திங்கள், 24 ஏப்ரல், 2017

பொது அறிவு-----06

  பொது அறிவு------06

01.இந்தியத் துணை ஜனாதிபதியின் பெயர்?
Mohammad Hamid Ansari

02.மணித வளச் சுட்டி எதனை மையமாக வைத்து கணிக்கப்படுகிறது?
 ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்புஎழுத்தறிவு, அவர்கள் பெறும் கல்விவாழ்க்கைத்தரம், மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் தரம், தனிநபர் வருமானம், மாந்த உரிமைகள் (முக்கியமாக குழந்தைகள் உரிமை), ஆண்-பெண் உரிமைகள், அறமுறைகள், முதியோர் பராமரிப்பு போன்ற பல்வேறு அளவுகோல்களை உள்வாங்கி ஐக்கிய நாடுகள் அவையினால் பல நாடுகளுக்கும், சில தன்னாட்சி நிலப்பகுதிகளுக்கும் கணித்து அடையப்படும் அளவீடாகும்.


03.மிஸ் வேர்ல்ட் 2016
Pia Wurtzbach of the Philippines 

04.அமெரிக்க முன்நாள்  ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மனைவி பெயர் ?
 நான்சி டேவிஸ்

05.1930ம் ஆண்டு புளுட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்தவர் 
கிளைடு டோம்பா

06..2016ல் மறைந்த அஸ்கிரிய பீடாதிபதி?Most Ven. Galagama Sri Aththadassi Thera - Mahanayaka of the Asgiriya Chapter of Siyam Nikaya.


07 இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தில் அண்மையில் அறிமுகம் செய்த கற்கைப் பீடம் ?
விஞ்ஞான பீடம் 

08..20ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் 


09.மலையகத் தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்ட முதலாவது கிராமம் ?
நுவரெலியா  மாவட்டம் அக்கரப்பத்தனை ஊட்டுவில் தோட்டம்


10.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)

11.உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?

12.உலகில் வேகமான மனிதர் என அழைக்கப்படுபவர் யார்?
உசைன்போல்ட்

13.கிரேக்க இதிகாசங்களில் காட்டப்படுகின்ற கதாபத்திரத்தில் கடவுள், சண்டைக்கு என போற்றப்படும் பெண் கடவுள்?


14.சிறுவன் மனிதனின் தந்தை எனக் கூறியவர்?

15.2009 இல் இலங்கை அரசுக்கும் ltte உம் இறுதி யுத்தம் நிகழ்ந்த களப்பு?

16..யப்பான் மீது அணுகுண்டு வீச உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி?


17ந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் தலைவர்கள் மாநாடு  நடை பெற்ற நாடு?
இந்தோனோஷியா -ஜகார்த்தா 
  
   
18.இலங்கையின்  மொத்தக்  கரையோரத்தின் நீளம்   என்ன?
1,585 km நீளமான

19.இலங்கையின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி நில எல்லையிலிருந்து  எத்தனை கடல் மைல் தூரம் வரை உள்ளது?
 200 கடல் மைல் தூரம் வரை உள்ளது

20.இணையத்தைக் கண்டுபிடித்தவரும் “இணையத்தின் தந்தை” எனப் போற்றப்படுபவரும் ?
 சேர் டிம் பேர்னஸ் லீ (Sir Tim Berners-Lee) “

21.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்?
 தரஞ்ஜித்  சிங் சந்து 

22.உலக நீரிழிவு தினம்
 நவம்பர் மாதம் 14-ம் தேதி 


23.உலகின் மிகப் பெரிய தீவு யாது?
கிறின்லாந்த்

24.நவீன மருத்துவத்தின் தந்தை யார்?
ஹிப்போ கிரிட்டஸ்  

25.உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி   நீரழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து நாடுகள் எவை?
1.இந்தியா 31.7 மில்லியன் 
2.சீனா        20.8 மில்லியன்
3.ஐக்கிய அமெரிக்கா 17.7  மில்லியன் 
4..இந்தோனோசியா 8.4 மில்லியன்
5.ஜப்பான் 6.8 மில்லியன்

26.2ம் நூற்றாண்டில் அறிட்டஸ் என்ற கிரேக்க மருத்துவ அறிஞரால் டயபெனின் என அழைக்கப்பட்ட நோயின் தற்காலப் பெயர் என்ன?
நீரழிவு


27..உலகின் மிகப்பெரிய துறைமுகம் எது?
.டோடார் டாம்(சவூதி)

28.நீரிழிவு என்றால் என்ன?
நீரிழிவு என்பது உயர் இரத்த சர்க்கரை அளவை வகைப்படுத்தப்படும் ஒரு வளர்சிதைமாற்ற நோய். இது இன்சுலின் பற்றாக்குறை (நீரிழிவு வகை 1) காரணமாக அல்லது உடலின் செல்கள்,  இன்சுலின் (நீரிழிவு வகை 2) உற்பத்திக்கு பதிலளிக்க தவறினால்  ஏற்படுகிறது.கர்ப்பகால நீரிழிவு எனப்படும் கர்ப்பிணி பெண்களைப் பாதித்து வரும் மற்றொரு வடிவ நீரிழிவும் இருக்கிறது.

29.2016பெப்ரவரி மாதம் திருத்தப்பட்ட ஆட்களை பதிவு செய்யும் சட்டத்தின்படி தேசிய அடையாள அட்டையை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வயது என்ன?  15வயது 
2016ஆம் ஆண்டு 11ம் இலக்கச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட  இலங்கையில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பக் கலாசாரத்தையும் பொது நலத்தையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அரச நிறுவனம் எது?

