புதன், 10 மே, 2017

தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது! சர்வதேச நீதிபதிகள் தேவை: சந்திரிக்கா




யுத்த குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு என்பவற்றுக்கான காரியாலயத்தில் இன்று(9) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துரைத்த அவர்,
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
தமிழ் மக்களுக்கு நீதியினைப் பெற்றுக்கொடுப்பதில் எந்தவிதமான தடங்களும் இருக்கக் கூடாது. இதனைக் கூறுவது நீதியின் அடிப்படையில் தான். அதனைத் தான் நான் வலியுறுத்துகிறேன்.
எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளுமாறு தமிழ் மக்கள் விடுக்கும் கோரிக்கை நியாயமானது. அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கப்படவேண்டும் என்றார்.
மறைக்கப்பட்ட தமிழனும்,மறைக்கமுடியாத சாதனையும் !



நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Nagalingam Ethirveerasingam, பிறப்பு: 1933) இலங்கைக் கல்விமானும், விளையாட்டு வீரரும் ஆவார். 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும்  மூன்று ஆசியப் போட்டிகளிலும  இலங்கைக்காக விளையாடியவர்.
இலங்கையின் முன்னணி உயரப்பாய்தல் வீரராகவும், சாதனையாளராகவும் திகழ்ந்தவர். அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958ல் ஜப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர்.
எதிர்வீரசிங்கம் யாழ்ப்பாண மாவட்டம், பெரியவிளான் என்ற ஊரில் பிறந்தவர். முதலில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும், பின்னர் கொழும்பு சாந்த ஜோசப் கல்லூரியிலும் பயின்ற இவர் கல்லூரி மாணவனாக இருந்தபோதே அகில இலங்கை சாதனையை முறியடித்திருக்கிறார். தற்போது இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவரது உடன்பிறந்தவர்களான என். ராஜசிங்கம், என். பரராஜசிங்கம், என். செகராஜசிங்கம் ஆகியோரும் கல்லூரிக்காலத்தில் பரவலாக அறிந்த விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள்.
இலங்கை, சியேரா லியோனி, பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர் யுனெஸ்கோவிலும் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்வசிப்பிடம் கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா பணி விரிவுரையாளர்,விளையாட்டு வீரர்..

.
#கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ඩන්කන් වයිට්,  Duncan White.



