திங்கள், 9 ஜனவரி, 2017

பொது அறிவுத் தொடர் 03.............

பொது அறிவுத் தொடர் 03.............

01.காய் கறிகளிலும் பழ வகையிலும் இல்லாத ஒரு விட்டமின் எது?
விட்டமின் D

02."தி இன்சைடர்" என்ற நூலை எழுதிய இந்தியப் பிரதமர்?
நரசிம்ம ராவ்

03.சூயஸ் கால்வாய் எந்த நாட்டிலுள்ளது?
எகிப்து

04.அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எழுபது வருடம் இருந்த கால்வாய்?
  பனமா க்கால்வாய்

05.அமெரிக்க நாட்டில் ஒரு நாள் மட்டும் ஜனாதிபதியாக இருந்தவர்?
கே.போக்

06.தனியான தேசிய மொழி இல்லாத நாடு?
சுவிற்சலாந்து

07.லத்தின் மொழியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை?
21

08. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதியின் பெயர் என்ன?
 இமோமாலி ராமோன் (Emomali Rahamon)

09.குபேரக் கடவுளாக தன்னை அறிமுகப் படுத்திய மன்னன்?
1ம் காசியப்பன் 

10.இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்  செய்கைக்கு வித்திட்டவர்கள்?
போர்த்துக்கேயர் 

11.மூன்று போக வேளாண்மையைப் பற்றி கூறும் கல்வெட்டு?
தோணிகல 

12.இலங்கையின் முதலாவது தேசாதிபதி யார்?
பிரடெரிக் நோர்த் 1798

13.பிரடெரிக் நோர்த் தேசாதிபதிக்குப் பின்னர் பதவிக்கு வந்தவர்?
சர் தோமஸ் மெய்யிற் லாண்ட் 

14.கண்டி இராட்ச்சியத்தின் கடைசி மன்னன்?
ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் 

15.இலங்கையில் நெற்  செய்கையில் முதலிடம் வகிக்கும் மாவட்டம்? 
குருணாகல் 

16.சிங்கள நாடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய அறிஞர்?
பேராசியர் சரத் சந்திர


17. இலங்கையின் உயரமான கட்டிடம் என கூறப்படும் கட்டிடம்?உலக வர்த்தக மையத்தின் நீளம் 152 மீற்றராகும்.

18.தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம்எத்தனை மீட்டர் உயரம்?
 350 மீற்றராகும்.

19.2017ஆம் ஆண்டில் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாகும் WCC அல்லது World Capital Centre என்ற கட்டிடம்எத்தனை மாடிகளைக் கொண்டதாக அமையும்?
625 மீற்றர் கொண்ட இந்த கட்டிடத்தில் 117 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இலங்கையின் உயரமான கட்டிடம் என கூறப்படும் உலக வர்த்தக மையத்தின் நீளம் 152 மீற்றராகும்.  

20.இந்தியாவின் அப்பலோ வைத்தியசாலையின் கணினிகளை ஊடுறுவல் செய்த குழுவின் பெயர்?
 லெஜ்ஜியன் குழு.

21.உலக அதிசயங்களில் ஒன்றாக காணப்படும்பிரான்ஸிலுள்ள அதிசயம்?
 ஈஃபிள் கோபுரம்.

22கொழும்பு நிதி நகரத்திற்காகஉதவும் உலகின் பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் பிரபல 5 நாடுகழும் எவை?
 சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ..

23.கொழும்பு நிதி நகரத்திற் பயன் படுத்த அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் எவை? உலகின் வலுவான நாணயங்களான அமெரிக்க டொலர், சீனா யுவான், சிங்கப்பூர் டொலர், இந்திய ரூபாய், ஜப்பான் யென், தாய் பாத், பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுன், ஐரோப்பாவின் யூரோ ஆகியவைகள் இங்கு பயன்படுத்த முடியும்

24.இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சீர் செய்யவும்,இளைஞ்ர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் அரசால் உருவாக்கப்பட்ட இரு திட்டங்கள்? 
ஹம்பாந்தோட்டை தொழிற்சாலை வலையமைப்பு மற்றும் கொழும்பு நிதி நகரத்திட்டம் 

25.இலங்கையின் சினிமாத்துறையுடன் சம்பந்தப் பட்ட விழா?
சரசவிய திரைப்பட விழா 

26.முதலாவது சரசவிய விழா எத்தனையாம் ஆண்டு இடம் பெற்றது?
1964.

