வெள்ளி, 12 மே, 2017

குரூரத்தின் உச்சம்! மோடி!




குஜராத்தில் சாதித்த மோடி: அதற்கு RSS அளித்த அன்பளிப்பு பிரதமர் பதவி .
(குரூரத்தின் உச்சம்: பில்கிஸ் பானு தனது 3 வயது பெண் குழந்தையான சலஹாவை இறுக்கி அணைத்துக்கொண்டார். கும்பலில் ஒருவன், முதலில் அவரிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி, அதன் தலையை தரையில் அடித்துக் கொன்றான். மூன்று பேர் நெருங்கிவந்து, அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள். அவர்களை பில்கிஸ் பானுவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை பானு சிறுவயதில் அண்ணன் என்றும் மாமா என்றும் அவர் அன்போடு அழைத்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கிறேன் என்ற பில்கிஸ் பானுவின் கதறலுக்கு அவர்கள் காது கொடுக்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் குழந்தையை ஈன்ற தாயும், அவரது பிஞ்சுக் குழந்தையும்கூட கொல்லப்பட்டார்கள்.)
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும் என்றொரு சொல்வழக்கு உண்டு. ஆனால், பில்கிஸ் பானு வழக்கில் மறுக்கப்பட்ட நீதி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு காலதாமதமாக வழங்கப்பட்டிருக்கிறது. 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தையடுத்து நடந்த கலவரங்களின்போது, கூட்டாகச் சேர்ந்து வல்லுறவு குற்றத்தில் ஈடுபட்டதற்காகவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்ததற்காகவும் 11 குற்றவாளிகளுக்கு 2008-ல் மும்பை சிறப்பு நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது மும்பை உயர்நீதிமன்றம்.
குற்றவாளிகள் 11 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றுதான் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமின்றி, அவர்களைப் பாதுகாக்க முயற்சித்த ஐந்து காவலர்களும் இரண்டு மருத்துவர்களும்கூட இப்போது தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். மும்பை சிறப்பு நீதிமன்றம் மருத்துவர்களையும், பிணங்களை எரித்து தடயங்களை அழித்த காவலர்களையும் தண்டிக்க மறுத்துவிட்டது. வழக்கு பதிய மறுத்த தலைமைக் காவலருக்கு மட்டுமே அது தண்டனை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணியில் இருந்த காவலர்களும் மருத்துவர்களும் தனது பணியைச் செய்ய மறுத்து, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு தண்டனை அளித்திருக்கும் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முன்னோடியான தீர்ப்புகளில் ஒன்றாகும்.
நீதியின் நெடும்பயணம்
குஜராத் கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அஹமதாபாத் நகரிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராதிக்பூர் கிராமத்தில் ஒரு மதவெறிக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. முஸ்லிம் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது. தீ வைக்கப்பட்ட வீடுகளில் பில்கிஸ் பானுவின் வீடும் ஒன்று. அவரது குடும்பத்தினர் வீட்டுக்குப் பின்னாலிருந்த வயல்களுக்குள் ஓடினர்.
பஞ்சாயத்து அலுவலகம், பள்ளிக்கூடம், மசூதி என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடமாக பாதுகாப்பு தேடி அலைந்தனர். மசூதியில் அவர்கள் தங்கியிருந்தபோது அவர்களது குடும்பத்தில் ஒரு புதிய வரவும் வந்தது. பில்கிஸின் சகோதரி ஒரு குழந்தையைப் பிரசவித்தார். மசூதியில் தங்குவதும் பாதுகாப்பானதாக இல்லை.
அங்கிருந்து அக்குடும்பம் பாதுகாப்பான இடத்தைத் தேடி பயணத்தைத் தொடர்ந்தது. முக்கியமான சாலைகளைத் தவிர்த்துக் காட்டுப் பகுதிகளின் வழியாகவே அவர்கள் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களை கத்திகளோடும் வெட்டரிவாள்களோடும் ஒரு கும்பல் இடைமறித்தது. ‘இதோ முஸ்லிம்கள்… கொல்லுங்கள் அவர்களை… வெட்டுங்கள் அவர்களை’ என்று கூச்சலிட்டது.
குரூரத்தின் உச்சம்
