செவ்வாய், 22 மார்ச், 2011

பயங்கரமான பதிவு!

பயங்கரமான பதிவு!

எவரையும் வாசிக்கச் சொல்லவில்லை,நீங்கள் தைரியமானவராக இருந்தால்,
உங்கள் உடல் நிலை இதற்கு இடம் கொடுக்கு மென்றால்,இந்த லிங்கில் சென்று 
இந்த வலைப் பதிவைப் பாருங்கள்,வாசிக்காதீர்கள்.படத்தை மாத்திரம் பாருங்கள்.இன்னும் நான் தெளியவில்லை இந்த அகோரத்தைப் பார்த்து.தொடர 
விரும்புபவர்கள் இங்கே செல்லுங்கள்  வலைப் பதிவைத் திறந்ததும் கேட்கும் சத்தமே ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. 

ஞாயிறு, 20 மார்ச், 2011

சிந்திய தமிழ்.



இதுதான்  நீதி.

போராடியவன்,
சிறையில்,
கைதியாக.

போராடச் 
சொன்னவர்கள்,
அரச சபையில்,
அதிதிகளாக.

பார்த்திருந்தவர்களோ,
பாவம்,
அகதிகளாக,
தாய் நாட்டில்.


கருணாநிதி
பெயரிலும் நிதி  
படைப்பதும் நிதி 
இலங்கைத் தமிழருக்கு 
மட்டும் செய்வது,
இவர் அநீதி.
கஷ்டம் வரும் போதெல்லாம்,
கைகொடுப்பது,
இலங்கைத் தமிழன்.
ஜெயலலிதா 
ஜெயம் இவர் சொந்தம்,
மூன்று மூளைக்குச் 
சொந்தக்காரர்.
மூன்றும் சேர்ந்து 
வேலை செய்வதால்,
வெற்றியில் கிடைப்பது,
தோல்வியில் மறைந்து விடும்.
அன்பை பகையாக்கும்,
அளவிடமுடியச் சக்திக்குச்
 சொந்தக்காரர்.


மகிந்த ராஜ பக்ச 
சிங்கள  மக்களின்
ரட்சகன்.
சிக்கிய மக்களுக்கு 
ராட்சசன்.
மேல் நாட்டின் 
வேண்டா விருந்தாளி.
ஆசியாவின் 
அமைதிப் 
பூங்கா. 
சொன்னதையும் செய்வார்,
சொல்லாததையும் செய்வார்.
தமிழ் மக்களின்,
கண்ணீர் இவர்
சொத்து.

காதல் பரிசு.
உன் பிறந்த நாளுக்கு,
அன்று, நான் தந்த பரிசு,
வாங்கும்போது,
சொன்னாய்,
"என் உயிரிலும் மேலாய்,
இதை நான் மதிப்பேன்."

திருமண நாள் உனக்கு,
இன்று,
தெருவிலே கிடந்தது,
நான் தந்த,
பரிசு மட்டுமா,
நானுந்தான். 




தமிழன் 

இந்தியாதான் இவனுக்கு,
எல்லாம்.
இந்த இனத்துக்கு,
எமனே,
இந்தியாதான்.





வெட்கம் 
உலகை வென்று,
ஒரு குடையில்,
ஆண்டு.
இன்று,
ஆள்பவருக்கு,
ஒரு குடை,
பிடிப்பது.

அமைதி 
இலங்கையில் அமைதி 
இருப்பவர்கள் எல்லோரும் 
சமாதியானால்தான்
வரும்,
 அமைதி.


குறை?
ஆண்ட  பரம்பரை,
மீண்டும் ஒரு முறை,
ஆளநினைப்பதில்,
என்ன குறை?

ஆண்டபரம்பரையில்,
வந்தவர்கள்,
குறுக்கே நிற்பதுதான்,
பிரச்சினை.  



சனி, 19 மார்ச், 2011

பூமிக்கு அருகில் சந்திரன்.


சோதிட சாஸ்திரத்தில் சந்திரனின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.சந்திரன்
வழமையான தூரத்தில் இருக்கும் போது,கடலில் ஏற்படும் மாற்றங்களை,நாம் 
கண் கூடாகக் காண்கிறோம்.பௌர்ணமி தினத்தில் கடற்கரையை போய்த் 
தரிசித்தவர்களுக்குத் தெரியும்,கடலின் சீற்றம் எப்படி இருந்தது என்பது பொதுவாக பூரணை தினங்களில் கடலை,நம்பி வாழும் மீனவர்கள் கூட 
கடலுக்குச் செல்வதில்லை,காரணம் கடலின் சீற்றம்.இது வழமையான பூரணை 
நாட்களில் இலங்கை, இந்தியாவில் இருக்கும் மக்களின் நம்பிக்கை.இந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நாள்,பூமியில் இருப்பவர்களுக்கு ஒரு 
விசேடமான நாளாகத்தான் இருக்கும். இது சோதிட சாஸ்த்திர ரீதியாக 
வெளியிடப்பட்ட கருத்தும் கூட,நமது சோதிட நிபுணர்கள் சொல்வதை யாரும் 
நம்ப வேண்டாம், அமெரிக்காவிலுள்ள பிரபல சோதிடர் ஒருவர் கூறியதையும் 
பாருங்கள்.இது இன்றைய பிரித்தானியா  டெய்லி மெயில் பத்திரிகையில் 
வந்த ஒரு விளக்கம்.இதை இவர் 1980 களில் இப்படியான சுப்பர் மூன் வந்த நேரத்தில் எழுதியது.இதைப் படிக்க நமது வகுப்பறை வாத்தியாரின் வகுப்பில் 
சொல்லியிருப்பதைப் படிக்க,இங்கே போகவும். 