27.முதலாவது சரசவிய விழாவில் சிறந்த திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்ட சிங்களத் திரைப்படம் ?
கம்பெரேலிய 

28.1965ல் .இந்தியாவின் தங்கமயில் விருது பெற்ற சிங்களத்திரைப் படம்?
 .கம்பெரேலிய 

29.இலங்கையின் சிங்கள சினிமா வளர்சிக்கு பாடு பட்டவர்களுக்கு வழங்கும் விருதின் பெயர்?
ரணதிசர 

30.இலங்கையின் சிறந்த சிங்கள திரைப்படங்களுக்கு வழங்கும் விருது?கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் விருது 

31.இலங்கையின் சினிமாத்துறையில் ஒருவருக்கு ஒருமுறை மட்டும் வழங்கும் சிங்கள சினிமா இலக்கியத்திற்கான விருது?
ரணபால போதிணா கொட விருது 

32.சரசவிய என்ற பெயர் எதனைக் குறிக்கும்?
லேக்  கவுஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்ட சினிமா பத்திரிகை 

33.இலங்கையின் சினிமா சம்பந்தமாக வெளி வந்த முதல் சினிமா பத்திரிக்கை எது?
தருவ.

34.ரேடியோ சிலோன் ஆரம்பிக்கப் பட்ட ஆண்டும் ஆரம்பித்தவரும்?
1925-12-16 தேசாதிபதி சேர் கியூ கிளிபோட்டினால்

35.இலங்கை புற்றுநோய் சங்கத்தின் ஊடாக உத்தியோகப்பூர்வமாக முன்னெடுக்கப்பவுள்ள

 புற்றுநோய் பாதுகாப்பு திட்டம்'எது?
 'இந்திரா ஜயசூரிய புற்றுநோய் பாதுகாப்பு திட்டம்' 

36.இலங்கையில் ஜனாதிபதியால் தடை செய்யப்பட்ட கிருமி நாசினியின் பெயர் என்ன?கிளைபோசேட் 

37.2017ம் ஆண்டுக்கான மின்சார ரயில் அபிவிருத்தித் திட்டத்திற்கு நிதி உதவி வழங்கும் நிறுவனம்?
ஆசிய அபிவிருத்தி வங்கி 

38.போக்குவரத்து சிவில் சேவைகள் அமைச்சர் பெயர் என்ன?
நிமல் ஸ்ரீ பாலா டீ சில்வா 

39.போக்குவரத்து சிவில் சேவைகள் அமைச்சு அமைந்துள்ள இடம் என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது?
செத்ஸ்ரீபாயா 

40. உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேசதெற்காசிய வலய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையர் ?
 சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபால 
41. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலயத்திற்கான அலுவலகம் அமைந்துள்ள இடம்?
இந்தியா -நியூ டெல்லி 

42 உலக சுகாதார ஸ்தாபனத்தின் தெற்காசிய வலயத்தில் எத்தனை நாடுகள் அங்கம் வகிக்கிறது?
11 நாடுகள் 

43..மலேசிய பிரதமரின் பெயர்  
அப்துல் ரஸ்ஸாக் 

44.1848ஆம் ஆண்டு கிளரச்சியின்போது ஆட்ச்சியில் இருந்த ஆளுநரின் பெயர் என்ன? 
டொரிங்டன் 

45.கவுடுளு வாவியைக் கட்டியவன்?
மகாசேனன் 

46.யோத கால்வாயை நிறுவியவன் ?
தாது சேனன் 

46.மானா கட்டிய குளத்தை நிறுவியவன் ?
வசபன் 

47.மருதானை ஸாஹிராக் கல்லூரியை நிறுவியவர்?
M,C.சித்திலெப்பை 

48.சோல்பரி அரசியல் யாப்பின் முக்கிய அம்சங்களில் ஒன்று?
இரு அவைப் பாராளுமன்றம் 

49.இலஞ்சம்,ஊழல் சம்பந்தமாக அறிவிக்க அழைக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கம்?
1954

50.மலேசியா மன்னரின் பெயர் என்ன?
சுல்தான் முகம்மது 

51.ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன  ஹிக்கடுவை  சீனிகம தொழில் நுட்பக் கல்லூரியைத்  திறந்தார் அதன் பெயர்?
ஹிக்கடுவ, சீனிகம ஸ்ரீ ஜினரத்ன தொழிற்பயிற்சி, மூன்றாம் நிலைக்கல்வி மத்திய நிலையம்

52.இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ள நாடு? 