பில்கிஸ் பானு தனது 3 வயது பெண் குழந்தையான சலஹாவை இறுக்கி அணைத்துக்கொண்டார். கும்பலில் ஒருவன், முதலில் அவரிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி, அதன் தலையை தரையில் அடித்துக் கொன்றான். மூன்று பேர் நெருங்கிவந்து, அவரது ஆடைகளைக் கிழித்தெறிந்தார்கள். அவர்களை பில்கிஸ் பானுவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை பானு சிறுவயதில் அண்ணன் என்றும் மாமா என்றும் அவர் அன்போடு அழைத்திருக்கிறார். கர்ப்பமாக இருக்கிறேன் என்ற பில்கிஸ் பானுவின் கதறலுக்கு அவர்கள் காது கொடுக்கவில்லை. அந்த மூன்று பேரும் ஒருவர் மாறி ஒருவராக அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். அப்போது அவரது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் குழந்தையை ஈன்ற தாயும், அவரது பிஞ்சுக் குழந்தையும்கூட கொல்லப்பட்டார்கள்.
பில்கிஸ் பானு எட்டு வல்லுறவுகளுக்கும், பதினான்கு கொலைகளுக்கும் ஒற்றைச் சாட்சி. குற்றவாளிகள் அத்தனை பேரின் பெயர்களும் விவரங்களும் அவருக்குத் தெரியும். நடந்ததை எல்லாம் விவரமாகக் காவல் நிலையத்தில் சொன்னார். ஆனால் தலைமைக் காவலர் சோமாபாய் கோரி அதை வழக்காகப் பதிவு செய்துகொள்ளவில்லை. பில்கிஸ் பானுவை மீட்பு முகாமிற்கு அனுப்பிவைத்தார்.
தடயத்தை அழித்த காவல் துறை
இரண்டு நாட்கள் கழித்து உள்ளூர் புகைப்படச் செய்தியாளர்கள் சிலர் படுகொலைக்கு ஆளான குடும்பத்தின் உடல்களைக் கண்டுபிடித்தார்கள். அதன் பிறகே அச்செய்தி வெளியுலகத்தை எட்டியது. காவல் துறை வழக்குப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அழுகிக் கிடந்த பிணங்களிலிருந்து தனது மூன்று வயது குழந்தையையும் குடும்பத்தினரையும் அடையாளம் காட்டினார் பில்கிஸ். வல்லுறவு நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே அவர் மருத்துவச் சோதனை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவர்களுக்கும் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு பிணக்கூறாய்வு செய்யப்படவில்லை.
சிபிஐ இந்த வழக்கில் மறுவிசாரணை செய்வதற்காக 2004-ல் பிணங்களை மீண்டும் தோண்டியெடுத்தபோது, மண்டை ஓடுகள்கூட கிடைக்கவில்லை. அப்போதுதான் பிணங்கள் உடனே மக்க வேண்டும் என்பதற்காக உப்பைத் தூவியது தெரியவந்தது. இவ்வழக்கின் ஆரம்பத்திலிருந்தே தடயங்களை மறைப்பதிலும் குற்றவாளிகளுக்கு உதவுவதிலும் காவல் துறை ஈடுபட்டு வந்திருப்பது வெட்டவெளிச்சமானது.
பாலியல் வல்லுறவு நடந்து 15 நாட்களுக்குப் பிறகுதான், பில்கிஸ் பானுவால் மீட்பு முகாமிலிருந்த காவல் துறையிடம் சொல்லி வழக்கைப் பதிய முடிந்தது. காவல் துறை அவரிடம் வெற்றுத்தாள்களில் கைரேகையைப் பதிவு செய்துகொண்டது. அவரை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்களின் பெயர்கள் உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் அனைத்தையும் முற்றிலுமாக அழித்துவிட்டது. விளைவாக, 2003 மார்ச் 25 தேதியன்று போதிய சாட்சியங்கள் இல்லையென்று குற்றவியல் நடுவர் இந்த வழக்கை முடித்துவைத்தார்.
உருக்கும் வார்த்தைகள்
தேசிய மனித உரிமை ஆணையத்தின் உதவியோடு உச்ச நீதிமன்றத்தை நாடினார் பில்கிஸ் பானு. உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை குஜராத் அரசு விசாரிப்பதற்குத் தடை விதித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இவ்வழக்கை சிபிஐ விசாரணை செய்யவும் உத்தரவிட்டது. மேலும், குற்றங்கள் நடந்தபோது முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி, அவரது ஆட்சியில் நேர்மையான நீதி விசாரணைக்கு வாய்ப்பில்லை என்று வழக்கு விசாரணையை குஜராத்தில் இருந்து மஹாராஷ்டிராவுக்கு மாற்றியும் உத்தரவிட்டது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் பில்கிஸ் பானுவின் வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. இவ்வழக்கில் அவருக்கு ஆதரவாக இருந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கும்கூட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் உடன்பாடில்லை. பில்கிஸ் பானுவும்கூட அதே கருத்தைத்தான் சமீபத்தில் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். இத்தனை வலிகளுக்குப் பிறகு அவர் சொல்லியிருக்கும் வார்த்தைகள் நம் மனதைப் பிசைகின்றன. மனசாட்சியை அவை துரத்துகின்றன. “நியாயம் கிடைக்க வேண்டும் என்றே போராடினேன், பழிதீர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமைகளுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனால் என் பெயரைச் சொல்லி யாரும் சாவதை நான் விரும்பவில்லை. என் மகள் பாதுகாப்பான இந்தியாவில் வளர வேண்டும் என்பதை மட்டுமே விரும்புகிறேன்!”
நன்றி : தமிழ் இந்து









படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

புதன், 10 மே, 2017

Mind Map For Different Types of Computers

Mind Map For Different Types of Computers


Analog Computer

It was Lord Kelvin who first introduced the Analog computer. In such a computer numerical data are represented by physical variables which can be measured, for example, electrical voltage. A thermometer is a very good example analog computer. 

Digital Computer

A certain type of computer that accepts data and processes it in the form of numbers is popularly known as a Digital Computer. In such a computer all the characters are converted into binary code.

Hybrid Computer

A computer which has the features of analogue, as well as the digital machine, is known as a Hybrid Computer. The hybrid computer is generally noticed in the geological departments.

Micro Computer

Microcomputers are small computer which are specifically designed for personal and office use. They are usually inexpensive and have minimum storing and processing speed. Some common examples are laptop or desktop.

Mini Computer

Minicomputers are more powerful than a microcomputer. They have faster memory with better-operating speeds and large storage capacities than microcomputers. They are generally used as a server and are capable of supporting up to 200 users.

Mainframe Computer

Mainframe computers are those types of computers which have very high memory and processing speed. Hence Mainframe computers are used as a server since they can support thousands of users.

Super computer

Supercomputers are the most powerful computers which are used mainly for the purpose of difficult problem-solving requirements. Hence Supercomputers are used in times of research, weather forecasting and Weapon designing and much more.
The first successful supercomputer: CDC 6600
The fastest supercomputer in the world: Sunway TaihuLight of China
India’s first Super Computer: PARAM-8000 which was developed by CDAC Pune in 1998.
India’s fastest super computer: Shasra T which was manufactured by IIS (Indian Institute of Science).

Servers

Servers are certain computers that are designed specifically to monitor and solve the needs or request of other programs or computer.

Workstation

Workstations are like desktop terminals. These are more powerful than microcomputers and are typically networked. A workstation usually serves a single user only.

Information appliances

Information appliances are computers which are used for a specific purpose which is as per the requirements of the user. Such activities may include playing music or photography etc.

Embedded System

A computer system which performs a dedicated function that is for a special purpose is known as an Embedded System. They function within a larger system.

தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா




யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவற்றுக்கான காரியாலயத்தில் இன்று(9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துரைத்த அவர்,
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தமிழ் மக்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவிதமான தடங்களும் இருக்கக் கூடாது. இதனைக் கூறுவது நீதியின் அடிப்படையில் தான். அதனைத் தான் நான் வலியுறுத்துகிறேன்.
எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது. அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவேண்டும் என்றார்.
மறைக்கப்பட்ட தமிழனும்,மறைக்கமுடியாத சாதனையும் !



நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Nagalingam Ethirveerasingam, பிறப்பு: 1933) இலங்கைக் கல்விமானும், விளையாட்டு வீரரும் ஆவார். 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும்  மூன்று ஆசியப் போட்டிகளிலும  இலங்கைக்காக விளையாடியவர்.
இலங்கையின் முன்னணி உயரப்பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்தவர். அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958ல் ஜப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.
எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண மாவட்டம்பெரியவிளான் என்ற ஊரில் பிறந்தவர். முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே அகில இலங்கை சாதனையை முறியடித்திருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரது உடன்பிறந்தவர்களான என். ராஜசிங்கம், என். பரராஜசிங்கம், என். செகராஜசிங்கம் ஆகியோரும் கல்லூரிக்காலத்தில் பரவலாக அறிந்த விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள்.
இலங்கைசியேரா லியோனிபப்புவா நியூ கினிநைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்வசிப்பிடம் கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா பணி விரிவுரையாளர்,விளையாட்டு வீரர்..

.
#கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ඩන්කන් වයිට්,  Duncan White.



ඔලිම්පික් පදක්කම් වාර්තාව
ஒலிம்பிக் பதக்கச்  சாதனை விவரணம் 
පිරිමි ක්‍රීඩා ஆண்கள் பிரிவு 
රිදී පදක්කම - 1948 - ලන්ඩනයේ දී - මීටර් 400 කඩුලු මතින් දිවීම
வெள்ளிப் பதக்கம் 1948 லண்டன் 400 மீற்றர் ஆண்கள் தடை தாண்டல் ஓட்டம் 
1918 මාර්තු මස 01 වන දින ලත්පාන්දුර උපත ලැබූ ඩන්කන් වයිට් මෙලොවින් සමුගත්තේ 1998 ජුලි මස තෙවැනි දින වෝවික්ෂයර්හි දීය. ඔලිම්පික් තරඟාවලියක දී ලංකාව වෙනුවෙන් පදක්කමක් දිනා ගත් මුල්ම ක්‍රීඩකයා මොහු විය. මීටර් 400 කඩුළු පැන දිවීමේ තරඟයෙන් රිදී පදක්කම දිනා ගැනීමට වයිට් සමත් වූයේ 1948 වර්ෂයේ ලන්ඩනයේ පවත්වනු ලැබූ “සමර් ඔලිම්පික්ස්” තරඟාවලියේදීය.
කළුතරට නුදුරු ග්‍රාමයක් වූ ලත්පඳුර ඩන්කන් වයිට්ගේ උපන් ගමයි. එකවකට ශ්‍රී ලංකාව බ්‍රිතාන්‍යයේ යටත් විජිතයක්ව පැවති අතර ඩන්කන් වයිට්, ජෝන් බර්නාර්ඩ් වයිට් සහ සෙසලිසා හෝක් වයිට්ට යන ඉංග්‍රීසි මවුපියන්ට දාව උපන් සිව් දරුවන්ගෙන් දෙවැන්නා විය. නුවර ට්‍රිටේ විද්‍යාලයෙන් අධ්‍යාපනය හැදෑරූ හෙතෙම එහිදී “ට්‍රිනිටි ලයන්” යන සම්මානයෙන් ද පිදුම් ලැබීය. නමුත් සුළු විනය ගැටළුවක් හේතුවෙන් පසුව ඔහුට මෙම සම්මානය අහිමි විය.