தேசிய ஆராய்ச்சிப் பேரவை 

30.நீரழிவு நோயைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கத்   தேவையான இன்சுலினைக்கண்டு பிடித்தவர் யார்?
பிரட்ரிக் பாண்டிங்  மற்றும் சார்ள்ஸ் பெஸ்ட

31.பின்வரும் எந்த இடத்தில் ஒலிம்பிக் விளையாட்டு மூன்று தடைவைக்கு  மேல் நடத்தப்பட்டது 
1.ஏதன்ஸ் 2.லண்டன் 3.லோஸ் ஏஞ்செல்ஸ்  4.டோக்கியோ

32..இலங்கையின் மிகப்பெரிய களப்பு யாது?
.புத்தளம்


33."முகநூல்" பற்றிய தவறான கருத்தை தெரிவு செய்க
1).மார்க் சுக்கர் பேர்க்  மூலம் நிறுவப்பட்டது.
2)இது ஜூலை 15 2006ல் ஆரம்பிக்கப்பட்டது
3)இது ஒரு சமூக வலைப்பின்னல் .சேவையாகும்

34.உலகில் ஒரே இந்து சமய இராச்சியமாகக் கருதப்படுவது?
.நேபாளம்

35.எந்த நாட்டில் குழந்தைகள் மரண வீதம் அதிகம் ?
1).அவஸ்திரெலியா  2).பிரேசில்  3).இந்தியா  4).  இலங்கை

36..ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போதுள்ள நாடுகள் எண்ணிக்கை?
 27உறுப்புநாடுகளைக்கொண்டநாடு 


37.இலங்கையில் காணப்படும் ஆறுகளின் எண்ணிக்கை எவ்வளவு?
103

38.எந்த நாடு உலகில், தங்கத்தை அதிகமாக இருப்பு வைத்துள்ளது?
1).அமெரிக்கா 2).ருசியா 3)ஜப்பான் 4)..

39.தேனீக்களால் பார்க்க முடியாத நிறம்?
சிவப்பு

40.இலங்கையில் மிகவும் நீளமான நதி  ?
335 kilometres (208 mi)  மகாவலி கங்கை

41.சார்க் நாடுகளில் தனிமையாக காணப்படும் நாடுகள் எவை?
.இலங்கை , மாலைத்தீவு

42.ஐந்து கடல்களின் நாடு?
எகிப்து

43.மஞ்சள் காமாளை நோயால் உடலில் எந்த உறுப்பு பாதிக்கப் படும்?
கல்லீரல்

-44.இலங்கையில் உல்லாச பயணத்துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் துறைமுகம் எது?
காலி



45.தேசிய வளர்ச்சியின்  உயிரோட்டமாகக் கருதப்படுவது?
போக்குவரத்துத் திட்டம்

46.பிளாஸ்டிக் காகிதத்தைக் கண்டுபிடித்த நாடு?
.ரஸ்யா

47.இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் மிகவும் சிறிய நாடு?
பூட்டான்.

48.இந்திய நாட்டுக்காக பாக்கிஸ்தானில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில்
பார்க்கிஸ்தான் ராணுவ நீதி மன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவரின் பெயர் என்ன?
குல்பூஷண் ஜாதவ் 

49..உலகில் பொதுநலவாய தினம் பிரகடனப்படுத்தப்பட்ட தினம் யாது?
.மார்ச்- 11

50.இலங்கையில் சனத்தொகை குறைந்த மாவட்டம்?
Mullaitheevu

51.பிரிக் (BRIC) அல்லது பிரிக் நாடுகள் (BRIC countries) என்பது எந்த நாடுகளைக் குறிக்கும்?
 பொருளாதார வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள வளரும் நாடுகளான பிரேசில்ரஷ்யாஇந்தியாசீனா ஆகியவற்றின் கூட்டமைப்பைக் குறிக்கும்.


52.தற்போதைய ஐ.நா செயலர் எந்நாட்டின் முன்னை நாள் பிரதமர்?
போர்ச்சுகீசிய நாட்டின் முன்னாள் பிரதமர் 



53.இரசாயனவியலுக்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர் யார்?
 வெங்கட் ராமன் இராமகிருஸ்ணன்


54.ஒரு ஹெக்டாயர் என்பது எவ்வளவு ஏக்கர்?கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.                                                                                    


55.தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?மோகனாங்கி.

56.தினமும் நிறம் மாறும் மலை?
 ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை.

 57.இலங்கையின் ஆயுதப்படைகள் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. இதன் கீழ் இலங்கையின் ஆயுதப்படைகள் அமைதிப்படையாகக் செயல்பட்ட நாடுகள்?
 சாட், லெபனான், மற்றும் எயிட்டி ஆகிய நாடுகளில்


58..மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?ஆன் ட் ரோ போபியா.

59.இலங்கை அமைந்துள்ள புவித்  தட்டின் பெயர் என்ன?
இந்தோ-ஆசுதிரேலிய

60.வைரத்தில் மொத்தம் எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.

 61.கலிங்கத்துப் பரணி என்னும் நூலை இயற்றியவர் 
ஜெயங்கொண்டார் 

62..தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater Breathing Apparatus).

63.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.

64. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? 
ஓடோமீட்டர்.

65. ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? 
ஜே. கே. ரௌலிங்.


66..உலகிலேயே மிகப் பெரிய நூலகம்?
 மாஸ்கோவில் உள்ள லெனின்நூலகம்.

 67.இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு?
 சான்மரீனோ.

68.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டுவெளியிட்ட நாடு?
 சீனா.

69.ஐக்கிய நாடுகள் சபை தொடங்கப்பட்டது.?
1945அக்டோபர் 24ல் 

70.உலகிலேயே வெப்பமான இடம்?
அசீசீயா (லிபியா).

71.உலகிலேயே குளிந்த இடம்?
 சைபீரியா (ரஷ்யா).


.72.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
அளிக்கும் நாடு எது ?                                                                                     

  ஜப்பான்                             

73.தென் ஆப்பிரிக்காவுக்கு எத்தனை தலைநகர்கள் உண்டு ?              
  மூன்று

74.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு எது ?                         
  நீயூசிலாந்து.

