா? நடந்தவை ஒருபுறம் இருக்க இந்த பிரகடனம் செய்யப்பட்ட நாளிலிருந்து விடுதலைப் புலிகள் இறுதியுத்தத்தில் மே 18, 2009 தோற்கடிக்கப்படும் வரை ஏறக்குறைய ஐநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும் ஆயிரத்து ஐநூற்றுக்கு மேலானோர் காயப்பட்டும் உள்ளனர்.
நான் இதனை ஒரு வேடிக்கையாக கருதவில்லை. ஆனால் இதனையொரு பாராதூரமான விடயமாக கருதும்படி கேட்டுக்கொள்கிறேன்.
அதிகமானவர்கள் தெரிவாகியிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்தவர்களே.
தயவு செய்து இவர்கள் அனைவரும் இலங்கை தமிழரசு கட்சியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கத்துவம் பெற்றவர்களாவர்.
முன்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் அடையாளத்தையும் தன் நாணயத்தையும் மிக வேகமாக இழந்து வருவதால் அதனை கைவிடும்படி கேட்டிருந்தேன்.
சாத்வீக கொள்கைக்கு கட்டுப்பட்டிருந்த இலங்கை தமிழரசு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை என்றோ ஒருநாள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படும் என்று எண்ணிய எனது கணிப்பு கனடா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேறு நாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு எமது நீதிமன்றங்களை கட்டுப்படுத்தாது எனக் கூறுவீர்கள் என்று எனக்குத் தெரியும்.
ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் இத்தீர்ப்பு பொருத்தமாக இருந்தால் எந்த வழக்கிலும் எந்த நீதிமன்றத்திலும் எந்த நாட்டிலும் உதாரணமாக உறுதிப்படுத்தப் பிரயோகிக்கப்படலாம்.
உங்களுக்கு விருப்பம் இல்லாது போனாலும் சில விடயங்கள் உங்களுடைய கவனத்திற்கு கொண்டுவருவதற்கு வருந்துகிறேன்.
60 ஆண்டுகளுக்கு மேல் நான் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தும் உங்களைப் போன்று கஷ்டங்கள் எதுவுமில்லாமல் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாக்கியசாலியல்ல.
தந்தை செல்வா இறந்து மிகக் குறுகிய காலத்திற்குள் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு மிக அதிகப்படியான வாக்குகளால் பெரும் வெற்றியீட்டினீர்கள்.
ஆனால் நான் கிளிநொச்சித் தொகுதியில் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்துசென்று மக்களை சந்திப்பதற்காக சுற்றித்திரிந்து பாராளுமன்றம் செல்வதற்கு பத்து ஆண்டுகளாகின.
ஆகையினால் பாராளுமன்ற பதவி என்னால் வருந்தி பெற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் உங்களுக்கு ஓர் ஆசீர்வாதம். தற்போது அப்பதவியை நீங்கள் நினைப்பதிலும், பார்க்க கூடுதலான பெறுமதியாக நினைக்கின்றேன்.
மக்களை ஒன்றிணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் கொண்டுவர நாம் எந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பது பலருக்குத் தெரியாது.
இந்த பணிக்கு உங்களுடைய பங்களிப்பு எதிலும் கிடைக்கவில்லை. ஆனால் நாம் அதனை அடைய எமக்கு பல ஆண்டுகளும் பல தியாகங்களும் செய்ய வேண்டியிருந்தன.
பேராசை பிடித்த அரசியல்வாதிகள் சிலரின் உதவியோடு தமிழர் விடுதலைக் கூட்டணியை சிதைக்க முக்கிய காரணியாக நீங்கள் இருந்தீர்கள்.
தமிழர் விடுதலைக் கூட்டணி எவ்வாறு உருவாகியது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.
தலைசிறந்த பெரும் தமிழ் தலைவர்களாகிய கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோரால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட சிறந்த அந்தக் கட்சிக்கு நீங்கள் செய்த தீங்கை எண்ணி வருந்துகிறேன்.
நீங்கள் உங்கள் கௌரவத்தை இப்பெரும் கட்சியை ஆரம்பித்தவர்களுக்கே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் உங்களை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களையே நீங்கள் அவமதித்துள்ளீர்கள்.
இவ்விரு பெருந்தலைவர்களும் மலையகத் தமிழர் தலைவர் கௌரவ எஸ்.தொண்டமான் அவர்களை இணைத்துக்கொண்டதன் பின்னர் இம் மூவரும் முக்கூட்டுத் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழரசு கட்சியையோ தமிழ் காங்கிரஸ் கட்சியையோ மீளப் புதுப்பிக்கும் எண்ணம் சம்பந்தப்பட்ட அவர்களுக்கு இருக்கவில்லை.
காரணம் தமிழர் விடுதலைக் கூட்டணிதான் தமிழ் மக்களின் பாதுகாவலனாகவும் அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தலை கொடுக்க வேண்டும் என்றே தீர்மானித்திருந்தனர்.
ஒட்டாவா சமஷ்டி நீதிமன்றத்தின் தீர்ப்பின் 37வது பந்தியின் பொருத்தமான பகுதியை கீழே தருகின்றேன்.
'தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லாத் தமிழர்களையும் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ஏனெனில் அது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவதால்தான்.
நான் கவனத்தில் எடுப்பது திரு.சம்பந்தன், அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விலகிச் சென்றது தமிழ் தேசிய கூட்டமைப்பையும் இலங்கை தமிழரசு கட்சியையும் வழி நடத்துவதற்கே.
ஏனெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப் புலிகளுக்கு தீவிரமாக ஆதரவு வழங்க தயக்கம் காட்டியமையாலேயே'
திரு.சம்பந்தன் அவர்களே இதன் காரணமாகத்தான் நீங்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தீர்களா? அல்லது கூடுதலாக சில ஆசனங்களை உங்கள் கட்சிக்கு பெற வேண்டும் என்பதற்காகவா?.
உங்களுடைய நடவடிக்கையால் 2004ம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய 12 ஆண்டுகள் பாராளுமன்றத்தின் ஊடாக எனது நேர்மையான, விசுவாசமான சேவைகளை, விடுதலைப்புலிகளை தவறாக வழிநடத்தி மக்களுக்கு கிடைக்காது செய்தீர்கள்.
இந்த காலகட்டத்தில் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எவற்றையும் செய்யாது காலத்தை வீணடித்தீர்கள்.
மக்களை பாதுகாப்பதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தும் அவைகளை புறந்தள்ளி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்திற்கும் பகுதியாகவோ முற்றாகவோ பொறுப்பேற்க வேண்டிய நிலைமைக்கும் ஆளாகியுள்ளீர்கள்.
இறுதியாக இந்த விடயத்தை மிக சிறிய விடயமாக கருதி புறக்கணித்து விடாதீர்கள் உடன் நடவடிக்கையெடுக்க தவறுவீர்களேயானால் உங்களுடைய எதிர்கட்சித்தலைவர் பதவி பறிபோவதற்கு வாய்ப்பளிப்பதோடு தேசிய அரசாங்கமும் மிகுந்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார்.
எனது பணிவான ஒரு வேண்டுகோள் திரு வீ ஆனந்த சங்கரி ஐயாவுக்கு இந்த 
 தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இதை கழட்டி விட்டுட்டு கடிதம் எழுதுங்கோ 