53.ஜனாதிபதியின் மலேசியா சுற்றுப் பயணத்தில் கையெழுத்தான ஐந்து உடன்படிக்கைகள் எவை?
இளைஞர் ஒத்­து­ழைப்பு, சுற்­று­லாத்­துறை , விவ­சாயம், வௌிநாட்டு வேலை­வாய்ப்பு கலா­சாரம் ஆகிய துறை­க­ளி­லேே்ய ஐந்து உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­பட்­டன.

54. வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர்?
 எஸ்.ஓப்பநாயக்க .

55.டாஸ் கேபிடல்(DAS  KAPITAL  என்ற நூலை எழுதியவர் யார் ?
கார்ல் மார்க்ஸ் 

56.உலகில் பணக் கொடுப்பனவு முறையை முழுமையாக தடை செய்த நாடு?
சுவீடன் 

57.2016ம் ஆண்டுக்கான சரசவிய விழாவில் சிங்களத்தில் சிறந்த நடிகராகத் தெரிவு செய்யப்பட்டவர்?
ஜக்சன் அந்தனி 

58.2016ம் ஆண்டுக்கான சரசவிய விழாவில் சிங்களத்தில் சிறந்த நடிகையாகத் தெரிவு செய்யப்பட்டவர்?.
அஞ்சலி பட்டேல் 

59..2016ம் ஆண்டுக்கான சரசவிய விழா நடந்த அரங்கு?
தாமரைத் தடாகம் 

60.2016ம் ஆண்டுக்கான சரசவிய விழா நடத்திய அனுசரணை நிறுவனம் ?
லேக் கவுஸ் 

61.ஐக்கிய நாடுகள் சபையின்  துணை செயலாளராக நியமிக்கப் பட்டவர்?
 அமீனா முஹம்மது

62.2016ஆம் ஆண்டுக்கான உலக அழகியாகதெரிவு செய்யப்பட்டவர் யார்?
 புவேர்ட்டோ ரிக்கோ நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி டெல்வாலே

63.விகாரைகளின் பூமி ('Land of Pagodas') என்றும் வழங்கப்படும் நாடு?. 
மியான்மார் 

64.நைப்பியித்தௌ எந்த நாட்டின் தலை நகரம்?மியான்மார் 

65.ரோஹிங்கியா முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்கள்?
மியான்மார் 

66.மியான்மார் (பர்மா)நாட்டின் பணம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
பர்மா கியாத்

67.தங்கத்தால் வேயப்பட்ட "சுவேதகோன் விகாரை"  எந்த நாட்டிலுள்ளது?
மியான்மார் 

68.மண்டலையில் உள்ள குத்தோடௌ தாதுகோபத்தில் உலகின் மிகப் பெரியப் புத்தகம் (729 பளிங்குப் பலகைகளால் ஆனது) உள்ளது.

69.துருக்கி தலைநகர் அங்காராவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு  இலக்கான துருக்கிக்கான ரஷ்ய தூதர்?
 அண்ட்ரிவ் கொலோவ்.

70.டெஸ்ட் கிரிக்கெட்டில் 199 ரன்களுடன் ஆட்டமிழந்த வீரர்கள்?
அசாருதீன்,சனத் ஜயசூரிய லோகேஸ் ராகுல் 

71.டெஸ்ட் கிரிக்கெட்டில் முச் சதங்கள் அடி
த்த இந்திய வீரர்கள்?
சேவாக் 2மட்சுகளில் கருண் நாயர் Ind-Eng 

72. எந்த நாட்டில் 1000 கிலோமீற்றர்கள் நீளமான வீதி சோலார் பேனல்களால் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது?
பிரான்ஸ் 

73.ஐ.சி.சி யின் 2016 ஆண்டிற்கான சிறந்த நடுவருக்கான விருதைப் பெற்றவர் ?
 மாரிஸ் எராஸ்மஸை

74.2016 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக  தெரிவாகியுள்ள நகரம் எது?
. .கொழும்பு நகர்

