சனி, 15 ஜனவரி, 2011

பிங்க் தேடு பொறியில் உங்கள் வலைப்பதிவு.


உங்கள்  வலைப்பதிவை பிங் தேடு பொறியுடன்,இலகுவாக இணைக்கவும் , வலைப்பதிவர்களின் வலைப்பதிவை இணைய வாசகர்கள்,இலகுவாகத்
தேடிக்  கண்டுபிடிக்கவும்  இலகுவாக,பிங் தேடுபொறி,இலகுவான முறையை  அறிமுகப் படுத்தியுள்ளது

வலைப்பதிவர்கள் செய்யவேண்டியது,உங்கள் வலைப்பதிவின் URL ,(Blog URL:) இடுகைத் தள ஓடை,(Blog RSS Feed )  உங்கள் வலைப் பதிவின் தலைப்பு (Blog Title ).இவற்றை இதற்கென வழங்கப் பட்டுள்ள இடங்களில் நிரப்பிவிட்டு , அதன் கீழ் காணப்படும் பெட்டியில் உள்ள கோட்டை உங்கள் டெம்ப்ளேட்டின்,காட்டப்படும் இடத்தில் பேஸ்ட் பண்ணி,  சேமிக்கவும்.பின்னர் உங்கள் டெம்ப்ளேட்டை இயல்பு  நிலைக்குக் கொண்டு
வந்து, கணனியை ஓய்வாக்கி,(restart )பின்,தொடரவும்.

பிங்க் தேடுபொறியில் உங்கள் வலைப் பதிவின் (URL ) முகவரியை இடுகையிட்டுத் , தேடிப்பாருங்கள், பலன் பளிச்செனத் தெரியும்.

பிங் தேடுபொறியின் Blog ping tool பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்.மேலதிக விபரங்களும்,செயல் முறை விளக்கங்களையும் அங்கு விபரமாகக் காணலாம்.
பிங்க் தேடு பொறியில் உங்கள் வலைப்பதிவு.

உங்கள் வலைப் பதிவு எவ்வளவு தூரம் வாசகரிடம் பிரபல்யம் அடைந்துள்ளது என்பதை அறிய இங்கு சென்று அறியுங்கள்,மேலே கூறியவை யாவும் இதற்கும் பொருந்தும்,அதே
தேவைகளை,இங்கு நிறைவேற்றி (Check All) செய்து பின்னர்,send pings அமத்துங்கள்,
உங்கள் வலைப்பதிவின்,பிரபல்யம் தேடு பொறிகளில் காணலாம்.இந்தத் தளத்திற்குச் செல்ல 

தைப் பொங்கல் வாழ்த்து.!



வெள்ளம் வழிந்து மனவேதனைகள் கழிந்து-மனப் 
பள்ளம் நிறைய  இருந்த பழவினைகள்,  மறைந்து   
உள்ளம் எல்லாம் புது, இன்பம் நிறைந்து -இந்த 
உலகமெல்லாம் இனி,இன்ப ஒளி பரவட்டும்.
அன்புடன்,
"பத்தும் பலதும்"  


வெள்ளி, 14 ஜனவரி, 2011

Malicious Software Removal Tool-Jan.2011




இன்டெர் நெட் பாவனையின்போது,நமக்குத் தெரியாமல் நமது கணணிக்குள் குடியேறிய ,
விண்டோசுக்குத் தீங்கு விளைவிக்கும் மென்பொருட்களை அளிக்கும்,அகற்றும் கருவியை,மைக்குரோ சொப்ட்இலவசமாக ஜனவரி -2011ல் வெளியிட்டுள்ளது,நம்பிக்கையான நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளதால்,எவரும் பயம் இல்லாமல் பாவித்துப் பயன் பெறலாம்.

விண்டோஸ்-7,விண்டோஸ் விஸ்டா,விண்டோஸ் எக்ஸ்.பி,விண்டோஸ் 2000
விண்டோஸ் சேவர் 2003 , இவைகளுக்குப் பொருத்தமாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கும்,தரவிறக்கவும்  இங்கே செல்லுங்கள்.

எனது,கணனிக்கு வந்த பிரச்சனைக்குத் தேடிய தீர்வில்,உங்களுக்கும் நன்மை கிடைக்கட்டுமே என்ற ஒரு சிறிய நப்பாசை.
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்"

வியாழன், 13 ஜனவரி, 2011

வலைப்பதிவில் வாக்களிப்பது எப்படி?.



"பதிவு ஆரம்பிக்கும் எண்ணத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றமாதிரியான தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அப்படியே இந்த ஓட்டுப்போடுவது எப்படி அதன் அரசியல் என்ன என்பதுபற்றியும் தெரிந்தால் சொல்லுங்கள் என்னைப்போன்ற பலருக்கும் கூட அது பயனுள்ளதாக இருக்கும்." http://amudhavan.blogspot.com/

இது சக பதிவர் சகோதரர் திரு அமுதவன் அவர்களால் எனது வலைப்பதிவில் இடப்பட்ட கருத்துரை.இவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

பொதுவாக நமது நாட்டில் வாக்களிக்க, வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இணைக்கப்பட்டிருக்கவேண்டும்,இதே,நடைமுறைதான் பதிவுகளில் வாக்களிக்க,எந்த ஓட்டுப் பட்டை மூலமாக வாக்களிக்க விரும்புகிறீர்களோஅந்த ஓட்டுப்பட்டைக்குரிய
வலைப்பதிவுத் திரட்டியில்   நீங்கள் இணைந்திருந்தால்,அந்த ஓட்டுப்பட்டை மேல் உங்கள் மௌசை வைத்து அழுத்தியதும்,ஓட்டுப்பட்டைக்குரிய வலைப் பக்கத்துக்கு உங்களை அழைத்துச் சென்று,உங்கள் பயனர் பெயர்,கடவுச் சொல் போன்றவற்றைப் பரிசோதித்துவிட்டு நீங்கள் எந்தப் பதிவுக்கு வாக்களிக்க நினைத்தீர்களோ, அந்தப் பதிவும் அங்கு இருக்கும் அதில் நீங்கள் உங்கள் வாக்கை அளிக்கலாம்.அளித்த வாக்கு செல்லுபடியாகிற்றா? என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம், நீங்கள் வாக்களிக்கும் முன் இருந்த இலக்கம் நீங்கள் வாக்களித்தது ஏற்றுக் கொள்ளப்பட்டால்,உடனடியாக ஒரு இலக்கத்தால் அதிகரித்து,இடுகையின் கீழ் வாக்களித்தவரின், பயனர் பெயரும்,இதற்கு முதல்,யார்,யார் இந்தப் பதிவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதையும்,வாக்களித்தவர் அறியக்கூடியதாக இருக்கும்.சில திரட்டிகளில் வாக்குகளின் எண்ணிக்கை மட்டும் உயரும் வேறு,தகவல்கள்,கிடைக்காது 

ஒருவர், ஓருவாக்கு மாத்திரமே அளிக்கலாம். 99 % மான வலைப் பூக்களுக்கு இது பொருந்தும்,ஒரு சில வலைப் பூக்களில் இந்த நடைமுறை காணப்படவில்லை.வாக்களிக்க நம்மிடம் ஒரு வலைப்பூ இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.அந்த வலைப் பதிவுத் திரட்டிகளில் நீங்கள் இணைந்திருந்தால் மட்டும் போதும்.நீங்களும் ஒரு வாக்காளர்தான்.