ඔලිම්පික් පදක්කම් වාර්තාව
ஒலிம்பிக் பதக்கச்  சாதனை விவரணம் 
පිරිමි ක්‍රීඩා ஆண்கள் பிரிவு 
රිදී පදක්කම - 1948 - ලන්ඩනයේ දී - මීටර් 400 කඩුලු මතින් දිවීම
வெள்ளிப் பதக்கம் 1948 லண்டன் 400 மீற்றர் ஆண்கள் தடை தாண்டல் ஓட்டம் 
1918 මාර්තු මස 01 වන දින ලත්පාන්දුර උපත ලැබූ ඩන්කන් වයිට් මෙලොවින් සමුගත්තේ 1998 ජුලි මස තෙවැනි දින වෝවික්ෂයර්හි දීය. ඔලිම්පික් තරඟාවලියක දී ලංකාව වෙනුවෙන් පදක්කමක් දිනා ගත් මුල්ම ක්‍රීඩකයා මොහු විය. මීටර් 400 කඩුළු පැන දිවීමේ තරඟයෙන් රිදී පදක්කම දිනා ගැනීමට වයිට් සමත් වූයේ 1948 වර්ෂයේ ලන්ඩනයේ පවත්වනු ලැබූ “සමර් ඔලිම්පික්ස්” තරඟාවලියේදීය.
කළුතරට නුදුරු ග්‍රාමයක් වූ ලත්පඳුර ඩන්කන් වයිට්ගේ උපන් ගමයි. එකවකට ශ්‍රී ලංකාව බ්‍රිතාන්‍යයේ යටත් විජිතයක්ව පැවති අතර ඩන්කන් වයිට්, ජෝන් බර්නාර්ඩ් වයිට් සහ සෙසලිසා හෝක් වයිට්ට යන ඉංග්‍රීසි මවුපියන්ට දාව උපන් සිව් දරුවන්ගෙන් දෙවැන්නා විය. නුවර ට්‍රිටේ විද්‍යාලයෙන් අධ්‍යාපනය හැදෑරූ හෙතෙම එහිදී “ට්‍රිනිටි ලයන්” යන සම්මානයෙන් ද පිදුම් ලැබීය. නමුත් සුළු විනය ගැටළුවක් හේතුවෙන් පසුව ඔහුට මෙම සම්මානය අහිමි විය.
ඩන්කන් වයිට්ගේ ඔලිම්පික් ජයග්‍රහණයත්, ලංකාව බ්‍රිතාන්‍ය පාලනයෙන් මිදී නිදහස ලැබීමත් යන අවස්ථා දෙකම එකම වර්ෂයක සිදුවීම සුවිශේෂ වේ. එකී ඔලිම්පික් තරඟාවලියේ එම අංශයෙන් රන් පදක්කම දිනූ රෝයි කොව්රන් නැමැත්තා වසර හතරක් පුරා ඒ සඳහා පුහුණු වීම් කර තිබුණ ද ඩන්කන් වයිට් තම පුහුණුවීම් සඳහා යොදා ගත් කාලයමාස 3කට ආසන්න වේ. වයිට් මෙම තරඟය සඳහා ගතකර තිබූ කාලය තත්පර 51.8 ක් වන අතර ප්‍රථම ස්ථානය ලබා ගත් ක්‍රීඩකයාට වඩා ඔහු සිටියේ තත්පර 0.7 ක් පසුපසිනි. ඒත් සුළු වෙනස ද මෙම ඔලිම්පික් තරඟාවලියේ සුවිශේෂී වාර්තාවන් අතරට එක් වූවක් විය.
ඔලිම්පික් ජයග්‍රහණයෙන් පසුව වයිට් ට්‍රිනිටි විද්‍යාලයේ පවත්වනු ලැබූ උළෙලකින් මහත් හරසරින් යුතුව පිළිගනු ලැබූ අතර ඔහුට අහිමිව ගිය “ට්‍රිනිටි ලයන්” යන ගෞරව සම්මානය නැවත වතාවක් එහිදී පිරිනැමුණි. එකී අවස්ථාවේ රැස්ව සිටි පිරිස අමතා කතා කළ වයිට් කියා සිටියේ “මාගේ ඔලිම්පික් ජයග්‍රහණය ගෞරවාන්විත එකක් වුව ද “ලයන්” ලෙස මා මෙහි දී නැවත හිමි කරගන්නා ලද සම්මානය මට ඊටත් වඩා ගෞරවයක් එක් කළ බවක් එය මා ඉතා ප්‍රීතියෙන් පිළගත් බවත්” ය.
1950 වර්ෂයේ නවසීලන්තයේ ඕක්ලන්ඩ් නඟරයේ පැවති බ්‍රිතාන්‍ය අධිරාජ්‍ය තරඟාවලියේ දී ඩන්කන් වයිට් විසින් මීටර් 440 yard hurdles තරඟය ජයග්‍රහණය කළේ ලෝක වාර්තාවට තත්පර 0.3 ක් පසුපසින් හිඳිමිනි. තවද ඔහු 1949 “බ්‍රිතාන්‍ය අධිරාජ්‍යයා” යන සම්මානයෙන් ද පිදුම් ලැබීය.
නමුදු ශ්‍රී ලංකාව විසින් ඔහුට දැක්වූ ගෞරවය වූයේ වසර ගණනාවකට පසු ඔහු වෙනුවෙන් නිකුත් කරන ලද තැපැල් මුද්දරයයි. 1998 එංගලන්තයේ වෝර්වික්ෂයර්හි දී ඩන්කන් වයිට් මෙලොවින් සමුගත්තේය.
වයිට් විවාහප්‍රාප්ත වී සිටියේ ඇන්ජෙලා වියට්නේ සියබෙල් සමඟ වන අතර ඔහු සය දරු පියෙක් විය. නීටා, මැරිලෙන්, ෆියෝනා, ඩෑන්, මැක්සීන් සහ ක්‍රිස් යනු ඔහුගේ දරුවන් සය දෙනාය. වයිට්ට සහෝදරයන් තිදෙනෙකු වූ අතර ඉන් ෆෙඩ්‍රික් ඒ. වයිට් ද ක්‍රීඩකයෙකු විය. අනෙක් දෙදෙනා ස්ටැන්ලි ලෙනාර්ඩ් වයිට් හා ඩග්ලස් ඇන්ඩෲ වයිට් වන අතර ඔවුන් 1960 වසරේදී මරණයට පත් විය.




14-வது ஒலிம்பிக் போட்டி 1948.