75.ஐரோப்பாவில் உள்ள பெரிய மலைத் தொடர் எது?
அல்ப்ஸ் மலைத் தொடர் 

76. சிங்கப்பூரையும் மலேசியாவையும் பிரிக்கும் நீரிணையின் பெயர் என்ன?  
ஜொகூர் நீர்ச்சந்தி

77.இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் உயரமான  கட்டடம்World Capital Center திட்டம் 117 மாடியிலான இந்த திட்டம் தெற்காசியாவில் நிர்மாணிக்கப்படுகின்ற உயரமான கட்டடமாக பெயரிடப்படவுள்ளது  இதைச் செயல் படுத்தும் நிறுவனம்?. 
அல் அமான் குழு

78 2016 .19 வயதுக்கு கீழ்ப்பட்ட இளைஞர் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியில் வெற்றி பெற்ற நாடு?
 இந்திய அணி 

79.மாலை தீவு  மக்கள் பேசும் மொழி ?
திவேகி 

80.பிரான்ஸை  ஆண்ட .சர்வாதிகாரியின் பெயர் என்ன?
neppoliyan

81.ஒலிம்பிக் போட்டியில் முதன்   முதல் விருது பெற்ற இலங்கைப் பெண் மணி?
சுசந்திக்கா ஜயசிங்க 

82. இலங்கையில்   இரயில் சேவை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1964 டிசம்பர் 27  

83.முதன்முதல்  இரயிசேவை இலங்கையில் எந்த இடத்திலிருந்து எவ்விடம் மட்டும் நடைபெற்றது?
கொழும்பு -அம்பே புஸ்ஸ 

84.இலங்கையில் இரையில்வே  போக்குவரத்து ஆரம்பிக்கும்போது இரயில்வே பணிப்பாளர்
 நாயகமாக இருந்தவர் யார்?          
 ஜி.எல்.மொலஸ்வன்

85. எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் தலைவர்யார்? 
அசோக பீரிஸ் 

86.ஸ்ரீ ஜெய ஸ்ரீ மாக போதி என  அழைக்கபடுவது   எது ?
புனித வெள்ளரசு  மரம் 

87 மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது?
புனித வெள்ளரசு  மரம் 

88.புனித வெள்ளரசு மரத்தைச் சுற்றியுள்ள  சுவரைக் கட்டிய மன்னன்?
கீர்த்தி ஸ்ரீ இராச சிங்கன் 

89.எந்த மன்னனுடைய ஆடசிக் காலத்தில் வெள்ளரசு மரம் நாட்டப்பட்டது?
தேவநம்பிய தீசன் 

90.ரோமானிய காலண்டருக்கும் கிரகரியன் காலண்டருக்கும் உள்ள வித்தியாசம் ?.
ரோமானிய காலண்டரில் 10மாதங்கள் ஜூலை  ஓகஸ்ட் சேர்க்கப்படவில்லை லீப் வருடம் 
கணக்கிடப்படவில்லை 

91.இலங்கையர் ஒருவர் உலகிலேயே முதல் தடவையாக காற்றில்லாத டயர் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்?.
 லங்கா இன்வென்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான தாஹிர் (மீலான்) மொகமட் என்வரே இந்த நவீன சிந்தனையாளராவார்.

92இலங்கை முதலீட்டு சபையின் திட்டத்தின் கீழ்ஆரம்பிக்கப் பட்ட மோட்டார் நிறுவனத்தின் பெயர் என்ன?

 Western auto mobile assemble 

93.இலங்கையில் அமைக்கப்படவுள்ள முதலாவது ஐரோப்பிய மோட்டார் வாகன தயாரிப்பு தொழிற்சாலை  எங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
குளியாப்பிட்டியில்

94.இலங்கை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியுமாக 
பதவி வகுத்த இலங்கையர் யார்?
ஸ்ரீலங்கா அபிமானிய கிறிஸ்தோபர் கிறேகரி வீரமந்திரி

95. ஏஷியா ஃபெஷன் விருது வழங்கும் விழாவில் ஆசியாவுக்கான சிறந்த ஆண் மொடலாக
தெரிவு செய்யப்பட்டவர்?
 இலங்கையின் டிமரோன் கார்வலோ 

96.சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்?
 கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, 

97.போக்குவரத்து அமைச்சின் செயலாளர்?
 நிஹால் சோமவீர 

98.சமவுடமைப் பொருளாதாரத்தைக் கைக்கொள்ளும் நாடுகள்?
சீனா ,வியட்நாம் கியூபா வடகொரியா 
? 99.போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராக மேற்கொள்ளும் புதிய தண்டப்பண சட்டமூலம் விதிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு?
25000.00

100.சுவிட்ஸர்லாந்தின் புகழ்பெற்ற சர்வதேச ஐந்து நட்சத்திர ஹோட்டலான மோவன்பிக் நிறுவனமே இலங்கையின் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தனது கிளையை கொழும்பில் ஆரம்பித்துள்ளது.