ඩන්කන් වයිට්ගේ ඔලිම්පික් ජයග්‍රහණයත්, ලංකාව බ්‍රිතාන්‍ය පාලනයෙන් මිදී නිදහස ලැබීමත් යන අවස්ථා දෙකම එකම වර්ෂයක සිදුවීම සුවිශේෂ වේ. එකී ඔලිම්පික් තරඟාවලියේ එම අංශයෙන් රන් පදක්කම දිනූ රෝයි කොව්රන් නැමැත්තා වසර හතරක් පුරා ඒ සඳහා පුහුණු වීම් කර තිබුණ ද ඩන්කන් වයිට් තම පුහුණුවීම් සඳහා යොදා ගත් කාලයමාස 3කට ආසන්න වේ. වයිට් මෙම තරඟය සඳහා ගතකර තිබූ කාලය තත්පර 51.8 ක් වන අතර ප්‍රථම ස්ථානය ලබා ගත් ක්‍රීඩකයාට වඩා ඔහු සිටියේ තත්පර 0.7 ක් පසුපසිනි. ඒත් සුළු වෙනස ද මෙම ඔලිම්පික් තරඟාවලියේ සුවිශේෂී වාර්තාවන් අතරට එක් වූවක් විය.
ඔලිම්පික් ජයග්‍රහණයෙන් පසුව වයිට් ට්‍රිනිටි විද්‍යාලයේ පවත්වනු ලැබූ උළෙලකින් මහත් හරසරින් යුතුව පිළිගනු ලැබූ අතර ඔහුට අහිමිව ගිය “ට්‍රිනිටි ලයන්” යන ගෞරව සම්මානය නැවත වතාවක් එහිදී පිරිනැමුණි. එකී අවස්ථාවේ රැස්ව සිටි පිරිස අමතා කතා කළ වයිට් කියා සිටියේ “මාගේ ඔලිම්පික් ජයග්‍රහණය ගෞරවාන්විත එකක් වුව ද “ලයන්” ලෙස මා මෙහි දී නැවත හිමි කරගන්නා ලද සම්මානය මට ඊටත් වඩා ගෞරවයක් එක් කළ බවක් එය මා ඉතා ප්‍රීතියෙන් පිළගත් බවත්” ය.
1950 වර්ෂයේ නවසීලන්තයේ ඕක්ලන්ඩ් නඟරයේ පැවති බ්‍රිතාන්‍ය අධිරාජ්‍ය තරඟාවලියේ දී ඩන්කන් වයිට් විසින් මීටර් 440 yard hurdles තරඟය ජයග්‍රහණය කළේ ලෝක වාර්තාවට තත්පර 0.3 ක් පසුපසින් හිඳිමිනි. තවද ඔහු 1949 “බ්‍රිතාන්‍ය අධිරාජ්‍යයා” යන සම්මානයෙන් ද පිදුම් ලැබීය.
නමුදු ශ්‍රී ලංකාව විසින් ඔහුට දැක්වූ ගෞරවය වූයේ වසර ගණනාවකට පසු ඔහු වෙනුවෙන් නිකුත් කරන ලද තැපැල් මුද්දරයයි. 1998 එංගලන්තයේ වෝර්වික්ෂයර්හි දී ඩන්කන් වයිට් මෙලොවින් සමුගත්තේය.
වයිට් විවාහප්‍රාප්ත වී සිටියේ ඇන්ජෙලා වියට්නේ සියබෙල් සමඟ වන අතර ඔහු සය දරු පියෙක් විය. නීටා, මැරිලෙන්, ෆියෝනා, ඩෑන්, මැක්සීන් සහ ක්‍රිස් යනු ඔහුගේ දරුවන් සය දෙනාය. වයිට්ට සහෝදරයන් තිදෙනෙකු වූ අතර ඉන් ෆෙඩ්‍රික් ඒ. වයිට් ද ක්‍රීඩකයෙකු විය. අනෙක් දෙදෙනා ස්ටැන්ලි ලෙනාර්ඩ් වයිට් හා ඩග්ලස් ඇන්ඩෲ වයිට් වන අතර ඔවුන් 1960 වසරේදී මරණයට පත් විය.




14-வது ஒலிம்பிக் போட்டி 1948.

