வெள்ளி, 31 டிசம்பர், 2010

புது டில்லி ,செங்கோட்டை .

எனது இந்திய விஜயத்தில்,புது டில்லி செங்கோட்டை மிகவும் கவர்ந்த ஒரு இடமாக இருக்கிறது.கட்டடக் கலைகளின் பிறப்பிடமே இந்தியாவில் இதாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு பிரமிப்பை என் மனதில் ஏற்படுத்திவிட்டது. நான் மத்திய கிழக்கு நாடுகளில் இதை விட பெரிய கட்டிடங்களைக்கண்டிருந்தாலும் .காலத்தைவைத்து,உற்று நோக்கினால் டில்லி செங்கோட்டை அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது.சரியான பராமரிப்பு இல்லாமல்,சில பல சிதைவுகள்,இருந்தபோதும்
தற்போது இவைகளைச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தற்கது.செங்
கோட்டையைப்பற்றி நான் அதிகம் எழுதத் தேவையில்லை.ஏற்கனவே கீழ்க்காணும் தளத்தில் விபரமாக எழுதியிருக்கிறார்கள் இங்கே.  சென்று பாருங்கள்.பொது அறிவைக்
கொஞ்சம் கூட்டிய மாதிரியும் இருக்கும். 1638 -1648 சலவைக் கல் சரித்திரங்கள்.அந்தக் காலத்தில் பத்துவருடம் எடுத்திருக்கிறது,இதைச் செதுக்கி முடிக்க. நன்றாக உற்று நோக்கினால் திரைப்படங்கள்,சின்னத்திரைக் காவியங்கள் எல்லாவற்றிலும் இது முக்கிய
பாத்திரமேற்று நடித்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.     













































































































































பெரிய ஒரு சுற்றுலாவை புது டெல்லியில்,செங்கோட்டையில் தற்போது முடித்திரிக்  கிறோம். நன்றாகக் களைத்து விட்டீர்கள்.சின்ன இடைவேளைக்கு அப்புறம் சந்திக்கலாம் .

வியாழன், 30 டிசம்பர், 2010

2011 புது வருட வாழ்த்துக்கள்.!

 2011  புது வருட வாழ்த்துக்கள்.                                               
                                             

                                              




இன்பம் தொடர! இதயம் குளிர!
துன்பம் தொலைய! தொல்லைகள் மறைய!
நண்பர்கள் வாழ்த்த! நானிலம் போற்ற!
இனிய இந்த வருடம்! இன்பம் இன்னும் சேர்க்கட்டும்!
என்றும்வல்ல இறைவன், இணைந்து இறை பாலிக்கட்டும்.

அன்புடன் வாழ்த்தும்,