புதன், 30 மார்ச், 2011

இலண்டன் மாப்பிள்ளை!




 நகைச் சுவையுடன் நல்ல அறிவையும் சொல்லும் பாடல் கேட்டுப் பாருங்க,பாடியவர் நித்தி கனக ரத்தினம், 

வெள்ளி, 25 மார்ச், 2011

மின் அஞ்சலில் அதிர்ஷ்டம்


முதலில் இந்த மின் அஞ்சலைப் படியுங்க, எனக்கு மட்டும் ஏன் இப்படி பரிசு மலையாகக் கொட்டுது என்றே தெரியவில்லை, குபேரன் என்னைத்தான் அவன் வாரிசாக நியமித்து விட்டன்போல் தெரிகிறது, உங்களுக்கும் இப்படி வந்திருக்கா, பாருங்க.கூகுளின் ஜி மெயிலுக்கு இவங்க,பணம் தரப் போறாங்க.
உங்க மின் அஞ்சலையும் பாருங்க, நீங்களும் ஒரு கோடீஸ்வரனாக மாற வாய்ப்புண்டு. 

வியாழன், 24 மார்ச், 2011

இன்றைய கூகுளின் தலையங்கம் !

இயற் பெயர் எரிக் வெய்சு,பிறந்தது, 24 மார்ச்சு 1874; புடாபெஸ்ட்,ஆஸ்திரியா.அங்கேரியில் பிறந்த ஒரு மாயக்கலை வல்லுனர் ஆவார். இவர் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்கட்டிவித்தைகளைச் செய்வதில் வல்லவர் ஆவார்.இவரை கௌரவிப்பதற்காக இன்றைய கூகுளின்  தலையங்கத்தில் இடம் பெற்றுள்ளார்.இவர் பார்த்த தொழில்கள்,மாயக்கலை வல்லுநர்,நடிகர்,வரலாற்றாளர்,படத் தயாரிப்பாளர்,வாநூர்த்தியோட்டி.
இவரின் பிரபல்யமான பெயர்,

Harry Houdini

ஆரி ஔதினி


 இவரின் வாழ்க்கை வரலாறை அறிய.









இறப்பு: 31 அக்டோபர் 1874 டெட்ராய்ட்மிச்சிகன்

புதன், 23 மார்ச், 2011

குறைந்து வரும் தமிழ் இணைய வாசகர்கள்.


போகிற போக்கைப் பார்த்தால்,மெல்லத் தமிழ்,இனிச் சாகும் என்பதை மீண்டும் ஒரு முறை,நினைவுபடுத்த வேண்டியுள்ளதே என்பதையே இந்த முடிவுகள் வெளிக் காட்டுகிறது.
தமிழ் பதிப்புகளை, இணையத்தில் வெளியிடும்,நிறுவனங்களின் தரவுகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையில்,தமிழ் வாசகர்களின் வாசிப்புத் தன்மை குறைவடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்ற வருடத்தில் மட்டும்,தினசரிப் பதிப்புகளின் வாசகர்கள்  7.62 லட்சம்  
பேர் சென்ற ஆண்டைவிட தினசரிப் பதிப்புக்களின் பக்கம் காலடி எடுத்து வைக்காமல்,இப் பதிப்புகளின் வாசகர்களின் வரவு குறைவடைந்து உள்ளதாக,புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளது.  


இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் முதல் இடத்திலிருக்கும்  பத்திரிகையில்,தினத்தந்தி முதலிடத்தில் இருந்தாலும் முந்திய காலங்களில்,முதல் மூன்று தவணைகளில் இருந்த இணைய வாசகர்களை,இழந்துள்ளது 

இணைய வாசகர்களின் வாரப் பத்திரிகைகளான, குமுதம்,ஆனந்த விகடன்,
குங்குமம்,போன்றவைகளின் இணைய வாசகர்களின் வாசிப்புப் போக்கும்,
குறைவடைந்து செல்வதாக,இந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எல்லாவற்றையும் இலவசமாக்க நினைக்கும் தமிழக அரசு, இதற்கு ஒரு இலவச திட்டம் கொண்டு வந்து,ஆமா லப்டப் மூலம் தமிழ் வாசிப்புப் பழக்கத்தை கொண்டுவந்து இன்னும் ஓர் நான்கு வருடம் ஆட்சியைத் தக்க வைக்கலாம்  
முழுமையாக வாசிக்க இங்கே செல்லுங்கள்.