14-வது ஒலிம்பிக் போட்டி 1948 

இரண்டாம் உலகப் போர் காரணமாக 1940, 1944-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 14-வது ஒலிம்பிக் போட்டி 1948-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்ற இப்போட்டியில் 59 நாடுகளைச் சேர்ந்த 3,714 வீரர்கள், 390 வீராங்கனைகள் என மொத்தம் 4,104 பேர் கலந்து கொண்டனர்.
17 விளையாட்டுகளில் 136 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2-வது உலகப் போரில் தீவிரமாக செயல்பட்ட ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் இப்போட்டியில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்கா 38 தங்கம், 27 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 84 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்வீடன் 16 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், பிரான்ஸ் 10 தங்கம், 6 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
இந்தியாவுக்கு 4-வது தங்கம்
ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-வது முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இறுதி போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து வெள்ளியும், நெதர்லாந்து வெண்கலமும் வென்றன.
பிளாங்கர்ஸ்
2 குழந்தைகளின் தாயான நெதர்லாந்தின் 30 வயது தடகள வீராங்கனை பேனி பிளாங்கர்ஸ் கோயன் 4 தங்கம் வென்றார். 100 மீட்டர், 200 மீட்டர், 80 மீட்டர் தடை தாண்டுதல் போட்டி, 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். தனது சாதனை மற்றும் குடும்பப் பின்னணியின் காரணமாக இவர் தி பிளையிங் ஹவுஸ் வைஃப் என்று அழைக்கப்பட்டார். நெதர்லாந்து தடகள வரலாற்றில் தலைசிறந்த வீராங்கனையாக கருதப்படும் பிளாங்கர்ஸூக்கு ஆம்ஸ்டெர்டாமில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

டங்கன் ஒயிட்
இலங்கை வீரர் டங்கன் ஒயிட் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இலங்கைக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுதான்.

ஆர்தர் வின்ட்
 ஜமைக்காவின் ஆர்தர் வின்ட் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஜமைக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார்.

4 தங்கம்வென்றவர்இரு குழந்தைகளின் தாய் சாதனைகளுக்கு எதுவும் தடையில்லை சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு ஒன்றே மூலதனம்,
#நன்றி தமிழ் ஹிந்து #