101.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்?
.எம்  ஏ.பி.ஹேமசந்திர

102.இலங்கையின் மின்சாரப்பற்றாக்குறையை  நிவர்த்தி செய்ய 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்னெடுத்த நடவடிக்கை .என்ன?
சூரியக் கதிர் மின்சாரம் அரச அலுவலகங்களுக்கு 






எதிர்வரும் 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk

எதிர்வரும் 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk: எதிர்வரும் 2020 இல் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் மைத்திரிபால சிறிசேன

19ஐ விமர்சிப்போர் ...........

19ஐ விமர்சிப்போர் ............


THINAKARAN 09/01/2017

ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??


ஆட்சிக்கும் பிரதமருக்கும் அடித்துள்ள அபாய மணி..! - மோசமான விளைவுகளை சந்திக்குமா இலங்கை??

ஆட்சியில் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவே இனவாதம் மற்றும் இராணுவப்புரட்சி கதைகள் ஆரம்பத்தில் துளிர்விட்டன.
ஆனால் இப்போதைய போராட்டமோ இலங்கை அந்நிய நாட்டுக்கு விற்கப்படுகின்றது என்பதே, இதனை காரணம் காட்டி ஆட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளும் இணைந்து செயற்படுகின்றன.
ஆரம்பத்தில் பௌத்தம் காக்க வந்த பிக்குகளும் ஞானசார தேரரும் தற்போது இலங்கையை காக்க வேண்டும் என்கின்றார். நேற்றைய தினம் நுகேகொடையில் கூட்டம் ஒன்றில் ஞானசாரர் உரையாற்றிய போது,
பிரதமர் தற்போது மூளையிழந்து செயற்பட்டு கொண்டு வருகின்றார், புது அரசியல் யாப்பு எந்தவகையிலும் சரிப்பட்டு வராது.
அதே போன்று நாட்டின் பாரம்பரிய சொத்துகள் விற்கப்படுகின்றது. இதனால் பிரதமருக்கும் அவருடைய முறைகேடான ஆட்சிக்கும் நாம் கூறுவது யாதெனின் நாட்டின் மீது கைவைக்க வேண்டாம்.
அவ்வாறு கைவைப்பீர்கள் என்றால் இந்தப் பிரச்சினையை நாம் மோசமான வகையில் கையாண்டு தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் எச்சரித்துக் கொள்கின்றோம்.
இவை ஞான சார தேரர் நேற்று தெரிவித்தவை. ஆரம்பம் முதலாகவே இவர் குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்காகவே கருத்து வெளியிட்டு வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று அப்பாந்தோட்டை சம்பவம் நாட்டின் ஆட்சியை கவிழ்க்கக் கூடியது என்றும் முறைகேடான ஆட்சியே நடைபெற்று வருகின்றது என மகிந்த இன்று கருத்து தெரிவித்துள்ளார். இது ஆட்சி மாற்றத்திற்காக அவர் செயற்படுகின்றார் என்பதை தெளிவு படுத்துகின்றது.
உண்மையில் கடந்த கால ஆட்சியின் போது இதனை விட மோசமான சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் நீதிமன்ற அச்சுறுத்தலைத் தாண்டி ஆர்ப்பாட்ட காரர்கள் செயற்பட்டமையே தாக்குதல்கள் நடைபெற காரணமாக அமைந்தது என்பதே பொலிஸாரின் வாதம்.
ஆனாலும் மகிந்த தரப்பினரும், பிக்குகளும் இது முற்றிலும் பிரதமரின் திட்டம், கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்ட ரவுடிக் குழுக்கள் மூலமாகவே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.
ஆட்சியை கவிழ்ப்பேன் என்று பகிரங்கமாக முன்னாள் ஜனாதிபதி சபதம் செய்த பின்னரே இவை அரங்கேற்றப்படுகின்றது. நாமல் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