14-வது ஒலிம்பிக் போட்டி 1948 

இரண்டாம் உலகப் போர் காரணமாக 1940, 1944-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு 14-வது ஒலிம்பிக் போட்டி 1948-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்றது. ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்ற இப்போட்டியில் 59 நாடுகளைச் சேர்ந்த 3,714 வீரர்கள், 390 வீராங்கனைகள் என மொத்தம் 4,104 பேர் கலந்து கொண்டனர்.
17 விளையாட்டுகளில் 136 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 2-வது உலகப் போரில் தீவிரமாக செயல்பட்ட ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் இப்போட்டியில் சேர்க்கப்படவில்லை. அமெரிக்கா 38 தங்கம், 27 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 84 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. ஸ்வீடன் 16 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், பிரான்ஸ் 10 தங்கம், 6 வெள்ளி, 13 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
இந்தியாவுக்கு 4-வது தங்கம்
ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-வது முறையாக தங்கப் பதக்கம் கைப்பற்றியது. இறுதி போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து வெள்ளியும், நெதர்லாந்து வெண்கலமும் வென்றன.
பிளாங்கர்ஸ்
2 குழந்தைகளின் தாயான நெதர்லாந்தின் 30 வயது தடகள வீராங்கனை பேனி பிளாங்கர்ஸ் கோயன் 4 தங்கம் வென்றார். 100 மீட்டர், 200 மீட்டர், 80 மீட்டர் தடை தாண்டுதல் போட்டி, 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார். தனது சாதனை மற்றும் குடும்பப் பின்னணியின் காரணமாக இவர் தி பிளையிங் ஹவுஸ் வைஃப் என்று அழைக்கப்பட்டார். நெதர்லாந்து தடகள வரலாற்றில் தலைசிறந்த வீராங்கனையாக கருதப்படும் பிளாங்கர்ஸூக்கு ஆம்ஸ்டெர்டாமில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

டங்கன் ஒயிட்
இலங்கை வீரர் டங்கன் ஒயிட் 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இலங்கைக்கு கிடைத்த முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுதான்.

ஆர்தர் வின்ட்
 ஜமைக்காவின் ஆர்தர் வின்ட் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஜமைக்கா வீரர் என்ற பெருமையை பெற்றார்.

# 4 தங்கம், வென்றவர், இரு குழந்தைகளின் தாய் சாதனைகளுக்கு எதுவும் தடையில்லை சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு ஒன்றே மூலதனம்,
#நன்றி தமிழ் ஹிந்து #

செவ்வாய், 9 மே, 2017

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்

விஷ்ணுவின் 10 அவதாரங்களுக்குக் காரணம்… ஒரு முனிவர் தந்த‌ சாபமே! – அரியதோர் ஆன்மீகத் தகவல்