செவ்வாய், 9 மே, 2017

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

Menon Balasubramanian
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளைக் காக்க‍வும், தீயவர்களை
அழிக்க‍வும் எடுத்த‍துதான் 10 அவதாரங்கள் என்பது நாமறிந்த செய்தியே! ஆனால் விஷ்ணு, இந்த 10 அவதாரங்களையும் எடுக்க‍க் காரணமாக இருந்தது ஒரு முனிவரின் சாபம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பலநூறு ஆண்டுகளுக்கு முன், சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷி என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமன் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தவன். அன்று முழுவதும் ஹரியைக் குறித்த பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பொழுதைக் கழித்தப்பின் அடுத்த நாளான துவாதசி அன்று விரதத்தை முடித்துக் கொள்வான். அந்தக் கடுமையான விரதமுறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.
அப்படி இருக்கையில் ஒரு முறை துவாதசி தினத்தன்று அம்பாரிஷின் அரண்மனைக்கு முனிவர்களில் மாமுனியான துர்வாசர் வந்திருந்தார். அவர் சற்று முன்கோபக்காரர். அன்று மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். மாமுனிவரைக் கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அர்க்கியபாத்யம் கொடுத்ததுடன் (கை கால்களை அலம்பிக்கொள்ள தண்ணீர் தருவது) மாமுனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்திற்குமுன் முடிக்க வேண்டி இருப்பதால் விரைவாக காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வந்து விடுமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோளை ஏற்ற மாமுனிவரும் நதிக் கரைக்குசென்று தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வரத்துவங்கினார் . ஆனால் துரதிஷ்டவசமாக அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள நேரம் ஆகிவிட்டது. துவாதசி காலநேரம் முடிந்துவிடும் என்பதை மறந்துவிட்டார். குறிப்பிட்ட நேரத்திற்குள் முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.
தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி காலநேரம் முடிவதற்கு முன் தவறாமல் தன் விரதத்தை முடித்துக்கொண்டு வந்திருந்தான். சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை. வந்த விருந்தாளி சாப்பிடுவதற்கு முன் தான் சாப்பிடுவது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி காலநேரம் கடக்கும்முன் முடிக்கவேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வரும் முன்னர் சாப்பிடக் கூடாது. என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பி நின்றவன் யோசனை செய்தான். என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு அருந்தியதற்கு சமானம் அல்ல என்பதினால் சிறிது தண்ணீர் மட்டும் பருகிவிட்டு விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை, தணிணீர்கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாகக் கருத முடியாது என்பதினால் அதைச் செய்தபின் முனிவர் வரும் வரை காத்திருந்தான்.
தனது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அங்கு மன்னன் விரதத்தைமுடித்துக் கொண்டு விட்டதைப் பார்த்தார். தன்னுடைய முக்காலமும் உணரும் சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்துகொண்டார். துவாதசி காலநேரம் முடியும்முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டது உணவு அருந்தியதற்கு இணை ஆகாது என்ற சாஸ்திரம் அவருக்கும் நன்கே தெரியும். ஆனாலும் முன்கோபம் அவரை மீறிக்கொண்டது. மன்னனை ‘நான் வரும் முன்னரே உணவை அருந்தி பாவம் செய்துவிட்டாய்’ எனக் கோபித்துக்கொண்டு சாபம் கொடுக்கத் தயார் ஆனார்; மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவை நாராயணன் மூலமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தான். ஆகவே மாமுனிவர் சாபம் தரத்துவங்கும் முன்னரே நாராயணனைத் துதித்து தியானம் செய்யத் துவங்கினார். அவர் தியானம் செய்யத் துவங்கியதுமே நாராயணன் அவர்களுக்கு இடையில் வந்துநின்று கொண்டுவிட்டார். துர்வாச முனிவர் சாபம் தரும்முன் தன்னைக் காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அம்பாரிச மன்னன் கெஞ்சினான். அதனால் துர்வாசமுனிவரை நோக்கி ஸ்ரீமன் நாராயணண் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிச மன்னன் என்னுடைய உண்மையான பக்தன். நீ எந்த சாபத்தைக் கொடுத்தாலும் அது அவனிடம் போய்ச் சேராது , என்னையே அது வந்தடையும். ஏனெனில் என்னிடம் தஞ்சம் அடைந்து விட்டவர்களைக் காப்பது என் கடமை. நீங்கள் என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்’
அதைக்கேட்ட துர்வாச முனிவருக்குத் தெரிந்தது உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கின்றது என்று. பூமியில் உள்ள மக்களின் நன்மையைக் கருதித்தான் கடவுள் பூமியில் அவதரிப்பார் என்பது தெரிந்திருந்ததாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டதினாலும் தன்னைப் போன்ற மற்ற முனிவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு ஸ்ரீமன் நாராயணனுக்கு தான்கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே இருக்கட்டும் என எண்ணிய துர்வாசர் கூறினார் ‘சரி, நான் கொடுக்க உள்ள சாபமும் ஸ்ரீஹரி ஆகிய உங்கள் மீதே விழட்டும். அதன்படி நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்கவேண்டும்’ அப்படி பொதுநன்மையை மனதில் கொண்டவண்ணம் துர்வாசமுனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது.

திங்கள், 8 மே, 2017

நிதி சம்பந்தமான குறிப்புகள்

நிதி சம்பந்தமான குறிப்புகள்




 அரசாங்க நிருவாகசேவை / தேர்வுப் பரீட்சசைக்குப் பயிற்சி எடுப்பவர்களுக்கு
உதவக் கூடிய ஒரு கைநூல் PDF வடிவில் படித்துப் பயன் பெறுங்கள்  பரீட்சசையில் சித்தி பெறுங்கள்.வர்த்தகம் கணக்கியல் படியாதவர்களுக்கு உதவும்.

இங்கே செல்லுங்கள் முழுவதும் படிக்க.

இப்ப சொல்லுங்கள். ?

T Arulmony
1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*
💯தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​
💯எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.​
💯கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.​
💯புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.​
💯சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.​
💯பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.​
💯நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.​
💯தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.​
💯ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.​
💯அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.​
💯காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.​
💯சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.​
💯உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.​
💯எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்​
💯எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல​
💯அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.​
💯உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை​
💯எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.​
💯எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்​
💯வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.​
💯எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.​
💯உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை​
💯இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 வார்த்தைகள்!





 
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 
 
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 
 
குழந்தை
 
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும். 
 
3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள். 
 
4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது? உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள். கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள். 
 
குழந்தை
 
5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். 
 
6. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள். 
 
7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ, குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள், 'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும். 
 
8. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள். 
 
9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.