அது மட்டும் இல்லாமல் நீதிமன்றத்தின் அனுமதியை தாண்டி நாமல் ராஜபக்ச சென்றமையினாலேயே அவர் மீதும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாமல் மீது தாக்குதல் நடத்திவிட்டார்கள் என்று விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றது.
அனைத்தையும் தாண்டி இப்போது இலங்கையில் நடக்கும் அனைத்து விதமான போராட்டங்களுக்கும் முன்னிலை வகிப்பது பிக்குகளே.
அண்மையில் இராணுவ வீரர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தமே இல்லாமல் பிக்குகள் புகுந்து பதற்றத்தை ஏற்படுத்தினர்.
இப்போது அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதும் பிக்குகளையே முன்னே செல்லுமாரு ஆர்ப்பாட்ட காரர்கள் கூறுகின்றார்கள்.
இப்படி பிக்குகள் முன்செல்ல அவர்களோடு ஆர்ப்பாட்ட காரர்களும் செல்ல முயற்சி செய்வர் இதன் போது பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவார்கள்.
அதற்கு அடுத்து பிக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு விட்டது பௌத்தம் அழிக்கப்படுகின்றது. எனக்கூறி அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்படும். இதுவே பிக்குகளது திட்டம்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது அம்பாந்தோட்டையில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இதனை வலுப்படுத்தி கூறுகின்றது. மேலும் பொலிஸார் எச்சரித்தும் வேண்டும் என்றே உத்தரவை மீறியதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது. காணொளியைப் பார்க்க இங்கே அழுத்தவும்
ஆர்ப்பாட்டகாரர்கள் பிக்குகளையே முன்னே செல்ல வேண்டும் எனவும் ஏனையவர்கள் அவர்களுக்கு பின்னால் செல்ல வேண்டும் எனவும் கூறுவது தெளிவாக பதிவாகியுள்ளது.
ஆக மொத்தம் பிக்குகள் மற்றும் பௌத்தம் மூலமாகமே ஆட்சிக்கவிழ்ப்பு நாடகங்கள் அரங்கேற்றப் படுகின்றதாக கூறப்படுகின்றது.
எது எவ்வாறு இருந்தாலும் இந்த ஒட்டு மொத்த பிரச்சினைகளும் ஆட்சி மாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்டு கொண்டு வருவதாகவும் இதன் பின்னணியில் மகிந்தவே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அந்த வகையில் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டத்தின் முதற்படியே இது, இந்த அம்பாந்தோட்டை பிரச்சினையே இப்போது நாட்டின் பெரும்பாலான பிக்குகள் ஆட்சிக்கும், பிரதமருக்கும் எதிராக கூறிவரும் கருத்து.
ஒட்டுமொத்தமாக நல்லாட்சியையும் பிரதமரையும் குறிவைத்தே இவை செயற்படுத்தப்படுகின்றன. காரணம் இவற்றின் மூலம் பிரதமரை பதவி விலகவைக்க என அடுத்த போராட்டங்களை ஏற்படுத்துவதே.
அதன் படியே அம்பாந்தோட்டை பிரச்சினை இப்போது மீண்டும் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அடுத்து குற்றச்சாட்டுகள் அனைத்தும் பிரதமர் மீது திணிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே ரணிலைப் போல ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட என்னாலும் முடியும் என மகிந்த தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
எவ்வாறெனினும் ஆட்சிக்கும், பிரதமருக்கும் அடிக்கும் அபாய மணியாகவே இந்த பிரச்சினை இருக்கப்போகின்றது, அதனால் பல மோசமான விளைவுகள் ஏற்படுத்தப்படும் என்றே அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தில்! புலம்பும் ஞானசார தேரர்

பலர் எம்மை கைவிட்டு சென்று விட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடை பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…