nanri tamilwin.

திங்கள், 24 அக்டோபர், 2016

தமிழினி கொடுக்கும் பூங்கொத்து!

தமிழினி கொடுக்கும் பூங்கொத்து!: இலங்கையில் போருக்குப் பின்னும் நீடிக்கும் கசப்பான சூழலின் இடையே சிறு பூங்கொத்தை நீட்டியிருக்கிறது ஒரு புத்தகம்.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

நாயும் பாஷையும்


நாயும் பாஷையும்



படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...
ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....
காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....!
(உதாரணத்திற்க்கு..... யானைக்கு ..சமஸ்க்கிருத மொழி விளங்கும் என்று பலரும் சொல்ல கேட்டதுன்டு அதைப்போல....
ஒரு ஹிந்திகாரன் வீட்டில் வளரும் நாய்
பைட்டோ பைட்டோ என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)
எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய
முடிவெடுத்தனர்
எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60 மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட....
அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....
கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......
அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....
அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்
ஏற்பாடு செய்தது
விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது
உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ...
உங்களுக்கு என்ன வேண்டும்
கேளுங்கள் வழங்கபடும் என்றனர்....
பணம் வேண்டுமா.....?
விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?
என்று...
அவர் மறுத்துவிட்டார்...
எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...
அதை கேட்டு அங்கிருந்த
அனைவருக்கும் ஆச்சர்யம்....
சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....
ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்....
அதற்க்கு அவர்...சொன்னார்....
இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....
அவள் சொல்வாள்....
"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...
இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு.."...
அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு சொன்னவுடன்
அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
ஹாஹாஹாஹா......
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்
நன்றி புரட்ச்சி FM 