75.PIN Code என்பதன் விரிவாக்கம் என்ன?                                                        
 Postal Index Code

76..சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?                                     
 வன்மீகம்

.77.டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?                                      
வானம்பாடி

.78.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?                   
  சுவிட்சர்லாந்து                

.79.கிறிஸ்துமஸ் மரத்துக்கு என்ன பெயர்?                                                 
  SPRUCE

80..காந்திஜிஉருவமபொறித்தஅஞ்சல்அட்டையைமுதலில்வெளியீட்டநாடுஎது?
 போலந்து

81..விவசாயம்முதலில்எங்குதொடங்கப்பட்டது?                                                 
  தாய்லாந்து

82.தாய்லாந்தின் பழைய பெயர் என்ன?                                                               
 சயாம்

.83.மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தைகடப்பதாகும்?                                       26 மைல்.

84.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது?                                      
  1920

85..பள்ளிக்கூடத்தைமுதன்முதலில்உருவாக்கியவர்கள்யார்?             
 ரோமானியர்கள்

86.ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது?                  
 1752-ல்


87..எல்லாகண்டங்களிலும் எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் வாழக்கூடிய விலங்கு எது?
நாய்



88. இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக் கோட்டின் பெயர்
ராட்கிளிப்                            



89.*பயணிகள் ரயில் போக்குவரத்து முதன் முதலில்  தொடங்கப் பட்டது.?
இங்கிலாந்து நாட்டில் 1820ம் ஆண்டு


90.யாழ்ப்பாணத்தின் வற்றாத ஊற்று எது?
நிலாவரை


 91.ஜக்கிய நாடுகள் சபையில் இலங்கை இணைந்து கொண்ட ஆண்டு எது?
1955


92.பியானோவைக் கண்டுபிடித்தவர் யார்?
கிறிஸ்ரபோல் ( இத்தாலி, 1709ம் ஆண்டு )

 93.தகர உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
மலேசியா


94. பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
அமெரிக்கா


95.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது  வெளியாகும் நசசு வாயு?
டையாக்சின் என்ற நச்சுப் புகை

96. வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?
*  வைட்டமின் ‘பி’


 97.கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு?
 - டென்மார்க்

98.உலகின் முதல் பெண் ஜனாதிபதி -?
 மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )

99. களுகங்கையின் நீளம் யாது?
 : 120 கி.மீற்றர்.


 100.பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர்?
 சீகன் பால்க்

101.விண்வெளிக்கு சென்ற முதல் வீரர்?
 யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்..

102.ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம்?
 மாலிக் அமிலம்.

103. தாய்லாந்தின் நாணயம் எது ?
 பாஹ்த்

104.மங்கோலியாவின் நாணயம் எது ? 
துக்ரிக்


 105.நேபாளத்தின் நாணயம் எது ?
 ரூபாய்


.106. மொராக்கோவின் நாணயம் எது ?
 டிர்காம்

107.தோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது ?
 கொன்றைவேந்தன்

108.சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரிக்க்கும் ஜல சந்தி எது?
ஜோஹோர் ஜலசந்தி.


109.உலகின் மிகப்பெரிய நீர் மின் நிலையம் எந்த நதியின் மீது அமைந்துள்ளது?பாரானா நதி (பிரேசில்).


110. ஐரோப்பாவில் அதிகமான பயனிகள் வந்து செல்லும் விமான நிலையம் எது?
ஹீத்ரு - லண்டன்.


111. மலேசியாவின் கரன்சி எது ?
ரிங்கிட்


112.சாதரண உப்பின் இரசாயன பெயர் என்ன ?
சோடியம் குளோரைடு


113.. இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ?
மக்கோகன் எல்லைக்கோடு


114.உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ?
மான்குரோவ்


115.தயிரில் உள்ள உடலுக்கு அழகைத்தரும் வைட்டமின் பெயர் என்ன ?
ரிபோஃபிளேவின்


116. பெரு நாட்டின் நாணயம் எது ?
இன்டி.


117.இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ? 
விண்டோன் செர்ஃப்.


118.சிரிக்க வைக்கும் வாயு எது ?
நைட்ரஸ் ஆக்ஸைடு 


119. உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் என்ன?
இனியாக்


120.ரஷ்ய நாணயத்தின் பெயர் ?
ரூபிள்


121.. உலகின் மிகப் பழமையான மியூசியம் எது ?
ஆஸ்மோலியன்


122.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு என்ன ?
746 வோல்ட்ஸ்


 123.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் யார் ?
சீனர்கள் (1948)


124. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் எது ?
எட்சாக்



125. தங்கத்தின் வேதியல் பெயர் என்ன ?
அயூரியம்


126. புகழ் பெற்ற லைலா மஜ்னு காதல் காவியத்தின் ஆசிரியர் யார்?
நிஜாமி


 127.பேருந்து போக்குவரத்து முதலில் எந்த நாட்டில்
   தொடங்கப்பட்டது ?

 பிரான்ஸ் -1819


 ”128.அரசியல் “ என்ற நூலை எழுதியவர் யார் ? 
 அரிஸ்டாட்டில்


129.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
கெர் சோப்பா


130. நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
சிரியஸ்


131.அணுவை பிளந்து காட்டியவர் ?
ரூதர் போர்டு


132. யூதர்களின் புனித நூல் எது ?
டோரா


133. கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ? 
லாச்ரிமல் கிளாண்டஸ்.



134.எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் எது?
சிட்ரிக் அமிலம்


135.சிறுநீரில் உள்ள அமிலம் எது?
யூரிக் அமிலம் 


136.இலங்கையின் வட  கிழக்கு மாகாணம்தற்காலிகமாக  இணைக்கப்பட்ட ஆண்டு?
1989


 137.எறும்பின் கொடுக்கில் உள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்


138. புளித்த பாலிலில் உள்ள அமிலம் எது?
லாக்டிக் அமிலம்


139. கெட்டுப்போன வெண்ணெய்யில் உள்ள அமிலம் எது?
பியூட்டிரிக் அமிலம்  


140.புளி, திராட்சை, ஆப்பிள் இவற்றி்ல் உள்ள அமிலம் எது?
 டார்டாரிக் அமிலம்


141.இலங்கையின் வட  கிழக்கு மாகாணம் நிரந்தரமாக பிரிக்கப் பட்ட ஆண்டு?
2006

142.வினிகரில் உள்ள அமிலம் எது?
அசிட்டிக் அமிலம்


143..  தக்காளியில் உள்ள அமிலம் எது?
ஆக்ஸாலிக் அமிலம்


 144.கொழுப்புகளில் உள்ள அமிலம் எது?
ஸ்டீயரிக் அமிலம்


145.பித்தநீரில் உள்ள அமிலம் எது?
 கோலிக் அமிலம் 


146. ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன?
வோலடைல்.


147. தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?
கங்காரு எலி.


148. பனிக்கட்டிகளின் மேல் வளரும் செடிகளின் பெயர் என்ன?
க்ரயோ·பைட்ஸ்


 149.டயாலிஸிஸ் இயந்திரத்தைக் கண்டறிந்தவர் யார்?
வில்லியம் கோல்ப்


150.உலகில் பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
நெதர்லாந்து.


151. கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் கருவியின் பெயர் என்ன?
பீச் கோம்பர்.


.152 நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன?
ஆறு தசைகள்.

153. அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.


.154. உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
ஸ்வீடன்.


155. மிதிவண்டியைக் கண்டறிந்தவர் யார்?
மேக்மில்லன்.


156. 1987ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புக்கான 13ம் திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட  அதிகாரப் பகிர்வுக்கான அலகாப் தோற்றுவிக்கப் பட்டது? 
மாகாண சபைகள் 

157.தொலைநோக்காடியை கண்டறிந்தவர் யார்?
ஹான்ஸ் லிப்பர்சே.  (கலிலியோ மேம்படுத்தினார்).


158. சூரிய குடும்பத்தில் மிகச்சிறியதும், கடைசியாக கண்டுபிடிக்கப் பட்டதுமான கோள் எது?
           புளூட்டோ.



159.ஏனைய மக்களாட்சி அரசுகளைப் போன்றே இலங்கை அரசும் மூன்று கிளைகளைக் கொண்டுள்ளது, அந்த மூன்று கிளைகளும் எவை?
1.நிறைவேற்று அதிகாரம் 2.,சட்டவாக்கம் 3.நீதி  

160. முதல் தொலைக் காட்சியை கண்டறிந்தவர் யார்?
ஜான் லாஜிக் பேயர்ட் -  இங்கிலாந்து - 1926.


161.இந்தியாவிலேயே தயாரித்து ஏவப்பட்ட முதல் செயற்கைக் கோள் எது?
இன்சாட்-2A.

162.. உலகின் நான்கு மாகடல்களில் மிகப் பெரியது எது?
பசிபிக் மாகடல் - ஒரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து முன்னூற்று எண்பத்து நான்கு ச.கி.



163. உலகின் மிகப் பெரிய உப்புநீர் ஏரி எது?
ஈகாஸ்பியன் கடல் - இரஷ்யா / இரான்  - 393,898 ச.கி.



164. உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி எது?
சுப்பீரியர் - அமெரிக்கா/கனடா - 32,103 ச.கி.


165. இலங்கையின் ஆரம்பத்தில் தோன்றிய  கட்சி எது?
 1935ல் உருவாக்கப்பட்ட லங்கா சமசமாசக் கட்சி

166. உலகின் மிக உயரமான அருவி எது?
ஏஞ்சல் - வெனிசுவேலா - 3212 அடி.



167.. உலகின் மிக நீளமான நதி எது?
அமேசான் - தென்னமெரிக்கா - 6750 கி.மீ.


168. ஈராக்கின் முன்னாள் பெயர் என்ன? 
மெசோபோட்டாமியா.

 169.உலகிலேயே தனி நபர் வருமானம் அதிகம் உள்ள நாடு-
சுவிட்சர்லாந்து.


170..1818ல் இலங்கையரால் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக நடத்தப்பட்ட ஊவா கலகம் எந்த ஆளுநர் தலைமையில் அடக்கப்பட்டது?
ஆளுநர் ரொபேர்ட் பிறவுன்றிக்கினால் அடக்கப்பட்டது.


171.உலகில் பூந்தோட்ட நகரம்
சான்பிராஸ்சிஸ்கோ (அமெரிக்கா).


 172.55000 ஏரிகளைக் கொண்ட நகரம்
பின்லாந்து.


 173.மாலத்தீவுகளின் தலை நகரம் எது?
மாலி.



174.இலங்கையின் நவீனகாலம், 1833இல் ஏற்பட்ட
 கோல்புறூக்-கமரன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கிறது

175.ஜி.யு.போப் எந்த நூலை மொழி பெயர்த்தார்?
 திருக்குறள்.


 176.ஹைபிஸ்கஸ் ரோசா சைனேசிஸ் (Hibiscus Rosasinesis) ..
இந்த அறிவியல் பெயர் கொண்ட பூ எது?
செம்பருத்தி.


177..1947 பாராளுமன்றத் தேர்தல்களின் படிபிரதமராக நியமிக்கப்பட்டவர யார்?
 சேனநாயக்க 

178. மக்கள்தொகைப் புள்ளிவிபரம் எத்தனை ஆண்டுகளுக்கு
ஒரு முறை கணக்கிடப்படுகிறது?
* 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை.


179.இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் பெயர் என்ன?
முகரம்.


180. மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சூட்டியவர்?  
- கிரண்ட்டப்.

181 இலங்கையில் மாக்சியப் புரட்சி ஏற்பட்ட ஆண்டு?
 1971இல்

182. கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்?- எட்வர்ட் ஹென்றி.

183. எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்?
:  இக்லூ.

184.இலங்கையின் முன் நவீனகாலப் பகுதி, 1505இல் யாருடைய  வருகையுடன் துவங்குகிறது?
போர்த்துக்கீசப் போர்வீரனும் நாடுகாண்பயணியுமான லோரன்சோ டி அல்மெய்டாவின் 

185. ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு ?
லைபீரியா (Liberia).

186. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
ஜெனீவா.


187.இலங்கைக்கு மேலாட்சி நிலையை அளித்த அரசியலமைப்பு எது?
சோல்பரி அரசியலமைப்பு

188.எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
 1980.


189.ஆசியாவின் முதல் பெண் ஆட்சியாளரைக் கொண்ட நாடு?
. கிமு 47-42 காலப்பகுதியில் அரசி அனுலா இலங்கையை ஆட்சிபுரிந்துள்ளாள்

190.இலங்கையின் மத்தியகாலம் எந்த இராசதானி அரசுடன்    வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது
 அனுராதபுர அரசின்

191. இலங்கையின் பொதுத் தேர்தல்களை நடத்தும் முறையை உருவாக்கியதோடு சர்வசன வாக்குரிமையையும் அறிமுகப்படுத்திய அரசியலமைப்பு எது?
 டொனமூர் அரசியலமைப்பு 



ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி (English subtitle)

பட்டினத்தார் - ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி (English subtitle) 




புத்தகத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இன்றைய சிறுவர்களின் உலகம்

புத்தகத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட இன்றைய சிறுவர்களின் உலகம்


 நாவல் மரக் கிளையில் நுனிக்குச் செல்ல இன்னும் இரண்டு மூன்று அடிகளே உள்ளன. எப்படியாவது அந்த இரண்டு மூன்று அடிகளை வெற்றிகொள்ள வேண்டும். அப்படி நடக்காவிட்டால் கிளை நு னியில் இருக்கும் பழுத்த நாவற் பழங்களின் சுவையை அறியமுடியாது. அதனால் இரையை அடைய செல்ல நகரும் பாம்பைப்போல நுனியை நோக்கித் தவழ்ந்தேன்.
நாவல் பழங்களைப் பறித்துக்கொண்டேன். எவரெஸ்ட் மலையில் ஏறியதைப் போன்ற சந்தோஷத்துடன் கீழே குதித்த நான் நாவல் பழங்களை மரத்தடியில் வைத்தேன். ஒரு பிடி பழங்களை வாயில் போட்டு வாயை நிறமாக்கிககொண்டேன். அதன் பின் நாவல் மரத்தில் கட்டியிருந்த ஊஞ்சலில் ஏறி வானத்தை தொட முயற்சி செய்தேன். அதேவேளை ஓரிருவர் பாடசாலை கேட் வழியாக உள்ளே வருவதைக் கண்டதும் எனது வேகத்தை அதிகரித்தேன். ஏனென்றால் நான் அவர்களுடன் ஊஞ்சலை பகிர்ந்துகொள்ள வேண்டும். எஞ்சிய நாவல் பழங்கள் வரும் நண்பர், நண்பிகளுக்கே. முதலில் வருபவர்கள் பழத்தின் சுவையை அறியமுடியும். கூட்டம அதிகமாக அதிகமாக எங்களிடமிருந்து ஊஞ்சல் தூரமாகிவிடும். அதன் பின் வருவது எல்லே விளையாட்டாகும். அது நாங்கள் விரும்பும் விளையாட்டாகும். சிலர் பாடசாலையின் முன்னால் உள்ள மண்பாதையில் சைக்கிள் ஓட்டினார்கள். ஒரு சிலர் மரமுந்திரிகை மரத்தில் ஏறி இருந்தார்கள்.
கிளிகளோடு போட்டி போட்டுக்கொண்டு பழங்களை சாப்பிட்டார்கள். ஒரு சிலர் மரத்தின் மேல் ப்ரூம் ப்ரும்... பீப்பீப் என்னும் ஓசையுடன் வாகனம் ஓட்டினார்கள். நாம் பாடசாலை முடிந்து எமது மாலைப் பொழுதை கழித்தது அவ்வாறுதான். பாடசாலைத் தோட்டத்தை அந்நியிருந்த பெரியோர்கள் எம்மீது எமது பாதுகாப்புக்காக அவதானத்துடன் இருந்தார்கள்.
பாடசாலையை சுற்றி மரத்தூண்கள் அமைக்கப்பட்டு முள் வேலி அமைந்திருந்தார்கள். அதுவும் சில இடங்களில் உடைந்திருந்தது. பாடசாலைக்கு ஒருபோதும் கள்வர்கள் வந்ததில்லை.
இருட்டுவதற்கு முன்னர் வீட்டுக்குச் சென்ற நாங்கள் மறு நாளைக்கான வீட்டுப் பாடங்களை முடித்துக்கொண்டு இரவு உணவு அருந்துவோம். பின்னர் நேர காலத்தோடு நாம் நித்திரைக்குச் செல்வோம். அம்மாவின் கதைகளில் மூழ்கி, இனிமையான கனவுகளாக கண்டு நித்திரை கொள்வோம். தேவதைகளும், இளவரசர்களும், இளவரசிகளும் எங்கள் கனவில் புதிய கதைகளை உருவாக்கி நடிப்பார்கள். காட்டூன் மற்றும் சில டெலி நாடகங்களை பார்க்கும் தற்போதைய குழந்தைகளைப் போன்று நாங்கள் கனவில் பயப்படுவதில்லை. அதற்கு பதில் கனவில் நாம் சிரிப்போம். அது எங்கள் குழந்தைப் பருவம். இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் அவ்வாறு தான் வாழ்ந்தோம். அன்றும் ரியூஷன் வகுப்புகள் இல்லாமலில்லை.
மாணவர்கள் உயர்கல்வி கற்கும்போதே ரியூஷன் வகுப்புகளுக்குச் செல்வார்கள். அனைவரும் செல்லமாட்டார்கள். அவ்வாறு செல்லாதவர்களும் பல்கலைக்கழகங்களுக்கு சென்றார்கள். அவர்கள் கற்ற, அறிவாளர்கள் போன்று மனிதர்களாகவும் வாழ்ந்தார்கள். இன்று பிள்ளைகளின் குழந்தைப் பருவத்துக்கு என்ன நடந்துள்ளது? முதலாம் வகுப்புக்கு செல்வதற்கு முன்னரே ரியூஷன் வகுப்புக்குச் செல்ல வேண்டும். முன்பள்ளி காலத்திலேயெ பெற்றோர் பிள்ளைகளை ரியூஷன் அனுப்புகின்றார்கள். இன்று சில முன்பள்ளிகள் பல்கலைக்கழகங்கள் மட்டத்திலுள்ளன. அது ஏனைய பள்ளிகளுடன் போட்டி போடுவதற்காகும். அதன் துரதிஷ்டமான நிலைமை என்னவென்றால் முன்பள்ளி மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியுள்ளது. அவர்கள் நூற்றுக்கு நூறு புள்ளிகள் எடுக்காவிட்டால் அவர்கள் மனதுக்கு சரியில்லை. ஏனைய பிள்ளைகளின் புள்ளிகளுடன் ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் ஏசுகின்றார்கள். சில வேளைகளில் பைத்தியக்காரர்கள் போன்று நடந்துகொள்கின்றார்கள். சில பெற்றோர்கள் ஒரே பாடத்துக்கு இரண்டு இடங்களுக்கு ரியூஷன் அனுப்புகின்றார்கள்.
ஒரு நாள் ஒரு தாய் முன்பள்ளியில் இருந்து மிகவும் கோபமாக வெளியே வந்தார். “பாருங்கள் நான் பிள்ளையை வகுப்புக்கும் அனுப்புகின்றேன்.
