புதன், 12 ஏப்ரல், 2017

12 இராசிகளும் அதன் குணங்களும்

12 இராசிகளும்  அதன் குணங்களும் 

Menon Balasubramanian
🌻 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :
👆 மேஷம்
 ரிஷபம்
 மிதுனம்
 கடகம்
💪 சிம்மம்
👋 கன்னி
👍 துலாம்
👇 விருச்சிகம்
 தனுசு
👌 மகரம்
👏 கும்பம்
👊 மீனம்
🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
👆 மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
🎯 மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்
 ரிஷபம் :
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
🎯 ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்
 மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
🎯 மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
 கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
🎯 கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
💪 சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
🎯 சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
👋 கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
🎯 கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
👍 துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
🎯 துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
👇 விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
🎯 விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
 தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
🎯 தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
👌 மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
🎯 மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
👏 கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
🎯 கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
👊 மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
🎯 மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
“ 🌺 *ஓம் நமசிவாய* 🌺 “
🚩🕉 _வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்_ ..🕉🚩
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
என்றும் இறைப்பணியில்🚩🚩🕉
*சிறுமளஞ்சி அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் திருக்கோவில்*

வியாழன், 6 ஏப்ரல், 2017

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தரம், சித்திரை 1,2) 65/100

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தரம், சித்திரை 1,2) 65/100: கடமையை உயிராக மதித்து நடக்கும் கன்னி ராசி அன்பர்களே!புன்னகை மலரும் புதுவாழ்வு கிடைக்கும்ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியில் ...

புதன், 5 ஏப்ரல், 2017

இனிவரும் நூற்றாண்டுகளுக்கு அந்த தலைவனின் தத்துவங்களே தமிழினத்தின் வழித்தடம்.!

இனிவரும் நூற்றாண்டுகளுக்கு அந்த தலைவனின் தத்துவங்களே தமிழினத்தின் வழித்தடம்.!: இந்த நேரத்தில் எத்தனை தடுத்தும் இந்த நிகழ்வு நினைவுக்கு.

பதவிக்காக கொழும்பில் நாக்கு வழிக்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?

பதவிக்காக கொழும்பில் நாக்கு வழிக்கும் அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?: கேவலம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைமைக்கும் மாவட்ட அபிவிருத்திக்.

சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ளே விழுந்த முஸ்லிம் சமூகம்

சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள்ளே விழுந்த முஸ்லிம் சமூகம்: சுஐப் எம் காசிம்-
வில்பத்து சரணாலயத்தை விரிவு படுத்தி வன.

தனியார் பேருந்துகளின் சட்ட மீறல்களால் வந்த வினை அதிகரித்த தண்டப்பணம்

தனியார் பேருந்துகளின் சட்ட மீறல்களால் வந்த வினை அதிகரித்த தண்டப்பணம்: வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து தென்பகுதிக்கிடையில்.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல்


கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல் !




நான் பாடசாலை செல்லும் காலத்தில்,நிதியுதவிக் காட்ச்சிக்காக இந்த்தப் பாடல் இடம்பெற்ற கர்ணன் திரைப்படத்திற்கு நான் படித்த  பாடசாலையால்
மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். அப்படிச் சென்று பார்த்த திரை படங்களில் இதுவும் ஒன்று,இதில் என்னே விசேஷம் மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருசேர  அழுதது  இந்தப் பாடலுக்குத்தான், சிறு வயது மன
நெகிழ்ச்சியியல் அழுதோம் என்று மனதைத் தேற்றினேன்.

ஆனால்,இன்று இந்தப் பாடலைக் கேட்டாலும் கண்களில்  கண்ணீர் பெருக்கெடுக்கிறதே காரணம் என்ன? தமிழ் வரிகளா? இசையின் தாக்கமா ?
அல்லது இவைகளின் கலவை இதயத்தை தட்டியதா ?

நீங்களும் கேட்டுப்  பாருங்கள்.  







மனிதர்களுக்கு மத்தியில்தான் அந்த மாமனிதன்.....!