கள்ளவோட்டு என்பது இங்கு நடவாத காரியம்.அதுதான் நமது வலைப்பதிவு பக்கம்,அரசியல் வாதிகளும்,அவர்களின் அடிவருடிகளும்,நமது வலைப்பூக்களின் பக்கம்,  
அவர்களின் பார்வை இல்லாமல் இருக்கிறது.அத்துடன் தாதாக்களின் அட்டகாசம் குறைவாக இருக்கிறது போல் தெரிகிறது.ஆனால் பினாமி ஓட்டுக்கள் அதிகமாக இடலாம்.ஆனால் இவையெல்லாம் கூகுள் ஆண்டவரிடம் செல்லாது. எல்லாம் இகவ்வாழ்க்கைக்கு மட்டும் பொருந்தும், கூகுல் ஆண்டவரின் சந்நிதியில் இவையெல்லாம் கணக்கில் வராது, அங்கு சித்திர புத்திரனார் தரமான கணனியில் நமது 
அசைவுகளை கணித்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் இங்கு இக வாழ்க்கை என்பது 
இந்த தமிழ்ப் பதிவு வட்டத்திற்குள் பந்தா காட்டுவது, அதாவது அதி கூடுதல் வாக்குகள் பெற்ற பதிவு, அதி கூடிய வாசகர்கள் பரிந்துரைத்த பதிவு,இப்படி பந்தாவெல்லாம் அங்கு 
எடுபடாது.

நந்தனார், போன்ற பிரபலமிலாதவ்ர்கள் எப்படி ஆண்டவன் சந்நிதியில் ஜோதியாணர்களோ,அப்படித்தான் பதிவுலகமும்,எந்த வித ஆராவராமும் இல்லாத பதிவுகள்,அங்கே நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது.
நமது பதிவுகளுக்கு நல்ல வாக்குகள் கிடைக்கவில்லை என்று,சில பதிவர்கள் நினைப்பதுண்டு,நல்ல கருத்துக்களை,நயமான வார்த்தைகளால், நாலுபேருக்கு 
விளங்கக் கூடிய மாதிரி எழுதுங்கள்.அதே மாதிரி நீங்களும்,நல்ல பதிவுகளைத் தேடிப் படியுங்கள்,குறை நிறைகளை,கருத்துரைகள் மூலம் அறிவியுங்கள்.வலைப் பதிவர்களை 
உங்கள் கருத்துக்களால் கவருங்கள்,நிற்சயம் உங்கள் வலைப் பதிவுக்கு நல்ல  மதிப்புக் கிடைக்கும்.

வலைத் திரட்டிகளில் நீங்கள் இணையும் போது,ஒரே பயனர் பெயரையும் ஒரே கடவுச் 
சொல்லையும்,உபயோகியுங்கள்,இதன் மூலம் வீணான காலவிரயத்தையும்,

தேவையில்லாத அசௌகரியங்களையும் தவிர்க்கலாம்.

வாக்களிப்புப் பற்றிய விளக்கம்போதும் என்று நினைக்கின்றேன்.ஏதாவது விடுபட்டிருந்தால்,தயக்கமில்லாமல் கருத்துரை இடுங்கள்,அதற்குரிய விளக்கத்தைத் 
தேடித் தருகிறேன்.உங்கள் வலைப்பதிவைப் பற்றி அறிய இங்கு சென்று பாருங்கள்,
உங்கள் தரம் எப்படிஎன்பதை அறிந்து கொள்ளலாம்.
,

புதன், 12 ஜனவரி, 2011

தமிழில் வலைப்பதிவைத் தொடங்க...


தமிழில்  வலைப்பதிவைத் தொடங்க முதலில் ஒரு கணக்கை கூகுளுடன் ஆரம்பிக்கவேண்டும்.அதற்கு உங்கள் முழுப்பெயர்,பிறந்த திகதி ஒரு கடவுச் சொல்,அதில் ஆங்கில எழுத்துக்கள்,இலக்கங்கள் கலந்திருந்தால் முதல் தரத்திலேயே ஒகே ஆகிவிடும்,
பயனர் பெயர் ஒன்றையும் தயார் படுத்தி வைத்துக்  கொண்டு,உங்கள் கடவுச் சொல் மறந்தால்,அதைத் திரும்ப பெற்றுக்கொள்ள,நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு நல்ல கேள்வியும் பதிலும்,இவ்வளவையும் தயார் படுத்திக் கொண்டு கூகுலாரைச் சந்தித்தால்,உங்கள் தமிழ் வலைப் பதிவுக்கு சாவியைக் கட்டாயம் அவர் வழங்குவார்.

இதில் திறந்தவுடன் வலைப்பதிவின் பெயர்,என்பதை நீங்கள் நிரப்பவேண்டும்.
உதாரணத்திற்கு,எனது வலைப்பதிவைப் பாருங்கள் அதில் "பத்தும் பலதும்" என்றிருக்கும்.அதைப்போல் ஒரு தலைப்பை அதில் இடுங்கள்.இதற்குமுதல் யாரும்,
பயன் படுத்தாத வார்த்தைகள் என்றால்,முதல் தரத்திலே ஒகே யாகிவிடும்,
இல்லையேல்,வேறுவேறு வார்த்தைகளை தொடர்ந்து கொடுங்கள்,ஏதாவது ஒன்று 
ஒகேயாகிவிடும்.இதை தமிழில் கொடுத்தால் தொடர்ந்து தமிழிலே எல்லா இடங்களிலும் காணக்கூடியதாக இருக்கும்,அதையே ஆங்கிலத்தில் எழுதி இரண்டாவது இடத்தையும் 
நிரப்பினால் உங்கள் தமிழ் வலைப் பதிவுக்கு URL  (Uniform (or universal) resource locator, the address of a Web page ) தயார்.இதுதான் உங்கள் பிளாக்கரின் 
தலை எழுத்து.இதைவைத்துத்தான் நீங்கள் எதிர் காலத்தில் சாதிக்கப் போகிறீர்கள்.
நல்லநேரம் பார்த்து,நல்லசுப வேளையில் ஆரம்பியுங்கள் .ஆரம்பிக்க இங்கே செல்லுங்கள்.   முடிவில் நான் மனிதன் தான்என்பதையும் நிருபியுங்கள்.தொடருங்கள்.
உங்கள் புகைப் படமும் உங்கள்  வலைப்பதிவில், ஜி.மெயில் போன்றவற்றில் தோன்ற
வேண்டுமென்றால்.முதலில் உங்கள் படத்தை உங்கள் கணனியில் சேமித்து விட்டு ஜி மெயிலில் அப் லோட் பண்ணிச் சேர்க்கலாம். 