விஞ்ஞானிகளின் கருத்து என்ன என்பதை கீழ் வரும் காணொளி விளக்குகிறது 
எது சரி என்பதை நாம்தான் தீர்மானிக்கப்  போகிறோம் எப்போது நாளைக் 
காலையில்.அலைகளுக்கும் சந்திரனுக்கும் தொடர்பிருப்பதை ஒத்துக் கொண்டுள்ளவர்கள்,நில நடுக்கம்,எரிமலை வெடிப்பு என்பவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை .இதைப் படிக்க  காணொளியைப்    பார்க்க இதற்கு முந்திய 
இடுகைக்குச் செல்லவும்.  

Do People Act Odd When the Moon Is Full?


வெள்ளி, 18 மார்ச், 2011

தண்ணீர் அடிக்கும் ஜப்பான்....

அணு உலையைக் குளிரவைக்க தண்ணீர் தெளிக்கும் ஜப்பான்.அவசியம் ஏற்பட்டால்,அமெரிக்க உதவியை நாடவும் திட்டம்.காணொளியைப் 
பார்க்கவும்.
The Efforts to Cool Down the Nuclear Reactor

கிழக்குமாகான (மட்டக்களப்பு மாவட்டம்) உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் -2011


ஏறாவூர் U .C ..தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக .    

ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------02  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -03 ----------------01   
அங்கத்தவர்
 

ஓட்டமாவடி P .S..தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக 

ஐக்கிய மக்கள் கூட்டணி --------------07 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -03 ----------------------01   
அங்கத்தவர்
தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் -௦௦00
இலங்கைத் தமிழரசுக் கட்சி----------௦௦00

காத்தான்குடி U .C .
.தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக .

ஐக்கிய மக்கள் கூட்டணி --------------06 அங்கத்தவர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் ------------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -01 ----------------------02   
அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி ------------------௦௦00

ஏனைய இடங்களில் தேர்தல் நடை பெற வில்லை.

கிழக்கு மாகாண (திருகோண மலை மாவட்டம்) உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் -2011


திருகோணமலை U .C .தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக
 

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---06  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------02 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
மக்கள் விடுதலை முன்னணி -01 அங்கத்தவர்.

மூதூர் P .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---03  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------07 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
 
வெருகல் P .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---05  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------01 அங்கத்தவர்
தமிழ் மக்கள் விடுததலைப் -- -01 அங்கத்தவர்.

கிண்ணியா U
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

இலங்கைத்  தமிழரசுக் கட்சி---00  அங்கத்தவர்
ஐக்கிய மக்கள் கூட்டணி -------05 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -01 --------------01   
அங்கத்தவர்

கிண்ணியா P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

ஐக்கிய மக்கள் கூட்டணி -------05 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------02  அங்கத்தவர்

மொறாவேவ 
 P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------03  அங்கத்தவர்

கோமரங்கடவெல 
P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.

ஐக்கிய மக்கள் கூட்டணி -------08 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்


பதவி ஸ்ரீ புர 
P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.
 
ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------01  அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -01 --------------01   
அங்கத்தவர்
சுயேட்சைக்குழு -02 --------------01   
அங்கத்தவர்

தம்பலகமுவ 
 
P
 .C  தெரிவு செய்யப்பட்டவர்கள் கட்சிவாரியாக.
 
ஐக்கிய மக்கள் கூட்டணி -------06 அங்கத்தவர்
ஐக்கிய தேசியக் கட்சி -----------03  அங்கத்தவர் 


வியாழன், 17 மார்ச், 2011

எதையும் தாங்கும் இதயம்,இதையும் தாங்கும் தலை

எதையும் தாங்கும் இதயம்,இதையும் தாங்கும் தலை. ஐயோ,நான் அந்த 
அர்த்தத்தில சொல்லவில்லை.எல்லாம் தப்புத் தப்பாத்தான் வருகிறது.
நீங்களே பாருங்க இந்தப் படங்களை.தாங்குமா உங்க தலை? முயற்சி 
பண்ணுங்க.29 .படங்கள்.