ஆனாலும் கணித பாடத்துக்கு குறைந்த புள்ளியே எடுத்திருக்கின்றான் என்று அருகிலிருந்த இன்னொரு தாயாரிடம் கூறிக்கொண்டு பிள்ளையை இழுத்துச் சென்றார். பிள்ளை அம்மா ஐஸ்கிறீம் என்று ஜஸ்கிறீம் கடையைப் பார்த்துக் கேட்டது. அதற்கு அவர் ‘உனக்கு ஐஸ்கிறீம் மட்டும் தான் குறையாகவுள்ளது” என்று இழுத்துச் சென்றார். இந்த குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என எண்ணிய எனக்கு மிகவும் கவனலையாக இருந்தது.
பெற்றோர் செய்யும் இன்னுமொரு தவறு தங்களின் துன்பம் நிறைந்த கடந்த காலத்தைப் பற்றி ஆவேசமாக பிள்ளைகள் முன்னால் கூறுவதாகும். நாம் இவ்வாறு தான் சாப்பிட்டோம். இவ்வாறுதான் உடுத்தோம். நாம் இவ்வாறுதான் கஷ்டப்பட்டோம். உங்களுக்கு எல்லாரும் கைக்கு காலுக்கு அருகில் கிடைக்கின்றது. ஏன் உங்களால் படிக்க முடியாது? நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு உங்களை படிப்பிக்கின்றோம் என்று அநேகமான பெற்றோர்கள் கூறுகின்றார்கள். இதனால் ஏதும் நன்மை ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்தால் இல்லையென்றே கூறவேண்டும்.
தரம் ஐந்து புலமைப் பரிசில் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியுள்ள மன அழுத்தத்தைப் பற்றி கூறத்தேவையில்லை. சில பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள பாடசாலைக்கு செல்வது காலையில் ஆறரை மணிக்காகும். வீட்டுக்கு வருவது மாலை ஆறரைக்கு. பாடசாலையிலும் ஒரே பாடசாலையிலுள்ள ஐந்தாம் தரம் வகுப்புகளுக்கிடையேயும் பெரும் போட்டியே நிகழ்கின்றது.
அதே போல் வார இறுதி நாட்களிலும் பிள்ளைகளுக்கு ரியூஷன் வகுப்புகள் நடைபெறும். இது தான் அவர்களின வாழ்க்கையாகும். எனக்கு தெரிந்த இரண்டு மாணவர்கள் கடந்த வருடம் சாதாரண தர பரீட்சை எழுதியுள்ளார்கள். இறுதி மாதங்களில் அவர்கள் வீட்டிற்கு இரவு பண்ணிரண்டு மணிக்கே வந்தாரகள். அவர்கள் பாடம் படிக்கவில்லை. ரியூஷனுக்கே சென்றார்கள்.
நான் அறிந்த ஒருவரின் மகள் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றினான்.
அவனுக்கு பெற்றோர் வைத்த இலக்கு கொழும்பு ரோயல் கல்லூரியாகும். அவன் இரவு பகலாக அந்த இலக்ைக அடைய போராடினான். புலமைப் பரிசில் பரீட்சை முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் கத்தியை எடுத்து தோட்டத்திற்குச் சென்று பூச்செடிகள் அனைத்தையும் வெட்டினான். தாய் எதுவும் கூறவில்லை. இறுதியில் அவன் பரீட்சையில் வெற்றி பெற்றிருந்தான். ஆனால் அவன் ரோயல் கல்லுரி இலக்கை அடையவில்லை. நல்லவேளை அவனது பெற்றோர்கள் தமது தவறை உணர்ந்து அவனைப் பாராட்டி பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார்கள்.
இன்னொரு தாய் கதவைப் பூட்டிக்கொண்டு தனது முன்பள்ளி செல்லும் பிள்ளையை அடித்ததற்கு பின்வருமாறு விளக்கம் கூறினார்.
வீட்டு வேலை செய்வதில்லை. இவர்கள் கல்வி கற்காவிட்டால் சமூகத்தில் துன்பப்படவேண்டி நேரிடும். அதைவிட சிறந்தது என்னிடம் அடி வாங்கி திருந்துவது. ஏனென்றால் நான் தாய்தானே என்று கூறினார்.
பெரியவர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக பிள்ளைகளின் உலகம் அவர்களை விட்டு விரைவாக விலகிப் போய்க்கொண்டிருக்கின்றது. வண்ணத்துப் பூச்சிகள், பறவைகள், பூக்கள், வண்டுகள் என்பவற்றைப் பார்த்துக்கூட அவர்களுக்கு நேரமில்லை.
பூக்களின் நறுமணத்தை உணர, மரத்திலிருந்து கனியை பறித்து உண்ண, கடற்கரை மணலில் ஓடி ஆடி விளையாட, பட்டத்தின் பின்னால் ஓட அவர்களுக்கு நேரமில்லை.
எனக்கு இந்த நேரம் ஞாபகம் வருவது சிறந்த எழுத்தாளரான மார்டின் விக்ரமசிங்கவின் இளமைக் காலமே.
‘அபே கம’ என்னும் நூலில் அவர் தமது குழந்தைப் பருவம் பற்றி மிகவும், மகிழ்ச்சியுடன் நினைவு கூருகின்றார். தரம் ஐந்துவரையும் பாடசாலைக் கல்வி கற்ற அவரால் பின்னர் எழுதப்பட்ட நூல்கள் இன்னும் பல்கலைக்கழக மாணவர்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. “அபே கம” என்னும் தனது நூலில் தனது குழந்தைப் பருவம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.
“நான் மாத்திரமல்ல சிறு பிள்ளைகளில் நூற்றுக்கு 90 பேர் அழகானவை மீது ஆசைப்படுகின்றார்கள் என நான் நினைக்கின்றேன்.
சிறு பராயத்தில் சிப்பி ஓடுகள் என்றால் எனக்கு அலாதிப் பிரியம். அழகானவற்றை காணும் ஆசையின் பலனே அதுவென எண்ணுகின்றேன்.
அழகானதை ரசிப்பது மனதுக்கு இனிய உணவாகும். பலவிதமான வடிவங்களிலான சிப்பி ஓடுகள் நிறைந்த கடற்கரை சிறு பிள்ளைகளுக்கு அபூர்வமான பொருட்கள் நிறைந்த அருங்கட்சியகமாகும்.
இந்த சூழலின் அழகை ரசிக்க அன்று போல் இன்று பிள்ளைகளுக்கு நேரம் இருக்குமா என நானறியேன்.
ஆனால் நிச்சயமாக அவர்களும் அதனை ரசிக்க விரும்புவார்கள் என நான் அறிவேன். எமது பிள்ளைகள பரீட்சையில் சித்தி அடைகின்றார்கள். ஆனால் வாழ்க்கை ஒரே இடத்திலேயே உள்ளது.
அதில் அநேகமான வெற்றிடங்களை ஏற்படுத்தியது யார் என்னும் கேள்விக்கு பெற்றோர்களிடமோ, கல்வி அதிகாரிகளிடமோ பதிவிருக்கும் என நான் எண்ணவில்லை. ஆனால் நீண்டகாலம் எடுக்காமல் பிள்ளைகள், பெற்றோர்கள் அறியாத நிலைமைக்கு தள்ளப்பட்டன. அதன் குற்றவாளிகள் பிள்ளைகள் அல்லவென்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
 சுமேதா நவரத்ன
தமிழில்: வீ.ஆர்.வயலட் நன்றி தினகரன்.