Menon Balasubramanian
பாற்கடலில் பள்ளிக்கொண்டிருக்கும் விஷ்ணு பகவான் அகிலத்தில் உள்ள‍ மக்க‍ளைக் காக்க‍வும், தீயவர்களை
அழிக்க‍வும் எடுத்த‍துதான் 10 அவதாரங்கள் என்பது நாமறிந்த செய்தியே! ஆனால் விஷ்ணு, இந்த 10 அவதாரங்களையும் எடுக்க‍க் காரணமாக இருந்தது ஒரு முனிவரின் சாபம்தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பலநூறு ஆண்டுகளுக்கு முன், சூரிய வம்சத்தைச் சார்ந்த அம்பாரிஷி என்ற மன்னன் ஆட்சியில் இருந்தான். அவன் ஸ்ரீமன் நாராயணன் என்கின்ற விஷ்ணுவின் பக்தன். பெளர்ணமியின் பதினோறாவது தினங்களில் கடுமையான ஏகாதசி விரதம் அனுஷ்டித்து வந்தவன். அன்று முழுவதும் ஹரியைக் குறித்த பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டு பொழுதைக் கழித்தப்பின் அடுத்த நாளான துவாதசி அன்று விரதத்தை முடித்துக் கொள்வான். அந்தக் கடுமையான விரதமுறையை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொண்டது இல்லை.
அப்படி இருக்கையில் ஒரு முறை துவாதசி தினத்தன்று அம்பாரிஷின் அரண்மனைக்கு முனிவர்களில் மாமுனியான துர்வாசர் வந்திருந்தார். அவர் சற்று முன்கோபக்காரர். அன்று மன்னன் ஏகாதசி விரதத்தில் இருந்தான். மாமுனிவரைக் கண்டவன் பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தான். அர்க்கியபாத்யம் கொடுத்ததுடன் (கை கால்களை அலம்பிக்கொள்ள தண்ணீர் தருவது) மாமுனிவரிடம் தான் ஏகாதசி விரதத்தை துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்திற்குமுன் முடிக்க வேண்டி இருப்பதால் விரைவாக காலை அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு வந்து விடுமாறு அவரிடம் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோளை ஏற்ற மாமுனிவரும் நதிக் கரைக்குசென்று தன்னுடைய ஆசார அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வரத்துவங்கினார் . ஆனால் துரதிஷ்டவசமாக அனுஷ்டானங்களை முடித்துக்கொள்ள நேரம் ஆகிவிட்டது. துவாதசி காலநேரம் முடிந்துவிடும் என்பதை மறந்துவிட்டார். குறிப்பிட்ட நேரத்திற்குள் முனிவரும் வரவில்லை என்பதைக் கண்ட அரசன் தவிக்கலானான்.
தன்னுடைய வாழ்க்கையில் அத்தனைக் காலமும் துவாதசி காலநேரம் முடிவதற்கு முன் தவறாமல் தன் விரதத்தை முடித்துக்கொண்டு வந்திருந்தான். சோதனையாக அன்று மாமுனிவர் வரவில்லை. வந்த விருந்தாளி சாப்பிடுவதற்கு முன் தான் சாப்பிடுவது தவறு என்பதால் மன்னன் தவித்தான். அதே சமயத்தில் விரதத்தையும் துவாதசி காலநேரம் கடக்கும்முன் முடிக்கவேண்டும். மாமுனிவரையும் அவமானப்படுத்துவது போல அவர் வரும் முன்னர் சாப்பிடக் கூடாது. என்ன செய்வது எனப் புரியாமல் குழம்பி நின்றவன் யோசனை செய்தான். என்ன செய்வது என யோசித்தவன் தண்ணீர் அருந்துவது உணவு அருந்தியதற்கு சமானம் அல்ல என்பதினால் சிறிது தண்ணீர் மட்டும் பருகிவிட்டு விரதத்தை முடித்துக் கொண்டான். வேறு வழி இல்லை, தணிணீர்கூட அருந்தாமல் இருந்தால் விரதம் முடிந்து போனதாகக் கருத முடியாது என்பதினால் அதைச் செய்தபின் முனிவர் வரும் வரை காத்திருந்தான்.
தனது காலைக் கடமைகளை முடித்துக்கொண்டு துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்தார். அங்கு மன்னன் விரதத்தைமுடித்துக் கொண்டு விட்டதைப் பார்த்தார். தன்னுடைய முக்காலமும் உணரும் சக்தியினால் நடந்து முடிந்திருந்த அனைத்தையும் அறிந்துகொண்டார். துவாதசி காலநேரம் முடியும்முன் தண்ணீர் அருந்தி விரதத்தை முடித்துக்கொண்டது உணவு அருந்தியதற்கு இணை ஆகாது என்ற சாஸ்திரம் அவருக்கும் நன்கே தெரியும். ஆனாலும் முன்கோபம் அவரை மீறிக்கொண்டது. மன்னனை ‘நான் வரும் முன்னரே உணவை அருந்தி பாவம் செய்துவிட்டாய்’ எனக் கோபித்துக்கொண்டு சாபம் கொடுக்கத் தயார் ஆனார்; மன்னன் பார்த்தான். அந்த சாபத்தினால் ஏற்பட இருக்கும் அழிவை நாராயணன் மூலமே தடுக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்தான். ஆகவே மாமுனிவர் சாபம் தரத்துவங்கும் முன்னரே நாராயணனைத் துதித்து தியானம் செய்யத் துவங்கினார். அவர் தியானம் செய்யத் துவங்கியதுமே நாராயணன் அவர்களுக்கு இடையில் வந்துநின்று கொண்டுவிட்டார். துர்வாச முனிவர் சாபம் தரும்முன் தன்னைக் காப்பாற்றுமாறு விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அம்பாரிச மன்னன் கெஞ்சினான். அதனால் துர்வாசமுனிவரை நோக்கி ஸ்ரீமன் நாராயணண் கூறினார் ‘மகரிஷியே இந்த அம்பாரிச மன்னன் என்னுடைய உண்மையான பக்தன். நீ எந்த சாபத்தைக் கொடுத்தாலும் அது அவனிடம் போய்ச் சேராது , என்னையே அது வந்தடையும். ஏனெனில் என்னிடம் தஞ்சம் அடைந்து விட்டவர்களைக் காப்பது என் கடமை. நீங்கள் என்ன சாபம் தந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்’
அதைக்கேட்ட துர்வாச முனிவருக்குத் தெரிந்தது உலகத்தின் நன்மையைக் கருதித்தான் இப்படி ஒரு நிலைமை வந்திருக்கின்றது என்று. பூமியில் உள்ள மக்களின் நன்மையைக் கருதித்தான் கடவுள் பூமியில் அவதரிப்பார் என்பது தெரிந்திருந்ததாலும், ஏதோ ஒரு காரணத்திற்காக நாடகம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொண்டதினாலும் தன்னைப் போன்ற மற்ற முனிவர்களின் நலனை மனதில் வைத்துக்கொண்டு ஸ்ரீமன் நாராயணனுக்கு தான்கொடுக்க உள்ள சாபமும் நன்மைக்காகவே இருக்கட்டும் என எண்ணிய துர்வாசர் கூறினார் ‘சரி, நான் கொடுக்க உள்ள சாபமும் ஸ்ரீஹரி ஆகிய உங்கள் மீதே விழட்டும். அதன்படி நீங்கள் பூமியில் பல பிறவிகள் எடுக்கவேண்டும்’ அப்படி பொதுநன்மையை மனதில் கொண்டவண்ணம் துர்வாசமுனிவர் கொடுத்த சாபத்தின் விளைவாகவே விஷ்ணு பூமியில் பல அவதாரங்களை எடுக்க வேண்டி இருந்தது.