நானும் சிறுவனாக இருந்தபோது,இப்படித் தலையில வைத்துச் சுமந்த 
அனுபவம் நிறையவுண்டு.இப்பொழுது உள்ள சந்தததிக்கு இது எல்லாம் 
புதிய அனுபவம், அந்தக் காலத்தில் எனது மகன் இவ்வளவு பாரம் தனியாத்
தூக்குவான் என்று சொல்வது தாய் தந்தையர்க்குப் பெருமை. ஐயோ எனது 
மகன் பாரம் எதுவும் தூக்கமாட்டான் என்று சொல்வது,இந்தக்காலத்துப் 
பெற்றோருக்குப் பெருமை,கடைசியில் நோய் வந்து கஷ்டப் படுவது,
மக்களின் கடமை.வைத்தியருக்கும் வசதி. 

புதன், 16 மார்ச், 2011

மூச்சை நிறுத்தி விடு...

வெண்பாவுக்கும்  படத்திற்கும் சத்தியமா சம்பந்தமில்லை, ரஜனியின் ஸ்டைல்போல் இருந்தது எடுத்துப் போட்டேன்.


கர்ப்பச் சிறை நீங்கிக் காலப் புழுதி படர்
இப்புவிமேல் ஓட்டில் இறங்கிய நாள்-ஒப்பிவந்து 
வாழ்த்திவரித்த சுற்றம் வருந்தும்படி குடியை 
வீழ்த்தி விடப் பெற்றேன் விசர்!

அல்லும் பகலும் அநியாய வன்செயல்கள் 
கொள்ளும் அயல்வீட்டுத் தோழர் குழாம்-சொல்லும் 
படி ஆடிப் பெற்ற பழிபாவம் தாங்க 
முடியாது வேண்டாம் இம் மூச்சு.

நாட்டைக் கெடுக்கும் நடத்தைகளால் ஆட்கொண்ட 
கூட்டைச் சுமக்குங் கொடியோனின் -சீட்டைக் 
கிழித்துக் நரகக் கிடங்கிற்குள் தள்ளா(து)
ஒழித்துள்ள கூற்றே....உணர்!..

பொய்யும் களவும் புரட்டும் அழுக்காறும் 
செய்யும் எனது சிரந்தனைக் -கொய்யும் 
திருநாட் பதிவேட்டைத் தேடித் திருத்தும்
கருமத்தைச் செய்வாய் கடிது.

கள்ளனைய கன்னியரின் கற்பார் மனஉணர்வை
மண்ணாக்கி விட்டே மறுதலித்த -என்னுயிரைக் 
கொள்ளாத கூற்றம் கொடுங்குற்ற மென்றுலகம்
சொல்லாதோ?  வீசாய் சுருக்கு....

சூது சுரண்டல் சுகமற்ற வாதுரைத்தல் 
பாதகரின் பக்கம் பரிந்து நிற்றல் -வேதனையைக் 
கூட்டிப் பெருக்குங் குடிப் பழக்கம் இத்தனையும் 
கேட்டுக் கொள் என்றன் மெய்க் கீர்த்தி!

ஊரைக்க முடியா உலகத்தின் தீமைச் 
சரக்கெல்லாம் சேர்ந்த சரிதம் -ஒறுக்குதின்(று)
ஒட்டிவா கூற்றே உமக்கென் குறைக் கதையைக் 
பாடுகின்றேன் இல்லைப் பயம் .... 
      
(வேறு)

நடை புதிது ...கதை புதிது ...நயந்துரைக்கும் யாப்பின் தொடை புதிது ....
இப்பா, இது வரையும் பிரசுரமோ ஒலிபரப்போ பெற்றதில்லை ..உண்மை !
தடை எதுவும் விதியாமல் தங்கள் கவிதைப் போட்டிப் படையலுக்குள்
சேர்த்தருள்க; பணிந்துரைத்தேன்.
வணக்கம்.

இவ்வண்ணம்,

இடையீடு இல்லாமற் கவிபுனையுந் அடியேன் ...

இராஜ பாரதி.

(எனது குருவின் கவிதை அவர் எழுதிய ஒரு   கையெழுத்துப் பிரதியின் பிரதி வடிவம்.) 

செவ்வாய், 15 மார்ச், 2011

சுனாமியின் கொடுமை -ஜப்பான் 2011.

இலங்கையின் வட கிழக்கில் உள்ளவர்களுக்குக்ச் சுனாமி அனுபவம் நிறையவே உண்டு, ஜப்பானில் இந்த மாதம் ஏற்பட்ட சுனாமியில் பதினோராயிரம் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டும்,விலை மதிக்க முடியாத 
சொத்துக்களை அழித்தும்,அடித்தும்  சென்ற சுனாமி பற்றிய காணொளிகள், பிரித்தானியாவின் கார்டியன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது,பாருங்கள்.


இதிலுள்ள லிங்கைக் கிளிக் பண்ணி இன்னும் அதிகமான ஜப்பானில்
இடம்பெற்ற அனைத்து சுனாமி அழிவுகளையும் காணலாம்.