சனி, 22 அக்டோபர், 2016

பின்லாந்து கல்வி முறை


உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...
😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...
😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...
👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...
👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...
👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...
👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...
👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...
👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...
👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...
👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...
💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...
👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...
👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...
👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...
👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...
👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...
👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...
👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...
👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...
👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...
👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...
😳"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...
அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...
😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...
👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...
👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...
👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...
👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...
👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...
👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...
👏மதிக்கத்தக்க மனநிலை.
👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...
👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...
👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...
அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..
👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...
👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...
👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...
👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...
👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...
👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...
👏👏👏👏👏👏👏👏
இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...
பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...
குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...
முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...
ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….
01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.
02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.
03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.
04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.
05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.
06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.
07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.
09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.
10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.
11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.
12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.
13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.
14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.
15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...
முதலில் நாம் மாற வேண்டும்.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...
மாற்றம் ஒன்றே மாறாதது...
நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.
பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!
நன்றிபுரட்ச்சி  FM

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நிரந்தர வாழ்வையே நாடுவோம்!

நிரந்தர வாழ்வையே நாடுவோம்!




தாமரைப் பூ ரோஜாவைப் பார்த்து
"உன் அழகே அழகு!"
என்ன ஒரு நறுமணம்
எல்லை முழுதும்  நறு
மணம்  பரவிக்கிடக்கிறது கண்களுக்கு இதமாக
காண்பவர் கண்களையும் வசீகரிக்கிறாய் ,இதனால்தான் உன்னைத் தேவர்களும் மனிதர்களும் விரும்புகிறார்கள்"என்று புகழ்ந்து தள்ளியது.


ரோஜா சிரித்துவிட்டுச் சொன்னது."எனக்கு இவ்வளவு அழகு மணம் இருந்து
என்ன பயன்?அற்ப ஒரு நாள் வாழ்வு,மறு  நாளே  என் மணமும் அழகும்
வாடி வதங்கி அழிந்து விடுகின்றது.அனால் நீ அப்படியல்லவே வாடாதவள்
அழியாதவள் ஆண்டவன் திருவடியை அலங்கரிக்கப் பிறந்தவள் உன் பெருமையோ,பெருமை" என்று பதில் கூறியது.

#ஈசாப் கதைகள்#  

வந்தோரை வாழ வைத்த தமிழகம்!

வந்தோரை  வாழ வைத்த தமிழகம்!
,
இந்த வீடியோவைப் பாருங்க  பணத்தின் அருமை புரியும்,தானாடா விட்டாலும் தன்  தசையாடும் என்பார்கள் தமிழனின் பண்புக்கு இது ஒரு சிறிய எடுத்துக் காட்டு.தன்  கஷ்டத்தை விடவும் தன்  இனத்தின் தேவைகளை உணர்வதென்பதை விடவும் உடனடி நிவாரணம் என்பது கடவுளாலும் முடியாது உதாரணம் முள்ளிவாய்க்கால். 

சனி, 15 அக்டோபர், 2016

உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!




உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோயின் 12 அறிகுறிகள்!!: உடன் பகிர்ந்து உறவுகளுக்கு உதவுங்கள் சிறுநீரக நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுப்பிடிப்பது மிகவும் முக்கியமாகும். அப்படி இல்லையென்றால...


புதன், 12 அக்டோபர், 2016

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..! - வில்லங்க செய்தி

இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..! - வில்லங்க செய்தி



உலகத்தில் இமயம் பெரிது
கண்டுபிடிப்பு!
 உலகம்,  இருப்பதில்  பெரிது
பொது அறிவு !

ஆனாலும்,
ஆகாயம் அதைவிடப் பெரிது
ஆன்மீகம்!

என்ன பெரிதாக இருந்தால்
எனெக்கென்ன?

என்
அம்மாவின் முன்னால்
இவையெல்லாமே
சிறிசு.