அதற்கு முதல் உங்கள் வலைப்பூவை அலங்கரிக்கத்தேவையான முறைகளை நீல எழுத்துக்களால் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும்.இடுகையிடத் தொடங்கலாம்.
அல்லது, உங்கள் வலைப்பதிவு எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும்,என்பதை வடிவமைக்கலாம்.நீங்கள்  வலைப்பதிவை  வடிவமைப்பதை தேர்ந்தெடுத்து,உங்கள் 
கை வண்ணங்களைக்    காட்டலாம்.திகதி என்ன கலரில்,வரவேண்டும் தலையங்கம்,
எப்படி இருக்கவேண்டும்.தலையங்கத்தின் கீழ் ஏதாவது அடிக்குறிப்புகள் எழுத விரும்பினால் (அதுதாங்க பஞ்ச் டயலாக்கு).நீங்கள் எழுதும் எழுத்துக்கள்,எப்படி வரவேண்டும்.என்று சகலதும்,அதில் அடக்கம்.புகுந்து விளையாடுங்க,நீங்க எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யலாம்.ஆடி முடித்து ஆயாசமாக வலைப்பதிவைப் பார் என்பதைக் கிளிக் பண்ணினால் உங்கள் வலைப்பதிவு
 தயாராக இருக்கும்.


இப்பொழுது உங்களுக்கான வலைப்பூவின் அழகான முகப்புப் பக்கங்கள் பல தெரியும்,
அதில் உங்களுக்கு விருப்பமானதைத் தெரிவு செய்யுங்கள்.பின்னர் கீழ காணப்படும் அம்புக்குறியைத் தொடர்வதற்கு அழுத்துங்கள்.உங்கள் வலைப்பூவிரிந்து இடுகையிடத் தயாராக இருக்கும். 

இடுகையிடல் என்பதற்குச் செல்ல  சுலபமான வழி.உங்கள் வலைப்பதிவு  பக்கம் திரையில் தோன்றும்போது.மேலே பாருங்கள் பகிர்,முறைகேடுஎனப்புகாரளி,அடுத்தவலைப்பதிவு,உங்கள் ஜிமெயில்,புதிய இடுகை,வடிவமைப்பு வெளியேறு.தமிழில் . அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் அதில் 
எதைத் தெரிவு செய்கிறீர்களோ,அங்கே உங்களை அழைத்துச் செல்லும்.பொதுக் கணனி என்றால் உங்கள் கணக்கின் மூலம் உள்ளே நுழைய வேண்டும்.உங்கள் சொந்தக் கணனி 
என்றால் நேரடியாக  நீங்கள் உள்ளே செல்லலாம்.

எல்லாம் சரி முதலில் தமிழில் எழுத,உங்கள் கணனியில் வசதிகள் இருக்கிறதா என்று 
பாருங்கள்.இல்லாவிட்டால் முதலில் தமிழை கூகுள் இன்டிக் றான்சிலிறேற்றரை   இறக்கிக் கொள்ளுங்கள், இதன் மூலம் ஆங்கிலத்தை தமிழ் ஆக்கிக் கொள்ளலாம்  அதற்கு இங்கே செல்லுங்கள் இந்தப் பக்கம் வந்த்தவுடன் இதை புக் மார்க்
செய்து கொள்ளுங்கள்.இல்லாவிட்டால்,இந்தியாவிலுள்ள எல்லா மொழிகளிலும்,தமிழை 
அடிக்கடி தேடவேண்டிவரும்.இதன் மூலம் பல வேலைகளை இலகுவாகச்  செய்யலாம்,
பிளாக்கருக்கு, கருத்துரையிட,கடிதம் எழுத என்று ஏகப்பட்ட தமிழ் எழுத்து வேலைகள் 
பண்ணலாம்.ஆங்கிலத்தில் ammaa  என்று எழுதி ஸ்பேஸ் பட்டனை அழுத்தினால் "அம்மா"
என்று அழகாக தமிழ் சிரிக்கும்.இதில் எதையும் சேவ் செய்து பதிந்து வைக்க முடியாது.
உடனே கொப்பி பண்ணி,தேவைக்கேற்ப பேஸ்ட் பண்ணலாம்.
  
முதலில் கூறியவாறு,நீங்கள் இனி சில அடிப்படை அமைப்பு வேலைகளைச் செய்யவேண்டும். அமைப்புக்கள் என்பதைக் கிளிக் பண்ணி வலைப்பதிவின் அமைப்புக்களைச் சீர் படுத்தி,அதாவது உங்கள் ஊர்,பெயர்,வலைப்பதிவின் நோக்கம்,
கருத்துரை வழங்கலை வளம்படுத்தல்,இப்படி உங்களுக்குத் தெரிந்தது தெரியாதது
எல்லாவற்றையும் நிரப்பி இடுகையிடலுக்குச் செல்லுங்கள்,அ என்று இருப்பதைக் கிளிக் பண்ணித் தமிழை செலக்பன்னிவிட்டு,ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஷ்பாரைத்  தட்டினால்
தமிழ் அருவியாகக் கொட்டும்.இது ஒவ்வொரு வார்த்தையையும் தமிழ் படுத்தத் தேவையான நடை முறையாகும்.

நீங்கள் படங்களைச் சேர்க்க வேண்டுமானால் இடுகைகக் கருவிப்பட்டையில் இருக்கும்
படத்தைச் சொடுக்கினால்,படத்தைச் சேமித்து வைத்துள்ள இடத்தை கேட்கும்.நீங்கள்
படத்தைச் சேமித்து வைத்துள்ள பைலைத்திறந்து,படத்தை தெரிவு செய்து கொடுத்தால்
படம் உங்கள் வலைப்பூவில் வந்து அமரும்.வீடியோவிற்கும் இதே முறையைக் கையாளவும்.

சகலதும் நிறைவேற்றப் பட்டவுடன் இடுகைக் கருவிப் படையின் கீழ் காணப்படும் ,
முன்னோட்டத்தை அமத்தினால் உங்கள் இடுகை சரியாக இருக்கிறதா என்பதை நீங்கள் மட்டும் பார்க்கலாம்.சரியாக இருந்தால் முன்னோட்டத்தை குளோஸ் பண்ணிவிட்டு
இடுகையை வெளியிடலாம்.அல்லது திருத்தத்தை மேற் கொண்டு முன்னோட்டம் பார்த்து சரியாக இருக்கும் என்றால் இடுகையை வெளியிடு என்பதை அழுத்தி உங்கள்
ஆக்கத்தை இந்த உலகத்தின் கண்களுக்கு விருந்து வைக்கலாம்.