பெருந்தலைவர் காமராஜரின் முதல்வர் அலுவலகத்திற்கே தேடி வந்தார் அவர். மிகச் சாதாரனமானவர். ஏழ்மையைச் சொல்லும் வேட்டிச் சட்டை. கையில் ஒரு மஞ்சள் பை. அழைத்து அருகில் அமரவைத்துக்குகொண்ட காமராஜர் என்ன ரெட்டியாரே என்று நலன் விசாரித்தார். பிறகு ஏதாவது முக்கிய சேதியா, இல்ல சும்மா பார்க்க வந்தீரா… என்று கேட்கிறார். வந்தவருக்கு தயக்கம்.
பரவாயில்ல சொல்லுங்க ரெட்டியார் என்று மீண்டும் கேட்டார் பெருந்தலைவர்.
ஒன்னுமில்ல. என் மகனுக்கு கல்லாணம். அதான்…..
இதுக்கு ஏன் ரெட்டியாரே தயங்கனும். நல்லவிசேசம்தான என்று தட்டிக்கொடுத்து பாராட்டி… நான் என்னபன்னணும் என்றார் பெருந்தலைவர்.
இல்ல..கல்லாணத்துக்கு நீங்க வரனும்…நீங்கதான் தலைமைதாங்கனும்..ஊரெல்லாம் சொல்லிட்டன். பத்திரிகை கொடுத்துட்டு சொல்லதான் நேர்ல வந்தன் என்று தயங்கியவர் நீங்க வருவீங்கன்னு எனக்கு நம்பிக்கை. அதனால அப்படி சொல்லி முடிவெடுத்துட்டன். தப்பா நினைச்சுக்காதீங்க… என்று ரெட்டியார் இழுக்க காமராஜருக்கு பட்டென்று கோபம். முகம் இறுகிப்போனது. எந்த நம்பிக்கையில நீங்க முடிவெடுத்தீங்க. யாரைக்கேட்டு இப்படி மத்தவங்ககிட்ட சொன்னீங்கன்னேன் என்று கடுமைகூட்டினார்.
அந்த ரெட்டியாருக்கு கண்கள் கலங்கியது..தப்பா நினச்சுக்காதீங்க. அன்னைக்கு உங்களுக்கு வேலூர்ல ஒரு கூட்டம் இருக்கு. பக்கத்துலதான் என் ஊர். அதனால கல்யாணத்துக்கு கூப்பிட்டா கட்டயாம் வருவீங்கன்னு நினைச்சுட்டன் என்றார்.
பெருந்தலைவருக்கு கோபம். உங்க வீட்டு கல்யாணத்துக்கு வர்றதா முக்கியம். அதுவா வேலை. வேற வேலை இல்லையா? போங்க, வரமுடியாது. நீங்க போய்ட்டு வாங்க என்று பட்டென்று கூறி அனுப்பிவைத்துவிட்டார். முகத்தில் அடித்ததைபோல் ஆனது ரெட்டியாருக்கு.
நடந்ததை வெளியில் சொல்லிக்கொள்ள்ளவில்லை. முதல்வர் வரமாட்டார் என்று எப்படி சொல்வது.? பேசாமல் கல்யாணத்தை அவரதுவீட்டில் நடத்துகிறார் எளிமையாக.. அவரது வசதிக்கு அப்படித்தான் நடத்தமுடியும். கடைசியில் காமராஜர் வரமாட்டார் என்பதும் ஜனங்களுக்கு புரிந்தது. வந்தவர்கள் போனவர்கள் எல்லாம் புறம் பேசினார்கள். என்னமோ நானும் காமராஜரும் ஒன்னா சிறையில் இருந்தோம். கூட்டாளிங்க. என்வீட்டுக் கல்யாணத்துக்கு வருவார்னு பெரிசா தம்பட்டம் அடிக்சுகிட்டாரு…பார்த்தீங்களா அலம்பல….என்ற ஏலனப் பேச்சு கூடியது....
மனம் உடைந்துபோன ரெட்டியாருக்கு உடல்கூனிப்போனது. அப்படியே வீட்டிற்குள் சுருண்டு படுத்துவிட்டார். எப்படி வெளியில் தலைகாட்டமுடியும். காமராஜரும் நானும் பலவருஷம் ஒன்னா சிறையில் இருந்த நண்பர்கள் என்று ஊரில் நட்புக்கதையை சொன்னவராயிற்றே. திருமணத்திற்கு முதல்வர் கட்டாயம் வருவார் என்று நம்பியவாயிற்றே….அழுதபடி படுத்துக்கிடந்தார். அந்த கல்லாணவீடே வெறிச்சோடிப்போனது…..
சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு கார் வந்தது. வந்தவர் முதல்வர் காமராஜர் வரபோகிறார் என்ற செய்தியைச் சொன்னார். செய்டியாருக்கு நம்பிக்கையில்லை. எந்த நம்பிக்கையில் திரும்ப ஊருக்குள் சொல்வது…? நம்பிக்கையற்று உட்கார்ந்திருந்தார்...
சில நிமிடங்களுக்களில் அடுத்த கார.முதல்வர்…பெருந்தலைவரே வந்து இறங்கினார். இரண்டு மூன்று பெரிய சாப்பாட்டு கேரீயரில் சாப்பாட்டோடு... ரெட்டியாரால் நம்பமுடியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் கூட்டம் சேர்ந்துவிட்டது….
ரெட்டியார் முதல்வரை கட்டித்தழுவிக்கொண்டார். குலுங்கி அழுதார். தட்டிக்கொடுத்து சமாதானம் சொன்ன காமராஜர்… உங்க கஷ்டம் எனக்குத் தெரியும் ரெட்டியாரே. சுதந்தரம் போராட்டம் ஜெயில்னு எல்லாத்தையும் இழந்துட்டு….எனக்குத் தெரியும். அதான் பையனுக்கு கல்யாணம்னு சொன்னப்பவே பட்டுனு யோசிக்காம அப்படிச் சொன்னன். நான் வர்றதா சொல்லியிருந்தா நீர் இருக்கிற கஸ்டத்துல கடன் வாங்குவீர்.. முதல்வர் வர்றார்னு ஏதாவது பெரிசா செய்யனும்னு போவீர்..அதான் அப்படிச் சொன்னன். மன்னிச்சுடுப்பா… உன்வீட்டுக் கல்யாணத்துக்கு வர்றாம எங்கபோவன் என்று ஆரத்தழுவினார்..கண்ணீர் ஆனந்தக்கண்ணீரான நேரம் அது...
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், உரை
பிறகு வாசலிலேயே பாய்விரித்து எடுத்துவந்த சாப்பாட்டை எல்லோருக்குமாக போடச் சொல்லி அந்த குடும்பத்தாரோடு தானும் உட்கார்ந்து சாப்பிட்டார். இந்த சாப்பாட்டு சுமையைக்கூட அவருக்கு கொடுத்துவிடக்கூடாது என்று தன் பணத்தைக்கொடுத்து வாங்கி வந்தாரென்றால்..ரெட்டியாரின் நிலை எப்படியிருக்கும் என்பதை கூறத்தேவையில்லை…
நட்பை போற்றியவர் காமராஜர். நிலை மாறினால் குணம் மாறலாம் என்று மாறிப்போன மனிதர்களுக்கு மத்தியில்தான் அந்த மாமனிதன்.....