வியாழன், 13 ஏப்ரல், 2017

ஏவிளம்பி 2017/2018


 ஏவிளம்பி 2017/2018
நாளை 14 04 2017 வெள்ளிக்கிழமை காலை 2 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.
இதுவரை நடைபெற்றது 'துர்முக' வருடமாகும்
'துர்முக' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம்.
நாளை முதல் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது
சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.
ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும்
எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம்.
அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது.
31 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும்
ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது.
நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள்,
இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக்கிறது.
விசாக நக்ஷத்ரமும் அனுராதா என்று சொல்லப்படுகிற அனுஷ நக்ஷத்ரமும் கூடிய நன்னாளில் இந்த வருடம் ஆரம்பிக்கிறது
விசாக நக்ஷத்ரத்தின் க்ரஹம் குரு
அனுஷ நக்ஷத்ரத்தின் க்ரஹம் சனீஸ்வரர்.
குருவும் சனியும் சேர்ந்தால் அது மஹா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. நாளை கிழமையும் வெள்ளிக்கிழமை
ஆகையால் இந்த மாதிரி குரு சனி வெள்ளி (சுக்ரன் ) சேர்க்கையில் பிறக்கும் இந்த ஆண்டு நமக்கும், மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
'லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து'

ஏவிளம்பி வ்ருஷப் பலன் 2017/2018


ஏவிளம்பி  வ்ருஷப்  பலன் 2017/2018 (திருக்  கணிதம் )

ஏவிளம்பி மாரியற்ப  மெங்கும் விலைகுறைவாம் 
பூவில் விளைவரிதாம்  போர்மிகுதி -சாவதிகம் 
ஆகுமே வேந்த ரநியாய மேபுரிவார் 
வேகுமே மேதினிதீ மேல்.
 
துர்முகி வருஷம் பங்குனி மாதம் 31ந் திகதி {14-04-2017}வியாழக்கிழமை பின்னிரவு உதயாதி நாழிகை 50-04இல் {மணி 02.04இல்} ஏவிளம்பி  என்னும்
பெயருடைய புத்தாண்டு உதயமாகின்றது.அன்று நட்சத்திரம் விசாகம் 3ம் பாதம்,திதி அபரபட்ஷ திரிதியை.இது 60வருட சுற்று வட்டத்தில் 31வது வருஷமாகும். பங்குனி 31ந் திகதி இரவு நாழிகை 40-04 (மணி இரவு 10-04)
முதல் மறு  நாள் காலை நாழிகை 00-04 (மணி காலை 06-04) வரை மேட  சங்கிரமண  புண்ணிய காலமாகும். புது வருடம்  பிறக்கும் போது உதய
லக்கினம் "மகரம் " ஆக அமைகிறது.