திங்கள், 8 மே, 2017

நிதி சம்பந்தமான குறிப்புகள்

நிதி சம்பந்தமான குறிப்புகள்




 அரசாங்க நிருவாகசேவை / தேர்வுப் பரீட்சசைக்குப் பயிற்சி எடுப்பவர்களுக்கு
உதவக் கூடிய ஒரு கைநூல் PDF வடிவில் படித்துப் பயன் பெறுங்கள்  பரீட்சசையில் சித்தி பெறுங்கள்.வர்த்தகம் கணக்கியல் படியாதவர்களுக்கு உதவும்.

இங்கே செல்லுங்கள் முழுவதும் படிக்க.

இப்ப சொல்லுங்கள். ?

T Arulmony
1955-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*
​💯தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​
​💯எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.​
​💯கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.​
​💯புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.​
​💯சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.​
​💯பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.​
​💯நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.​
​💯தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.​
​💯ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.​
​💯அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.​
​💯காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.​
​💯சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.​
​💯உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.​
​💯எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்​
​💯எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல​
​💯அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.​
​💯உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை​
​💯எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.​
​💯எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்​
​💯வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.​
​💯எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.​
​💯உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை​
​💯இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத 10 வார்த்தைகள்!





 
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. இதுதான் அதன் எல்லை என வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோமோ, அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாகப் பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத 10 நெகடிவ் வார்த்தைகள் பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர், காயத்ரி அருண். 
 
1. எந்தச் சூழ்நிலையிலும் 'நீ ஒரு கெட்ட பையன் (பெண்)' என்ற வார்த்தையைப் பயன்படுத்த கூடாது. குழந்தைகள் எதையும் முழுமையாக நம்பும் மனநிலைகொண்டவர்கள். அவர்கள் தவறே செய்துவிட்டாலும், குற்றவாளியாக்கும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாது. அதற்கு மாறாக, ''நீ ரொம்ப நல்ல பையனாச்சே. இப்படி நடந்துக்கலாமா? இதனால் மற்றவர்கள் என்ன நினைப்பாங்க தெரியுமா?'' என பக்குவமாகப் பேசி நல்லது, கெட்டதைப் புரியவைக்க வேண்டும். 
 
குழந்தை
 
2. 'நீ உன் சகோதரன் / சகோதரி மாதிரி இல்லை' என்ற ஒப்பீடும் வேண்டாம். உலகில் யாருமே பயனற்றவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும்போது, சகோதர, சகோதரிகளின் மீது வெறுப்பும் பொறாமையும் ஏற்படும். வாழ்வில் பெரிதாக தோல்வி அடைந்ததாக நினைப்பார்கள். இது, சக குழந்தைகளிடையே பிரச்னையை ஏற்படுத்தும். 
 
3. எதற்கெடுத்தாலும் ‘நோ’ சொல்லாதீர்கள். ஒரு விஷயத்தைக் கேட்கும்போது, 'இல்லே, முடியாது, நோ' போன்ற வர்த்தைகளை சட்டெனப் பயன்படுத்தாதீர்கள். இந்த வார்த்தைகள் பெற்றோர் மீதான நம்பிக்கையைக் குறைக்கும். குழந்தை கேட்கும் விஷயத்தில் உடன்பாடு இல்லை என்றால், 'அப்புறம் பார்க்கலாம், இது ஏன் தேவையற்றது' என விளக்குங்கள். 
 
4. 'நீயெல்லாம் இதைச் செய்யக் கூடாது? உன்னால இதைச் செய்ய முடியாது’ என்பது போன்ற தன்னம்பிக்கையைக் குறைக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். தங்கள் சக்திக்கு மீறிய செயலை செய்ய முயலும்போது உடனிருந்து உதவுங்கள். கடினமானதைப் புரியவையுங்கள். முயற்சி மற்றும் தோல்விகளில் இருந்தே நிறைய கற்றுக்கொள்கிறார்கள். ஆரம்பத்திலேயே தடுக்கும்போது, புதிதாக செய்வதையே நிறுத்திவிடுவார்கள். 
 