வடிவமைப்புக்கள் என்பதில் உங்கள் வலைப்பதிவை அலங்கரிப்பதைத்தான் குறிக்கும்,
இதில் கவுண்டர்கள்,கருவிப் பட்டைகள்,ஓட்டுப் பட்டைகள்,உங்களுக்குப் பிடித்த
வலைப் பதிவுகள் போன்றவற்றைச் சேர்க்கலாம். இது உங்கள் விருப்பம்.அளவுக்கு அதிகமானால் அசிங்கமாகவும் போகாக் கூடும்.

வலைப் பூவைத் தெரிவு செய்யும்போது,மொழி தமிழ் என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் எல்லாம் ஆங்கிலமயமாகவே காணப்படும்.இதை அமைப்புகளில் சென்றும் மாற்றிக் கொள்ளலாம்.

இது சம்பந்தமாக இன்னும் எவ்வளவோ  எழுதலாம்,எழுதிக்கொண்டே இருக்கல்லாம் .
நீங்களும் முயற்சி செய்யுங்கள்,முயற்சி திருவினையாக்கும், எனக்கும் கணனிக்கும்
எந்த சம்பந்தமும் கிடையாது,நான் படித்தது வர்த்தகத்துறை,நாங்கள் படிக்கும் போது
கணனியை, கோவிலிலுள்ள சுவாமியைத் தரிசிப்பது போலத்தான்,எட்டி நின்று தரிசித்து
விட்டு வந்தோம்,இப்போது அப்படியல்ல எல்லார் வீட்டிலும் கணனி விளையாட்டுப் பொருளுக்கு நிகர்றாயிற்று.

இது சம்பந்த்தமான கேள்விகளைப் பின்னூட்டத்தில் கேளுங்கள் நிற்சயமாக விளக்கமாக
பதிலளிப்பேன் அல்லது பதிவாக இடுவேன்.இன்னும் வலைப்பூக்களை அலங்கரிப்பது.
வலைப்பூவால் வருமானத்தை எப்படிப் பெறுவது, என்பதையும் தமிழில் கொடுக்க நினைத்துள்ளேன்.அதுதான் AdSenseஅட்சென்ஸ்.கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு
விளம்பர தாரராக நமது வலைப் பூக்களை ஈடுபடுத்துவது.இன்னும் பல தமிழில் இருக்கிறது. ஆனால் நேரம்தான் இருபத்து நான்கு மணித்தியாலமாக இருக்கிறது.

"தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் கேட்க(பரவ ) வழிசமைப்போம்" .

செவ்வாய், 11 ஜனவரி, 2011

பிளாக்கர் பற்றித் தமிழில் விளக்கம்.


பிளாக்கர் பற்றித் தமிழில் விளக்கம்,கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள்.நமது 
சொந்த மொழியில் அறிந்து கொள்வது தமிழ் தெரிந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.

பிளாக்கர் தொடங்குவது முதல் தொடர்ந்து நிர்வகிப்பதுவரை,விரிவாக விளக்கப்பட்டுள்ளது.புதிதாக பிளாக்கர் தொடங்க இருப்பவர்களும்,பிளாக்கரைப் பற்றி 
இன்னும் ,நன்றாக அறிந்து கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும்,இந்த கூகிளின் 
தமிழ் வெளியீடு பயனுள்ளதாக அமையும்.அதுமட்டுமில்லாமல் நாற்பத்தி ஒரு மொழிகளில் இதைச் செயல் படுத்த முடியும்.

பிளாக்கர் பற்றி தமிழில் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்   37 பகுதிகளாக பிரித்து 
விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 

திங்கள், 10 ஜனவரி, 2011

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணம்.




வெள்ளத்தில் மிதக்கும்,கிழக்கு மாகாணம் படங்களைக் காண இங்கே  மௌசை வைத்து. 
அழுத்துங்கள்.நன்றி, தமிழ் மிரர்.சேத விபரங்கள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனையால் வெளிடப்பட்ட அறிக்கையிலிருந்து, 421 ,809 பேர்  இருப்பிடங்களில்  இருந்து வெளியேறியுள்ளனர்,142,105 பேர் பாடசாலைகள்,பள்ளி வாயல்கள்,போன்ற பொது இடங்களில்,தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வவுண தீவு,பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கன்னங்குடா,ஆயித்திய மலை,மற்றும் பட்டிப்பளை செயலாளர் பிரிவிலுள்ள 14 கிராமங்கள்,கிரான் செயலாளர் பிரிவிலுள்ள சில  கிராமங்கள்,வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சில  கிராமங்கள் வெள்ளத்தாலும்,காற்றாலும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளதாகவும்,மேற்படிக்  கிராமங்களுக்கான  தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்,மேற்படி கிராமங்களில் இருந்து,பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு,கொண்டுவருவதற்கு சகல நடவடிக்கைகளையும்,மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பணிமனை மேற்கொண்டுள்ளது.    


இடி, மழை, மின்னல், வெள்ளம், இன்னும் இயற்கையின் சீற்றங்கள் எவ்வளவு இருக்குமோ,அவ்வளவும் இன்று கிழக்கு   மாகாணத்தில் தான்,இறைவனால் இறக்குமதி
செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.போதாக்குறைக்கு மின்சாரமும் தன்னால் முடிந்த மட்டும்,தன் கைவரிசையைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

ஐம்பது வயதுக்கு உட்பட்டவர்கள் கண்ட முதல் வெள்ளம், உயிர்ச் சேதங்களை பெரிய அளவில் ஏற்படுத்தாவிட்டாலும்,உடைமைகளை முடிந்தளவுக்கு,சேதமாக்கிவிட்டது.
கிழக்கு மாகாணத்தின் 85 %பொருளாதாரம் விவசாயம். விவசாயம் என்பதையே இல்லாமல் செய்த பெருமை இந்தவெள்ளத்தையேசாரும்.நெல்உற்பத்தியில்தன்னிறைவு 
 கண்ட கீழ மாகாணம்,ஒரு நேர உணவுக்கு கையேந்த வைத்து விட்டது. 

பாடசாலைகளும் பள்ளி வாசல்களும்,வெள்ள அகதி முகாங்களாகிவிட்டன. முஸ்லீம் 
மக்கள் பள்ளிவாசல்கள் மூலம் ஓரளவு,நிம்மதியைத் தேடிக்கொள்ளக்கூடியதாக,
அதாவது,சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு,ஆசுவாசப் படுத்தப்படுகிறாகள். ஏனையவர்களுக்கு இராணுவம், தனது பங்களிப்பைச் செய்து கொண்டுள்ளது.