இப்புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாக மருத்து நீர் தேய்த்து
தலையில் கொன்றையிலையும், காலில் புங்கமிலையும் வைத்து ஸ்நானம்
செய்து மஞ்சள் நிறப்பட்டாயினும் , அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளைப் புது வஸ்த்திரமாயினும் தரித்து,விநாயகர் முதலிய இஷ்டகுல தெய்வங்களைத் தரிசனம் செய்து  இயன்ற தானாதிகள் வழங்கி குரு ,பெற்றோர் முதலியோரை வணங்கி, ஆசி பெற்று விருந்தினர்களை உபசரித்து சுற்றத்தாருடன் இணைந்து பால்,தயிர்,தேன் ,வேப்பம் பூ,முதலியவற்றுடன் அறுசுவைபி பதார்த்தங்களையும் போஜனம் செய்து, தாம்பூலம் அருந்தி சுகந்த சந்தண புஸ்பாதிகளை அணிந்து புது வருடத்தில் ஆற்றக்கூடிய நற்கருமங்களைச்  செய்து  புதுப் பஞ்சாங்க பலன்களை அறிந்து சயானிப்பீர்களாக.



நவநாயகர் பலன் 

இராஜா  செவ்வாய் பலன் .

இவ்வருடம் செவ்வாய் இராஜாவாக ஆட்சி செய்வதால் ஆட்ச்சியாளர்கள் தனது பலத்தை பிரயோகிக்க எத்தனிப்பர். உலக நாடுகளில் ஆயுதபலம் அதிகரிக்கும். அணு உற்பத்தியில் கவனம் கூடுதலாக இருக்கும். நாட்டின்  உஷ்ணம்  மிகுந்திருக்கும். விபத்துக்கள்  ஏற்படுதலைத் தவிர்க்க முடியாது.
விவசாயத்துறை விருத்தி பெறும்.

மந்திரி வியாழன் பலன்.

மரங்கள் , செடிகள்  கொடிகள் செழித்து வளரும் மக்களுக்கு ஓரளவு நீதி நியாயம் கிடைக்கும் மதகுருமார் கௌரவிக்கப்படுவார்கள் பசுக்கள் விருத்தியாகும்.

சேனாதிபதி புதன் பலன்.
கல்வித்துறை மேம்பாடடையும் பல்கலைக் கழகங்கள் கல்விச் சாலைகள்
சிறந்து விளங்கும்.

ஸஸ்யாதிபதி சூரியன் பலன்.


நாட்டில் வெப்பம் அதிகரிக்கும்,நிலவளங்கள் குன்றும்,பயிர்கள் நோயினால் பீடிக்கப்படும் சிறு தான்ய விருத்தி உண்டாகும் பூவகை பலிதமாகும்.


சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் 
உரித்தாகட்டும்.
ஏவிளம்பிப் பலன் விபரமாக  தொடரும்.........     

அன்புடன்,
கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா 


கடவுளின் தரிசனம்

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம்
இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது..பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்..கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டான்.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ..அதேபோல.. ராணியாருக்கும்..மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் பிரஜைகள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும்.. என்று ஆவலான வரத்தை கேட்டான்.இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும் மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்க்கு சம்மதித்தார்.."அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன் என்று சொல்லி மறைந்தார்.
மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்..அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்.. சிறிது உயரம் சென்றவுடன்.. அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன..உடனே, மக்களில் நிறைய பேர்..செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக்கொள்ளவும் ஆரம்பித்தனர்..மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது... இதெல்லாம் அதற்க்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டான்..அதற்க்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.. எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்.
மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே வெள்ளியிலான பாறைகளும்..வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன..அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர் மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்.. விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கபோகின்றது அதற்க்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான்..மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்..உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.
இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.. ராஜகுடும்பத்தினர் பாதிபேர் அங்கே சென்றுவிட..மீதி இருந்தவர்கள் ராணியும்.. மந்திரியும்.. தளபதியும்..மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே..சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால்வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்..அங்கே தென்பட்டது வைரமலை அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்கவர்கள் ஓடிவிட..மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.
கடவுள் மன்னன் முன் பிரத்யட்சம் ஆகி எங்கே உன் மக்கள் என்றார்..மன்னன் தலை குனிந்தவனாக அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே.. என்னை மன்னியுங்கள் என்றான் மன்னன்.. அதற்க்கு கடவுள் "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்..அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்..உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு உடல்..செல்வம்..சொத்து...என்ற செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.. இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே எம்மை அடைவர்" என்று சொல்லி காட்சியை நிறைவு செய்தார் கடவுள்.
காலை வணக்கம்

விதியே, விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?

விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?


விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?
சார்வினுக் கெல்லாம் தகத்தக மாறித்
தன்மையும் தனது தருமமும் மாயாது
என்றுமோர் நிலையா யிருந்துநின் அருளால்
வாழ்ந்திடும் பொருளொடு வகுத்திடு வாயோ?
தோற்றமும் புறத்துத் தொழிலுமே காத்துமற்று
உள்ளுறு தருமமு உண்மையும் மாறிச்
….. ….           …..             …     …..
 சிதைவுற் றழியும் பொருள்களில் சேர்ப்பையோ?
‘அழியாக் கடலோ? அணிமலர்த் தடமோ?
வானுறு மீனோ? மாளிகை விளக்கோ?
கற்பகத் தருவோ? காட்டிடை மரமோ?
விதியே, தமிழச் சாதியை எவ்வகை
விதித்தாய்’ என்பதன் மெய்யெனக் குணர்த்துவாய்.
ஏனெனில்,
“சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்தது” என்று
உறுதிகொண்டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டுஎனது உள்ளம் கலங்கிடா திருந்தேன்.
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவி யிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்!
 …      …       …    ….
விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
– மாக்கவி பாரதியார்


“தவிப்பு..”

▶மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..
“தவிப்பு..”
வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வாரம்
தாய் வீடு போகிறாய்...
பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...
காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..
வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...
செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..
இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...
முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...
தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...
கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..
தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..
இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...
“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....
ஒரு வார இதழில் 1500 ரூபாய் பரிசு பெற்ற கவிதை.