பொதுபல சேனா அழிவடையும் கட்டத்தில்! புலம்பும் ஞானசார தேரர்

எமது போராட்டத் தோழர்கள் பலர் எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.
அவர்கள் மேலும் சின்னஞ் சிறிய கடைகள் பலவற்றை போட்டுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களுக்கு பொதுபல சேனாவை அழிக்கும் தேவை காணப்பட்டது. ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சிக்கும் அதே தேவை காணப்பட்டது.
யாருடன் இணைந்து செயற்படுவது எவ்வாறு தேசிய வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பது என்பதில் எமக்கு பிரச்சினை உள்ளது.
விழுந்த இடத்திலிருந்து எவ்வாறு எழுவது என்பது தொடர்பில் குழப்ப நிலையிலேயே நாம் இருக்கின்றோம்.
சிங்கள பௌத்தர்கள் நாட்டை ஆட்சி செய்வதாக தென்பட்டாலும் உண்மை நிலைமை அதுவல்ல. அதுவே இன்று நாட்டின் பிரதான பிரச்சினையாக அமைந்துள்ளது.
சிங்கள பௌத்த தலைவர்களை வழிநடத்துவதும் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதும் எதிரி சக்திகளேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு அரசியலில் திடீர் மாற்றம்! மைத்திரியுடன் இணையும் விமல், கம்மன்பில! நல்லாட்சியில் பிளவா?

கொழும்பு அரசியலில் திடீர் மாற்றம்! மைத்திரியுடன் இணையும் விமல், கம்மன்பில! நல்லாட்சியில் பிளவா?


சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த தயாராக இருப்பதாக சிறுகட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் உள்ள அரசியல் தொடர்பை கைவிட்டு ஜனாதிபதி வெளியேறியேறினால், ஜனாதிபதியின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தேசப்பற்றுள்ள சக்திகள் கொண்ட அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் பிவிதுரு ஹெலஉறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில இணக்கம் வெளியிட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட இடங்களை தொடர்ந்து வெளிநாடுகளுக்கு வழங்குவதனை தடுப்பதற்கும், எதிர்வரும் காலங்களில் நாடு துண்டு துண்டுகளாக பிளவடையும் ஆபத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகவும் குறித்த உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர், ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பு இல்லை என்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கம் ஒன்றை அமைக்க தயார் என இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர். அதற்கமைய தற்போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பெரும்பான்மை தலைவர்கள் ஒரே கருத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டை காப்பாற்றுவதற்காக தங்கள் தரப்பு ஆயத்தமாக இருப்பதாக அறிவித்துள்ளதனால், இது தொடர்பில் ஆராய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சுதந்திர கட்சி தரப்பினருக்கு சந்தர்ப்பம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விமல் மற்றும் கம்மன்பில் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவரிடம் வினவிய போது, கடந்த 6ஆம் திகதி நிதி மோசடி தொடர்பில் விமல் வீரவன்ச கைது செய்யப்படவிருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து நிவாரணம் பெற்றுக் கொள்வதற்காகவே, திடீரென தீர்மானங்களை மாற்றிக் கொள்வதற்கு இவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தற்போதைய நல்லாட்சி ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னர் மேலும் காலம் தாமதிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது கூட்டு எதிர்கட்சி உறுப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு தேசபற்று தேசிய இயக்கம், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெறும் கண்துடைப்பு !




வெறும் கண்துடைப்பு !



சனி, 7 ஜனவரி, 2017

ஆன்மிக சிந்தனைகள்!

Bhama Kumaraswamy Iyer பெறுநர் ஆன்மிக சிந்தனைகள்!
தினசரி காலண்டரில் " ஒரு மூன்று நாட்களுக்கு முன் "கெர்போட்டம்" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?
நீங்கள் சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருப்பதை பார்தது இந்த கேள்வி கேட்டுள்ளீர்கள்.,
சிலர் காலண்டரின் பின்பக்கம் என்றைக்கெல்லால் தமிழகஅரசு விடுமுறைன்னு பாக்கும்போதுலாம் *கெர்போட்ட நிவர்த்தி* என்று ஒன்று இருப்பதையும் கவனித்திருப்பீர்கள்
இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல
உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை
அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது
நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது
இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்
அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில்
சூரியன் தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது
இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம்
இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்
அதாவது
மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள்
இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருவள்்ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்
அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால்
ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைபொழிவு அளவும் முறையாக இருக்கும்
இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது
ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா??
எனவே
மார்கழி மாதம் அமவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்து கொள்வார்கள்
இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது என்று பொருள்
எனவே வரும் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்
மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள்
எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம்
இன்றய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது
இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி( வானம் பார்த்த பயிர் ) பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்
நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில்
கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்
ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று
மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள
வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்
புதுமையின் மோகத்தில் எத்தணை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!