போக்குவரத்துக்கள் இது எழுதும் வரையில் மறு சீர் அமைக்கப் படவில்லை.நேற்று 
தினசரிப் பத்திரிகை கொழும்புவில் இருந்து,மட்டக்களப்பு ,காத்தான்குடி ,கல்முனை 
அக்கரைப்பற்று,பொத்துவில்வரை நடைபெறவில்லை. இன்றும் அதே நிலைதான் 
தொடர்கிறது.பொதுமக்கள் பொது இடங்களிலும்,உற்றார் உறவினர்களின் மாடி 
வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

மழை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது,கிடைத்த செய்தி,மட்டுநகர் வாவியின் இருமருங்கின் கரைகளில் இருப்பவர்களை,பாதுகாப்பான இடங்களுக்கு, இடம்பெயருமாறு பாதுகாப்பு படையினர்,முன்னறிவித்தல் கொடுத்துள்ளார்கள்.பொது மக்களின் நிலைமை சொல்ல 
முடியாத துன்பத்துக்கு இட்டுச் சென்றுள்ளது.  

இந்த காணொளி என்னால் எனது வீட்டையும் அயலையும் சுற்றி எடுக்கப்பட்டது.ஒரு 
காக்கா குருவியையும் சந்திக்க முடியவில்லை,எல்லோரும் கிரேட் எஸ்கேப்.விடியோ 
காட்சிகள் இன்னும் உண்டு பெரிய பைலாக இருப்பதால் முடியவில்லை.மயற்சி திருவினையாக்கும்.முடிந்தால் பதிவிடுகிறேன்  

சனி, 8 ஜனவரி, 2011

இலங்கைத் தமிழர்களின் உயர் கல்வி.




இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் ஈழத்தமிழர்கள் கல்வியில் சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிக விழுக்காடு தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதை சீர் அற்ற ஒரு நிலையாக கருதிய சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்ற கல்வி தரப்படுத்தல் சட்டங்களை கொண்டு வந்தார்கள். இந்த சட்டங்கள் 1967, 1971, 1979 ஆண்டுகளில் மாற்றப்பட்டன.


இலங்கையில் கொண்டு வரப்பட்ட கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் இலங்கையில் இனப்பிரச்சினை தோன்ற முக்கிய காரணங்களில் ஒன்று.  இந்த சட்டம் உயர் கல்வி வாய்ப்புக்களை சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் தொகை அடிப்படையில் பிரித்தது. அதாவது அதிக புள்ளிகள் பெற்ற, திறமை வாய்ந்த தமிழ் மாணவர்கள் வாய்ப்புக்களை இழக்க, புள்ளிகள் குறைந்த சிங்கள மாணவர்கள் அந்த வாய்ப்புக்களை பெற்றனர்.

இலங்கை கல்வி தரப்படுத்தல் சட்டங்கள் ஒரு பார்வையில் சீர்திருத்த செயலாக்கங்கள் ஆகும். அதாவது காலனித்துவ சட்டங்களால் பின்தள்ளப்பட்ட சிங்கள மாணவர்களுக்கு கூடிய வாய்ப்புக்கள் வழங்கி இலங்கையில் தமிழ் சிங்கள மக்களின் கல்வி நிலையில் ஒரு சீர் நிலையை ஏற்படுத்துவதை நோக்காக கொண்டதாக சிலர் வாதிடுவர். இருப்பினும் இதை அரசு நிறைவேற்றிய முறை தமிழ் மாணவர்களுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது. தனிச் சிங்கள சட்டம், இனக் கலவரங்கள் பின்புலத்தில் பார்க்கையில் இது தமிழ் மாணவர்களின் கல்வி வளங்களை வழிமாற்றும் செயற்பாடு என்றும் தோன்றுகின்றது.


இலங்கையின் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ தாபிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் :

1 .கொழும்பு  பல்கலைக் கழகம்.
2 .பேராதனைப் பல்கலைக் கழகம் 
3 .ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் 
4 களனி பல்கலைக் கழகம் 
5 மொரட்டுவை பல்கலைக் கழகம் 
6 .யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 
7 உறுகுணை பல்கலைக் கழகம்.
8 .கிழக்குப் பல்கலளைக் கழகம் 
9 .இலங்கைத் தென் கிழக்குப் பல்கலைக் கழகம் 
10 இலங்கை ரஜரட்ட .பல்கலைக் கழகம் 
11 .இலங்கை சப்ரகமுவ பல்கலைக் கழகம் .
12 இலங்கை வயம்ப பல்கலைக் கழகம்.
13 .இலக்கை உவா வெல்லச பல்கலைக் கழகம்.
14 .கட்புல, அரங்கேற்றுக் கலைகள் பல்கலைக் கழகம்.
15 .சுதேச மருத்துவ நிறுவகம்.
16 .கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத நிறுவகம் 
17 .கொழும்பு பல்கலைக்கழகக் கணனிக் கல்லூரி.
18 .சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகம் 

2009ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரிட்சையில் பகலைகழ்க அனுமதிக்கு மொத்த உத்தேசமான அனுமதி 20835 மொத்த தகுதியடைந்த மாணவர்களின் 
எண்ணிக்கை 125000 பேர்.அண்ணளவாக.

இலங்கைச் சனத் தொகையில் இனங்களின்  அடிப்படையில்,

இலங்கைச்  சிங்களவர்..... 74 %
இலங்கைத் தமிழர் ...............18 %
இலங்கை முஸ்லிம் .............7%
ஏனையவர்.................................1 %

இலங்கையின் மொத்த சனத் தொகை 2009ஆம் ஆண்டு  21,128,772 
இந்த விகிதாசாரப் படி பார்த்தால் மாவட்டத்திற்கு எவ்வளவுபேர்,உயர் கல்விக்குத் தகுதி 
பெறுவார்கள் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.அதிலும்  தமிழ் மக்கள் உயர் கல்விக்குத் தெரிவாவார்கள் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்கள்,ஒரு பல்கலைக் கழக ஆண்டில் தெரிவாகும் இருபதாயிரம் பேரில் மூவாயிரம் 
தொடக்கம் நான்காயிரம் பேர்களுக்குள் தமிழ் மக்கள் அடங்குவார்கள்.இதன் புள்ளி விபரம் கீழ் உள்ளது.  

இலங்கைப் பல்கலைகழக அனுமதிக்கான மூலப் பிரமாணம்:

கலைப்பிரிவு கற்கை நெறிகளைப் பொறுத்த அளவில்,ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலிருந்து அனுமதிக்கப்படும் மொத்த எண்ணிக்கையானது அடிப்படைக்கல்வியாண்டான 1993 /1994  இல் அம்மாவட்டத்திலிருந்து அனுமதிக்கப்பட்டமொத்த எண்ணிக்கையைவிட குறைவானதாக இருக்க மாட்டாது.
என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ,தீவளாவிய திறமை அடிப்படையில் அனுமதி வழங்கப் படும் .

