யார் யாரோ ஆயுதம் வைத்திருக்கிறார்கள் -நானும் ஓர் ஆயுதம் வைத்திருந்தால் என்ன குறை ? இலங்கையில்தான் இதை பாவித்துப் பார்க்கலாம் --போடுங்க இப்பவே ஒப்பந்தம் ஐ .நாவில் பார்க்கலாம் மீதிய
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
வெள்ளி, 26 ஜூன், 2009
எழுத்தாளர் சுஜாதாவின் 18 கேள்விகள்
இலவசம் வேண்டாம்
வியாழன், 25 ஜூன், 2009
மட்டு மாநகர்
இறைவனாக இருக்கின்றேன்.
வெள்ளி, 5 ஜூன், 2009
சவூதியில் இருந்து கடிதம் !
அன்புள்ளவளுக்கு !...... வணக்கம்.
நடப்பவைகளை நான் வந்து சொல்வேன்—கொஞ்சம் நாளை எண்ணிக்கொள் நான் அங்கு வருவேன். வேலையா இது? வெட்கம் கெட்டவர்கள்!—சோயாக் கூளைக் குடித்து கும்மாளம் அடிக்கிறார்கள்
நான் வந்த வேளையோ இல்லை -- நாம் நலிந்து போகும் நேரமோ பாவி போன இடமெல்லாம் --பெரிய பள்ளமும் திட்டியும் போல
சம்பளம் தருவதற்கு பணமும் இல்லை –நல்ல சாப்பாடு தருவதற்கும் இங்கு யாருமில்லை வெளியே இதைச் சொன்னால் –மிக வெட்கம் என்னக்கும் இல்லை
கடவுளே இதைக் கேளுங்கள் என்றால் –இங்கு கலாஸ் ஓடிப் போய்விடு என்கிறார்கள் யாரைச் சொல்லி நானழுவேன் --இனி யா அல்லாஹ் நானும் இப்போ தொழுவேன்
பாடிப் பறந்து திரிந்த என்னை –இந்த பாழும் நாட்டில் பன்னாடை ஆக்கிவிட்டார்கள் கானல் நீரைக் கண்ட மான் போலாகி -- மெய் களைத்துக் கதி கலங்கித் தவிக்கின்றேன்
புத்தி கெட்டுப் பேதலித்து , பேராசை கொண்டு –கையில் வைத்திருந்ததையும் வள்ளிசாக விற்றுவிட்டு வெறுங்கையை வீசி விரைந்து வந்துவிட்டேன் –நெஞ்சு பொறுக்குதில்லை நான் நடத்தியதை நினைத்து
ஏரு பிடித்தேனும் இருவருக்கும் நான் –ஊரில் ஒருபிடிச் சோற்றுக்கு உண்மையாய் உழைப்பேன் வளவை ஈடு வைத்தாலும் பரவாயில்லை –வரும் நாளில் நாடு வருவதற்கு வழி செய்துவிடு
உண்மையாகவே இது எனது அனுபவந்தான்.ஒரு புறம் ஆயுதப் படைகளின் கெடுபிடி ,மறுபுறம் ஆயுதம் ஏந்தியவர்களின் வரி வசூலிப்பு, இரண்டும் கெட்டான் நிலையில் தொழில், உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ் நிலையொன்று வந்தபோது, இருந்ததையெல்லாம் விற்றுச்சுட்டு அங்கே போனால் ஆறு மாதம் சம்பளமே தரவில்லை. சொன்ன வேலையும் இல்லை. சம்பளமும் இல்லை. எப்படி இருக்கும். .வீட்டில் இருந்து கடிதம் டெலிபோன் எல்லாம் வரும் ,என்ன பதில் சொல்வது.கதைப்பதற்கு அரபு தெரியாது.அவர்களுக்கோ அரபியைவிட வேறு எதுவும் விளங்காது.இறைவா என்ன கொடுமை .அந்தக் கொடுமையின் பிரதிபலிப்புத்தான் இந்தச் சவூதிக் கடிதம்.
முடிந்தால் ஒரு வரி எழுதுங்கள். வழ்க்கம்போல உங்கள் பிரதிபலிப்பை நான் அறிந்து கொள்வதற்காகத்தான்