செவ்வாய், 22 மார்ச், 2011

பயங்கரமான பதிவு!

பயங்கரமான பதிவு!

எவரையும் வாசிக்கச் சொல்லவில்லை,நீங்கள் தைரியமானவராக இருந்தால்,
உங்கள் உடல் நிலை இதற்கு இடம் கொடுக்கு மென்றால்,இந்த லிங்கில் சென்று 
இந்த வலைப் பதிவைப் பாருங்கள்,வாசிக்காதீர்கள்.படத்தை மாத்திரம் பாருங்கள்.இன்னும் நான் தெளியவில்லை இந்த அகோரத்தைப் பார்த்து.தொடர 
விரும்புபவர்கள் இங்கே செல்லுங்கள்  வலைப் பதிவைத் திறந்ததும் கேட்கும் சத்தமே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. 

ஞாயிறு, 20 மார்ச், 2011

சிந்திய தமிழ்.



இதுதான்  நீதி.

போராடியவன்,
சிறையில்,
கைதியாக.

போராடச் 
சொன்னவர்கள்,
அரச சபையில்,
அதிதிகளாக.

பார்த்திருந்தவர்களோ,
பாவம்,
அகதிகளாக,
தாய் நாட்டில்.


கருணாநிதி
பெயரிலும் நிதி  
படைப்பதும் நிதி 
இலங்கைத் தமிழருக்கு 
மட்டும் செய்வது,
இவர் அநீதி.
கஷ்டம் வரும் போதெல்லாம்,
கைகொடுப்பது,
இலங்கைத் தமிழன்.
ஜெயலலிதா 
ஜெயம் இவர் சொந்தம்,
மூன்று மூளைக்குச் 
சொந்தக்காரர்.
மூன்றும் சேர்ந்து 
வேலை செய்வதால்,
வெற்றியில் கிடைப்பது,
தோல்வியில் மறைந்து விடும்.
அன்பை பகையாக்கும்,
அளவிடமுடியச் சக்திக்குச்
 சொந்தக்காரர்.


மகிந்த ராஜ பக்ச 
சிங்கள  மக்களின்
ரட்சகன்.
சிக்கிய மக்களுக்கு 
ராட்சசன்.
மேல் நாட்டின் 
வேண்டா விருந்தாளி.
ஆசியாவின் 
அமைதிப் 
பூங்கா. 
சொன்னதையும் செய்வார்,
சொல்லாததையும் செய்வார்.
தமிழ் மக்களின்,
கண்ணீர் இவர்
சொத்து.

காதல் பரிசு.
உன் பிறந்த நாளுக்கு,
அன்று, நான் தந்த பரிசு,
வாங்கும்போது,
சொன்னாய்,
"என் உயிரிலும் மேலாய்,
இதை நான் மதிப்பேன்."

திருமண நாள் உனக்கு,
இன்று,
தெருவிலே கிடந்தது,
நான் தந்த,
பரிசு மட்டுமா,
நானுந்தான். 




தமிழன் 

இந்தியாதான் இவனுக்கு,
எல்லாம்.
இந்த இனத்துக்கு,
எமனே,
இந்தியாதான்.





வெட்கம் 
உலகை வென்று,
ஒரு குடையில்,
ஆண்டு.
இன்று,
ஆள்பவருக்கு,
ஒரு குடை,
பிடிப்பது.

அமைதி 
இலங்கையில் அமைதி 
இருப்பவர்கள் எல்லோரும் 
சமாதியானால்தான்
வரும்,
 அமைதி.