யுனானி ,ஆயுர்வேதம்,மற்றும் சித்த வைத்தியம் ஆகியவற்றுக்கான,அனுமதிகள் தீவளாவிய திறமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

மேற் கூறப்பட்டுள்ள கற்கை நெறிகளைத் தவிர,சகல் கற்கை நெறிகளுக்கும் இரட்டை 
மூலப் பிரமாணஅடிப்படையில் அனுமதிகள் மேற்கொள்ளப்படும்.அவையாவன 

*தீவளாவிய திறமை .
*மாவட்ட அடிப்படையிலான திறமை.

தீவளாவிய திறமை அடிப்படையில் .
தீவளாவியஅடிப்படையில் "Z " புள்ளி நிரலின் வரிசை ஒழுங்கில்,கிட்டுகின்ற  ஒழுங்கில் 
40 % வரை நிரப்பப்படும்.

மாவட்ட அடிப்படையில் திறமை 

ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள 55 % வரையிலான இடங்கள்,மொத்சனத்தொகை
விகிதாசாரப்படி,அதாவது,நாட்டின் மொத்த சனத்தொகையில் சம்மந்த்தப்பட்ட மாவட்ட 
மானது கொண்டுவந்துள்ள சனத்தொகையின் விகிதாசாரப்படி,25 மாவட்டங்களுக்கும்
ஒதுக்கப்படும்.

ஒவ்வொரு கற்கை நெறிக்கும் உள்ள இடங்களில் 5 % வரை விசேட ஒதுக்கீடாக,கீழே 
குறிப்பிடப்படும் கல்வியில் பின்தங்கிய  16  மாவட்டங்களுக்கு,சனத் தொகையில் 
அடிப்படையில்,விகிதாசாரப்படி ஒதுக்கப்படும்.

 1 .நுவரெலியா 
 2  ஹம்பாந்தோட்டை
 3 .யாழ்ப்பாணம் 
 4 .கிளிநொச்சி 
 5 .மன்னார் 
 6 .முல்லைத்தீவு 
 7 .வவுனியா 
 8 .திருகோணமலை 
 9 .மட்டக்களப்பு  
10௦ .அம்பாறை 
11 .புத்தளம் 
12 .அனுராதபுரம்
13 .பொலன்னறுவை 
14 .பதுளை 
15 .மொனராகலை 
16 .இரத்னபுரி 

யாழ்ப்பாண மாவட்டம் 1993 /1994 கல்வியாண்டுக்கு முன்னர்,கல்வியில் முன்னேறிய 
மாவட்டமாக இலங்கையரசால் பிரகடனப்படுத்தப்பட்டு,கல்வித் தரப்படுத்தலை அங்கு
இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது,அல்லது தமிழர்களின் உயர் கல்வியில் கை வைத்தது.  







ஆண்டு /ப.ஆண்டு/தோற்றி/தகமை/விண்ணப்பித்தோர்/தெரிவானோர் 
1993    1994/95          144,573       59,292     21,799      9,460      6.5      15.9    43.3
1994    1995/96          148,883       56,740     19,021      9,787      6.6      17.2    51.4
1995    1996/97          136,728       70,379      26,011   11,200      8.2       15.9    43.0
1996    1997/98          141,161       71,846      26,970   11,658      8.3       16.2    43.2
1997    1998/99          142,336       73,570      26,829   11,901      8.4       16.2    44.3
1998    1999/2000       147,853       73,422      27,049   11,821     8.0        16.1   43.7
1999    2000/2001       16 9,679      73,561     24,461    12,040     7.0        16.3   49.2
2000    2001/2002       214,189       91,676     37,122    12,132     5.7        13.2   32.6
2001    2002/2003       218,441       98,432     35,852    12,654     5.8        13.0   35.2
2002    2002/2003 (A)  210,141       92,252     25,704    13,036     6.2        14.1  50.7
2003    2003/2004       247,755       93,353     30,193     14,260    5.8        15.3  47.2
2004    2004/2005       199,937     108,357     34,002     14,850     7.4       13.8  43.6
2005    2005/2006       204,030     118,770     35,684     17,287     8.5       14.6  48.4
2006    2006/2007       201,686     119,955     36,465      17,248    8.6       14.4  47.3
2007    2007/2008       198,183     121,421     38,603      20,069   10.1      16.5  51.9
2008    2008/2009       207,436     130,236     46,010      20,270    9.7       15.5  44.0
2009    2009/2010       205,249     125,284     47,613      21,547   10.5       17.2  45.3



மொத்தச் சனத் தொகையில் 1 % வீத மாணவர்கள் கூட,உயர் கல்வியை எட்ட முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயம். அதில்,தமிழ் மக்களின் உயர்கல்வி,எப்படித்தான் தலை கீழாக
நின்றாலும் கேள்விக்குறிதான்

இனி மேலாவது,தமிழ் மக்கள் தங்களது பிள்ளைகளின் உயர் கல்விக்கு,அரசாங்கத்தை மட்டும் 
நம்பிக்கொண்டிராமல்,தங்களது சகல் முயற்சிகளையும் ஒன்று திரட்டி,வளமான கல்வியைக் 
கொடுப்பதற்கு முன்வரவேண்டும்.அறிவு ஜீவிகள்,புத்தி ஜீவிகள்,இதற்கான வாய்ப்புகளையும் 
சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

எதிர் காலத்தில் இன்னும் பலவகையான தரப்படுத்தல்களை இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.உதாரணமாக மாவட்டங்களின் குடிசன மதிப்பீடு, 2011ம் 
ஆண்டு நடைபெற இருக்கிறது.இதனால் முழுமையாக பாதிக்கப் படப் போகிறவர்கள் தமிழ் 
மக்கள் தான்.திரு கோணமலை இன்னொரு அம்பாறையாக மாறிக்கொண்டிருக்கிறது.இன்னும் 
ஒரு இருபத்தைந்து வருடத்திற்குள் இந்த நிலைமையை எதிர்பார்க்கலாம். இதில் நான் சொல்ல நினைத்தவைகள் எல்லாம் எழுத முடியவில்லை என்பது மிகவும் மனவருத்தமான விஷயம்.

வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள்,வசதிகளை ஏற்படுத்தக் கூடியவர்கள்,தங்களது பிள்ளைகளை 
உயர் கல்வி பெறுவதற்கு,வெளி நாடுகள் இந்தியா உட்பட ஏதாவது நாட்டுக்கு அனுப்பிப் படிப்பிப்பது காலத்தின் கட்டாயம். தமிழ் நாட்டை விட ஏனைய மாநிலங்களில் கல்விக்குரிய 
கட்டணம் குறைவாகக் காணப்படுவது,நான் நேரடியாகக் கண்ட உண்மை.உயர் கல்வி பெறத் 
தகுதி பெற்றவர்களை,தகுதி பெற்றவுடன்,காலங் கடத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தை வீணாகச் செய்யாமல் நமது பிள்ளைகளுக்குச் செய்யும் பெரிய நன்மையாக முடியும்.  
தகவல்கள் ,தமிழ் விக்கிபீடியா      

வெள்ளி, 7 ஜனவரி, 2011

நுளம்புத் தொல்லை!





நுளம்புத் தொல்லை தங்கவும் முடியவில்லை, தூங்கவும் முடிய வில்லை,
நுளம்புத்திரி வைத்தால்,நுளம்பு மயங்கி நம்மளைக் கடிக்காது என்று பார்த்த 
நுளம்புத் திரியில் நாம் மயங்கி,நன்றாக நித்திரை போனவுடன்,அதன் விருப்பத்திற்கு,ஆற அமர இருந்து அமுக்கித்துப் போகிறது,காலையில் 
எழுந்தவுடந்தான் தெரிகிறது.வலைக்குள் படுத்தால், எப்படியோ நுழைந்து 
வந்துவிட்டேன்,பார் என்று சங்கராபரணம் பாடுகிறது.ஒருவழியாலும்,இதை 
அழிக்க முடியவில்லை.இந்த ஆதங்கத்தின் விளைவுதான் இது.



நித்திரையைக் குலைத்து,நிம்மதியைக் கெடுத்து -எமக்கு 
சத்திராதியாய் வந்து,சாமத்தில் எழுப்பி 
பத்தியத்தை கெடுக்கும்,பயங்கரவாத நுளம்பே!-உன்னை 
சத்தியமாக என்ன செய்ய வேண்டும் சொல்!


சந்துக்குள் புகுந்து நுளம்பு வலைக்குள் -எப்படி 
சிந்து பாடுகின்றாய்,வம்புக்கு வந்து எங்களை,
நொந்து நூடுல்ஸ்சாக்கி ,வெம்ப வைக்கிறாய் -கிட்ட 
வந்து பார்த்தால்,பஞ்சு பஞ்சாக பறக்கின்றாய்.


வம்புக்கு வலிய வந்ததுவும் இல்லாமல்-எங்களை 
நம்ப முடியாத, நோய் நொடிக்குள்ளாக்கி
வெம்ப வைத்து வேடிக்கை காட்டுகிறாய்-மாட்டினால் 
பாம் வைத்துக் கொல்ல துடிக்கிறது மனது 


நுளம்புச்சுருள்,நுளம்புவலை எல்லாம் உனக்கு -தூசு 
கிளம்புகின்றபோதே தனியாக வந்து தாக்கி,
அலம்ப வைத்தாய் மனித குலத்தை நடுங்கி-என்னை 
புலம்பவைத்தாய் உன் புகழை இணையத்தில் புகுந்து.

சினிமாவில்தான் பாடல்கள் எல்லாம் தண்டம்-உன் 
இனியபாடல்களால் எங்கள் நித்திரையும் கண்டம்.
பணியவைக்காமல் விடமாட்டேன் உன்னை இப்பாரில் -நானும் 
துணிவாய் இறங்கி, தொலைக்காமல் விடமாட்டேன் இப்போரில்
                                                                                                                





வியாழன், 6 ஜனவரி, 2011

இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனமல்ல,


இலங்கைத் தமிழர் ஒரு தேசிய இனமல்ல, அவர்கள் சுயாட்சியினை கோரமுடியாது.நல்லிணக்க ஆணைகுழு முன் ஜாதிக ஹெல உறுமையவின் சட்ட
ஆலோசகர் உதய கம்மன் பில்ல.

இலங்கையிலுள்ள தமிழ்மக்கள் ஒரு தேசிய இனமல்ல,அவர்கள் மக்களின் சிறு பகுதியினரே ஆகும்.அதாவது ஜப்பானிலுள்ள கொரியர்கள் போலவும்,தாய்லாந்தில் உள்ள 
சீனர்கள் போலவும்,ஆகவே தமிழர்கள் சுய நிர்ணைய உரிமை கோரமுடியாது.ஆனால் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்கள்,இந்தியாவின் தேசிய இனமாகும்.

எதிர் காலத்தில் மூன்று முக்கிய இடங்களில் தமிழ் பிரிவினை வாதத்தின் தலைமைத்துவம் உருவாகலாம்.கொழும்பில் நண்பர் சுமந்திரன் அவ்வாறு உருவாக்கலாம்.வட கிழக்கில் அரச சார்பற்ற நிறுவனங்கள் உருவாக்கலாம்
புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அலி ஜின்னா போன்ற கதாபாத்திரத்தைக் கொண்ட 
தலைவர் ஒருவரை உருவாக்கலாம். 

இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள மக்களை மட்டுமே,ஒரு இனமாக கருத முடியும்.
அந்த வகையிலேயே எமது கலாசாரம் வரலாறு போன்றவை அமைந்துள்ளது.ஆனால் 
இந்தியாவினுள்ள தமிழகத்தினுள்ள தமிழ் மக்கள்,அங்கு தங்களை ஒரு தேசிய இனமாகப் பார்க்கலாம். அதாவது தாய் மக்களின் தாய் நாடு தாய்லாந்து,போன்று 
ஜப்பானியர்களின் நாடு ஜப்பான்.இலங்கையின் தேசிய இனமாக சிங்கள  மக்களைமட்டுமே பார்க்கலாம்.

தமிழ் நாட்டிலுள்ள தமிழ் மக்கள் அங்கு தேசிய இனமாகின்ற அதேவேளை ஏனைய 
நாடுகளான,இலங்கை,சிங்கப்பூர்,மடகஸ்கார்,கென்யா போன்ற நாடுகளில் தமிழ் மக்கள் 
ஒரு சிறிய பிரிவினர் மட்டுமேயாகும்.அதாவது ஜப்பானிலுள்ள கொரியர்கள் போன்றும் 
தாய்வானிலுள்ள,சீனர்கள் போன்றவர்களே இலங்கையிலுள்ள தமிழர்கள்.எனவே அவர்களால் சுயாட்சியையோ,சுய நிர்ணய உரிமையையோ கோர முடியாது.சிறு மக்கள் பிரிவினருக்கு உரிய உரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும்.சிறிய மக்கள் 
பிரிவினர்களுக்கான உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் 
கூறப்பட்டுள்ளதைவிட,அதிகளவில் எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு நாங்கள் செய்துள்ளோம்.தமிழ் மக்களின் தாயகமான,இந்தியாவில் கூட தமிழ் மொழி அரச கரும 
மொழியாக இல்லை.ஆனால் இலங்கையில் உள்ளது.அந்த வகையில் நாம் இந்தியாவை விட முன்சென்றுள்ளோம்.