குழந்தை
 
5. 'என்னோடு பேசாதே' என்ற வார்த்தை வேண்டாம். பேசுதல், அரவணைத்தல் மூலமே பெற்றோர் - குழந்தைகள் பிணைப்பு பலப்படுகிறது. எனவே, ‘‘என்னோடு பேசாதே’’ என முகத்தில் அடிப்பது போல பேச்சைத் துண்டிக்காதீர்கள். குழந்தைகள் மனதில் உள்ள விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளவும் விவாதிக்கவும் அனுமதியுங்கள். அதில் உடன்பாடில்லாத விஷயங்களை உங்கள் பேச்சு, வார்த்தை, முகபாகங்களால் வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரை குழந்தைகளிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனியுங்கள். குழந்தைகளுடன் கோபமாக பேசுவது, விவாதிப்பதைத் தவிர்த்து, 'உன் வார்த்தைகளால் ’அப்செட்’ ஆகிவிட்டேன்' என சொல்லுங்கள். இதன் மூலம், உங்களுடன் எப்படிப் பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள். 
 
6. பையன்கள் இதைச் செய்ய கூடாது? பெண்கள் அதைச் செய்ய கூடாது என சொல்லக் கூடாது. குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்வது பல சமூகப் பிரச்னைகளை குறைக்கும். வளரும் பருவத்தில் பாலின ரீதியான விதிமுறைகளை வகுக்கக் கூடாது. இருபாலின குழந்தைகளையும் சமமாக பாவிக்க வேண்டும். இது, பெண்களுக்கான வேலை, இது பையன்களுக்கான வேலை எனப் பிரிக்க கூடாது. வீட்டு வேலையில் ஆரம்பித்து அனைத்தையும் இருபாலினத்தவரும் கற்றுக்கொள்ள, தெரிந்துகொள்ள வாய்ப்பளியுங்கள். 
 
7. 'என்னைத் தனியாக விடு, நிம்மதியாக விடு' என்பது போன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்க கூடாது. பெற்றோர்கள் மன அழுத்தத்திலோ, குழப்பமான சூழலிலோ இருக்க நேர்ந்தாலும், உங்கள் சூழலைப் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த மாதிரியான எதிர்மறையான வார்த்தைகளைக் கேட்கும் குழந்தைகள், 'பெற்றோருக்கு நம் மீது அன்பு இல்லை' என்று நினைப்பார்கள். நீங்கள் பெரிய துயரத்தில் இருப்பது போல காட்டிக்கொள்ளாமல், பக்குவமாகப் பேசி திசை திருப்ப வேண்டும். 
 
8. 'அப்பா வரட்டும் உனக்கு இருக்கு, உங்க மிஸ்கிட்டே சொல்லிடறேன்' போன்ற வார்த்தைகள் கூடாது. குறிப்பாக, அம்மாக்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள். இது தாயின் இயலாமையின் வெளிப்பாடே. ஆசிரியரையும் அப்பாவையும் பயமுறுத்தும் பிம்பமாக உருவாக்குவது அவர்கள் மீது பயத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் பயத்துடன் கழிக்கும் சூழலை குழந்தைகளுக்கு உருவாக்காதீர்கள். குழந்தைகள் தவறு செய்யும்போது, அந்த விஷயத்தை அப்பாவிடம் அவர்களே தெரியப்படுத்தி திருத்திக்கொள்ள அனுமதியுங்கள். 
 
9. 'உன்னை மாதிரி ஒரு பிள்ளையை யாருக்குமே பிடிக்காது. யாருமே உன்னை வெச்சுக்க மாட்டங்க' போன்ற வார்த்தைகள் கூடவே கூடாது. எடுத்துக்காட்டாக, குழந்தைகள் வீட்டில் விளையாடும்போது அதிக சத்தத்தை ஏற்படுத்தினால், 'கத்தாதே... வெளியே போ!' என்று நாமும் கத்தாமல், 'மெதுவாகப் பேசுங்கள். அல்லது வெளியே விளையாடுங்கள்' என்று கூறலாம். உங்கள் குழந்தை சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், எதனால் என்பதை ஆராய்ந்து சரிசெய்யுங்கள்.

ஞாயிறு, 7 மே, 2017

இணையதள பயன்பாட்டில் முதலிடம் பிடித்த தமிழ்.. இந்தியை பின்னுக்கு தள்ளி அசத்துகிறது !

இணையதள பயன்பாட்டில் முதலிடம் பிடித்த தமிழ்.. இந்தியை பின்னுக்கு தள்ளி அசத்தும்  தமிழ். !