குறை?
ஆண்ட  பரம்பரை,
மீண்டும் ஒரு முறை,
ஆளநினைப்பதில்,
என்ன குறை?

ஆண்டபரம்பரையில்,
வந்தவர்கள்,
குறுக்கே நிற்பதுதான்,
பிரச்சினை.  



சனி, 19 மார்ச், 2011

பூமிக்கு அருகில் சந்திரன்.


சோதிட சாஸ்திரத்தில் சந்திரனின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.சந்திரன்
வழமையான தூரத்தில் இருக்கும் போது,கடலில் ஏற்படும் மாற்றங்களை,நாம் 
கண் கூடாகக் காண்கிறோம்.பௌர்ணமி தினத்தில் கடற்கரையை போய்த் 
தரிசித்தவர்களுக்குத் தெரியும்,கடலின் சீற்றம் எப்படி இருந்தது என்பது பொதுவாக பூரணை தினங்களில் கடலை,நம்பி வாழும் மீனவர்கள் கூட 
கடலுக்குச் செல்வதில்லை,காரணம் கடலின் சீற்றம்.இது வழமையான பூரணை 
நாட்களில் இலங்கை, இந்தியாவில் இருக்கும் மக்களின் நம்பிக்கை.இந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நாள்,பூமியில் இருப்பவர்களுக்கு ஒரு 
விசேடமான நாளாகத்தான் இருக்கும். இது சோதிட சாஸ்த்திர ரீதியாக 
வெளியிடப்பட்ட கருத்தும் கூட,நமது சோதிட நிபுணர்கள் சொல்வதை யாரும் 
நம்ப வேண்டாம், அமெரிக்காவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவர் கூறியதையும் 
பாருங்கள்.இது இன்றைய பிரித்தானியா  டெய்லி மெயில் பத்திரிகையில் 
வந்த ஒரு விளக்கம்.இதை இவர் 1980 களில் இப்படியான சுப்பர் மூன் வந்த நேரத்தில் எழுதியது.இதைப் படிக்க நமது வகுப்பறை வாத்தியாரின் வகுப்பில் 
சொல்லியிருப்பதைப் படிக்க,இங்கே போகவும். 

விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்பதை கீழ் வரும் காணொளி விளக்குகிறது 
எது சரி என்பதை நாம்தான் தீர்மானிக்கப்  போகிறோம் எப்போது நாளைக் 
காலையில்.அலைகளுக்கும் சந்திரனுக்கும் தொடர்பிருப்பதை ஒத்துக் கொண்டுள்ளவர்கள்,நில நடுக்கம்,எரிமலை வெடிப்பு என்பவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை .இதைப் படிக்க  காணொளியைப்    பார்க்க இதற்கு முந்திய 
இடுகைக்குச் செல்லவும்.  

Do People Act Odd When the Moon Is Full?


வெள்ளி, 18 மார்ச், 2011

தண்ணீர் அடிக்கும் ஜப்பான்....

அணு உலையைக் குளிரவைக்க தண்ணீர் தெளிக்கும் ஜப்பான்.அவசியம் ஏற்பட்டால்,அமெரிக்க உதவியை நாடவும் திட்டம்.காணொளியைப் 
பார்க்கவும்.
The Efforts to Cool Down the Nuclear Reactor

கிழக்குமாகான (மட்டக்களப்பு மாவட்டம்) உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் -2011


ஏறாவூர் U .C ..தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக .    

ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------02  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -03 ----------------01   
அங்கத்தவர்
 

ஓட்டமாவடி P .S..தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக 

ஐக்கிய மக்கள் கூட்டணி --------------07 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -03 ----------------------01   
அங்கத்தவர்
தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் -௦௦00
இலங்கைத் தமிழரசுக் கட்சி----------௦௦00

காத்தான்குடி U .C .
.தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக .

ஐக்கிய மக்கள் கூட்டணி --------------06 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -01 ----------------------02   
அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி ------------------௦௦00

ஏனைய இடங்களில் தேர்தல் நடை பெற வில்லை.