செல்வநாயகம் உட்பட எந்த தலைவரும் வட கிழக்கு எவ்வாறு தமிழர்களின் தாயகமாக 
இருக்கும் என்பதை நிருபிக்கவில்லை.தமிழ்மக்கள் எவ்வாறு தேசிய இனமாக வருவார்கள் என்பதனை நிருபிக்கவில்லை.செல்வநாயகம் அகிம்சை வாதி எனக் குறிப்பிடுகின்றார்கள்,ஆனால் அவரின் உண்மையான நடத்தையை உற்று நோக்கினால் 
அவர் எத்தகைய அகிம்சைவாதி என்பது புரியும்.ஒரு சந்தர்ப்பத்தில் செல்வநாயகத்தின் 
கொள்கைகளுக்கெதிராக யாழ்பாணத்தில் சிதம்பரம்,கனகசிங்கம்,மற்றும் நேசையா 
உள்ளிட்ட பலர் கூட்டம் ஒன்றை நடத்தினர்.அக் கூட்டத்தை குண்டர்களை அனுப்பி 
செல்வநாயகம் குழப்பியிருந்தார்.செல்வநாயகத்தின் அகிம்சைக் கூட்டங்களில் 
பங்கெடுக்காதவர்களை குண்டர்களைக்கொண்டு தாக்கவைத்தார்.

இற்றைக்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிகளைத் தோற்கடிக்க முடியும் என்று எமது கட்சி கூறியது.அதாவது புலிகள் தோற்கடிக்கப் படவேண்டும் என்பதனை   எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும்,அது முடியாத காரியம் என்றே எல்லோரும் நம்பினர்.
நாங்கள் அந்த கூற்றை உடைத்தோம்.விளைவாக புலிகள் தோற்கடிக்கப் பட்டனர்.

நாங்கள் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தெரிவித்த விடயம் ஒன்றுள்ளது.அதாவது 
செல்வநாயகத்தின் அகிம்சை ரீதியிலான அச்சுறுத்தலுக்கோ,பிரபாகரனின் ஆயுத ரீதியிலான அச்சுறுத்தலுக்கோ அடி பணிந்ததில்லை.மாறாக தர்க்கங்களை ஏற்றுக் 
கொள்வோம்.நாங்கள் பௌத்தர்கள் தர்க்கவியல் ரீதியில் நிருபிக்கப்படும்விடயங்களை 
ஏற்றுக்கொள்வோம்.தமிழீழம் சரியான கோரிக்கை என நிருபித்தால்.அதற்காக முன் நிற்கத் தயார் என்று கூறி வந்தோம்.யாரும் அதனை நிருபிக்க முன் வரவில்லை,மாறாக 
அச்சுறுத்தலே வந்தது.

தற்போது மக்களுக்கு ஒரு விடையத்தைக் கூற வேண்டும்.புலிகளைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தொடர்ந்து இருக்கவேண்டாம். அதற்கடுத்த பிரிவினைவாத சவாலை 
எதிர் கொள்ள முன் வாருங்கள். நவீன முறையில் பிரிவினை வாதம் உருவாகலாம்.
புலியின் வால்  மட்டுமே இலங்கையில் இருந்தது  நாம் வாலை  வெட்டியுள்ளோம்.
வாலை வெட்டிய நாங்கள் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக கூறுகின்றோம் .ஆனால் 
புலியின் வாய் நோர்டிக் நாடுகளிலுள்ளது.முன் கால்கள் கனாடவிலும் ஐரோப்பிய 
நாடுகளிலும் உள்ளது.பின் கால்கள் தென் ஆபிரிக்காவிலும்,அவுஸ்திரேலியாவிலும் 
உள்ளன.எனவே நமக்கு ஒரு சின்ன இடை வெளி மட்டுமே கிடைத்துள்ளது.

இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேவேல் என்ற ஒரு நாடு இருக்க வில்லை.என்பத்தாறு நாடுகளில் யூதர்கள் பரந்துபட்டுக் காணப்பட்டார்கள்.எனினும் 
 என்பத்தாறு நாடுகளில் பரந்து காணப்பட்ட யூதர்கள் ஒருகட்டத்தில் ஒன்றிணைந்து
இயக்கம் ஒன்றை ஆரம்பித்து பாலஸ்தீனத்திற்குள் இஸ்ரேல் என்ற நாட்டை 
உருவாக்கினார்கள்.

இந்தியாவில் முதலில் ஏற்பட்டது,முஸ்லிம் பிரிவினை வாதம் அல்ல.மாறாக 1919   
ஆம் ஆண்டில் சுய நிர்ணய அரசியலமைப்பு வந்ததும்,தமிழ்,கன்னடம்,தெலுங்கு,ஆந்திரா 
ஆகிய பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 1935 ஆண்டு 
அரசியலமைப்பின்போது அந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது பின்னர் நாம் தமிழர் 
இயக்கம் உருவானது.ஆனால் 1962ஆம் ஆண்டு,இந்திய அரசாங்கத்தின் இராணுவப் பிரிவால் அந்த இயக்கம் அழிக்கப்பட்டது.இதனையடுத்து 1962ல் லண்டனில் உள்ள,உலக  தமிழ் சங்கத்தினால் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.இலங்கையில் சிறைப் பட்டிருந்த 
செல்வநாயகம் சிகிச்சைக்காக லண்டன் சென்றபோது அந்த மகா நாட்டில்  கலந்து கொண்டார். அப்போது அவர் அந்த மகா நாட்டில் கலந்து கொண்டு என்ன கூறினார்?இந்தியா பெரிய நாடு.அதனுடன் மோதி நாட்டைப் பெற முடியாது என்றார்.பின்னர்
இலங்கை தெரிவு செய்யப்பட்டது. செல்வநாயகம் மலேஷியாவில் பிறந்து,இலங்கையில்
குடியேறியவர்.

அன்று சர்வதேச நாடுகள் பிரிவினைக்கு மறைமுகமாக உதவி செய்தன,ஆனால் இன்றோ நேரடியாக பிரிவினை வாதத்திற்கு ஆதரவாகச் செயல் படுகின்றன.எதிர் காலத்தில் நான் சொன்னது போல் பிரிவினைவாதத் தலைவர்கள் உருவாகலாம் அவர்களை எதிர் கொள்ள நம் தயாராக வேண்டும்.இதற்காக சட்டம்அறிவு,தொல்பொருள்
உள்ளிட்ட விடயங்கள் சார்ந்த அறிவுடைய ராஜதந்திர படை ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும்.    

  
.  ,