By  


கூகுள் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் ரீதியான கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் இந்திய மொழிகளில் அதிகமாக இணைய பயன்பாட்டில் இருக்கும் மொழி தமிழ் மொழியே என்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழர்கள் இந்தி மொழி பேசுபவர்களை விட எட்டு மடங்கு எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர். இருந்தும் இணைய தளத்தை தாய் மொழியில் பயன்படுத்துவதில் வட இந்தியர்களை விட அதிக அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரியது. இனி வரும் காலங்களில் கூட தமிழ் மொழியின் பயன்பாடு இணையத்தில் இந்தியை விட அதிகரிக்கும் என இந்த கருத்துக் கணிப்பு கூறுகிறது.
தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல. இந்தி தான் ஆட்சி மொழி. இருந்தும் தமிழ் மொழி இணைய பயன்பாட்டில் முதல் இடத்தில் இருக்கும் காரணம் என்ன தெரியுமா ?
தமிழ் மொழி தமிழகத்தை தாண்டி பிற நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. சிங்கப்பூர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஆட்சி மொழியாகவும் உள்ளது. மேலும் மலேசியா, மியன்மார் , மொரீசியஸ் போன்ற நாடுகளில் கணிசமாக பேசப்படுகிறது கற்பிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வளர்க்கப்படுகிறது. இவையெல்லாம் தமிழ் மொழியை முன்னுக்கு கொண்டு செல்கிறது .
தமிழகத்தில் இப்போது தான் தமிழ் குறித்த விழிப்புணர்வு பெருகி வருகிறது . அதனால் வரக்கூடிய நாட்களில் இணையத்தில் தமிழ் மொழியின் ஆதிக்கம் இருக்கும் என்பதிலும் ஐயமில்லை . தொடர்ச்சியாக நாம் எல்லா துறைகளிலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரித்தால் நிச்சயம் உலக நாடுகளும் இந்திய அரசும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கும் என்பதிலும் ஐயமில்லை .

வெள்ளி, 5 மே, 2017

பசுமை நிறைந்த நினைவுகளே....... பறந்து சென்றதே - ஒரு பறவை

பசுமை நிறைந்த நினைவுகளே.......
பறந்து சென்றதே - ஒரு பறவை.

செல்வி.சற்சொரூபவதி நாதன்-B.h. Abdul Hameed
இலங்கை வானொலி வரலாற்றில் 'சொற்சொரூபவதியாய்' போற்றப்பட்ட சகோதரி, செல்வி.சற்சொரூபவதி நாதன் அவர்கள், இன்று (4/5/17) பிற்பகல் 2.45 அளவில் தன் இன்னுயிர் நீத்த செய்தி, நம் வானொலிக்குடும்பத்தில் ஒரு 'மூத்த' சகோதரியை இழந்த துயரினைத் தருகிறது.
'யாழ் இந்து மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கம்' அவருக்கு "சகலகலா வித்தகி" எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்தமைக்குப் பொருத்தமாக, வானொலித்துறையின் பல்வேறு அம்சங்களிலும் தன்னை ஈடுபடுத்தி மிளிர்ந்தவர்.
வானொலிக் கலைஞராக, அறிவிப்பாளராக,செய்தி வாசிப்பாளராக, செய்தி ஆசிரியராக, வானொலி எழுத்தாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, வானொலித்துறைக்கான 'பயிற்சிப் பட்டறைகள்' பலவற்றின் நெறியாளராக, பல்கலைக் கழகத்தில் 'ஊடகத்துறைக்கான' பகுதிநேர விரிவுரையாளராக, என அவரது பங்களிப்புகள் பரந்து விரிந்தவை.
சிறிது காலத்திற்கு முன்.........
சென்னைப் பல்கலைக் கழகத்தில், 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவ மாணவியர் முன்னிலையில் உரையாற்ற வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று அங்கு நான் சென்று, கேட்போர் கூடத்துக்குச் செல்லும் மாடிப்படிக்கட்டுகளில் கால்வைத்தபோது, மேல்தளத்துச் சுவரில் மாட்டியிருந்த மிகப்பெரிய படம் ஒன்று வரவேற்றது. அண்ணார்ந்து பார்த்தபோது, சென்னைப் பல்கலைக்கழகத்தின், முதலாவது 'பட்டதாரி' C.Y. தாமோதரம் பிள்ளை என, எங்கள் மண்ணின் மைந்தரது பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பெருமையால் நெஞ்சமும் நிமிர்ந்தது. கூடவே, இன்னும் யார் யாரெல்லாம் நம் மண்ணிலிருந்து இங்குவந்து கல்விகற்று பட்டம் பெற்றிருப்பார்கள்? என அறிய ஆவல் கொண்டு பார்த்தபொழுது, அவ்வரிசையில் எம் வானொலிக் குடும்பத்தின் மூத்த சகோதரி 'சற்சொரூபவதி நாதன்' என்ற பெயரும் இருக்கக் கண்டு இருமடங்குப் பெருமிதம் கொண்டேன்.
தன் 21 வது வயதிலேயே, 'ஜவஹர்லால் நேரு விருது' பெற்றவர் என்ற செய்தியும் அவர் பெருமையினைப் பறைசாற்றியது.
நாடு திரும்பி, கொழும்பு 'பௌத்த மகளிர் கல்லூரியில்' விஞ்ஞான ஆசிரியையாகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் வானொலி கலைஞராக, பங்களிப்பினை வழங்கிவந்தவர், 1965 ம் ஆண்டிலே ஒரு அறிவிப்பாளராகத் தெரிவாகி நிரந்தரமாகவே வானொலியோடு தன் வாழ்வைப் பிணைத்துக்கொண்டார்.
அவர் அறிவிப்பாளராக இணைந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர்தான், நாம் அறிவிப்பாளர்களாக இணைந்தோம். விடலைப்பருவத்தைத் தாண்டிய இளையவர்களான, எம்மைத், தம் வயதொத்தவராக மதித்து, நேசமுடன் பழகியது அவரது பெருந்தன்மை. அறிவிப்பாளரானாலும் வானொலிக்கலைஞராகவும் தன் பங்களிப்பினைத் தொடர்ந்து வழங்கிவந்த அவருடன், நம் வானொலி நாடகத் தந்தை திரு. 'சானா' அவர்களது நெறியாழ்கையில் இணைந்து நடித்த நாடகங்கள். திரு. ராஜசுந்தரம் அவர்களது தயாரிப்பில் பங்கெடுத்த 'உரைச்சித்திரங்கள் யாவும், இன்னும் பசுமையான நினைவுகளாக நிலைத்திருக்கின்றன.
தமிழ் வானொலி வரலாற்றில் முதல் பெண் அறிவிப்பாளரான, திருமதி. செந்திமணி மயில்வாகனன் அவர்களுக்குப் பின், 'செய்தி' வாசிப்பில் தனி முத்திரை பதித்தவர் சகோதரி சற்சொரூபவதியே என்றால், அது மிகையாகாது. அவரது ஆங்கிலப் புலமை, பின்னாளில் செய்தி ஆசிரியராகவும், எமது வானொலியிலும், ரூபவாஹினி தொலைக்காட்சியிலும், மிக நீண்டகாலம் பங்களிப்பினை வழங்கும் வாய்ப்பினை அவருக்கு உருவாக்கித் தந்தது.
இளைப்பாறிய பின்னரும் ஊடகத்துறையோடு தன்னைப் பின்னிப் பிணைத்துக்கொண்டு வானொலி, தொலைகாட்சி எனத் தன் முதுமைக்கும் சவால் விட்டு வாழ்ந்துவந்தவர். கொழும்பு பல்கலைக் கழகத்திலும் அவ்வப்போது 'ஊடகக் கற்கை நெறி' பயிலும் மாணவருக்கு விரிவுரைகள் ஆற்றிவந்தவர்.
அதுமட்டுமன்றி 'கொழும்பு தமிழ்ச்சங்கத்தின்' துணைத்தலைவர் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அவரையே சாரும். 'பெண்ணியத்தின்' பெருமை பாடவும், மகளிர் மேம்பாட்டுக்காகவும் அயராது உழைத்தவர். சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் 'உண்டா' விருதினை ஒலிபரப்புத்துறைக்காக முதலில் பெற்றவர் எனது ஆசான், திரு.எஸ்.கே. பரராஜசிங்கம் என்றால், அவரை அடுத்து 'உண்டா' விருதினைப் பெற்ற பெருமைக்குரியவர் சகோதரி சற்சொரூபவதியே.
சிறந்த ஒலிபரப்பாளருக்கான 'ஜனாபதி விருதினையும்' பெற்றவர்.
"பிறப்பவர் எல்லோருமே என்றோ... ஓர்நாள்
இறப்பதுவும் உறுதி" இது மாற்றவியலா விதி.
மூப்புடன் பிணியும் வாட்டிவைத்திட, தன் 80தாவது வயதில் இறப்பது என்பதை 'ஓர் பேரிழப்பு' என்ற வழக்கமான அனுதாபச் சொல்லோடு முற்றுப்புள்ளி வைத்து முடித்துவிடாமல், தமிழ் ஊடகத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள தொண்டினையும், தனது வழிகாட்டலில், 'விழுமியங்கள் பேணும் ஊடகவியலாளர்கள்' உருவாக அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவு கூர்ந்து, அவருக்கு நன்றி கூறுவதும், அவரது ஆத்மா, நற்பேறு அடைய, நம் இதயங்களால் பிரார்த்தனை செய்வதுமே நம் கடமை என உணர்வோம்.
அவரை இழந்து துயருறும் இரத்த உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
.